இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

டாக்டர் அப்துல் கலாம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vw9tYzAkctU

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q57FCLQUR94

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8XJjkA5NuQ

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9CKCfiX3uO0

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TnX7SvAbf5k

+++++++++++++++++++

“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )

அக்கினி இடித் தாக்கம்!
அசுர வல்லமை ஊக்கம்!
பொறுமை யற்ற புயலிலே
புதுநெறி படைக்க
புறப்படும் எமது கனவுகள்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலு ருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா?  அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையான ற்றைக் கைப்பற்றினார்.  நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை.  எந்த நாட்டையும் கைபற்ற வில்லை.  யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது!  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில்  பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.  அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.  திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர்.  தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.  பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார்.  அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.  அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன.  முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence].  அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force].  இரண்டுக்கும் விண்ணப் பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது.  முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.  அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது!  தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை!  கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.  அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டிஃபிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது.  அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிராஃப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.  அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிராஃப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார்.  அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.  சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார்.  பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..  SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார்.  1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது.  அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.

ICBM

ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.  அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர்.  வீணை வாசிக்கிறார்.  ஸ்ரீராகத்தை ரசிக்கிறார்.  தமிழில் கவிதை புனைகிறார்.  தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

Fig 1G Indian Rockets

இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது.  கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன.  எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன.  சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ஆழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.

டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defense Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.  அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது.  அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின.  அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின.  அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது.  உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம்.  வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.  அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்).  சோவியத் யூனியன் ராக்கெட் பொறி நுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.  பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின.  பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம்.  அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும்.  அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile).  எல்லா வற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.  அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது.  நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது.  ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை.  அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest),  அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].  உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப் படுகிறது.  1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது.  2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது.  தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது.  2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்).  சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது.  முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும்.   ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2,  துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

தகவல்:

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
16 Missile Test By India [February 5, 2007]
17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]

21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,

29.  https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam

30.  http://www.abdulkalam.nic.in/profile.html

******************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] (July 29, 2015) [R-3]

விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பிறகு புகுஷிமா அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

2015 no nukes


(பிப்ரவரி  2,  2012)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை

கட்டுரை ஆசிரியர்

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]



ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத் தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.


தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன பொது மக்களின் வெறுப்பும், தீர்ப்பும் வேறு.  அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் ஒருமனதாய் எதிர்த்தாலும் உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப்பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

அணுமின் உலைகள் இயக்கம் பற்றி உலக நாடுகள் செய்துள்ள முடிவுகள்  (மே 31, 2011)

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சி போன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணு மின்சக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்த முடிவுகளைக் கீழே காணலாம் :

1. அர்ஜென்டைனா : தற்போது இயங்கி வரும் இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிக்கப்படும்.  அட்டுச்சாவில் (Atucha) இரண்டாவது யூனிட் கட்டுமானம் நிற்காமல் பூர்த்தியாகும்.  அர்ஜென்டைனாவின் நிதி அமைச்சர் அமாடோ பொவ்டோவ் (Amado Boudov), “அர்ஜென்டைனா இதுவரைத் திட்டமிட்ட அணுமின் நிலையத் தீர்மானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று கூறினார்.

2. பிரேசில் : புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் போவதை நிறுத்த வில்லை.  செனட்டர் ஜோஸ் ஸர்னி என்பவர் “அணு உலைப் பாதுகாப்பு விதிமுறைகளில் கடுமையான மீளாய்வு இருக்கும்” என்று தெரிவித்தார்.

3. ஆர்மீனியா :   நிலநடுக்க இன்னல்கள் நிரம்பிய ஆர்மீனியா 1988 ஆண்டிலேயே தனது ஒற்றை ‘மெட்ஸ்மார் அணுமின் நிலையத்தை’ (Metsmor) நிறுத்தி விட்டது.  ஆனால் அது 7 ஆண்டுகள் கழித்துத் தேவைப் பட்டதால் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  மேலும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போவதாகத் திட்டங்கள் உள்ளன என்று ஓர் வதந்தியும் நிலவி வருகிறது.  ஆர்மினியாவின் பிரதம மந்திரியும் புதிய அணுமின் நிலையங்கள் கட்டு வதற்கு ஆதரவு அளிக்கிறார்.

4. கனடா : கனேடியன் அணுவியல் பாதுகாப்பு ஆணையகம் (Canadian Nuclear Safety Authority – CNSC) கனடாவில் இயங்கும் அணுமின் நிலையங்கள், சாக் ரிவர் அணுவியல் ஆய்வு உலை (AECL Chalk River Research Reactor) ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புகுஷிமா அணு உலை விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  1970 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்த இரண்டு பழைய அணுமின் நிலையங்கள் முன்பே நிரந்தர நிறுத்தம் ஆயின.  முன்பு நிறுத்தமான இரண்டு கனநீர் முற்போக்கு அணுமின் உலைகள் புதுப்பிக்கப் பட்டு விரைவில் மின்சாரம் மீண்டும் அனுப்பப் போகின்றன.  இயங்கும் 16 அணுமின் உலைகள் தொடர்ந்து மின்சாரம் அளித்து வருகின்றன.  எதிர்காலத் திட்டத்தில் புதிய அணுமின் நிலைய அமைப்புகளும் இடம் பெறும்.

5. சைனா : அரசாங்கம் அணுமின் சக்தி ஆக்கத்தை வரவேற்கிறது.  சமீபத்தில் நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் கட்டப் போகும் புதிய 7 அணுமின் நிலையங்களைத் தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளது.  இப்போதைய இந்த முடிவு நீண்ட கால அணுமின்சக்தி உற்பத்தியை ஒருபோதும் பாதிக்காது.

6 பின்லாந்து : பின்லாந்தின் நிதி அமைச்சகம் பின்லாந்து நாட்டில் உள்ள அணுமின் உலைகளில் அபாயப் பாதுகாப்புத் தயாரிப்பு முறைகள் மீளாய்வு செய்ய வேண்டு மென அணுவியல் கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணையகத்துக்கு உத்தரவு இட்டுள்ளது.

7. பிரான்ஸ் : பிரென்ச் நாட்டின் 75% பங்கு மின்சக்தியைப் பரிமாறி வரும் 58 அணுமின் நிலையங்களின் இயக்கத்தில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை.  பிரென்ச் தொழிற்துறை எரிசக்தி அமைச்சர் எரிக் பெஸ்ஸன் கூறியது : “எனக்குப் பாதுகாப்பான எதிர்கால அணுமின்சக்தி உற்பத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அதாவது புகுஷிமா விபத்துகள் போல் நேர்ந்தாலும் இந்த நூற்றாண்டில் அந்த உறுதிப்பாடு எனக்கு எழுந்துள்ளது.  ஆயினும் அவற்றை மேலும் செம்மைப் படுத்த இன்னும் ஒரு வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.

8. ஜெர்மனி : 2011 மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் பழைய டிசைன் மாடல் 1980 & அதற்கு முந்திய அணுமின் உலைகளை மூன்று மாத நிறுத்தம் செய்ய உத்தரவு இட்டார்.  1984 இல் இயங்க ஆரம்பித்த அடுத்தோர் அணுமின் நிலையமும் நிறுத்தமானது.  வேலும் சமீபத்தில் ஆயுள் நீடிப்புக்கு அனுமதி பெற்ற சில அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிப்பு பாதுகாப்புச் சோதனைகளின் முடிவு தீர்ப்பாவது வரை நிறுத்தப் பட்டுள்ளது.  புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 250,000 அணுசக்தி நிலைய எதிர்ப்பாளர் நாடு முழுவதும் திரண்டு இயங்கும் அணுமின் நிலையங்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தார்.  மார்ச்சு மாதம் 30 ஆம் தேதி அதிபர் ஆஞ்சலா மெர்கெல் 2022 ஆண்டுக்குள் இயங்கும் எல்லா அணுமின் நிலையங்களும் நிறுத்தப்பட்டு விடும் என்று அறிவித்தார்.


9. இந்தியா : புகுஷிமா அணு உலை விபத்துக்கள் இயங்கும் அல்லது எதிர்கால இந்திய அணுமின் நிலையத் திட்டங் களைப் பாதிக்கவில்லை.  இந்திய அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் (Atomic Energy Regulatory Board – AERB) இயங்கும் அல்லது திட்டமிட்ட அணு உலைகளின் டிசைன் அடிப்படை விபத்துகளோ அல்லது அதற்கு அப்பாற் பட்ட இயற்கை தூண்டும் விபத்துகளோ நேர்ந்தால் விளையும் அபாயப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.

10 ஜப்பான் : ஜப்பானின் அணுமின் & தொழிற்துறைப் பாதுகாப்பு ஆணையகம் (NISA) அணுமின் உலைகள் அனைத்தும் தற்போதுள்ள அபாய விபத்துக் கையாளும் முறைப்பாடுகளை மீளாய்வு செய்து அனுப்பும்படிக் கட்டளை இட்டுள்ளது.  மேலும் அந்த அணுமின் உலைகள் தற்போது அமைக்கப் பட்டிருப்பதைத் தவிர அடுத்தோர் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டது.  2011 மே 6 ஆம் தேதி கடற் கரையில் அமைக்கப் பட்டுள்ள ஹமோகா (Hamaoaka) அணுமின் உலையில் அசுரச் சுனாமிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாய் அமைப்பது வரை நிலையத்தைப் பிரதம மந்திரி நிறுத்தம் செய்தார்.  மே 10 ஆம் தேதி பிரதம மந்திரி ஜப்பான் எதிர்கால எரிசக்தி ‘அரசியல் நியதி’ (Govt Policy) திசைமாறப் போவதாகக் கூறினார்.  2030 ஆண்டுக்குள் ஜப்பானின் 50% பங்கு மின்சாரத் தேவையை புதிய அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என்னும் அரசியல் நியதி நீக்கப்படுவது பற்றிப் பேசினார்.  அவற்றுக்குப் பதிலாக ‘புதுப்பித்து மீளும் எரிசக்தி, சிக்கனச் சேமிப்பு எரிசக்தி (Renewable Energy & Conservation) ஏற்பாடுகள் வரவேற்கப்படும் என்றும் கூறினார்.  புகுஷிமா அணு உலைகள் விபத்தாலும், நிறுத்தம் அடைந்த சில அணுமின் நிலைய முடக்கத்தாலும் ஜப்பான் 3473 MWe மின்சார உற்பத்தியை இப்போது இழக்க நேரிடுகிறது.  அது உடனே நிரப்பப்பட வில்லையாயின் பல தொழிற்சாலைகள் மூடப்படும்,  மேலும் பல்லாயிரம் ஊழியர் தமது வேலை இழப்பார்.

முடிவுரை: உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஹிரோஷிமா, நாகசாக்கி, திரிமைல் தீவு, செர்நோபில், புகுஷிமா கதிரியக்க விபத்துக்களுக்குப் பிறகு செம்மைப் படுத்தி  2012 இல் 30 உலக நாடுகள் 430 மேற்பட்ட  அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலை யத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

(தொடரும்)

***************

தகவல்:

1. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

2. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

3.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

4.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

5.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

6.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

7. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

8. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

9.  Nuclear {Power in Japan (March 30, 2011)

10. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

10 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

11. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

12.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

13.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

14. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

15. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

16. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

17. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

18. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

19 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

20. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

21. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

22 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

21. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

22. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

24.  http://www.eia.gov/forecasts/ieo/index.cfm  (International Energy Outlook 2011)  (September 19, 2011)

25. http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_electricity_production_from_renewable_sources(List of countries by electricity production from renewable sources)

26.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_nuclear_power  (Nuclear Power by Country)  (June 2011)

27. http://fukushimaupdate.com/the-status-of-nuclear-fuel-stored-at-fukushima/ [June 1, 2013]

28.  http://fukushimaupdate.com/insight-after-disaster-the-deadliest-part-of-japans-nuclear-clean-up/ [August 16, 2013]

29.  http://fukushimaupdate.com/the-real-fukushima-danger-spent-fuel-pools/  [September 14, 2013]

30.  http://www.voanews.com/content/japan-observes-anniversary-of-earthquake-tsunami-disaster/2675471.html  [March 11, 2015]

31.  https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_Japan  [July 25, 2015]

************************
S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  July 28,  2015  (R-2)

http:jayabarathan.wordpress.com/

1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து


 

[Narora Atomic Power Station]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்!

[To err is human! But erring less is Divine!]

