அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்பு முடித்துச் சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி

(கட்டுரை:  2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அண்டவெளிச் சுற்றுச் சிமிழுடன்
விண்வெளி விமானிகள்
கையாட்சி நுணுக்கத்தில் விண்வெளிக்
கப்பலை இணைத்து
பிறகு பிரித்து
வெற்றி கரமாய் மீண்டார் பூமிக்கு.
சுய இயக்கத்தில் முதன்முதல்
விண்சிமிழ் இணைப்பாகி
இடம் மாறிச் சோதனை செய்தார்.
2020 இல் புது விண்வெளி நிலையம்
பூமியைச் சுற்றிவரும்
விண் வெளியில் நீந்தி
மண் மீது கால் வைத்தார்
முன்னொரு சைனத் தீரர் !
அமெரிக்க
விண்வெளி வீரர் போல்
விண்கப்பலில் ஏறி
வெண்ணிலவில் தடம் வைக்க
முன்னிலைப் பயிற்சி இது !
நிலவைச் சுற்றி வர
மனிதரிலா விண்ணுளவி இரண்டு
அனுப்பியது சைனா !
2025 இல் ரஷ்யாவும், சைனாவும்
செந்நிறக் கோள் இறங்கும்
விந்தை உள்ளது.
இன்னும்
பத்தாண்டு காலத்தில் சைனா
பாதம் வைத்திடும்
நிலவின் கரு மண்ணில்
நீல் ஆர்ம் ஸ்டிராங் போல !

+++++++++++++++

இதுவரை சாதித்த எல்லாவற்றையும் விட இந்தச் சாதனை சைனாவின் சிரமமான, நீடித்த விண்வெளிப் பயணம் ஆகும்.    சைன விண்வெளி விமானிகள் ஏறக்குறைய 13 நாட்கள்  டியான்காங் -1 விண்சிமிழில் வாசம் செய்துள்ளார்.   அந்தப் பயிற்சி கையாட்சி இணைப்பு நிகழ்ச்சியை விடக் குறிப்பிடத் தக்க சாதனையாகும்.   சைனா வெளிப்படையாகச் சொல்லாத டியான்காங் -1 விண்சிமிழ், மெய்யாக ஒரு சிறிய விண்வெளி நிலையமாகும்.

மாரிஸ் ஜோன்ஸ்  (தனித்த ஆஸ்திரேலிய விண்வெளி அறிவிப்பாளர்)

சுய இயக்க, கையாட்சி முறைகளில் விண்சிமிழ் இணைப்புகளை நிகழ்த்தி, மனித விண்வெளிப் பயணப் பயிற்சிகளில் சைனா வல்லரசு தேசங்களில் ஒன்றாகத் தலை நிமிர்த்தியுள்ளது.    விண்வெளி  ஆட்சி அரசியல் குறிக்கோள் திட்டத்தில் சைனா தனது விஞ்ஞானப் பொறிநுணுக்கப் பந்தைய ஆற்றலை வெற்றிகரமாக் காட்டியுள்ளது.

இஸபெல்லா சோர்பஸ் -வெர்கர் (Space Expert,  French National Centre for Scientific Research)

“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”

மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator) (1893-1976)

“பரந்த விண்வெளியில் நமது தாய்நாட்டை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். . . . தேசத்தின் எல்லா மக்களுக்கும், உலகத்தின் எல்லா மாந்தருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் !”

ஸை ஸிகாங் – முதல் சைனா விண்வெளி நீச்சல் விமானி (Zhai Zhigang, Chinese Taikonaut)

“(விண்சிமிழ் சுற்றுவீதியைத் தொட்டதும்) சூரியத் தட்டுகள் (Solar Panels) விரிந்தன. நாங்கள் பூரிப்படைகிறோம் ! தூரத்தில் உளவும் கருவிகள் அனுப்பிய சமிக்கைகள் (Remote-Measuring Singnals) விமானிகளின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடலியக்க அளவுகளை உடனே அறிவித்தன !”

ஸென் ஸாவ் -7 விண்சிமிழ்த் தளக் கண்காணிப்பாளர் [செப்டம்பர் 27, 2008]

“அண்டவெளி நீச்சல் இன்று புரிந்தது சைனாவின் விஞ்ஞானத் துறைகளை வலுவாக்கும். எங்கள் மக்கள் தொகை பெரியது ! எங்கள் விஞ்ஞானிகள் நியதிகளில் மேன்மை பெற்றுச் செயற்பாட்டில் குறைந்தவர் (Theoretical not Practical) ! நாங்கள் இன்னும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப் பின்னால்தான் இருக்கிறோம் ! அந்த நாடுகளை எட்டிப் பிடிப்பது எங்களால் இயலாது !”

கவோ கியான் – தகவல் பொறியியல் பட்டதாரி (Cao Qian, Electronics & IT Graduate)

அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புப் பிறகு விண்வெளி விமானிகள் மீட்சி

2012 ஜூன் 29 இல் விண்வெளியில்  விண்சிமிழ் – விண்வெளிக் கப்பல் கையாட்சி இணைப்புப் பயிற்சியைச் செய்த பிறகு மூன்று விண்வெளி விமானிகள் பூமிக்குப்  பாதுக்காப்பாய் மங்கோலிய மத்திய தளத்தில் மீண்டனர்.   சைனா விண்வெளித் தேடல் முயற்சியில் இது ஓர் உன்னத வரலாற்று மைல் கல்லாகும்.   மற்ற உலக நாடுகள் எதுவும் கூறாது ஒதுங்கிய போது,  இது மிக முக்கிய விண்வெளிச் சாதனை என்று சைனாவைப் பாராட்டுகிறது அமெரிக்கா.   2020 ஆண்டில் சைனா அமைக்கப் போகும் புதிய அண்டவெளி நிலையத்துக்கு இத்தீரச்  சாதனை அடித்தளம் இடுகிறது.   சைனாவின் மாபெரும் பேராசை விண்வெளித் திட்டம் 2025 ஆண்டுகளில் ரஷ்யாவுடன் இணைந்து, விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளில் முதன்முதல் தடம் வைக்க வேண்டும் என்பதே.   அந்த சிக்கலான திட்டத்துக்கு விண்வெளி விமானிகள் எட்டு அல்லது 12 மாதங்கள் சூரியக் கொடுங்கதிர்களில் உயிர்வாழ வேண்டும்.   சைனா 2020 இல் அமைக்கப் போகும் விண்வெளி நிலையம்  விண்வெளி விமானிகளுக்கு நீண்ட காலப் பயிற்சி அளிக்கும்.   சைனாவின் புதிய தற்போதைய சாதனை அமெரிக்க ரஷ்ய விண்வெளிச் சாதனைகளுக்கு 50 வருடங்கள் பின்தங்கிய தாக அறியப் பட்டாலும்  சைனா விண்வெளிச் சாதனைகளில் உலகிலே மூன்றாம் நாடு என்று பெயர் எடுத்து முன் வரிசைக்கு வந்திருக்கிறது.

