பெண்ணுக்கோர் ஆயுதம்

Juliat

மூலம்ஜெஃப்ரி விட்னி

[Geffrey Whitney]

[1586]

தமிழாக்கம் சிஜெயபாரதன்கனடா

 

 

உயிரினம் தோன்றிய போதே

இயற்கை விதியே ஈந்து விட்டது !

பசுவுக்குக் கொம்புகள்,

குதிரைக்கு ஓடும் கால்கள்,

சிங்கத் துக்குப் பற்கள்,

வலுத்த பாதங்கள்,

முயலுக்கு துரிதப் பாய்ச்சல்,

மீனுக்கு நீச்சல்,

பறவைக்கு இறக்கைகள்,

பாம்புக்கு விஷம்,

தேளுக்கு வால் கொடுக்கு !

ஆயினும்

பாதித் தொகை யான

பெண்டிர் இனத்துக்கு

மெய்யாய் ஆயுத மில்லை !

இயற்கை அளித்தது 

மயக்கிடும்

உடற் கவர்ச்சி !

ஞானிகள்வீரர்தீரர் வீழ்ந்து

வலுவிழக்கும்

மேனித் தோற்றம் !

அழகு பாவைக்கு ஆயுதமா ?

அல்லது

கழுகுக்கு இரையா ?

 

++++++++++++++++++

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.