 

முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன.  பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டிப் புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணிப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண்டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்தளங்கள் தூளாயின.  அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரியக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில பொதுநபரும் கதிரடி பெற்றார்கள்.  செர்நோபிள் விபத்து நிலை 7 (உச்சம்) என்றும் திரிமைல் தீவு விபத்து நிலை 5 என்றும் அகில உலக அணுசக்தி ஆணையகம் (IAEA – International Atomic Energy Agency) மதிப்பீடு செய்தது.  அந்த ஒப்பு நோக்கில் இப்போது ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிலை 4 லிருந்து 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது 21 அணுமின் நிலையங்கள் (2015 ஜூலை வரை) இயங்கி 5780 MWe மின்சார ஆற்றலை மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  அவற்றில் ஜப்பான் புகுஷிமா மாடல் அணுமின் உலைகள் போல் (BWR – Boiling Water Reactor) மேற்குக் கடற்கரை தாராப்பூரில் (மகாராஷ்டிரா) இரண்டு அணுமின் உலைகள், சுமார் 40 ஆண்டுகள் இயங்கி அவை ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.  தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரம் இரண்டு கனநீர் அழுத்த அணுமின் உலைகள் 27 ஆண்டு களாய் மின்சாரம் பரிமாறி வருகின்றன. தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் ரஷ்ய அணுமின் அணுமின் உலைகள் (VVER -1000) இரண்டில் ஒன்று ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

ஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் புகுஷிமாவில் நேர்ந்த அணு உலைகள் விபத்தி லிருந்து இந்திய அணுசக்தித் துறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.  திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் உலைகள் செம்மை ஆக்கப்பட்டன. அதைப் போல் முதலில் கடற்கரை அணுமின் நிலையங்களில் அபாயப் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீர் வசதிகள் இரட்டிப்பு அல்லது முப்புற முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக அணுமின் உலைகளைப் பற்றியும் கதிரியக்கப் பாதுகாப்பு பற்றியும் நகரங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அறிவு புகட்டும் காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும்.  அணுமின் உலைக்கு 25 மைல் அருகில் வாழ்வோருக்கு அபாய காலப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப் படவேண்டும்.

ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் வெடிப்பு நேர்ந்தது போல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.  ஆனால் அந்த வெடிப்பு அணு உலையால் ஏற்பட வில்லை.  மின்சாரம் உண்டாக்க நீராவியால் சுழலும் டர்பைன் வளைத் தட்டுக்கள் முறிந்து, தீப்பொறிகள் கிளம்பி கசியும் ஹைடிரஜன் வாயு எரிந்ததால் மூண்ட வெடிப்பு.  அவ்வெடி டர்பைன் கட்டடத்தைத் தூளாக்கியது.  அணு உலை பாதுகாப்பாக நிறுத்தமாகி எரிக்கோல் களுக்கு வெப்பத் தணிப்பு நீரை டீசல் ஜனனிகள் ஓடிச் சீராக அளித்தன.  ஆனால் ஆட்சி அரங்கு (Control Room) புகை மூட்டத்தில் நிரம்பி நிலைய இயக்குநரை வெளியே செல்ல வைத்தது.  நிலைய மின்சாரப் பரிமாற்ற வடங்கள் சேதமாகிப் பல சாதனங்கள் மின்னாற்றல் இழந்தன.

 

ரஷ்யாவின் செர்நொபில் அணு உலை வெடிப்பு, அமெரிக்காவின் திரிமைல் தீவு அணு உலை விபத்து ஆகியவற்றைப் போலின்றி, 1993 ஆம் ஆண்டு யந்திரப் பழுதுகளால் டர்பைன் ஜனனியில் தீ வெடிப்பு உண்டாக்கி, அணுமின் உலைப் பாதுகாப்பு ஏற்பாடு களை முடமாக்கியது, நரோராவில் நேர்ந்த விபத்து! அபாயத்தின் போது அணு உலை பாதுகாக்கப் பட்டதால், சூழ்வெளியில் கதிரியக்கம் கசிந்து வெளியே பரவ வில்லை! தீ விபத்தால் பெருஞ்சேதம் விளைந்ததே தவிர, நல்ல வேளை மாந்தருக்கு எவ்விதக் காயமோ, அபாயமோ, கதிரடியோ அன்றி மரணமோ எதுவும் நேரவில்லை! ஆனால் கதிரியக்க அணு உலை வெப்பம் அதிர்ஷ்ட வசமாகத் தணிக்கப் பட்டாலும், கடும் புகை மூட்டத்தால் இயக்குநர்கள் கண்காணிக்கும் ஆட்சி அறையில் நின்று, அபாயத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் புறக்கணித்து ஓட வேண்டிய தாயிற்று!


இந்திய அணுமின் நிலையத்தில் நிகழ்ந்த முதல் விபத்து!

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சிக்கலான பல அணு ஆராய்ச்சி உலைகளையும், மின்சக்தி பரிமாறும் அணுமின் நிலையங்களையும், பாதுகாப்பாகப் பாரதம் இயக்கிப் பராமரித்து வரும் சமயத்தில் திடாரென 1993 மார்ச் 31 ஆம் தேதி டெல்லிக்கு அருகே இயங்கிக் கொண்டிருந்த நரோரா அணுமின் நிலையத்தில் தீப்பற்றி ஒரு பெரும் வெடி விபத்து நிகழ்ந்து உலகெங்கும் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கியது! அணுமின் நிலைய இயக்கத்தில் சிறப்பான அனுபவம் பெற்ற இந்திய நிபுணர்கள் கண்முன்பாக, இத்தகைய கோரச் சம்பவம் நேர்ந்தது மன்னிக்க முடியாத ஓர் நிகழ்ச்சி யாகும்! பொதுத்துறை டர்பைன் ஜனனிகளைத் தகர்த்து, டர்பைன் கட்டடத்தில் பல பகுதிகளை எரித்து, மின்சார வயர்களை கரித்துச் சாம்பலாக்கி, அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடமாக்கிய அந்த விபத்து விளையாமல், இயக்குநர்கள் முன்னறிவுடன் கண் காணித்து நிறுத்தி யிருக்க முடியும் என்பது கட்டுரை ஆசிரியரின் ஆழ்ந்த கருத்து.

அழுத்தக் கனநீர் இரட்டை நிலையத்தின் முதல் யூனிட்டில்தான் விபத்து நேர்ந்தது! அணு உலையிலோ அன்றி அணு உலைத் துணை உறுப்பு களிலோ எவ்விதப் பழுதும் உண்டாகித் தீ தூண்டப் பட வில்லை! நீராவி ஓட்டும் பொதுத்துறைச் சாதனமான [Conventional Equipment] டர்பைன் கீழ் நிலைச் சுழற் தட்டுக்கள் [Low Pressure Turbine Blades] ‘தளர்ச்சி முறிவுகளால் ‘ [Fatigue Failures] அநேகம் உடைந்து தீப்பொறி எழுப்பி, ஜனனியின் கசிவில் வெளியேறிய ஹைடிரஜன் வாயுவுடன் மூர்க்கமாய்த் தீப்பற்றி வெடிப்புப் சத்தம் உண்டானது! இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டைனா, கொரியா, ருமேனியா, சைனா ஆகிய உலக நாடுகளில் ஓடும் கனநீர் அணுமின் நிலையங்களில், டர்பைன் தட்டுகள் உடைந்து தீப்பற்றி ஹைடிரஜன் வாயுவுடன் எரிந்து வெடிப்பது, அதுவே முதல் தடவை!

யந்திரப் பழுதும், அடுத்து மனிதத் தவறும் சேர்ந்து உண்டாக்கிய மாபெரும் விபத்துத் தரத்தில் அது மூன்றாவது மட்டத்தில் [Level:3] மதிப்பிடப் படுகிறது! யந்திரப் பழுது முதலில் ஆரம்ப மானது! அதன் எச்சரிக்கை அளவை இயக்குபவர் கவனமாகக் கண்காணித்துச் செப்பணிடாததால் அடுத்துப் பயங்கர விபத்து நிகழ்ந்தது! நல்ல வேளையாக அணு உலை நிறுத்தப் பட்டு, தொடர்ந்து நியூட்ரான் பெருக்கம் தடைபட்டு, வெப்ப சக்தித் தணிக்கப் பட்டது! விபத்தின் போது சாதனங்களும், மின்சாரக் கேபிள்களும் தீப்பற்றிப் பெரும் சேதம் விளைந்து, அணு உலைப் பாதுகாப்புக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டாலும், மாந்தருக்குக் காயமோ, மரணமோ, கதிர்வீச்சுத் தாக்குதலோ எதுவும் உண்டாக வில்லை!

ஆனால் நிலைய இருட்டடிப்பில் ஒரு பெரும் வெடிப்பு விபத்தைக் கையாண்டு, அணு உலையில் தவறுகள் எதுவும் நிகழாதவாறு, பாரத இயக்குநர் பலர் அதைப் பாதுகாத்த சாமர்த்தியம் போற்றத் தகுந்த ஒரு சாதனையாகும்!

நரோரா அணுமின் நிலையத்தின் அமைப்பு

நரோரா அணுமின் நிலையம் டெல்லிக்கு அருகே கங்கை நதிக் கரை ஓரம், உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 235 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணு உலைகள், கனடாவின் ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் அணு உலை [CANDU-220 MWe Pressurized Heavy Water Reactor] இனத்தைச் சார்ந்தவை. முதலில் நிறுவப் பட்ட ராஜஸ்தான் முன்னோடி அணு உலையைப் [Rajasthan Prototype Atomic Power Reactor] பல முறைகளில் மாற்றம் செய்து, இரண்டாம் பிறப்பு முற்போக்கு அணு உலைகளாக [Second Generation Advanced Candu Reactors] அமைக்கப் பட்டது, நரோரா! முதலாவது யூனிட் 1989 ஆம் ஆண்டில் இயங்க ஆரம்பித்து, 1991 ஆண்டிலிருந்து வணிக ரீதியாக இயங்குவதாய் அறிவிக்கப் பட்டது! 1989-1993 ஆண்டுகளில் அந்த யூனிட் 50 MWe முதல் 220 MWe மின்னாற்றல் அனுப்பி வந்தது! இரண்டாம் யூனிட் 1991 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இரண்டு நிலையங்களின் 90% உறுப்புகள் உள்நாட்டுத் தொழிற் சாலைகளைக் கொண்டு உருவாக்கப் பட்டவை.

 

நரோரா நிலையங்கள் கட்டுவதற்கு 12 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது! காரணம் அணு உலை உறுப்புகளின் டிசைன் வினைகளும், அவற்றைத் தயாரித்து அமைக்கும் கட்டட வேலைகளும் ஒன்றாகச் செய்யப் பட்டு வந்தன! சில சமயங்களில் டிசைன் பணிகள் தாமதப் படவே, கட்டமைப்பு வேலையாளிகள் காத்திருக்க வேண்டிய தாயிற்று! பாரதத்தில் முதன் முதலாகத் தயாரிக்கப் பட்ட நீராவி ஜனனிகள் [Steam Generators] வருவதற்கு மிகவும் தாமத மானதால், அதைச் சார்ந்த பல பணிகளும் தடைப் பட்டன!

அணு உலை, அணு உலைத் துணைச் சாதனங்கள் யாவும் இரட்டைக் கான்கிரீட் கோட்டை அரண்களின் உள்ளே அமைக்கப் பட்டுள்ளன. இயற்கை யுரேனியம் எருவாகவும், கனநீர் மிதவாக்கியாகவும், கனநீர் பிரதம வெப்பக் கடத்தியாகவும் அணு உலையில் பயன்படுகின்றன. நீராவி ஜனனியில் சாதாரண நீர் உபயோக மாகிறது. காலாண்டிரியா அணு உலைக் கலனில் [Calandria Reactor Vessel] 306 அழுத்தக் குழல்கள் [306 Pressure Tubes] நுழைக்கப் பட்டு, ஒவ்வொரு குழலிலும் 12 எரிக்கட்டுகள்  [12 Fuel Bundles in each Tube] உள்ளன. ‘காளான் ‘ வடிவ முடைய நீராவி ஜனனிகள் [Mushroom type Steam Generators] நான்கும், வெப்பக் கடத்திக் கனநீரை அணு உலை, கொதி உலை ஆகியவற்றின் ஊடே சுற்றி அனுப்ப நான்கு பூதப் பம்புகளும் [Giant Pumps] அணு உலைக்கு மேல் தளத்தில் அமைக்கப் பட்டுள்ளன!

பொதுத்துறை நீராவிச் சாதனங்கள் டர்பைன், தணிப்புக் கலன், கொதி உலை அனுப்பு நீர் ஏற்பாடுகள் [Boiler Feed Water], மற்றும் மின்சாரம் உற்பத்திச் சாதனங்கள் ஜனனி, மின்காந்த எழுப்பி [Electric Generator & Exciter] போன்றவை டர்பைன் கட்டத்தில் நிறுவப் பட்டுள்ளன. டர்பைன் தணிப்புக் கலனில் உள்ள [Turbine Condensers] தளர் நீராவியைக் குளிர்விக்க மாபெரும் இரட்டைக் ‘குளிர்ச்சிக் கோபுரங்கள் ‘ [Cooling Towers] நிலையத்தின் பரந்த வெளியில் அமைக்கப் பட்டுள்ளன!