முதன்முதல் சைன விண்வெளி விமானிகள் சுற்றிக் கொண்டிருக்கும் விண்சிமிழுடன், சுய இயக்கு முறையில் பன்முறை  தமது விண்கப்பலை இணைத்தும் பிரித்தும் பயிற்சி பெற்றனர்.   இறுதியில் சிரமமான சிக்கலான கையாட்சி முறை மூலமும் விண்சிமிழ் இணைப்பை செய்து காட்டினர்.   இந்த சாதனையில் சைனா இரண்டு அல்லது மூன்று வெற்றிகளை முதன்முதல் பெற்றுள்ளது.

ஒன்று :  விண் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு விண்சிமிழுடன் விண்கப்பல் சுய இயக்கு முறையிலும், கையாட்சி வழியிலும் செய்து காட்டிய இணைப்புகள்.   இரண்டாவது : முதன்முதல் ஒரு சைனப் பெண்ணை விண்கப்பலில் ஏற்றிச் சென்று சீரிய சூரியக் கதிர்கள் நேராகத் தாக்கும் விண்வெளிப் பயணத்தில் ஏற்படும் பாலினப் பாதிப்புகளை அறிவது.    இந்த இரண்டையும் வெற்றிகரமாக நிகழ்த்தி, மூன்று விண்வெளி விமானிகளையும் பாதுகாப்பாக பூமிக்கு மீள வைத்து,   சைனா  தன்னை மூன்றாம் விண்வெளிச் சாதனை நாடு என்று பணிவாகக் காட்டிக் கொண்டது.

மூன்று விண்வெளி விமானிகளும் 13 நாட்கள் விண்வெளிச் சுற்றலில் நீண்ட காலப் பயண அனுபவம் பெற்றதை மூன்றாவது வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம்.   ஜூன் 16 ஆம் தேதி ஸென்ஸூ -9 விண்வெளிக் கப்பல் ஏவப்பட்டு ஜூன் 29 ஆம் தேதி பூமிச் சுற்றுவீதியை முறித்துப் புவியீர்ப்புக்குள் நழுவி ஒரு பாராசூட் மூலம் மெதுவாக விண்கப்பல் கோபி பாலைவனத்தில் வந்து இறங்கியது.

இந்த மனிதப் பயணச் சாதனை சைனா புரிந்த நான்காவது மனிதப் பயணச் சாதனை என்று சொல்லப் படுகிறது.  சைனாவின் முதல் விண்வெளிப் பயணி 2003 ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றி வந்தபிறகு தொடர்ந்து சைனா விண்வெளித் தேடல் முயற்சிகளில் முன்னேறி வருகிறது.  2013 இல் அடுத்தோர் விண்வெளிப் பயணக் குழு டியான் காங் -1 விண்சிமிழ் நிலையத்துக்கு விஜயம் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   2020 ஆண்டுகளில் முற்போக்குச் சாதனங்களுடன் டியான்காங் -2 விண்வெளி நிலையத்தை சைனா அமைக்கும் திட்டம் ஒன்று உள்ளது.   அதற்குப் பிறகு இன்னும் முற்போக்கான டியான்காங் -3 உருவாகிப் பல்வேறு இணைப்பு வாசல்களோடு பூமியைச் சுற்றி வரும் என்று அறியப்படுகிறது.

சைனா மனித விண்வெளிப் பயணப் பயிற்சிகளுக்கு மட்டும் இதுவரை 6 பில்லியன் டாலர் நிதித்தொகை  செலவழித்துள்ளதாக அறிவித்துள்ளது.    சந்திரனை சுற்றி வரச் சைனா ஏற்கனவே இரண்டு விண்ணுளவிகளை அனுப்பி அனுபவம் பெற்றுள்ளது.   அடுத்து சந்திரனுக்கு அனுப்பும் சைனா விண்ணுளவி தளவுளவி ஒன்றைத் தூக்கிச் சென்று  நிலவில் இறக்கி அள்ளும் மாதிரி மண்ணைப் பூமிக்குக் கொண்டு வரும் அதிசயத் திட்டம் உள்ளது.   அதுபோல் செந்நிறக் கோளுக்கும் பயணம் செய்து ஆங்கே தளவுளவி ஒன்றை இறக்கிச் சோதனை செய்யும் குறிக்கோளும் உள்ளது.

விண்வெளி வரலாற்றில் சைனா ஊன்றிய  மூன்றாம் மைல்கல் ! 

2012 ஜுன் மாதம் 16 ஆம் தேதி சைனா ஏவிய மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பலில் மூன்று விண்வெளி விமானிகளில் ஒருவராய் முதன் முதல் ஒரு சைனப் பெண்ணும் பயணப் பயிற்சிக்குக் கூடச் சென்றிருக்கிறார்.   சைனா கோபி பாலைவனத்தில் ஏவப்பட்ட ஸென்ஷு -9 (Shenzhou -9) என்று அழைக்கப் படும் அந்த விண்கப்பலில்  மூவர் அமர்ந்து செல்ல முடியும்.    மூன்றாம் திட்டத்தில் சைன விண்வெளி விஞ்ஞானிகளின் குறிக்கோள், தற்போது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் டியான்காங்-1 (Tiangong -1)  விண்சிமிழுடன், ஸென்ஷூ -9 விண்கப்பல் நுணுக்கமாக இணைக்கப் பட்டு விமானிகள் அதனுள் நுழைந்து  13 நாட்கள் சில சோதனைகள் செய்வார்.   ஸென்ஷூ என்றால் தெய்வீக மாளிகை என்று பொருள்.  அதுபோல் டியான்காங் என்றால் தெய்வீகக் கப்பல் என்று அர்த்தம்.

