ஓ காப்டன் ..! என் காப்டன் ..!

Cover Image Walt Whitman-1

மூலம் : வால்ட் விட்மன்
(1819-1892)
(புல்லின் இலைகள்)

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

ஓ காப்டன் ! என் காப்டன் !
ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !
கப்பல் தளங்கள் தப்பின கடற்புயல் !
தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !
அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை !
வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் !
ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !
ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !
கப்பல் தளத்தில் கவிழ்ந்து கிடக்கிறார்
காப்டன் உடம்பு சில்லிட்டுப் போய் !

ஓ காப்டன் ! என் காப்டன் !
எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !
எழுவாய் ! கொடி பறக்கும் உனக்காய் !
சங்க நாதம் முழங்கும் உனக்காய் !
தோரணம், மலர் வளையம் உனக்காய் !
காத்திருக்கும் கூட்டம் கடற் கரையில் !
அழைப்பது மாந்தர் உன்னைத் தான் !
ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !
உன் தலைக் கடியில் என்னிரு கைகள் !
இங்கு பாரீர் காப்டன் ! என்னரும் பிதாவே !
கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !
சில்லிட்டுக் கிடக்கும் செத்த உடலாய் !

மௌன மாகி விட்டார் என் காப்டன் !
வெளுத்த இதழ்கள் ! முடங்கிய உடம்பு !
என் கைத் தொடுகை பிதா உணர வில்லை !
இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !
பாதுகாப்பு நங்கூரம் கப்பலுக்கு ! பயண முடிவு !
பயங்கரப் பயணம், குறிப்பணி வென்றது !
கொண்டாடும் கடற்கரை ! ஆலய மணி ஓசை !
தடுமாற்றம், துக்கம் நம் கப்பல் தளத்திலே !
சில்லிட்டு கிடக்கிறார் வீழ்ந்தென் காப்டன்
செத்த உடலாய்க் கப்பல் தளத்திலே !

++++++++++

Abraham Lincoln -1

********************

jayabarathans@gmail.com [S. Jayabarathan ]

One thought on “ஓ காப்டன் ..! என் காப்டன் ..!”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.