பூகம்பம் தாக்கும் பாதுகாப்பற்ற தளத்தில் [Seismically unsafe Area] நரோரா அணுமின் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது என்று பல எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஆரம்பத்தில் எழுந்தன! ஆனால் அணுசக்தி துறையகம் தனித் துறைஞர் ஆய்வுரைகளையும் மற்றும் தமது ஆராய்ச்சிகளையும் எடுத்துக் கொண்டு, பூகம்ப விளைவுகளால் தகர்க்கப் படாத முறையில் அணு உலை உறுதியாகக் கட்டப் பட்டுள்ளது என்று அறிவிக்கிறது!

கனநீர் அணு உலைகளைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அபாயப் பாதுகாப்புக்கு அணு உலையை நிறுத்த ராஜஸ்தான், கல்பாக்கம் நிலையங்களில், மிதவேக நியூட்ரான் பெருக்கத்தை முற்றிலும் தடுக்க, மிதவாக்கிக் கனநீரை உலைக் கலனிலிருந்து ஈர்ப்பியல்பில் கொட்டிவிடும் ஏற்பாடு [Dumping System by Gravity] உள்ளது. அவற்றைப் போலின்றி முற்போக்காக நரோரா அணு உலைகளில் விரைவாக நிறுத்தும் வேறுபாடான, தனிப்பட்ட தடுப்பு ஏற்பாடுகள் இரண்டும் [Two Independent Fast-acting Shutdown Systems], மெதுவாக நிறுத்தும் தடுப்பு ஏற்பாடு ஒன்றும் [One Slow-acting Shutdown System] அமைக்கப் பட்டுள்ளன. அபாய கால மின்சாரம் [Emergency Power Supply] இல்லாத ‘நிலைய இருட்டடிப்பு ‘ [Station Blackout] சமையத்தில், சுயமாய் இயங்கும் தடுப்பு முறைகள் பணி புரியா! அப்போது கையாட்சி முறையில் மிதவாக்கிக் கனநீரில் நியூட்ரான் நஞ்சைச் செலுத்தும் [Neutron Poison Injection System] நான்காவது ஏற்பாடும் உள்ளது.


‘காட்மியம் கோல்கள் ‘ கொண்ட பிரதமத் தடுப்பு ஏற்பாடு ஈர்ப்பியல் விசையால் [Primary Shutdown System with Cadmium Rods, dropping under gravity] அணு உலைக்குள் விழுபவை! துவிதத் தடுப்பு ஏற்பாடு [Secondary Shutdown System] ‘லிதியம் பென்டாபோரேட் ‘ திரவத்தை 12 செங்குத்துக் குழல்களில் [Lithium Pentaborate Solution in 12 Vertical Tubes] கொண்டது. மெதுவாய்ப் பாதுகாக்கும் மூன்றாவது முறைப்பாடு: போரிக் ஆஸிட் நஞ்சை கனநீர் மிதவாக்கியில் செலுத்திக் கலக்கும் ஏற்பாடு! காட்மியம், லிதியம் பென்டாபோரேட், போரிக் ஆஸிட் ஆகிய அனைத்தும் அணுப்பிளவு வினைகளில் உண்டாகும் நியூட்ரான்களை விழுங்கி, அவற்றின் பெருக்கத்தைத் தடுப்பவை!

விபத்தின் போது அணு உலை வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள்

அணுமின் நிலையங்களில் எதிர்பார்க்கப்படும் நான்கு வித விபத்துக் காட்சிகள் [Four Accident Scenarios] ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முக்கியமானவை:

1. அணு உலையில் ‘வெப்பக் கடத்தித் திரவ இழப்பு விபத்து ‘ [Loss of Coolant Accident (LOCA)]

2. நிலைய இருட்டடிப்பு (அபாய கால அனைத்து மின்சார வினியோக இழப்பு) [(Station Blackout) Loss of Emergecy Power with Both Class I & II Supply].

3. அணு உலை நியூட்ரான் பெருக்கக் கட்டுப்பாடு இழப்பு (வெப்ப சக்தி மீறல்) [Loss of Regulation (LOR)]

4. நிலையத்தின் முக்கிய நீராவிப் பெருங் குழல் முறிவு [Main Steam Line Break].

முதல் விபத்தைக் கையாள நான்கு வித பாதுகாப்பு முறைபாடுகள் உள்ளன:

1. மேல் அழுத்த கனநீர் செலுத்தும் ஏற்பாடு [High Pressure Heavy Water Injection System].
2. இடை அழுத்த நீர் செலுத்தும் ஏற்பாடு [Intermediate Pressure Light Water Injection System].

3. கீழ் அழுத்த நீர் செலுத்தும் ஏற்பாடு [Low Pressure Light Water Injection System].

4. நீண்ட கால கீழ் அழுத்த நீர் சுற்றும் ஏற்பாடு [Long Term Low Pressure Light Water Recirculation System].

இவற்றில் பல ஏற்பாடுகள் மூன்றில் இரட்டை உடன்பாடு [Two out of three Coincidence Logic] விதியைப் பின்பற்றுபவை!

நரோரா வெடிப்பில் விளைந்த எதிர்பாராத விளைவுகள்

விபத்து நேர்ந்த அன்றைய நாளில் [1993 மார்ச் 31] முதல் யூனிட் 185 MWe ஆற்றலில் இயங்கி வந்தது. அந்தச் சமயத்தில் இரண்டாவது யூனிட் நிறுத்தமாகிச் செப்பணிடும் பணிகள் செய்யப் பட்டு வந்தன. காலைப் பொழுது புலர்வதற்கு முன்பு 3:31 A.M. மணிக்கு ஓடிக் கொண்டிருந்த டர்பைன் உச்ச அதிர்வுகளால் திடாரென நிறுத்தம் [Tripped due to High Vibrations] ஆனது! ஆட்சி அறையில் டர்பைன் ஜனனி துணை உறுப்புக் களின் காட்சி முகப்பில் [Control Room Turbo-Generator Auxiliary Panels] பல எச்சரிக்கைச் சிவப்பு விளக்குகள் பளிச்சிட்டு கீச்சொலி எழுப்பின! அதே சமயம் உண்டான ஓர் பேரிடிச் சத்தம் ஆட்சி அறை, டர்பைன் கட்டடத்தின் உள்ளும் புறமும் பணி புரிந்த இயக்குநர் காதுகளைப் பிளந்தது! அத்துடன் பேரதிர்ச்சியில் ஆட்சி அறைத் தளமே ஆட்டம் கண்டது! குப்பென்று வெப்பக் காற்று தூசிகளைக் கிளப்பிக் கொண்டு வீசியது!

டர்பைன் மாளிகையில் ஜனனியின் உராய்வு வளையங்கள் முனையில் [Slip Rings End of Generator] பெருந்தீப் பற்றக் காணப் பட்டது! இரண்டாவது யூனிட் ஓரம் ஓய்வில் வைக்கப் பட்ட யந்திரத் தூக்கியில் இருந்த வேலையாளி [Turbine Building Crane Operator], முதலாவது யூனிட் டர்பைன் தொகுப்பிலும் [Tubine Set] பெருந் தீப்பற்றி நீல நிறத்தில் எரியக் கண்டார்! டர்பைன் மசிவு ஆயில் [Turbine Lubricating Oil] எல்லா இடத்திலும் சிந்தி அவற்றிலும் தீப் பற்றிப் பெருகியது! அத்துடன் வெடித்த பாகங்களிலிருந்து குப்பெனக் கசிந்து வெளியேறும் வெப்ப நீராவியின் வெண் முகில் மண்டலம்! தீ அணைப்புப் படையினர் உடனே அழைக்கப் பட்டனர்! அபாயச் செய்தியைக் கேட்டு, அணு உலையைச் சேர்ந்த 50 பேர்கள் உதவி செய்ய நிலையத்துக்கு விரைந்தனர்.

மில்லி வினாடி நேரத்தில் நிலையத்தின் மின்சாரம் அனுப்பும் யூனிட் டிரான்ஸ்ஃபார்மர் [Unit Transformer], ஜனனியின் டிரான்ஸ்ஃபார்மர் [Generator Transformer], ஜனனிக்கு மின்காந்தம் ஊட்டும் தொடர்பு [Generator Field Breaker], 6.6 KV மின்சார வினியோகத் தொடர்பு [6.6 KV Station Breaker] யாவும் துண்டிக்கப் பட்டு அணுமின் நிலையம் மின்சாரம் இன்றி தனிப்பட்டுப் போனது! 600 மெகா வாட் வெப்ப சக்தியைக் கடத்தி நீரனுப்பும் நான்கு பூதப் பம்புகளும் நின்று போயின! கொதி உலையில் 600 மெகா வாட் வெப்ப சக்தியை மாற்றும் டர்பைன் யந்திரம் உடைந்து நின்று போனதால், நீராவி கசிந்து டர்பைன் மாளிகை எங்கும் பரவியது!

தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த அணு உலை 39 வினாடிக்குப் பின் ஆட்சி அறை இயக்குநரால் நிறுத்தப் பட்டது! ஆட்சி அறையின் காட்சி முகப்பில் [Control Room Indicating Panels] அநேக எச்சரிக்கைச் சிவப்பு விளக்குகள் சிமிட்டிச் சிமிட்டிக் கூச்சலிட்டன! காரணம் ஆட்சி அறைக் காட்சி அரங்கு உபரிகளுக்கு மின்சார அனுப்பும் வயர்களில் [Control Component Power Supply] தீப் பற்றி அவை யாவும் துண்டிக்கப் பட்டன! உடனே அபாய கால மின்சாரம் அளிக்கும், இரண்டாம் வகுப்பு ஆற்றல் பரிமாறும் [Class II Power Supply] மோட்டர் ஜனனி தொகுப்பும் [Motor Generator Set] அற்று விடப் பட்டது! அதற்குத் துணையாய் மிதந்து கொண்டிருக்கும் முதல் வகுப்பு மின்கலன்களின் ஆற்றலும் [Poised Class I Battery Power] கேபிள்கள் எரிந்ததால் துண்டிப் பானது! அதாவது நிலையத்தின் எந்தப் பணிக்கும் உதவ முடியாமல் அனைத்து மின்சார ஆற்றல்கள் இருந்தும், இல்லாமல் போயின!

அணுமின் நிலையத்தில் டர்பைன் ஓடாது நீராவியின் அழுத்தம் அதிகமானதால், விபத்து நிகழ்ந்து ஐந்தாவது நிமிடத்தில் ‘அபாய கால நீராவி நீக்கிகள் ‘ [Atmospheric Steam Discharge Valves] கையாட்சியில் திறக்கப்பட்டு அணு உலைத் ‘தீவிரத் தணிப்பு ‘ [Reactor Crash Cooldown] ஆரம்ப மானது! அணு உலைக் கோட்டை அரண் தனித்து விடப்பட்டு, வாயுப் போக்கு வரத்து யாவும் அடைக்கப் பட்டன

அணுமின் நிலைய அபாய நிலை அறிவிப்பு!

வெடிப்பு ஏற்பட்ட எட்டாவது நிமிடத்தில் ‘அணுமின் நிலைய அபாய நிலை அறிவிப்பு ‘ [Plant Emergency Declaration] வெளியாக்கப் பட்டது! அதே சமயம் புகை மூட்டம் பெருகிக் கண்காணிக்க முடியாமல் ஆட்சி அறையிலிருந்து எல்லா இயக்குநர்களும் ஓட வேண்டிய தாயிற்று! பத்து நிமிடம் கடந்து வெளியே உள்ள டாசல் ஜனனி ஓட்டும் இரண்டு தீ அணைப்பு பம்புகளை ஓட்டினார்கள்! டர்பைன் கட்டடத் தீயை அணைக்க மட்டும் ஒன்றரை மணி நேரமானது! இரண்டு மணி நேரம் கடந்து, போரிக் ஆஸிடை கனநீர் மிதவாக்கியில் செலுத்தும் [Boric Acid Injection System] அணு உலையின் இரண்டாவது தடுப்பு ஏற்பாடு, மின்சாரம் இல்லாததால் கையாட்சியில் திறக்கப் பட்டது!

நான்கு மணி நேரம் கடந்து, இயக்குநர் அணு உலைக் கோட்டை அரணுக்குள் சென்று சோதித்ததில், கதிரியக்கம் எப்போதும் உள்ளபடிக் குன்றிய அளவிலே இருந்தது. ஐந்தரை மணி நேரம் கழித்து தீயணைப்பு நீர் கொதி உலைக் கலன்களில் நிரப்பப் பட்டது! அணு உலையின் இரு முனையிலும் கதிர்வீச்சுத் தடுப்பாக அமைக்கப் பட்டுள்ள ‘முனைக் கவசச் சாதனத்தின் ‘ வெப்பத்தைத் தணிக்க [Endshields Cooling System] தீயணைப்பு நீரே பயன் பட்டது! புகை மண்டலம் கரைந்துபோய், ஆட்சி அறைக்குள் மறுபடியும் புகுந்து செல்ல 13 மணி நேரம் கடந்தது! பதினைந்து மணி நேரம் கடந்து நிலையத்தின் புறத்தே சூழ்வெளியைச் சோதித்ததில், கதிரியக்கப் பொழிவுகள் எதுவும் காணப்பட வில்லை! வெடி விபத்து நேர்ந்து 19 மணி நேரங் கழிந்து, இரவு (11:45 P.M) ‘அபாய நிலை அறிவிப்பு ‘ நீக்கப் பட்டது!