இரண்டு விண்வெளிச் சிமிழ்களும் முதலில் சுய இயக்கி முறையில் இணைப்பு செய்தது.   பிறகு அவை இரண்டும் பிரிந்து மனிதக் கையாட்சி மூலம் இணைப்பு செய்து விமானிகள் பலமுறை பயிற்சி பெற்றார்.   இணைப்பு செய்வது எம்முறை ஆயினும் புரிவது சிக்கலான, சிரமமான வினையாகும்.   காரணம் இரு விண்வெளிச் சிமிழ்களும் மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் பூமியை ஓர் ஒழுங்குச் சுற்று வீதியில் வலம் வருகின்றன.   சென்ற வருடம் ஏவிய டியான்காங் விண்சிமிழ் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்ட வட்டவீதியில் சுற்றி வருகிறது.   சனிக்கிழமை (ஜூன் 16, 2012) அன்று ஏவப்பட்ட ஸென்ஷூ -9 விண்கப்பல் துல்லியமாக அந்த வட்ட வீதிக்குக் கொண்டு வரப்படும்.    அடுத்து  இரண்டு வட்டவீதிகளும் ஒரே மட்டத்துக்குக் கொண்டு மாற்றப்பட வேண்டும்.   மேலும் ஒட்டிய ஒரே உந்துசக்தியில் இரு விண்சிமிழ்களும் ஒரே திசையில் செல்ல வேண்டும்.  முன்செல்லும் டியான்காங் வேகத்தை ஒட்டி மீறாமலும், குன்றாமலும் கட்டுப் படுத்தப் பட்டு, முட்டி மோதாமல் வட்ட வாசலில் ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்  பட வேண்டும்.    இதுவரைச் சுய இயக்கி வெற்றிகரமாக இணைப்பு செய்துள்ளது.   அடுத்து ஆறு நாட்கள் கழித்து, இணைப்பிலிருந்து பிரிந்து மனிதக் கையாட்சி மூலம் மீண்டும் இணைப்பு-பிரிவு இயக்க முயற்சிகள் செய்யப்பட்டன.   அப்பயிற்சிக்கு அதைச் செய்யப் போகும் தலைமை விண்வெளி விமானி  ஜிங் ஹைபெங் (Jing Haipeng) போலிக் கணனித் திரையில் (Docking Simulation Panel) 1500 தடவை செய்து கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.   துணை விமானி லியூ வாங்  (Liu Wang) அண்டவெளிப் பயிற்சியில் 15 வருட அனுபவம் பெற்றவர்.

மூன்றாவது விண்வெளி விமானப் பயணி  லியூ யாங்  (Liu Yang)  முதலாவது அனுபவம் பெறும் ஓரிளம் பெண்மணி. வயது 33.   அவர் திருமணம் ஆகி இன்னும் குழந்தை வைத்துக் கொள்ளாதவர்.  முதன்முதலாக அண்டவெளிக் கதிரடியில் பாதிக்கப் படுவார்.  அதுவே சைனா செய்யும் முதல் மனிதச் சோதனை.   13 நாள் பயணத்தில் அவரது பொறுப்பு விண்வெளியில் சில மருத்துவச் சோதனைகள் செய்வார்.  என்ன மருத்துவச் சோதனைகள் என்று சைனா குறிப்பிட வில்லை.  லியூ யாங் முதலில் ஒரு பஸ் நடத்துனராக வர  நினைத்தார்.   பின்னர் தானொரு வழக்கறிஞராய் வர வேண்டும் என்று மாறினார்.   பத்தாண்டுகள் கடந்து விண்வெளி விமானியாய் ஆக ஆர்வம் பிறந்தது.   1997 இல் சைன போர்ப்படையில் சேர்ந்து  ஆகாய விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றார்.  இதுவரை 1680 மணி நேரங்கள் தனியாகப் போர் விமானத்தை ஓட்டி இருக்கிறார்.  2010 இல்தான் சைன விண்வெளி விஞ்ஞானிகள் லியூ யாங்கை  அண்டவெளிப் பயிற்சிக்கு தகுதி பெற்ற ஆறு பேரில் ஒருவராய் ஸெங்ஸு -9 விண்கப்பலில் முதன்முதல் பயணம் செய்ய அவரைத் தேர்ந்தெடுத்தார்.

சைன விண்வெளி விமானிகள் 13 நாட்கள் விண்சிமிழ் இணைப்புகள் செய்வதுடன் வேறு சில சோதனைகளும் செய்தார்கள்.   என்ன சோதனைகள் என்பது இன்னும் சைனா வெளீடுகளில் வெளியிட வில்லை.  1960 ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா செய்து முடித்த விண்வெளி தீரச் செயல்களை சைனா 2000 ஆண்டுகளில் தொடர்ந்து செய்து வருகிறது.  சென்ற ஆண்டு ஏவப்பட்டு தற்காலியமாகப் பூமியைச் சுற்றிவரும்  டியான்காங் -1 அடுத்து 2013 இல் மாற்றப் படும்.   அந்த விண்சிமிழ் இணைப்பு அனுபவம் 2020 இல் சைனா நிறுவப் போகும் பெரிய விண்வெளி நிலையத்துக்கு (Chinese Space Station) அடிக்கால் ஊன்றும்.

விண்வெளித் தேடலில் சைனாவின் குறிக்கோள்கள் என்ன ?

அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலைவனத்தில் நிறுவியது. சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகரமாக 1970 இல் ஏவியது. 1990-2002 ஆண்டுகளில் சைனா ஸென்ஸாவ் I, II, III & IV விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.

1999 இல் ஸெங்ஸூ -1 விண்வெளிக் கப்பல் முதன்முதல் மனிதப் பயணத் திட்டத்தைத் துவக்கி வைத்தது.   இரண்டாண்டுகள் கழித்து ஸெங்சஸூ -2  விண்கப்பலில் சில விலங்குகள் மட்டும் அனுப்பப் பட்டன.   2003 ஆண்டில்தான் சைனாவின் முதல் மனிதன் விண்வெளிக் கப்பலில் பூமியச் சுற்றி வந்தான்.  2008 இல் இருவர் போகும் ஸெங்ஸூவில்  முதல் மனிதன் விண்கப்பலை விட்டு  விண்வெளியில் பல்லாயிரம் மைல்கள் நீந்தினான்.   அடுத்து சைனாவின் விண்ணுளவிகள் இரண்டு ” சேஞ் -1 & சேஞ் -2″ (Chang’e -1 & Chang’e -2) முறையே 2007 & 2010 இல் நிலைவை வெற்றிகரமாய்ச் சுற்றி வந்தன.   இப்போது  விண்வெளியில் இரண்டு விண்சிமிழ்கள் பன்முறை இணைப்புகள் செய்து 2020 இல் சைனாவின் விண்வெளி நிலையம் அமைக்க திட்டம் உருவாகி வருகிறது.   அதில் நீண்டகாலம் விண்வெளிப் பயணம் செய்து விமானிகள் அடுத்து 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க முற்படுவார்கள்.

விண்வெளி வரலாற்றில் சைனா ஊன்றிய  முதல் மைல்கல் !