விபத்திற்குப் பிறகு மாற்றப்பட்ட யந்திர மின்சார சாதனங்கள்

விபத்தின் விளைவுகளை நீக்கி யாவற்றையும் புதுப்பிக்க இரண்டு ஆண்டுகளும், பல கோடி ரூபாய்களும் செலவாகின!

1. நிறுத்தப்பட்ட அணு உலையின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் உளவு அமைப்புகள், ஏற்பாடுகள் ஆகியவை ஒழுங்கு முறையில் இயங்க முதலில் சீராக்கப் பட்டன.

2. கட்டத்தில் எரிந்து சிதைந்து போன சாதனங்கள், கரிந்து போன வயர்கள், கேபிள்கள் மாற்றப் பட்டன. அவற்றுக்குச் சிறப்பான ‘தீக் கவச, புகை குன்றிய கேபிள்கள் ‘ [Fire Resistant Low Smoke Cables & Wire] உபயோக மாயின. தீப்பிழம்பில் வெந்த கான்கிரீட் தளங்கள், சுவர்கள் ஆகியவற்றில் தளர்ச்சியால் உறுதி இழப்பு நேர்ந்துள்ளதா வென்று சோதிக்கப் பட்டுச் செப்பணிடப் பட்டன!

3. முழு டர்பைன் ஜனனியும், அவற்றுக்கு உகந்த உபரிச் சாதனங்களும் மாற்றலாகின!

4. ஒவ்வோர் தள மட்டத்திலும் ‘தீத் தடுப்பு அரண்கள் ‘ [Fire Barriers], ‘தீத் துண்டிப்புகள் ‘ [Fire Breakers] அமைக்கப் பட்டன!

5. இரண்டாவது யூனிட்டின் டர்பைன் சுழற் தட்டு உருளை [Turbine Blades Rotor] நீக்கப் பட்டு, புதிதாக மேம்படுத்தப் பட்ட டர்பைன் உருளை இணைக்கப் பட்டது!

6. முதல் யூனிட் தளத்தில் முன்பு அமைக்கப் பட்ட, இரண்டாம் யூனிட்டின் சாதனங்கள் நீக்கப் பட்டு அவற்றுக்கு உரிய இடத்தில் மாற்றப் பட்டன.

7. அபாய மின்சார வினியோகம் துண்டிக்கப் பட்டு [Class III Emergency Power], நிலைய இருட்டடிப்பு [Station Blackout] நேரும் சமயத்தில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மின்சார வினியோகமும் [Class I, Class II Electric Supply] முடமாகிப் போனால், அணு உலைப் பாதுகாப்பை எப்படிக் கையாளுவது என்பதற்கு வரைமுறைகள் எழுதப் பட்டு, பயிற்சிகளும் இயக்குநர்களுக்கு அளிக்கப் பட்டது.

8. நரோரா மாடல் டர்பைன் சென்னைக் கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் பயன் படுவதால், அவையும் மாற்றப்பட்டு, புதுப்பிக்கப் பட்ட டர்பைன் சுழற் தட்டு உருளைகள் இணைக்கப் பட்டன.

டர்பைன் ஜனனி வெடி விபத்தின் காரணங்கள்! கற்ற பாடங்கள்!

யந்திர சாதனங்கள் யாவும் முறிவதற்கு முன்பு, தமது தனி ஊமை மொழியில் குறி சொல்லும்! பழுதான டர்பைன் சுழற் தட்டுகளின் அதிர்வுகளைக் கண்காணிக்கப் பல உளவிகள் [Vibration Probes] உள்ளன! சுழற் தட்டுகள் முறிந்த நரோரா டர்பைன் மாடல், முந்தைய கல்பாக்க அணுமின் நிலையங்களிலும் நிறுவன மானது! ஏற்கனவே கல்பாக்கத்தில் அந்த மாடல் டர்பைன் இயங்கும் போது, அதிர்வுப் பிரச்சனைகள் [Vibration Problems] இருந்ததாக அறியப் படுகிறது! நரோரா கீழ் அழுத்த டர்பைனில் எதிர்பார்க்கப் பட்ட, அதே பிரச்சனைகள் சரிவரக் கண்கணிக்கப் படாது போனால், அநேக சுழற் தட்டுகள் ஒரே சமயத்தில் முறிந்து போகும் வரை முற்ற விட்டதாக அறியப் படுகிறது!

விபத்துக்கு முன்பு நரோரா ஆட்சி அறையில் எச்சரிக்கை செய்த டர்பைன் அதிர்வு மானிகளை [Vibration Monitors], இயக்குநர் புறக்கணித்ததாக அறியப் படுகிறது! ஜனனியில் வெப்பம் தணிக்கும் ஹைடிரஜன் வாயு கசிவதைக் கண்காணிக்கும் உளவிகளும், எச்சரிக்கை ஏற்பாடுகளும் அமைக்கப் பட்டுள்ளன! ஆகவே மின்சார ஜனனியில் ஹைடிரஜன் வாயுக் கசிவின் [Hydrogen Gas Leakage] எச்சரிக்கைகள், டர்பைன் இயக்குநர் கவனத்தைக் கவராதது ஆச்சரியமாக உள்ளது! இவ்விரண்டு எச்சரிக்கைகளை இயக்குநர் கவனமாகக் கையாண்டிருந்தால், டர்பைன் வெடி விபத்து நேர்ந்திருக்காது! நிலையம் முடமாகி மின்சக்திப் பரிமாறாமல், செப்பணிடுவதில் இரண்டாண்டு காலம் வீணாகிப் போயிருக்காது! பல கோடி ரூபாய்ச் செலவை இழுத்து விட்ட நரோராவின் கோர விபத்துக்கு மனிதத் தவறுகளும் யந்திரப் பழுதுகளுமே காரணம்!

1. ‘சாதனத் தரக் கட்டுப்பாடுத் திட்டம் ‘ [Equipment Quality Assurance Program] அணுமின் நிலைய அமைப்புக் கலாச்சாரமாக [Quality Culture] டிசைன், உற்பத்தி, நிறுவகம், சோதிப்பு, இயக்கம், பராமரிப்பு [Design, Manufacturing, Construction, Commissioning, Operation & Maintenance] ஆகிய அனைத்து நிலைகளிலும் புகுத்தப் பட்டது!

2. இரட்டை அணுமின் நிலைய அமைப்புகளில் தீப்பற்றி அழிக்காதவாறு, மின்சாரம் பரிமாறும் வயர்களும், கேபிள்களும் பிரிக்கப் பட்டுத் தீக் கவசக் குகைகளில் அமைக்கப் பட்டன! அணுமின் சாதனங்களுக்குத் தனித் தனியாக இரட்டை மின்சார வினியோகக் கேபிள்களைப் பதித்து, ஒன்றில் பழுது ஏற்பட்டால், அடுத்த வழியில் மின்சக்தி கிடைக்குமாறு பிரிக்கப் பட்டது.

3. அபாய காலத்தில் ஆட்சி அறையில் இயக்குநர் பணி புரியமாறு மாற்றங்கள் செய்யப் பட்டன.

4. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மின்சாரப் பரிமாறலும் துண்டிக்கப் பட்டு, நீடித்த நிலைய இருட்டடிப்பு [Extended Station Blackout] சமயத்தில், அணு உலைப் பாதுகாப்பு, கொதி உலைக்கு நீரனுப்பல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஆய்வு முறை வழிகள் தயாரிக்கப் பட்டன.

5. இயக்கத்திற்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டிய டர்பைன், ஜனனிகளின் கண்காணிப்பு, செப்பணிடும் சோதனைகள் [Pre-Service, In-Service Inspections] எதுவும் புறக்கணிக்கப் படாமல் சரியான சமயத்தில் முடிப்பதற்குக் கட்டாய விதிகள் நிலைநாட்டப் பட்டன.

6. அணு உலை நீராவி ஆக்கும் ஏற்பாடுகளைத் தவிர்த்து [Outside the Nuclear Steam Supply Systems] பொதுத்துறைச் சாதன ஏற்பாடுகள் [Conventional Systems] எவை யெல்லாம் அணு உலைப் பாதுகாப்பைப் பாதிக்கலாம் என்பது ஆராயப் பட்டது.

7. தீ அணைப்பு நீர், தீயை அணைக்கப் பயன்படும் போது, அதே சமயத்தில் அணு உலை வெப்ப நீக்கப் பாதுகாப்புக்கும், கொதி உலைக்கு அபாய கால நீர் அனுப்பவும், மற்றும் பாதுகாப்புக்கு உடந்தையான ஏற்பாடுகளுக்கும் வேண்டிய நீர் செலுத்தவும், தீ அணைப்பு நீர் ஏற்பாடு [Fire Figting System] உதவுமா வென்று ஆராயப் பட்டது.

நரோரா விபத்தைப் போல் மீண்டும் பாரத அணுமின் நிலையங்களில் நிகழுமா ?

அணு உலைப் பாதுகப்புக்குச் சுயக் கட்டுப்பாடு முறைகள் எத்தனை இருந்தாலும், இயக்கத்தின் போது மனிதக் குறுக்கீடுகள் எழுவதைத் தடுக்க முடியாது! மனிதர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் கைத் தவறுகளையோ [Physical Errors], அல்லது சீர் தூக்கிப் பார்த்துச் சிந்திக்கும் மூளைத் தவறுகளையோ [Judgemental Errors] யாராலும் கட்டுப் படுத்த முடியாது! கைத் தவறுகளைக் கண்காணிப்புகள் மூலம் குறைக்கலாம்! ஆனால் ஆட்சி அறை எச்சரிக்கைக் காட்சிகளை உடனே ஆராய்ந்து, சீக்கிரம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் மூளைத் தவறுகளை எவராலும் தடுக்க முடியாது!

நரோராவில் ஏற்பட்ட தீ விபத்து போல், பாரதத்தின் புதிய அணு உலைகளில் மீண்டும் நேர்ந்திட வழியில்லை! ஆனால் வேறுவித விபத்துகள், மானிடத் தவறுகளால் தூண்டப் பட்டு அணு உலைகளில் நேரலாம்! மனிதத் தவறுகளைப் பயிற்சி முறைகள் மூலமும், தொடர்ந்த கண்காணிப்புகள் மூலமும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்! அடிக்கடி நினைவூட்டும் இயக்குநர் பயிற்சிகளும், அனுபவ இயக்குநரின் கண்காணிப்பும் அணு உலைகளில் அபாயங்கள் நிகழப் போவதை நிச்சயமாகத் தடுக்க முடியும்! அடுத்து யந்திரச் சாதனங்கள் தயாரிப்பின் போது புரியும் முக்கிய பணியான ‘தரக் கட்டுப்பாடுகள் ‘ [Quality Controls] பழுதுகள் முதலிலே ஏற்படாமல் தடை செய்யும்! ஆரம்ப நிலை யந்திரத் தரக் கட்டுப்பாடும், மனிதத் தவறுகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் நடத்தும் முற்போக்குப் பயிற்சி முறைகளும், அனுபவ இயக்குநர் கண்காணிப்பும் கடைப்பிடிக்கப் பட்டால், விபத்துக்கள் நேராமல் பாரதத்தில் அணுமின் உலைகளில் மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும்!

*****************

தகவல்கள்:

1. Nuclear News: The New Indian Nuclear Plants, Narora and Beyond By: Gregg Taylor [April 1990].

2. Candu Owners Symposium: Narora Turbine Failure Event (March 31, 1993) By: Y.S.R. Prasad, Executive Director [Operations], Nuclear Power Corporation India Ltd.

3. Nuclear Europe Worldscan: Progress of India ‘s Nuclear Power Program [Feb. 2001].
4. World Atlas of Seismic Zones & Nuclear Power Plants [Nov. 1982].

5. http://en.wikipedia.org/wiki/CANDU_reactor (Canadian CANDU Nuclear Power) (March 19, 2011)

6.  https://en.wikipedia.org/wiki/Narora

7.  http://citeseerx.ist.psu.edu/viewdoc/download?doi=10.1.1.302.618&rep=rep1&type=pdf

8. http://www.countercurrents.org/subbarao161011.htm

+++++++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  July 22, 2015 [R-2]

https://jayabarathan.wordpress.com/

பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத் தொடுவான் விண்ணூர்தி

Historic Encounter

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

+++++++++++++++++

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FvksfIDVGAA

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ

http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE

http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html


(NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto & Beyond)

Pluto image -1

 

புதுத் தொடுவான் விண்ணூர்தி
முதன்முதல் நெருங்கி
புறக்கோள் புளுடோவைப் படமெடுக்கும்.
அணுசக்தி உந்து ஆற்றலில்
மிகுந்த வேகத்தில்
கடந்து செல்கிறது விண்கப்பல்
புளுடோ வையும்
சாரன் துணைக் கோளையும்.
நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த
முதலிரு வாயேஜர்
விண்ணூர்திகள் காணாத
விந்தைகள் காணும் !
புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
கியூப்பர் வளையத்தின்
கோள்களை உளவச் செல்லும் !
சூரிய மண்டலத்து
வால்மீன் மந்தைகளின்
வளர்ப்பிடத்தைத்
தெளிவாக
ஆய்வுகள்  செய்யும் !
வாயேஜர் விண்ணூர்திகள் போல்
பரிதி மண்டல
வரம்பைத் தாண்டி
வரலாற்றிலே
புதிய மைல் கல்லை நடும்
நாசாவின்
புதுத் தொடுவான் கப்பல் !