2008 செப்டம்பர் 27 ஆம் தேதி சைனாவின் விண்வெளி விமானி ஸை ஸிகாங் (Zhai Zhigang) முதன்முதல் அண்டவெளியில் மிதந்து காட்டி [Extra Vehicular Activity (EVA)] ஓர் அற்புதச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ! ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்தபடித் தனித்துவ முறையிலே ஆசியாவிலே முதன்முதல் அண்டவெளி அந்தரத்தில் நீந்தி விந்தை புரிந்தார் ! அவருக்கு வயது 42. மூவர் பயணம் செய்த விண்சிமிழ் (Space Capsule : Shenzhou VII Spacecraft Xinhua), சைனாவின் கோபி பாலைவனத் திலிருந்து ஏவப்பட்டு 205 மைல் (340 கி.மீடர்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. முதலில் விண்சிமிழின் கதவைத் திறந்து கொண்டு விண்வெளிக்கு வந்தவர் ஸை ஸிகாங். கையில் சைனாவின் கொடியை ஏந்தி 20 நிமிடங்கள் அண்டவெளியில் நீந்தினார். அப்போது அவரது விண்வடம் (Space Umbilical Cord) சிமிழுடன் சேர்க்கப் பட்டிருந்தது ! 2008 செப்டம்பர் 25 ஆம் தேதி நீண்ட மார்ச் ராக்கெட் ஒன்று ஜியூகுவான் துணைக்கோள் ஏவு மையத்திலிருந்து (Jiuquan Satellite Launch Center in Gansu Province) ஸென் ஸாவ் -7 விண்சிமிழை ஏந்திக் கொண்டு எழும்பியது ! ஆசிய வீரர்களின் அந்த அரிய விண்வெளிப் பயணம் ஆரம்பம் முதல் மீட்சி வரை நிறைவேற 68 மணிநேரங்கள் நீடித்தன !

அண்டவெளிச் சாதனைகளில் சைனாவின் முன்னேற்றம் 

1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன்முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன. அமெரிக்காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது ! இரண்டு உலக வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன ! 1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார்.

2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு ஸென்ஸாவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது ! இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் ஸென்ஸாவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது ! இப்போது (2008 செப்டம்பரில்) மூவர் அமர்ந்த விண்சிமிழை ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியாவின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.

அண்டவெளியில் சைன விண்வெளி  விமானி புரிந்த விந்தை !

பூமிக்கு மேல் 205 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றும் ஸென்ஸாவ் -7 விண்சிமிழிலின் கதவைத் திறந்து கொண்டு முதலில் வெளியேறியவர் 42 வயதான ஸை ஸிகாங் விமானி ! அடுத்து வாசல் வழியாகத் தலையை நீட்டிச் சைனாவின் தேசீயக் கொடியை ஸை ஸிகாங் கையில் கொடுத்தார் விமானி லியூ போமிங் (Liu Bhoming). அப்போது மூன்றாம் விமானியாய் இருவர் பணிகளையும் மேற்பார்த்து விண்சிமிழைக் கண்காணித்து வந்தவர் ஜிங் ஹைபெங் (Jing Haipeng). விண்வெளி நீச்சல் புரிந்த ஸை ஸிகாங் அணிந்த “விண்கவச உடை” (Space Suit) 4.4 மில்லியன் டாலர் விலை மதிப்புள்ளது ! அந்தச் சிறப்பு உடை பூமியில் உள்ள உஷ்ணத்தையும், வாயு அழுத்தத்தையும் (Earth’s Atmosphere & Ambient Temperature) விமானிக்கு அளித்து அவை ஏறாமலும், இறங்காமலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ! புவியீர்ப்பு ஆற்றல் அந்த உயரத்தில் பூஜியத்தை ஒட்டி இருப்பதாலும், காற்றில்லாத சூனியத்தில் தாங்க முடியாத உஷ்ணம் இருப்பதாலும் கவச உடையில் துளையோ, கிழிசலோ ஏற்பட்டால் வாயு அழுத்தம் குறைந்து விமானியின் குருதி கொதித்து, சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாது உடனே துடித்து மரணம் அடைவான் ! அத்தகைய உன்னத பாதுகாப்பு விண்கவச உடையைச் சைனா தானாகத் தயாரித்த விண்வெளி உடை அது என்று சைனா பெருமைப் பட்டுக் கொண்டது ! ஆனால் மற்ற இரு விமானிகளும் ரஷ்யா தயாரித்த விண்கவச உடையை அணிந்திருந்தார்கள் !

விண்வெளி விமானிகள் தமது 68 மணி நேரப் பயணத்தில் பூமியைச் 205 மைல் உயரத்தில் சுற்றி வரும்போது 15-20 நிமிடங்கள் விண்வெளி நீச்சலுக்கென ஒருவருக்கு ஒதுக்கப் பட்டது. அப்போது நேரம் பேஜிங் தளப்படி பகற் பொழுதைத் தாண்டிய நேரம். அந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்புக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று அபாயம் மிக்க அண்டவெளி நீச்சல் புரிவதற்கு நல்ல வெளிச்சம் உள்ள பகல் வேளை தகுதியானது. முதல் விமானிக்கு அபாயம் ஏற்பட்டால் இரண்டாவது விமானி உதவ வசதியான நேரம் பகல் வேளை. இரண்டாவது விண்வெளி நீச்சலைச் சைன மக்கள் கண்டு களிக்கத் தக்க நேரம் பகல் வேளை. முதல்வன் ஏதோ ஒரு காரணத்தால் விண்வெளி நீச்சலைப் புரிய முடியவில்லை என்றால் இரண்டாவது விமானி அந்தப் பயிற்சியை செய்து முடிப்பான்.

விண்வெளி நீச்சலின் போது விமானிகள் செய்த சோதனைகள்

இந்த விண்வெளிப் பயணத்தில் சைனா சில சோதனைகளைச் செய்து முடிக்கத் திட்டமிட்டது.

1. விண்வெளி நீச்சல் புரிந்த ஸை ஸிகாங் விண்சிமிழுக்கு வெளியே குளிர்ச் சூனிய வெப்ப வெளியில் தொங்க விட்ட குவளையில் வைத்திருந்த திடவ மசகுகளுக்கு (Solid Lubricants) என்ன நேர்கிறது என்று ஆராய்வது !

2. அடுத்து 205 மைல் உயரத்தில் சுற்றிவரும் விண்சிமிழிலிருந்து ஒரு துணைக்கோளை விமானிகள் ஏவுவதாகத் திட்டம் இருந்தது ! அத்திட்டம் நடந்தேறியதா இல்லையா என்று வலைத் தகவலில் எங்கும் விபரம் காணப்பட வில்லை !

ஸென்ஸாவ் -7 பயணக் குறிப்பணித் திட்ட விபரங்கள் :

1. ஸென்ஸாவ் -7 குறிப்பணிக் காலம் 3 நாட்கள் (68மணி நேரம்), உயரம் 205 மைல்.

2. விண்வெளி நீச்சல் மிகையான காலம் : 30 நிமிடங்கள்.

3. 120 கிலோ கிராம் நிறையுள்ள விண்கவச உடையை இணைத்து விமானி அணிய 15 மணி நேரம்.

4. விண்வெளி நீச்சல் சமயத்தில் அபாயங்கள் நேரிட்டால் பாதுகாக்க 30 வழிமுறைகள்.

5. விமானிகள் தேர்ந்தெடுத்து உண்பதற்கு 80 விதமான உண்டிகள். மசாலாக் கோழி, ஷிரிம்ஸ், உலர்ந்த கனிகள்.

6. ராக்கெட் ஏவும் 105 மீடர் (350 அடி) கோபுரச் சட்டத்தில் அபாயப் பிழைப்புக் கதவுகள்.

7. ஸென்ஸாவ் -6 விண்சிமிழில் 220 பொறித்துறைச் செம்மை மாற்றங்கள் செய்யப்பட்டு ஸென்ஸாவ் -7 விண்சிமிழ் தயாரிக்கப்பட்டது.

8. ராக்கெட் ஏவப்பட்டு 583 வினாடிகள் (சுமார் 10 நிமிடம்) கழித்து விண்சிமிழ் 205 மைல் உயரத்தில் சுற்றுப் பாதையில் இறங்கி பூமியைச் சுற்ற இயங்கும்.

ஆசிய நாடுகளில் அண்டவெளிப் போட்டிகள் !

இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது. சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்யும் ! அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது !

ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது ! இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக்கின்றன. இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !

இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் பயணத்தை அமெரிக்காவைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது ! ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது,” என்று இகழ்ச்சியாகக் கூறியது !

********************************

தகவல்:

Picture Credits: Boston Globe, Christian Monitor, China Daily Reporter, Chinese Media, BBC News

1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick [Sep 28, 2008]
9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk [Oct 1, 2008]
14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
15  Dragon Space : What will China’s Astronauts Do Aboard Tiangong -1  (June 5, 2012)d
16  Reuters :  China’s First Woman Astronaut takes the Starring Role  By Jason Lee  (June 15, 2012)
17 Dragon Space :  Liu Yang : China’s First Female Astronaut  (June 16, 2012)
18  First Astronauts Enter orbiting China Space Module  (June 18, 2012)
19  Dragon Space :  Backup Plans for Docking the Chinese Spaceship with Tiangong -1 Space Station (June 20, 2012)
20  Dragon Space :  Thai is No Lab, It is a space Station  (June 22, 2012)
21  http://en.wikipedia.org/wiki/Chinese_Lunar_Exploration_Program  (Updated on June 12, 2012)
22  China  to Conduct First Manual Space Docking (June 24, 2012)
23  China Conducts First Manual Space Docking  (June 24, 2012)
24   Dragon Space : Above & Below Chinese Science Soars (June25, 2012)
25   Space Daily Chinese Space Program Accelerates By Morris Jones,  (June 29, 2012)
26   Dragon Space :   Three Chinese Astronauts Return to Earth (June 29, 2012)
27   Fox News :  Chinese Astronauts Return to Earth After 13-day Mission to Module   (June 29, 2012)

******************
jayabarat@tnt21.com [July 1, 2012]

சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி

(கட்டுரை : 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

ஆசிய முதல் சீனப் பெண் தீரராய்
அண்டவெளிப் பயணம்
விண்வெளிக் கப்பலில் செய்கிறார் !
வெற்றி கரமாய்ப் பூமியைச்
சுற்றி வரும் ஓர்
விண்சிமிழில் இணைப்பாகி
இடம் மாறிச் சோதனை  புரிவார்.
விண் வெளியில் நீந்தி
வெற்றி மாலை சூடி
மண்மீது கால் வைத்தார்
முன்னொரு சைனத் தீரர் !
அமெரிக்க
விண்வெளி வீரர் போல்
விண்கப்பலில் ஏறி
வெண்ணிலவில் தடம் வைக்க
முன்னிலைப் பயிற்சி இது !
நிலவைச் சுற்றி வர
மனிதரிலா விண்ணுளவி
அனுப்பியது சைனா !
இன்னும்
பத்தாண்டு காலத்தில் சைனா
பாதம் வைத்திடும்
நிலவின் கரு மண்ணில்
நீல் ஆர்ம் ஸ்டிராங் போல !

++++++++++++++++

“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”

மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator) (1893-1976)

“பரந்த விண்வெளியில் நமது தாய்நாட்டை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். . . . தேசத்தின் எல்லா மக்களுக்கும், உலகத்தின் எல்லா மாந்தருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் !”

ஸை ஸிகாங் – முதல் சைனா விண்வெளி நீச்சல் விமானி (Zhai Zhigang, Chinese Taikonaut)

“(விண்சிமிழ் சுற்றுவீதியைத் தொட்டதும்) சூரியத் தட்டுகள் (Solar Panels) விரிந்தன. நாங்கள் பூரிப்படைகிறோம் ! தூரத்தில் உளவும் கருவிகள் அனுப்பிய சமிக்கைகள் (Remote-Measuring Singnals) விமானிகளின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடலியக்க அளவுகளை உடனே அறிவித்தன !”

ஸென் ஸாவ் -7 விண்சிமிழ்த் தளக் கண்காணிப்பாளர் [செப்டம்பர் 27, 2008]

“அண்டவெளி நீச்சல் இன்று புரிந்தது சைனாவின் விஞ்ஞானத் துறைகளை வலுவாக்கும். எங்கள் மக்கள் தொகை பெரியது ! எங்கள் விஞ்ஞானிகள் நியதிகளில் மேன்மை பெற்றுச் செயற்பாட்டில் குறைந்தவர் (Theoretical not Practical) ! நாங்கள் இன்னும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப் பின்னால்தான் இருக்கிறோம் ! அந்த நாடுகளை எட்டிப் பிடிப்பது எங்களால் இயலாது !”

கவோ கியான் – தகவல் பொறியியல் பட்டதாரி (Cao Qian, Electronics & IT Graduate)

விண்வெளி வரலாற்றில் சைனா ஊன்றிய  மூன்றாம் மைல்கல் ! 

2012 ஜுன் மாதம் 16 ஆம் தேதி சைனா ஏவிய மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பலில் மூன்று விண்வெளி விமானிகளில் ஒருவராய் முதன் முதல் ஒரு சைனப் பெண்ணும் பயணப் பயிற்சிக்குக் கூடச் சென்றிருக்கிறார்.   சைனா கோபி பாலைவனத்தில் ஏவப்பட்ட ஸென்ஷு -9 (Shenzhou -9) என்று அழைக்கப் படும் அந்த விண்கப்பலில்  மூவர் அமர்ந்து செல்ல முடியும்.    மூன்றாம் திட்டத்தில் சைன விண்வெளி விஞ்ஞானிகளின் குறிக்கோள், தற்போது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் டியான்காங்-1 (Tiangong -1)  விண்சிமிழுடன், ஸென்ஷூ -9 விண்கப்பல் நுணுக்கமாக இணைக்கப் பட்டு விமானிகள் அதனுள் நுழைந்து  13 நாட்கள் சில சோதனைகள் செய்வார்.   ஸென்ஷூ என்றால் தெய்வீக மாளிகை என்று பொருள்.  அதுபோல் டியான்காங் என்றால் தெய்வீகக் கப்பல் என்று அர்த்தம்.