+++++++++++

Image of Moon Charon

நியூ ஹொரைசன் விண்ணூர்தி புளுடோவையும், அதன் துணைக் கோள்களையும் தேடி ஆய்ந்தது, நாசாவின் கடந்த 50 ஆண்டு வரலாற்றில் நிகழ்ந்த மகுடச் செயலாகும்.  மீண்டும் சாதித்த ஒரு வரலாற்று முதன்மை வெற்றியாகும்.  அமெரிக்கா புளுடோவை நெருங்கி அறிந்த முதல் தேசமாய் முன்னிற்கிறது.  இத்துடன் பரிதி மண்டலக் கோள்கள் அனைத்தையும் சுற்றி முன்னோடி ஆய்வு செய்த தேசமாய், ஈடு இணையற்ற பெயரெடுத்து மகத்தான சாதனை புரிந்துள்ளது.

சார்லஸ் போல்டன் [ நாசா ஆளுமையாளர்]

புளுடோ போன்ற குள்ளக் கோள்கள் வானியல் உயிர்த்துவ விஞ்ஞானத்தில் ஆழ்ந்தறிய [Astrobiological Potential] மிக்க வாய்ப்புகள் அளிப்பவை.  மனித இனம் இதுவரைப் பல்லாண்டுகளாய் முயன்று, புதுக்கோள் ஒன்றைப் பற்றி விபரங்கள் அறிய இப்படியோர் வாய்ப்பு பிற நாடுகளுக்குக் கிடைத்ததில்லை. புளுடோ பற்றி நாம் இப்போது அறிந்து கொளவது எல்லாம் புதிய வெளிப்பாடே [New Revelation].

அலன் ஸ்டெர்ன்  [நியூ ஹொரைசன் புளுடோ பிரதம  ஆய்வாளர்]

Pluto and its moons -1

புதுத்தொடுவான் விண்கப்பல் புறக்கோள் புளுடோவை நெருங்கிப் பத்தாண்டு பயணச் சாதனை வெற்றி.

2015 ஜூலை 14 ஆம் தேதி நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி சுமார் பத்தாண்டுகள் பயணம் செய்து 3 பில்லியன் மைல்கள் கடந்து நமது பரிதி மண்டலத்தின் விளிம்பில் சுற்றும் புறக்கோள் புளுடோவை 7750 மைல் [மொம்பை – நியூயார்க் தூரம்] தூரத்தில் முதன்முதல் திட்டமிட்ட படி நெருங்கிப் படமெடுத்துப் புதியதோர் விண்வெளிச் சாதனைப் புரிந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாய் நாசா செய்து காட்டிய விண்வெளித் தேடல் சாதனைகளில், இது ஓர் அசுரச் சாதனையாகக் கருதப்படுகிறது.  2006 இல் ஏவிய இதுவே சூரிய மண்டலத்துக் கோள்களின் இறுதித் தேடலாகக் கருதப்படுகிறது.

நாசா முதன்முதலாக அணுசக்தியைப் பயன்படுத்தி புதுத்தொடுவான் விண்கப்பல் நீண்ட தூரம், நெடுங்காலம் பயணம் செய்து மணிக்கு 30,000 மைல் துரித வேகத்தில் புளுடோவை நெருங்கத் திட்டமிட்டு மாபெரும் வெற்றி பெற்றது.  15 வருடத் திட்டத்தில் உருவாகிய நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் மேலும் தொடர்ந்து பயணம் செய்து, எண்ணற்ற வால்மீன்கள் உற்பத்தியாகும் கியூப்பர் வளையத்தை [Kuiper Belt] அடுத்து நெருங்கப் போகிறது. 700  மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்ட புதுத்தொடுவான் விண்கப்பல் கியூப்பர் வளைய அகிலத் துணுக்குகள் [Cosmic Debris] எவையும் தாக்காபடி தப்பியது பெரு வியப்பைத் தருகிறது.

Relative Sizes of Dwarf Planets

புதுத்தொடுவான் விண்ணூர்தி பூமிக்கு அனுப்பிய புதிய தகவல்

துருவ பனித் தொப்பி பூண்ட புளுடோவின் விட்டம் 1472 மைல் என்று துல்லியமாய்க் கணிக்க முடிந்தது.  மேலும் நைடிரஜன் வாயு புளுடோவி லிருந்து வெளியாவது அறியப் பட்டது.  புளுடோவில் விண்பாறைகள் விழுந்து குழி விழாமல் [Impact Craters] சமவெளித் தளங்கள் [Plateaus] உள்ள வழவழப்பான பகுதிகள் காணப்பட்டன.  பனிக்கோளான புளுடோவின் தள உஷ்ணம் : [-230 டிகிரி C].  புறக்கோள் புளுடோவின் உட்புற வெப்பச் சூட்டில் நீரான அடிக்கடல் ஒன்று இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  புளுடோவில் உள்ள பனிமலைத் தொடர் 11,000 அடி [3400 மீ] உயரத்தில் அமெரிக்க ராக்கி மலைத்தொடர் போல் இருப்பதாகத் தெரிகிறது. சூரிய மண்டலம் தோன்றி  சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆயினும், புளுடோ தோன்றி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்.

நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சாரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங் களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பார்ப்புகள் 2015 ஆண்டு ஜூலையில் நிறைவேறும் !

அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

Pluto Satellites

புளுடோ குள்ளக் கோளின் ஐந்து துணைக்கோள்கள்

புளுடோவில் அடிக்கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியத்தின் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

“பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்திய தோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2015] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளை நெருங்கப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜூலையில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை மிக நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15 புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

புளுடோவின் தள உஷ்ணம் (-230 டிகிரி C) ஆக இருப்பதால், பனித் தரைக்குக் கீழே உள்ள நிரந்தர வெப்ப எழுச்சியால் நீர் மயக் கடல் ஒன்று இருக்குமா என்ற ஐயப்பாடு இருந்து வந்தது.  புளுடோ உட்கருவில் தொடர்ந்து வெப்பம் தர பாறையில் கதிரியக்கப் பொட்டாசியம் குறைந்தது [75 ppb] [parts per billion] அளவு இருக்க வேண்டும்.

Eris and Moon

இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

New Horizon Travel Path

இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

“சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

 

“சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

“இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

“இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.

Pluto Surface

விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

New Horizon Spaceship

 

புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல் களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

Current Location

2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டது என்ன ?

முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமி யிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

Project Details

வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

(தொடரும்)

படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

தகவல்:

a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html(Jupiter)

b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html(Saturn)

c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)

d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html(Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 2005)

2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

14 a.  http://www.davidreneke.com/hubble-to-search-beyond-pluto-for-a-new-horizons-target/#  [June 20, 2014]

15. http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2015/02041311-new-horizons-returns-first.html  [February 4, 2015]

16.  http://blogs.scientificamerican.com/observations/2015/03/06/dawn-spacecraft-arrives-at-ceres-becomes-first-to-orbit-a-dwarf-planet/  [March 6, 2015]

17. http://www.nasa.gov/newhorizons/homes-on-pluto/  [March 10, 2015]

18.  http://www.nytimes.com/interactive/2015/01/13/science/space/photos-of-pluto-from-nasa-new-horizons.html?_r=0   [March 11, 2015]

19. http://en.wikipedia.org/wiki/New_Horizons, [March 24, 2015]

20.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/naming-the-mysterious-features-of-pluto-and-charon-an-open-invitation-to-the-world-community.html?  [March 24, 2015]

21.  https://en.wikipedia.org/wiki/Moons_of_Pluto  [July 17, 2015]

22.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/07/nasa-pluto-mission-charons-strange-mountain-has-geologists-stunned-and-stumped.html?  [July 17, 2015]

********************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) July 18, 2015

[http://jayabarathan.wprdpress.com]

கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் முந்தைய பூகாந்தத் துருவத் திசை மாற்றக் காலக் கணிப்பு.

Geological Radiometry

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பூமியின் காந்த துருவங்கள்
திரும்பத் திசைமாறும் !
ஆமை வேகத்தில் வட துருவம்
தென் துருவ மாகும் !
பூமியின் சுழற்சி நின்று,
எதிர்த்  திசையில் மீண்டும் ஓடும் !
பரிதியின்  உதயம் அப்போது
கிழக்கி லிருந்து மேற்கு !
உயிரினம்,  மானிடம்  பாதிப்பாகும்.
மின்காந்த இயக்கங்கள் பூமியில்
தன்னியல் மாறும்.
சூழ்வெளி மண்டலம் முறிந்து
பாழ்வெளி ஆகுமோ ?
நீர்வள மண்டலம் ஆவியாய் மாறி
நிலம் பாலை ஆகுமா சூடேறி ?
உயிரினங்கள் மரிக்குமோ ?
பயிரினங்கள்
பசுமை இழக்குமோ ?
ஒரு மில்லியன் ஆண்டுகட்கு
ஒருமுறை நேர்ந்திடும்
துருவத் திருப்பம்,
பிறகு மீளும் !
இயற்கை நடன முறையில்
திருவிளை யாடல் !
பருவ காலம் தாறு மாறாகி
வாழ்க்கைப் போக்கு
மாறுபடும்.
பிரளய நர்த்தனப் பயிற்சி
அரங்கேறும் !

+++++++++++++

Earth's Pole Reversal

கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் [Radiometric Dating], கடற் படிமானம், புவித் துருவ மாறுதல் [Sea Sediments, Earth’s Pole Reversal] ஆகியவற்றில் செய்த முதல் நேரடி ஒப்புநோக்கு ஆய்வு இது. பூதளவியல் கால நேர்ச்சி விளைவுகள் கணிப்புக்கு எமது ஆய்வுப் பணித் தற்கால விளைவுகளின் எதிர்கால ஆராய்ச்சிக்கு அவசியமானது.

டாக்டர் யுசுகே  சுகநுமா [National Institute of Polar Research, Tokyo] 

திரும்பத் திரும்ப நேரும் புவிக் காந்த துருவ மாறுபாடு

பூமியின் காந்த துருவங்கள் ஓர் இடைவெளிக் காலம் விட்டு வட துருவம் தென் துருவமாகவோ, தென் துருவம் வட துருவமாகவோ திரும்பத் திரும்ப மாறி வருகின்றன.  சமீபத்தைய துருவத் திசை மாறுதல் நேர்ந்து சுமார் 780,000 ஆண்டுகள் கடந்துள்ளதாகக் கணிக்கப் படுகிறது.  கடந்த துருவ மாறுபாடு “மாதுயுமா-புருனெஸ் வரம்பு”  [Matuyuma-Brunhes Boundary (MBB)] என்று அழைக்கப் படுகிறது.

Earth Pole Reversal

அந்த துருவ மாற்ற வரம்பு [MBB] பாறைகளின் கால வரையறை வயது நீட்சியை [Calibrating the Ages of Rocks] ஒப்புநோக்கவும், அவற்றின் தோற்ற கால ஆய்வுக்கும் மிக முக்கியமாகத் தேவைப் படுகிறது.  ஆனால் தற்போதைய கால நிலைப்பாடு ஆய்வு முறைகள் [Dating Methods] துல்லிய மாகக் காலத்தை நிர்ணயம் செய்வதில்லை.

ஜப்பான் – கனடா நாடுகளில் வாழும் ஓர் ஆராய்ச்சிக் குழுவினர் துருவ மாற்ற வரம்பு [MBB] காலத்தைச் செம்மையாக அறிய மேம்படுத்தியுள்ளார். அதற்காக துருவ மாற்ற நேர்ச்சிக்குச் சற்று முன்னே நிகழ்ந்த எரிமலை வெடிப்புச் சாம்பலை ஆராய்ந்ததில்,  அதனில் சிறு ஸிர்கான் படிமங்கள் [Small Zircon Crystals] இருக்கக் கண்டனர்.  எரிமலைச் சாம்பல் உண்டான அதே சமயத்தில் ஸிர்கான் படிமங்கள் உருவாகியுள்ளன.