இரண்டு விண்வெளிச் சிமிழ்களும் முதலில் சுய இயக்கி முறையில் இணைப்பு செய்யும்.   பிறகு அவை இரண்டும் பிரிந்து மனிதக் கையாட்சி மூலம் இணைப்பு செய்து விமானிகள் பலமுறை பயிற்சி பெறுவார்.   இணைப்பு செய்வது எம்முறை ஆயினும் புரிவது சிக்கலான, சிரமமான வினையாகும்.   காரணம் இரு விண்வெளிச் சிமிழ்களும் மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் பூமியை ஓர் ஒழுங்குச் சுற்று வீதியில் வலம் வருகின்றன.   சென்ற வருடம் ஏவிய டியான்காங் விண்சிமிழ் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்ட வட்டவீதியில் சுற்றி வருகிறது.   சனிக்கிழமை (ஜூன் 16, 2012) அன்று ஏவப்பட்ட ஸென்ஷூ -9 விண்கப்பல் துல்லியமாக அந்த வட்ட வீதிக்குக் கொண்டு வரப்படும்.    அடுத்து  இரண்டு வட்டவீதிகளும் ஒரே மட்டத்துக்குக் கொண்டு மாற்றப்பட வேண்டும்.   மேலும் ஒட்டிய ஒரே உந்துசக்தியில் இரு விண்சிமிழ்களும் ஒரே திசையில் செல்ல வேண்டும்.  முன்செல்லும் டியான்காங் வேகத்தை ஒட்டி மீறாமலும், குன்றாமலும் கட்டுப் படுத்தப் பட்டு, முட்டி மோதாமல் வட்ட வாசலில் ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்  பட வேண்டும்.    இதுவரை சுய இயக்கி வெற்றிகரமாக இணைப்பு செய்துள்ளது.   அடுத்து ஆறு நாட்கள் கழித்து, இணைப்பிலிருந்து பிரிந்து மனிதக் கையாட்சி மூலம் மீண்டும் இணைப்பு-பிரிவு இயக்க முயற்சிகள் செய்யப் படும்.   அப்பயிற்சிக்கு அதைச் செய்யப் போகும் தலைமை விண்வெளி விமானி  ஜிங் ஹைபெங் (Jing Haipeng) போலிக் கணனித் திரையில் (Docking Simulation Panel) 1500 தடவை செய்து கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.   துணை விமானி லியூ வாங்  (Liu Wang) அண்டவெளிப் பயிற்சியில் 15 வருட அனுபவம் பெற்றவர்.

மூன்றாவது விண்வெளி விமானப் பயணி  லியூ யாங்  (Liu Yang)  முதலாவது அனுபவம் பெறும் ஓரிளம் பெண்மணி. வயது 33.   அவர் திருமணம் ஆகி இன்னும் குழந்தை வைத்துக் கொள்ளாதவர்.  முதன்முதலாக அண்டவெளிக் கதிரடியில் பாதிக்கப் படுவார்.  அதுவே சைனா செய்யும் முதல் மனிதச் சோதனை.   13 நாள் பயணத்தில் அவரது பொறுப்பு விண்வெளியில் சில மருத்துவச் சோதனைகள் செய்வார்.  என்ன மருத்துவச் சோதனைகள் என்று சைனா குறிப்பிட வில்லை.  லியூ யாங் முதலில் ஒரு பஸ் நடத்துனராக வர  நினைத்தார்.   பின்னர் தானொரு வழக்கறிஞராய் வர வேண்டும் என்று மாறினார்.   பத்தாண்டுகள் கடந்து விண்வெளி விமானியாய் ஆக ஆர்வம் பிறந்தது.   1997 இல் சைன போர்ப்படையில் சேர்ந்து  ஆகாய விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றார்.  இதுவரை 1680 மணி நேரங்கள் தனியாகப் போர் விமானத்தை ஓட்டி இருக்கிறார்.  2010 இல்தான் சைன விண்வெளி விஞ்ஞானிகள் லியூ யாங்கை  அண்டவெளிப் பயிற்சிக்கு தகுதி பெற்ற ஆறு பேரில் ஒருவராய் ஸெங்ஸு -9 விண்கப்பலில் முதன்முதல் பயணம் செய்ய அவரைத் தேர்ந்தெடுத்தார்.

சைன விண்வெளி விமானிகள் 13 நாட்கள் விண்சிமிழ் இணைப்புகள் செய்வதுடன் வேறு சில சோதனைகளும் செய்வார்கள்.   என்ன சோதனைகள் என்பது இன்னும் சைனா வெளீடுகளில் வெளியிட வில்லை.  1960 ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா செய்து முடித்த விண்வெளி தீரச் செயல்களை சைனா 2000 ஆண்டுகளில் தொடர்ந்து செய்து வருகிறது.  சென்ற ஆண்டு ஏவப்பட்டு தற்காலியமாகப் பூமியைச் சுற்றிவரும்  டியான்காங் -1 அடுத்து 2013 இல் மாற்றப் படும்.   அந்த விண்சிமிழ் இணைப்பு அனுபவம் 2020 இல் சைனா நிறுவப் போகும் பெரிய விண்வெளி நிலையத்துக்கு (Chinese Space Station) அடிக்கால் ஊன்றும்.

விண்வெளித் தேடலில் சைனாவின் குறிக்கோள்கள் என்ன ?

அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலைவனத்தில் நிறுவியது. சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகரமாக 1970 இல் ஏவியது. 1990-2002 ஆண்டுகளில் சைனா ஸென்ஸாவ் I, II, III & IV விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.

1999 இல் ஸெங்ஸூ -1 விண்வெளிக் கப்பல் முதன்முதல் மனிதப் பயணத் திட்டத்தைத் துவக்கி வைத்தது.   இரண்டாண்டுகள் கழித்து ஸெங்சஸூ -2  விண்கப்பலில் சில விலங்குகள் மட்டும் அனுப்பப் பட்டன.   2003 ஆண்டில்தான் சைனாவின் முதல் மனிதன் விண்வெளிக் கப்பலில் பூமியச் சுற்றி வந்தான்.  2008 இல் இருவர் போகும் ஸெங்ஸூவில்  முதல் மனிதன் விண்கப்பலை விட்டு  விண்வெளியில் பல்லாயிரம் மைல்கள் நீந்தினான்.   அடுத்து சைனாவின் விண்ணுளவிகள் இரண்டு ” சேஞ் -1 & சேஞ் -2″ (Chang’e -1 & Chang’e -2) முறையே 2007 & 2010 இல் நிலைவை வெற்றிகரமாய்ச் சுற்றி வந்தன.   இப்போது  விண்வெளியில் இரண்டு விண்சிமிழ்கள் பன்முறை இணைப்புகள் செய்து 2020 இல் சைனாவின் விண்வெளி நிலையம் அமைக்க திட்டம் உருவாகி வருகிறது.   அதில் நீண்டகாலம் விண்வெளிப் பயணம் செய்து விமானிகள் அடுத்து 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க முற்படுவார்கள்.

விண்வெளி வரலாற்றில் சைனா ஊன்றிய  முதல் மைல்கல் !

2008 செப்டம்பர் 27 ஆம் தேதி சைனாவின் விண்வெளி விமானி ஸை ஸிகாங் (Zhai Zhigang) முதன்முதல் அண்டவெளியில் மிதந்து காட்டி [Extra Vehicular Activity (EVA)] ஓர் அற்புதச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ! ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்தபடித் தனித்துவ முறையிலே ஆசியாவிலே முதன்முதல் அண்டவெளி அந்தரத்தில் நீந்தி விந்தை புரிந்தார் ! அவருக்கு வயது 42. மூவர் பயணம் செய்த விண்சிமிழ் (Space Capsule : Shenzhou VII Spacecraft Xinhua), சைனாவின் கோபி பாலைவனத் திலிருந்து ஏவப்பட்டு 205 மைல் (340 கி.மீடர்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. முதலில் விண்சிமிழின் கதவைத் திறந்து கொண்டு விண்வெளிக்கு வந்தவர் ஸை ஸிகாங். கையில் சைனாவின் கொடியை ஏந்தி 20 நிமிடங்கள் அண்டவெளியில் நீந்தினார். அப்போது அவரது விண்வடம் (Space Umbilical Cord) சிமிழுடன் சேர்க்கப் பட்டிருந்தது ! 2008 செப்டம்பர் 25 ஆம் தேதி நீண்ட மார்ச் ராக்கெட் ஒன்று ஜியூகுவான் துணைக்கோள் ஏவு மையத்திலிருந்து (Jiuquan Satellite Launch Center in Gansu Province) ஸென் ஸாவ் -7 விண்சிமிழை ஏந்திக் கொண்டு எழும்பியது ! ஆசிய வீரர்களின் அந்த அரிய விண்வெளிப் பயணம் ஆரம்பம் முதல் மீட்சி வரை நிறைவேற 68 மணிநேரங்கள் நீடித்தன !

அண்டவெளிச் சாதனைகளில் சைனாவின் முன்னேற்றம் 

1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன்முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன. அமெரிக்காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது ! இரண்டு உலக வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன ! 1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார்.

2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு ஸென்ஸாவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது ! இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் ஸென்ஸாவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது ! இப்போது (2008 செப்டம்பரில்) மூவர் அமர்ந்த விண்சிமிழை ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியாவின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.

அண்டவெளியில் சைன விண்வெளி  விமானி புரிந்த விந்தை !

பூமிக்கு மேல் 205 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றும் ஸென்ஸாவ் -7 விண்சிமிழிலின் கதவைத் திறந்து கொண்டு முதலில் வெளியேறியவர் 42 வயதான ஸை ஸிகாங் விமானி ! அடுத்து வாசல் வழியாகத் தலையை நீட்டிச் சைனாவின் தேசீயக் கொடியை ஸை ஸிகாங் கையில் கொடுத்தார் விமானி லியூ போமிங் (Liu Bhoming). அப்போது மூன்றாம் விமானியாய் இருவர் பணிகளையும் மேற்பார்த்து விண்சிமிழைக் கண்காணித்து வந்தவர் ஜிங் ஹைபெங் (Jing Haipeng). விண்வெளி நீச்சல் புரிந்த ஸை ஸிகாங் அணிந்த “விண்கவச உடை” (Space Suit) 4.4 மில்லியன் டாலர் விலை மதிப்புள்ளது ! அந்தச் சிறப்பு உடை பூமியில் உள்ள உஷ்ணத்தையும், வாயு அழுத்தத்தையும் (Earth’s Atmosphere & Ambient Temperature) விமானிக்கு அளித்து அவை ஏறாமலும், இறங்காமலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ! புவியீர்ப்பு ஆற்றல் அந்த உயரத்தில் பூஜியத்தை ஒட்டி இருப்பதாலும், காற்றில்லாத சூனியத்தில் தாங்க முடியாத உஷ்ணம் இருப்பதாலும் கவச உடையில் துளையோ, கிழிசலோ ஏற்பட்டால் வாயு அழுத்தம் குறைந்து விமானியின் குருதி கொதித்து, சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாது உடனே துடித்து மரணம் அடைவான் ! அத்தகைய உன்னத பாதுகாப்பு விண்கவச உடையைச் சைனா தானாகத் தயாரித்த விண்வெளி உடை அது என்று சைனா பெருமைப் பட்டுக் கொண்டது ! ஆனால் மற்ற இரு விமானிகளும் ரஷ்யா தயாரித்த விண்கவச உடையை அணிந்திருந்தார்கள் !

விண்வெளி விமானிகள் தமது 68 மணி நேரப் பயணத்தில் பூமியைச் 205 மைல் உயரத்தில் சுற்றி வரும்போது 15-20 நிமிடங்கள் விண்வெளி நீச்சலுக்கென ஒருவருக்கு ஒதுக்கப் பட்டது. அப்போது நேரம் பேஜிங் தளப்படி பகற் பொழுதைத் தாண்டிய நேரம். அந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்புக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று அபாயம் மிக்க அண்டவெளி நீச்சல் புரிவதற்கு நல்ல வெளிச்சம் உள்ள பகல் வேளை தகுதியானது. முதல் விமானிக்கு அபாயம் ஏற்பட்டால் இரண்டாவது விமானி உதவ வசதியான நேரம் பகல் வேளை. இரண்டாவது விண்வெளி நீச்சலைச் சைன மக்கள் கண்டு களிக்கத் தக்க நேரம் பகல் வேளை. முதல்வன் ஏதோ ஒரு காரணத்தால் விண்வெளி நீச்சலைப் புரிய முடியவில்லை என்றால் இரண்டாவது விமானி அந்தப் பயிற்சியை செய்து முடிப்பான்.

விண்வெளி நீச்சலின் போது விமானிகள் செய்த சோதனைகள்

இந்த விண்வெளிப் பயணத்தில் சைனா சில சோதனைகளைச் செய்து முடிக்கத் திட்டமிட்டது.