யுரேனியம் – ஈயம் கதிர்த்தேய்வு முறையில் [Uranium – Lead Decay Process] ஸிர்கான் கதிர்த்தேய்வுக் காலக் கணிப்பு [Radiometric Dating of Zircon] மூலம் எரிசாம்பலின் துல்லியமான வயதைக் காண முடிந்தது.  இந்தக் கணிப்பு படிமானப் பாறை வயதை அறிய வேறு ஒரு முறையிலும் செய்யப்பட்டு சரிபார்க்கப் பட்டது.  இந்த தகவல் பூதளவியல் இதழில் [Geology Journal ] வெளியாகியுள்ளது.

Earth's Pole Reversal

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iGDrq8rikJc

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=j37F8LUkBig

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=n8Cru41w5uI

http://paleobiology.si.edu/geotime/main/foundation_dating4.html

http://www.sciencechannel.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-radiometric-dating/

http://www.sciencechannel.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-magnetic-field-reversal/

https://answersingenesis.org/geology/radiometric-dating/

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1920gi3swe4

Earth magnetic field

“பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”

பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்

பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம்.  அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு,  காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது.  அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது.  அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது.   காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது.   அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்

மோனிகா கோர்ட்டே  [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

Iside the Earth

கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்பதாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?

நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார்.   அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே  தக்க நிரூபணம் தருகின்றன.   முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது.   அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி  அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.

Earth's Core

அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும்,  உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது.  துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது.   அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது.  இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது.  அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது.  மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும்.   அச்சோதனைகளில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறிவிக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம்  நிகழப் போகிறது எனப்படுவது.  இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப்  ரஷ்யா” [Voice of Russia].   அறிவித்த நாள் :  ஏப்ரல் 29, 2014.

பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.   அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது.   துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது.  அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம்.  துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ?  பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ?  எதிர்ர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ?  இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ! ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை.  அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

Fig 1 Polat Shift in Earth

“பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல்.  பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது !  பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”

ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

“கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

Fig 1B Magnetic Pole Shift

“பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”

பேராசிரியர் பிராடு ஸிங்கர்.

பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல !  அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன !  பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் !  அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது !  பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

Fig 1C Structure of Earth

பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது !  பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன !  கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது !  அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது !  மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

Fig 1E Relative Size of Sunspots

2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது.  அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது !  அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது !  தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது.  ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

Fig 1 Polat Shift in Earth

பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன.  சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள்.  வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது !  அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் !  பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

Earth magnetic field -2

பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறைகளைக் (Patterns) கண்டறிந்தனர்.  வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

Fig 4 Power of Geodynamo

பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன !  பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை !  அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles).  துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன.  அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார்.  அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் !  2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன !  அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them
19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html [February 10, 2012]
20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [June 21, 2015]

21.http://www.spacedaily.com/reports/When_next_Earths_magnetic_field_reverse_begins_and_what_consequences_for_mankind_will_it_have_999.html   [April 29, 2014]

22.  http://www.iflscience.com/physics/magnetic-pole-reversal-can-take-less-lifetime  [October 15, 2015]

23.  https://www.ngdc.noaa.gov/geomag/faqgeom.shtml  [Frequently Asked Questions]

24.  http://study.com/academy/lesson/radioactive-dating-methods-uses-and-limits-of-radioactive-decay-as-a-dating-tool.html  [Radiometric Dating of Earth’s Pole Reversal]

25.  http://evolution.berkeley.edu/evosite/evo101/IIE1aAtomicclocks.shtml  [Radiometric Dating]

26. http://www.sciencedaily.com/releases/2015/07/150707101952.htm  [July 7, 2015]

27.  https://community.emc.com/people/ble/blog/2012/02/11/magnetic-pole-reversal  [February 12, 2012]  [NASA Report]

27. http://www.spacedaily.com/reports/Improved_age_for_Earths_latest_magnetic_field_reversal_using_radiometric_dating_999.html  [July 8, 2015]

******************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]   July 11, 2015

https://jayabarathan.wordpress.com/

பூகோள நாள் சுழற்சி மணி நேரம் அணுத்துவ அளவுப் புரோட்டீனில் உயிரியல் குறிப்பதிவு ஆகியுள்ளது

Earth daily rotation period encode
பிரபஞ்ச அரங்கமே
பிரம்மா படிப்படியாய்​த் திட்டமிட்டு
விரியும் பெருங் குமிழியே !
தானாய் எதுவும் உதிக்க வில்லை !
வீணாய் இந்தப் பேரண்டம்
தோன்ற வில்லை !
ஒன்றி லிருந்து ஒன்று சீராகி
உருவாகி வந்துள்ளது !
இல்லாத ஒன்றி லிருந்து, எதுவும்
இயக்காத ஒன்றின் மூலம்,
திட்ட மிடப் படாமல் எதுவும்
கட்டப்பட வில்லை !
பிரபஞ்சப் படைப்புகள் அனைத்தும்
காரண-விளைவு
நியதியால்
சீரொழுங்கு இயக்க முறைகளில்
நேரான தொடர்ச்சியில்
வேராய் நிலைத்து வளர்பவை !
தாறு மாறாக எதுவும்
உண்டாக்கப் பட வில்லை !
தேனெடுக்கும் தேனீக்கள்,
அணி வகுக்கும் எறும்புகள்,
கூடு கட்டும் தூக்கணாம் குருவி,
பறக்கும் கழுகு,
நீந்தும் திமிங்கலம்,
ஊர்ந்திடும் இலைப்புழு, அது மாறிப்
பறந்திடும் பட்டாம் பூச்சி,
மரம், காய் கனிகள்,
மனிதம், விலங்கினம் எல்லாம்
கணித விஞ்ஞான​த்தில்
திட்ட மிடப் பட்டவை.
காலவெளி வெடிப்பிலே
மனிதப் பிறவியே
மேலான ஓர்
மணி யந்திரம் ! 
+++++++++++++++++++++
Earth rotation period encode
கேய்சியும் [KaiC] மற்ற புரோட்டீன் மூலக்கூறுகளும் இம்மி நேர வினாடி அளவீடுகளில் நகரக் கூடும்.  இந்த ஆய்வுகள் முதல் முறையாக அணுத்துவ வடிவ  அமைப்பு முடிவாக, நுண்ணியப் புரோட்டீன் மூலக் கூறுகளில் 24 மணிநேரப் பூமிச் சுற்றியல் சீரிசைவுகளை  [24 Hour Circadian Rhythm] உண்டாக்க முடியும். அதுவே மூலக்கூறு அமைப்பைக் கட்டுப் படுத்தவும், இயக்கவும் வல்லது.       
பேராசிரியர் சுஜி அகியமா [CIMoS Director & Lab Head, Center of Integrative Molecular System]
 ஜப்பானிய ஆய்வுக் குழுவினர் புரோட்டீனில் நாள் மணி நேரக் குறிப்பதிவு [Biological Time Encode] கண்டுபிடிப்பு
 2015 ஜூன் 28 இல் ஜப்பானிய ஆய்வுக் குழுவினர் பூமியின் சுழற்சி நாள் மணி நேரக் குறிப்பதிவு “கேய்சி” [KaiC] என்னும் ஒருவிதப் புரோட்டீனில்
அணுத்துவ வடிவில் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்.  அதன் நுண்ணிய உயிரியல் மூலக்கூறு விட்ட அளவீடு 10 nm  [10 nano meter diameter Biomolecule in cynobacterial cells]. [1 nm is one billionth of a meter].  அந்தக் குழுவினர் : டாக்டர் ஜூன் அபே, பேராசிரியர் அட்சுஸி முகையமா, பேராசிரியர் சுஸி அகியமா ஆகியோர்.  அவர் ஸைமாஸ் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர். [CIMoS -Research Center of Integrative Molecular Systems, Japan] .  மேலும் பேராசிரியர் ஷினி ஸைட்டோ  [Dept of Theoretical & Computational Molecular Science] என்பவரும் சேர்ந்துள்ளார்.
மனிதன் காலவெளி வெடிப்பிலே தோன்றிய ஓர் மணி யந்திரம்  [Time Machine]. நாளொரு பொழுதும் சூரிய உதய, அத்தமனம் சுழலும் 24 மணிநேரமாகி அனைத்து உயிரினப் பிறவிகளுக்கும் ஓர் உயிரியல் குறியீட்டு முத்திரையாக [Biotime Code] இயக்கி வருகிறது.  இந்தக் கூட்டாய்வு காலநேர உயிரியல் விஞ்ஞானத்தில் [Chronobiology] வெகு காலமாய் எழுந்த வினாவுக்குத் தகுந்த விளக்கம் அளிக்கும். எப்படி உயிரியல் கடிகார மணிநேரம் [Circadian Period of Biological Clocks] கணிக்கப் படுகிறது ?  அதன் விளைவுகள் அடிப்படை உயிரியல் கடிகார மூலக்கூறு இயக்கத்தை அறிய உதவுகிறது.  இந்த ஆய்வு பயிற்சி சிகிட்சை முறை களில் [Therapies] ஏற்பாடும் காலமணிச் சீர்மை முரண்பாடு [Abnormal Circadian Rhythms] செம்மைக்கு உதவும் என்று அறியப் படுகிறது.
Modified program

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA

http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qoERVSWKmGk

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=W4mYwsr9gGE

Origins of life 1

இந்த சோதனைகள் மூலாதார மூலக்கூறுகளான கொய்னொலோன் & ஐசோகொய்னோலோன்  [Quinolone & Isoquinolone] இரண்டும் சூட்டுச் சூழ்வெளியில் பின்னிப் பிணைந்து சூரியப் புயலில் வீசி எறியபடலாம் என்று அழுத்தமான சான்றுகளைக் காட்டுகின்றன.  குளிர்ந்து போன மூலக்கூறு முகில்களில் இவை விழுந்த பின்பு குளிர்ந்த அண்டெவெளி நுண்துகள்களில் படிந்து இயற்கை நிகழ்வுகளில் ஈடுபடும்.  அவை மேலும் சிக்கலான உயிர்ச்சார்புள்ள மூலக்கூறுகளை உண்டாக்கி டியென்ஏ & ஆரென்ஏ உருவாக்க உதவும் [Biorelevant Molecules like Nuclebases to create DNA & RNA]. 

ரால்ஃப் கெய்ஸர், இரசாயனப் பேராசிரியர், ஹவாயி பல்கலைக் கழகம்  

Solid Evidence of DNA Existance

இதுதான் முதன்முறையாக எவரும் விண்மீன்கள் வெப்ப இயக்கத்தை உள்நோக்கியது.  நைட்டிரஜன் கலந்துள்ள வளையத்தை கார்பன் அணுக்கள் உண்டாக்குவது அத்தனை எளிமை இல்லை.  இப்புதிய ஆய்வு அந்த சூட்டு வாயுத் தோற்ற வாய்ப்பு இருப்பை மெய்ப்பிக்கிறது.  அதை அகிலவெளிக் கனல் சமைப்பு [Cosmic Barbeque] என்று சொல்லலாம். ஆனால் அந்த இயக்கம் நிகழ்வதற்கு ஒரு சக்தி அரண் [Energy Barrier] உள்ளது. அந்த வரையறை ஓர் விண்மீன் அருகில் அல்லது ஆய்வகச் சோதனையில் மீறலாம்.  அதாவது இந்த உயிரின மூல மூலக்கூறுகளை இப்போது நாம் விண்மீன்களைச் சுற்றி இருப்பதைத் தேடலாம்.

முகஸகீத் அஹமத், பெர்க்கிலி ஆய்வுக்கூட விஞ்ஞானி 

PROTEIN

உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை டியென்ஏ 
பல ஆண்டுகளாக உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை [Double Helix] எனப்படும் டியென்ஏ ஆக்கும் மூலக்கூறுகள் பிரபஞ்சத்தில் எப்படி உருவாகி வருகின்றன என்னும் கேள்வி கேட்கப்படுகிறது.  அதற்கு மூலாதார மூலக்கூறுகள் : நைட்டிரஜன் அணுக்கள் பதிந்துள்ள கார்பன் வளைய அமைப்புகள் [Key Components of Nucleobases] எப்படித்
தோன்றுகின்றன என்று முதலில் அறிய வேண்டும்.
முதன்முறையாக அமெரிக்காவில் பெர்க்கிலி தேசீய ஆய்வகம், ஹவாயி பல்கலைக் கழகம் இரண்டும் சேர்ந்து ஆராய்வுகள் நடத்தி, பிரபஞ்சத்தில் விண்மீன்களுக்கு அருகில் உள்ள சூட்டுத் தளங்களில் தகுந்த சூழ்நிலை அமைந்து இவ்வகை மூலக்கூறு நைட்டிரஜன் படிந்த கார்பன் வளையங்கள் [Quinolone] உருவாக நிகழ்வுகள் நேர்கின்றன என்று கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்கள்.

fig-1b-genome-of-the-species

“உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

Earth Spectrum

உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

Comets Gifts for Earth

[384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

Growth of Organisms

லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich Oparin] [1894-1980].

the-origins-of-life

“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

Miller Urey Experiment

அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

fig-1a-the-earths-biosphere1

கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :  1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).  2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

fig-1-the-beginning-of-life

பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

Fig 3 Comet Falls on Earth

பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமா கவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

fig-1f-amphiphilic-molecules

சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

Establishment of life on Earth

சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

fig-2-signs-of-extra-terrestrial-life1

உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது.

2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

Origins of life

3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

Fossil Records of life

கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக் ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவதாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக்கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Building Blocks of life

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html [May 14, 2009]

37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis  [June 6, 2014]

38.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/secrets-of-extreme-continent-building-discovered-a-key-to-life-on-earth-and-beyond.html [March 31, 2015]

39. http://www.dailygalaxy.com/my_weblog/2015/05/cosmic-hotspots-near-stars-yield-buiding-blocks-of-dna.html  [May 6, 2015]

40  http://www.sciencedaily.com/releases/2015/05/150506095248htm  [May 6, 2015]

41.  https://en.wikipedia.org/wiki/Nanometre  [Nano meter Size] [February 11, 2009]

42.  http://www.sciencedaily.com/releases/2014/07/140710141632.htm  [July 10, 2014]

43.  http://www.sciencedaily.com/releases/2015/06/150625145232.htm

44.   http://phys.org/news/2015-04-discovery-protein-capable-dna-sperm.html  [April 24, 2015]

45. http://www.terradaily.com/reports/Earths_daily_rotation_period_encoded_in_an_atomic_level_protein_structure_999.html  [June 28, 2015]

46.  http://www.asianscientist.com/2015/07/in-the-lab/circadian-kaic-protein-structure/  [July 2, 2015]

47.  Abe et al. (2015) Atomic-Scale Origins of Slowness in the Cyanobacterial Circadian Clock. Read more from Asian Scientist Magazine at: http://www.asianscientist.com/2015/07/in-the-lab/circadian-kaic-protein-structure/

49.  Abe et al. (2015) Atomic-Scale Origins of Slowness in the Cyanobacterial Circadian Clock. Read more from Asian Scientist Magazine at:http://www.asianscientist.com/2015/07/in-the-lab/circadian-kaic-protein-structure/

(தொடரும்)

******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) [July 4, 2015]

Attachments area

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(Major Barbara)

மூவங்க நாடகம்

(இரண்டாம் அங்கம்)

அங்கம் -2 பாகம் – 12

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“இந்தக் காசு பணத்தில் எப்படி என்னை நம்பி இருக்கும் எல்லோருக்கும் கஞ்சிக் குழம்பு காய்ச்சிக் கொடுப்பேன் கடவுளே ?  பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளைப் பற்றிப் பேசுவேன் ?  எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் !  பயமாக இருக்குது எனக்கு !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா)

மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************


நாடக உறுப்பினர்:    

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.

மற்றும் பலர்.

************************

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(இரண்டாம் அங்கம்)

அங்கம் – 2 பாகம் – 12

இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : காலைப் பொழுது.

அரங்க அமைப்பு :  ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி.  புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது.  கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன.  முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார்.  மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.  உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன்.  வாயாடி மனிதன்.  பெண் நடுத்தர வயது மூதாட்டி.  அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது.  கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார்.  காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார்.  ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்.  மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள்.  மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார்.  பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி.  அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான்.  ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான்.  ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள்.  புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள்.  அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார்.  இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)

மேஜர் பார்பரா:  (அடால்ஃப்ஸை நோக்கி)  தோழரே !  மீண்டும் ஒருமுறை நீ கடிதம் எழுத வேண்டும் செய்தித் தாளுக்கு.  ஆம் எனக்குத் தெரியும் உனக்கது பிடிக்கா தென்று.  ஆனாலும் நீ எழுத வேண்டும்.  குளிர் மாதங்களில் பசிக் கொடுமை நம்மைத் தாக்கப் போவது உண்மை !  பலர் வேலையின்றி ஊதியமின்றி இங்கு அவதிப் படுகிறார்.  வருவாயின்றி வயிறு காய்ந்து நாமெல்லாம் வெறுவாயாக இருக்கப் போகிறோம்.  சல்வேசன் ஆர்மி ஜெனரல் நமக்குப் போதிய வருவாயின்றிப் போனதால் சாவடியை மூட வேண்டிய திருக்கும் என்று எச்சரிக்கிறார்.  இப்போது நாம் அவமானத்துடன் தெருவில் கையேந்தி காசுக்குப் பிச்சை எடுக்க வேண்டும் என்று கலங்குகிறார் !


ஓபிரையன் பிரைஸ்:  மேஜர் !  நீங்கள் ஒருபோக்குச் சிந்தனையில் சல்வேசன் ஆர்மிக்குப் பணம் சேர்ப்பது ஓர் அதிசயம் ! ஒரு பெரும் பணி !  மழைத்துளி போல் ஒவ்வொரு நாணயமாகச் சேர்கிறது.  நமது இரும்புப் பெட்டி எப்போது நிறையும் ?

மேஜர் பார்பரா:  கையேந்திக் கேட்பதைத் தவிர வேறு நேர்மையான பாதை இருக்கிறதா ?  மக்களின் புனித ஆத்மாக்களுக்கு திருத்தி அளிக்காமல் பணம் சேமிக்கும் தொழிலில் ஈடுபடாமல் இருக்க முடியாது.  அரைக் காசும், முக்கால் நாணயமும் ஒவ்வொன்றாய்ச் சேர்ந்து நமது வயிற்றை நிரப்ப முடியாது.  நமக்குப் பத்தாயிரம், நூறாயிரம், ஆயிரம் ஆயிரம் நாணயங்கள் தேவைப் படுகின்றன !  அத்துடன் நான் பலரை மதம் மாற்றம் செய்ய வேண்டும் !  அதை விட்டுவிட்டுத் தெருவில் இப்போது பிச்சை எடுக்கச் செல்வதைக் காட்டிலும் செத்துப் போவது மேல் !

தந்தை ஆன்ரூ:  (கேலியாக) சுயநலமற்ற பண்பாடு எதற்கும் துணிந்து செல்லும் பார்பரா கண்மணி !

மேஜர் பார்பரா:  (கவலையோடு)  சரியாகச் சொன்னீர் அப்பா !  (துணிப் பையைக் கையில் ஏந்தி, கண்ணீரைத் துடைத்து)  இந்தக் காசு பணத்தில் எப்படி என்னை நம்பி இருக்கும் எல்லோருக்கும் கஞ்சிக் குழம்பு காய்ச்சிக் கொடுப்பேன் கடவுளே ?  பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளைப் பற்றிப் பேசுவேன் ?  எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் !  பயமாக இருக்குது எனக்கு !

ஜென்னி:  ஓ இறைவா !  எம்மைக் காத்திடு.  மேஜர் !  என் அனுதாபங்கள் !  உங்கள் துயர் இப்போது புரியுது எனக்கு !

மேஜர் பார்பரா:  (சட்டென)  ஜென்னி ! எனக்காகப் பரிதாபப் படாதே !  கவலைப் படாதே !  பார் நமக்குப் பணம் திரளும் !

தந்தை ஆன்ரூ:  பணம் தானாக எப்படிச் சேரும் கண்மணி ?

ஜென்னி:  ஏசு நாதரை வழிபட்டால் கிடைக்கும்.  பணம் சேர வேண்டும் என்று நேற்றிரவு மேடம் பெயின்ஸ் பிரார்த்தனை செய்தாராம்.  அது வீண் போகாது !

மேஜர் பார்பரா:  கேளுங்கள் அப்பா !  இன்று எங்கள் அணி வகுப்பில் மேடம் பெயின்ஸ் கலந்து கொண்டார் தெரியுமா ?  அந்த மூதாட்டி உங்களை சந்திக்க விழைகிறார் ! என்ன காரணமோ தெரியாது எனக்கு !  ஒருவேளை உங்களை மத மாற்றம் செய்வதற்குக் கூட நினைத்து இருக்கலாம் !

ஆன்ரூ:  மேடம் பெயின்ஸை சந்திக்க மகிழ்ச்சி பார்பரா !
ஜென்னி:  மேஜர் ! மேஜர் ! அதோ வருகிறான் அந்த முரடன் !  மூக்கைக் காயப் படுத்திய மூர்க்கன் !

(முரடன் வில்லியம் வாக்கர் வேகமாக வருகிறான்)

மேஜர் பார்பரா:  ஹலோ வில்லியம் !  சீக்கிரம் வந்து விட்டாய்.  உனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாரா முரட்டுத்தனம் போவதற்கு ?

வில்லியம்:  என்னை மண்டி இட வைத்து விட்டார்  அங்கே !  என் மேல் விழுந்தது ஒரு பெரிய பளு !  தரையில் வீழ்ந்தேன் நான் !

மேஜர் பார்பரா:  உன் மேல் விழுந்தது யார் ?


வில்லியம்:  என்னைக் கீழே தள்ளி என் மேல் விழுந்தவன் டோட்ஜர் (Todger).  ஏதோ காதில் உபதேசித்தான்.  அந்தக் கூட்டத்தில் ஒன்றும் புரிய வில்லை.  எனக்கு முதுகில் காயம் ! இரு தோளும் வலிக்குது.  இது எல்லாருக்கும் விளையாட்டு.  பொழுது போக்கு !

ஜென்னி:  ஐயோ பாவம் வில்லியம் ! உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

வில்லியம்:  யாரும் எனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டாம் ! அனுதாபப் படவும் வேண்டாம்.

மேஜர் பார்பரா:  (சிரித்துக் கொண்டு)  உன்னால் அவருக்கு எல்லாம் பொழுது போக்கு !  உனக்கு நல்ல புத்தி புகட்டி இருக்கிறார்.  திருந்துவதற்கு உன்னைக் கடவுள்தான் அங்கே அனுப்பி இருக்கிறார்.  நானும் அங்கு வந்து அந்த வேடிக்கையைப் பார்த்திருக்க வேண்டும் !

(தொடரும்)

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 21, 2011)

https://jayabarathan.wordpress.com/

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு

தாகூரின் கீதப் பாமாலை – 6
துயரம் போதும் எனக்கு

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

போகட்டும் என் கண்மணி !
போகட்டும் !
காதல் என்பது புளுகு மூட்டை
இனிக்கும் வேதனை !
வலிக்கும் ஆலிங்கனம் !
புரிய வில்லை அது புகல்வது !
பூக்களின் கோர்ப்பை
ஊக்கிடும் என் விழிகள்
பொழியும் கண்ணீர் துளிகள் !
சுயச் சமர்ப்பணத் துக்கு
முயலும் இதயம்
வேறொன்றை வணங்கிட :
‘ஏற்றுக் கொள் என்னை
ஏற்றுக் கொள் என்னை’
என்று யாசிக்கும் மாற்றான்
முன் மண்டியிட்டு !

ஆண்டாண்டு தோறும் நாம்
துயரம் அடைவது —
எப்போ தாவது நின்று
ஒருகணம்
ஒருவரை ஒருவர்
கண்டு களிப்பது, இருவரும்
கட்டிப் பிடிப்பது —
கண்ணீர்க் கடலில் மிதப்பது
மற்றவருக் காகப் புன்சிரிப்புகள்
இவை எல்லாம் ஏற்புடைத்தா ?
வாழ்க்கை ஆனந்தமே
குறிக்கோளாய்த் தேடுவ தெல்லாம்
ஒருவன் வாழ்வுப் பூரிப்பை
அடியோடு
கெடுத்து விடுவது !

+++++++++++++++++++
பாட்டு : 313 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). கவர்ச்சிக் கானங்கள். காதலிக்கத் தேடிக் கிடைக்காத பெண்கள்
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 27, 2012
*********************

நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

https://www.pnas.org/content/118/17/e2106371118

நாற்ப தாண்டுகள் பயணம் செய்து
நாசாவின் இரண்டு வாயேஜர்
விண்வெளிச் சிமிழ்கள்
சூரிய மண்ட லத்தின்
வேலி தாண்டி 
அண்டைப் பரிதி மண்டலத்தில் நீல்ஸ்
ஆர்ம்ஸ்டிராங் போல
பாதம் வைக்கும் !
நேர்கோட் டமைப்பில் வந்த
சூரியனின்
வெளிப்புறக் கோள்களை
விண்கப்பல்கள்
உளவுகள் செய்யும் !
நெப்டியூனின் நிலவை,
கருந் தேமலை,
பெரும் புயலைக் காணும் !
நாலாண்டுப் பயணம்
நீள்கிறது
நாற்பது ஆண்டுகளாய் !
அடுத்த பரிதி மண்டலத்தில்,                                                                    அலை ஓசைகள் எழுப்பும்                                                                                ஓங்கார ஒலி கேட்கும்.                                                                                            ஊர்திகள், அன்னியப் பிறவி கட்கு
எடுத்துச் செல்லும் நமது
ஞாலக் கதை சொல்லும்                                                                                கார்ல் சேகன்
காலச் சின்னத்தை !

*****************************

Launch

Voyager 2 launched on August 20, 1977, from Cape Canaveral, Florida aboard a Titan-Centaur rocket. On September 5, Voyager 1 launched, also from Cape Canaveral aboard a Titan-Centaur rocket.

Planetary Tour

Between them, Voyager 1 and 2 explored all the giant planets of our outer solar system, Jupiter, Saturn, Uranus and Neptune; 48 of their moons; and the unique system of rings and magnetic fields those planets possess.

Closest approach to Jupiter occurred on March 5, 1979 for Voyager 1; July 9, 1979 for Voyager 2.

Closest approach to Saturn occurred on November 12, 1980 for Voyager 1; August 25, 1981 for Voyager 2.

Closest approach to Uranus occurred on January 24, 1986 by Voyager 2.

Closest approach to Neptune occurred on August 25, 1989 by Voyager 2.

Most Distant Spacecraft

The Voyager spacecraft are the third and fourth human spacecraft to fly beyond all the planets in our solar system. Pioneers 10 and 11 preceded Voyager in outstripping the gravitational attraction of the Sun but on February 17, 1998, Voyager 1 passed Pioneer 10 to become the most distant human-made object in space.

The Golden Record

Both Voyager spacecrafts carry a greeting to any form of life, should that be encountered. The message is carried by a phonograph record – -a 12-inch gold-plated copper disk containing sounds and images selected to portray the diversity of life and culture on Earth. The contents of the record were selected for NASA by a committee chaired by Carl Sagan of Cornell University. Dr. Sagan and his associates assembled 115 images and a variety of natural sounds. To this they added musical selections from different cultures and eras, and spoken greetings from Earth-people in fifty-five languages.

Present Status

As of April 2020, Voyager 1 is at a distance of 22.3 billion kilometers (149.0 AU) from the Sun.

Voyager 2 was at a distance of 18.5 billion kilometers (123.6 AU).

Voyager 1 is escaping the solar system at a speed of about 3.6 AU per year.
Voyager 2 is escaping the solar system at a speed of about 3.3 AU per year.

There are currently five science investigation teams participating in the Interstellar Mission. They are:

1. Magnetic field investigation
2. Low energy charged particle investigation
3. Cosmic ray investigation
4. Plasma Investigation (Voyager 2 only)
5. Plasma wave investigation

Five instruments onboard the Voyagers directly support the five science investigations. The five instruments are:

1. Magnetic field instrument (MAG)
2. Low energy charged particle instrument (LECP)
3. Cosmic ray instrument (CRS)
4. Plasma instrument (PLS)
5. Plasma wave instrument (PWS)

One other instrument is collecting data but does not have official science investigation associated with it:

6. Ultraviolet spectrometer subsystem (UVS), Voyager 1 only

Termination Shock

Voyager 1 crossed the termination shock in December 2004 at about 94 AU from the Sun while Voyager 2 crossed it in August 2007 at about 84 AU. Both spacecraft are now exploring the Heliosheath.

The Heliosphere

The heliosphere is a bubble around the sun created by the outward flow of the solar wind from the sun and the opposing inward flow of the interstellar wind. That heliosphere is the region influenced by the dynamic properties of the sun that are carried in the solar wind–such as magnetic fields, energetic particles and solar wind plasma. The heliopause marks the end of the heliosphere and the beginning of interstellar space. Voyager 1, which is traveling up away from the plane of the planets, entered interstellar space on Aug. 25, 2012. Voyager 2, which is headed away from the sun beneath the plane of the planets, reached interstellar space on Nov. 5, 2018.

***************************************

“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”

எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)

“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் !  அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”

ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)



“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே !  175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது.  தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.

ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)

“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் !  நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன்.  ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”

டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)

 

நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள்.  அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு.  அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.

நாசா வெளியிட்ட அறிக்கை

நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்

2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார்.  அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும்.  மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.

ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார்.  திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார்.  ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது.  பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.

வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது.  அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.

இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.

வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது,  175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன.  அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.

புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்

1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது.  அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது.  வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !  மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது !  2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !

வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின.  வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர்.  அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !

பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !

வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன.  பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம்.  வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம்.  இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன !  அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன.  அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும்.  எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம்.  வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !

வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது !  ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG).  முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ்.  1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது.  2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ்,  மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன.  இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !

கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை

இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்.  2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன.  உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார்.  படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன.  நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.

———————–

*************************

படங்கள்:  BBC News, National Geographic News, NASA

தகவல்:

a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

7.  Space Travel : Mankind’s Messenger (Voyager 1 & 2) at the Final Frontier (September 5, 2012)

8. https://youtu.be/xZIB8vauWSI

9.  https://www.pnas.org/content/118/17/e2106371118

10.  https://voyager.jpl.nasa.gov/frequently-asked-questions/fact-sheet/

11. https://youtu.be/xZIB8vauWSI

********************
S. Jayabarathan (jayabarathans@gmail.com)  May 15, 2021  [R-2]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession)

மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்க நாடகம்
(மூன்றாம்  அங்கம்)
அங்கம் -3 பாகம் -3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.
பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறார்.
மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு
1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.


பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்
பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.
மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.
பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்
**********************


நாடக  உறுப்பினர்
1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்
(மூன்றாம் அங்கம்)
அங்கம் -3 பாகம் -3

இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
பொழுது :  அடுத்த நாள் காலை

அரங்க அமைப்பு:   பாதிரியார் மாளிகைப் பூந்தோப்பு.   உதய சூரியன் முகிலற்ற வானில் தனியாட்சி செய்கிறான்.   ஃபிராங்க் ஒரு நாற்காலில் அமர்ந்து மர நிழலில் காலையில் வந்த செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறான்.   தந்தை பாதிரியார் மெல்லத் தள்ளாடிய வண்ணம் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார்.   கண்கள் சிவந்துள்ளன.   தந்தையும் மகனும் தர்க்கம் புரியும் போது வில்லியம் வருகிறார்.  எதிர்பாராத விதமாய் மேடம் மோனிகா, மிஸ். விவியன், ஜார்ஜ் வாலஸ் மூவரும் வருகிறார்.

ஃபிராங்க்:  பார்த்தீரா  வில்லியம் ?   மிஸ் விவியன் அந்த தாய்க் கிழவி இடுப்பைச் சுற்றி வலது கையால் அணைத்திருக்கிறாள்.   என்ன ஆச்சரியம் !   விவியன்  உணர்ச்சிப் பெண்ணாய் மாறிப் போனாள், ஒரே நாளில்.
[பாதிரியார் வாசல் கதவைத் திறக்க மேடம் மோனிகா, மிஸ் விவியன் அவரைக் கடந்து பூந்தோப்பில் நுழைகிறார்.  பின்னால் வரும் ஜார்ஜ் வாலஸ் பார்வை ஃபிராங்க் மீது விழுகிறது.  ஃபிராங்கின் பார்வை மிஸ் விவியன் அழகை வியந்து கொண்டு விழித்த கண் இமைக்காது  நிற்கிறது]
ஃபிராங்க்:  உன்னைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி  மோனிகா !  மிஸ் விவியன்  உன்னை மீண்டும் இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு !   இந்தப் பூங்கா உங்கள் வருகையால்  அழகு பெறுகிறது.   உன் வனப்பில் பூத்துப் பொலிவாகிறது.
மேடம் மோனிகா:  கேட்டீரா ஜார்ஜ் !  இந்த உன்னத வரவேற்பு எனக்கு மெய்யாக மகிழ்ச்சி ஊட்டுகிறது.  நீயா இப்படி அழகாக எப்போதாவது என்னிடம் பேசி இருக்கிறாயா ?
ஃபிராங்க்:   மோனிகா !  இன்று  உன்னைப் பார்த்தால் பத்து வயது குறைந்து  இளமையாய் காணப்படுகிறாய்.   நீ எங்கிருந்தாலும் அந்த பூமி அழகு பெற்று மிளிரும்.


பாதிரியார்:   முதலில் இந்த புராதன கிறித்துவ ஆலயத்தை நீங்கள் பார்க்க வேண்டும்.  13 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.  இதை மேம்படுத்த எனக்கு நிதி உதவி கிடைத்தது.   ஆறாண்டுகளுக்கு முன்பு இதைச் செப்பணிட்டு ஒப்பனை செய்ய முடிந்தது.  மேடம் மோனிகா, வாலஸ் விரும்பினால் நான் அழைத்துப் போய்க் காட்டுகிறேன்.
மேடம் மோனிகா:   ஜார்ஜ் !  வாருங்கள், இந்தப் பூர்வீக ஆலயத்தைப் பார்த்து வருவோம்.   அந்த வேலை முடியட்டும்.
[பாதிரியார் முன்னே செல்ல மேடம் மோனிகா, வில்லியம், ஜார்ஜ் வாலஸ் கூடச் செல்கிறார்]
ஃபிராங்க்:   விவியன் !  நீ ஆலயத்தைப் பார்க்க விரும்ப வில்லையா ?
விவியன்:   இல்லை !   நான் உன்னிடம் என் அன்னையப் பற்றி ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.  நீ என் அன்னையைப் புகழ்வது போல் சற்று முன் இகழ்ந்திருக்கிறாய்.   என்முன் இப்படிப் பேசுவதை இனிமேல் நிறுத்திக் கொள்.   உன் தாயை மதிப்பது போல் என் தாயை மதித்திடு நீ.
ஃபிராங்க்:  கண்மணி விவியா !  என்ன உன் பேச்சு இன்றைக்கு விநோதமாய் இருக்கிறதே ?  நேற்று நீயே என் முன் உன் தாயைத் தூற்றினாய் !   இன்று நீ அவள் இடுப்பில் கரம் சுற்றி அணைத்துக் கொண்டு வருகிறாய் !  நேற்று நீ போட்ட வேடம் மெய்யா ?  அல்லது இன்று நீ போடும் நாடகம் உண்மையா ?
விவியன்:  நான் ஒன்றும் நாடகம் போடவில்லை !  தாயிக்கு எதிராய் நான் ஆயிரம் சொன்னாலும், அவள் என் தாய் என்பது உனக்கு நினைவில் வர வேண்டும் !  என் தாயை நீ  அவமானம் செய்வதை நான் தாங்கிக் கொள்ள முடியாது !
ஃபிராங்க்:  நீ திடீரென்று மாறி விட்டாய் விவியன் !
விவியன்:   ஆம் நான் அப்படி திடீரென்று மாறுபவள்தான் !   நீ மாறிக் கொள் என்னோடு உறவு கொள்ள விரும்பினால் !   இன்றுதான் நான் என் தாயை நன்கு அறிந்து கொண்டேன் !  நேற்று  அவளைப் பற்றித் தெரியாமல் வசை பாடினேன் !
ஃபிராங்க்:  உன் தாய் பச்சோந்தி போல் இடத்துக்கு இடம் நிறம் மாறுபவள் !  இன்று ஜார்ஜ் வாலஸை நேசிப்பது போல் நடிக்கிறாள்.  ஆனால் அவள் உள்ளத்தில் இருப்பவர் வேறு.  ஆதலால் நான் உன் தாயை அறவே வெறுக்கிறேன்.


விவியன்:  உனக்கு ஒன்றும் தெரியாது என் தாயைப் பற்றி !  அவள் இள வயதில் பட்ட வறுமைத் துயர்களை, சோகச் சூழ்நிலைகளை நீ அறிய மாட்டாய் !
ஃபிராங்க்:  உன் அன்னையைப் பற்றி நான் தெரிந்தால் என்ன தெரியா விட்டால் என்ன ?   உன் தாயுடன் நீ சுமுகமாய் வாழ முடியாது.  அவள் மனப்போக்கில் நீ தலையிட முடியாது !  தன் கூட்டத்தோடு உலாவ உன்னை அவள் இழுத்து போக முயற்சி செய்வாள் !   நீ எதிர்ப்பாய் !  பிறகும் தாய் இழுப்பாள் !   அப்போதுதான் உமக்குள் சண்டை ஏற்பட்டுப் பிளவு உண்டாகும் !  ஆம் நிரந்தரப் பிளவு, நெடுநாள் பிரிவு எல்லாம் நேரும் !
விவியன்:  அப்படிச் சண்டை போட்டாலும் நாங்கள் மட்டும் பிரிய மாட்டோம்  ஃபிராங்க் !  எங்களைப் பற்றி உனக்குத் தெரியாது.  இப்போது எனக்கு  நீயா  அல்லது என் தாயா  என்று தீர்மானிக்கும் நிலைக்கு  நீ என்னைத் தள்ளி விடுகிறாய் !   நான் என் தாயைத்தான் நேசிப்பேன் என்று தெரிந்து கொள், ஃபிராங்க் !
(தொடரும்)
***************
தகவல் :
Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession
(f) http://www.enotes.com/mrs-warrens-profession
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 21)