1. விண்வெளி நீச்சல் புரிந்த ஸை ஸிகாங் விண்சிமிழுக்கு வெளியே குளிர்ச் சூனிய வெப்ப வெளியில் தொங்க விட்ட குவளையில் வைத்திருந்த திடவ மசகுகளுக்கு (Solid Lubricants) என்ன நேர்கிறது என்று ஆராய்வது !

2. அடுத்து 205 மைல் உயரத்தில் சுற்றிவரும் விண்சிமிழிலிருந்து ஒரு துணைக்கோளை விமானிகள் ஏவுவதாகத் திட்டம் இருந்தது ! அத்திட்டம் நடந்தேறியதா இல்லையா என்று வலைத் தகவலில் எங்கும் விபரம் காணப்பட வில்லை !

ஸென்ஸாவ் -7 பயணக் குறிப்பணித் திட்ட விபரங்கள் :

1. ஸென்ஸாவ் -7 குறிப்பணிக் காலம் 3 நாட்கள் (68மணி நேரம்), உயரம் 205 மைல்.

2. விண்வெளி நீச்சல் மிகையான காலம் : 30 நிமிடங்கள்.

3. 120 கிலோ கிராம் நிறையுள்ள விண்கவச உடையை இணைத்து விமானி அணிய 15 மணி நேரம்.

4. விண்வெளி நீச்சல் சமயத்தில் அபாயங்கள் நேரிட்டால் பாதுகாக்க 30 வழிமுறைகள்.

5. விமானிகள் தேர்ந்தெடுத்து உண்பதற்கு 80 விதமான உண்டிகள். மசாலாக் கோழி, ஷிரிம்ஸ், உலர்ந்த கனிகள்.

6. ராக்கெட் ஏவும் 105 மீடர் (350 அடி) கோபுரச் சட்டத்தில் அபாயப் பிழைப்புக் கதவுகள்.

7. ஸென்ஸாவ் -6 விண்சிமிழில் 220 பொறித்துறைச் செம்மை மாற்றங்கள் செய்யப்பட்டு ஸென்ஸாவ் -7 விண்சிமிழ் தயாரிக்கப்பட்டது.

8. ராக்கெட் ஏவப்பட்டு 583 வினாடிகள் (சுமார் 10 நிமிடம்) கழித்து விண்சிமிழ் 205 மைல் உயரத்தில் சுற்றுப் பாதையில் இறங்கி பூமியைச் சுற்ற இயங்கும்.

ஆசிய நாடுகளில் அண்டவெளிப் போட்டிகள் !

இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது. சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்யும் ! அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது !

ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது ! இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக்கின்றன. இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !

இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் பயணத்தை அமெரிக்காவைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது ! ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது,” என்று இகழ்ச்சியாகக் கூறியது !

********************************

தகவல்:

Picture Credits: Boston Globe, Christian Monitor, China Daily Reporter, Chinese Media, BBC News

1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick [Sep 28, 2008]
9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk [Oct 1, 2008]
14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
15  Dragon Space : What will China’s Astronauts Do Aboard Tiangong -1  (June 5, 2012)d
16  Reuters :  China’s First Woman Astronaut takes the Starring Role  By Jason Lee  (June 15, 2012)
17 Dragon Space :  Liu Yang : China’s First Female Astronaut  (June 16, 2012)
18  First Astronauts Enter orbiting China Space Module  (June 18, 2012)
19  Dragon Space :  Backup Plans for Docking the Chinese Spaceship with Tiangong -1 Space Station (June 20, 2012)
20  Dragon Space :  Thai is No Lab, It is a space Station  (June 22, 2012)
21  http://en.wikipedia.org/wiki/Chinese_Lunar_Exploration_Program  (Updated on June 12, 2012)

******************
jayabarat@tnt21.com [June 23, 2012]

2012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் நூதன செவ்வாய்க் கோள் தளவூர்தி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


செந்நிறக் கோளுக்கு மீண்டும்
உந்தப் போகுது நாசா
தள ஊர்தி யோடு !
தானாக ஊர்தியை இறக்க
தலைகீழ் ஏவுகணைகள்
ஈர்ப்பு விசை எதிர்த்து
கீழிறக்கும் வானிறக்கியால் !
தாறுமா றான களத்தில்
ஆறு சக்கரத் தேர் உலவும் !
நீள மானது தளவூர்தி !
கனமானது !
நூதன மானது
சாதனை வாகனம் !
இதுவரை ஏவப் படாத
புதுமைத் தள விஞ்ஞான ஆய்வகம் !
கதிரியக்க மின்சக்தியும்
பரிதி வெப்ப மின்கலமும்
கருவிகளை இயக்கும் !
செந்நிறக் கோள் தகவல் யாவும்
முந்தைய விண்சுற்றி மூலம்
வந்தடையும் நமது
வையகத்தை !

++++++++

தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையஆய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

(2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o   [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

“உச்சத் தரமான தொலை அளப்பு மூலம் (High Quality Telemetry) தளவூர்தி (செவ்வாய் ஈர்ப்பில்) புகுவது, இறங்குவது, தடம் வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளை தெளிவாக அறிவது அவசியமானது.  செவ்வாய்க் கோள் விண்வெளித் திட்டத்தில் அதுவே மிக்க சவாலான தீரச்செயல் நுணுக்கம் !  நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் இறங்கு பாதை பிரச்சனைகள் குறைந்த முறையில் தகவலை அனுப்பும் பெரும் தகுதி யுள்ளது.”

ஃபியூக் லி (Mission Mars Exploration Program at JPL)

“செவ்வாய்த் தளத்தைத் தொடும் தருணத்துக்கு முன்னும், பின்னும் நேரும் முக்கிய நிகழ்ச்சிகளைத் தகவல் மூலம் அனுப்பும் பல்வேறு தகுதிப்பாடுகளை ஒப்பு நோக்கியே தேர்வு முறைகள் தீர்மானிக்கப் பட்டன.  குறுகிய பாதையில் இறக்கினால் இரண்டு விண்வெளிக் கப்பல்கள் (NASA’s Mars Odyssey & Mars Reconnaissance Orbiter) தொடர்ந்து தளவூர்தியைக் கண்காணிக்க வேண்டும். மாறாக நெடிய பாதையில் இறக்கும் போது தகவல் அனுப்புப் பூமிக்கு நேரடித் தொடர்பு கிடைக்கிறது.”

மைக்கேல் வாட்கின்ஸ் (Mission Manager, NASA Jet Propulsion Lab).



“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள்.  அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது.  உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது.  மக்கள் ஃபோபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”

அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)


“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்து விடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.


2011 ஆண்டு நவம்பரில் நாசா அனுப்பிய செவ்வாய்த் தளவூர்தி 2012 ஆகஸ்டு முதல் வாரம் இறங்கப் போகிறது !

2.5 பில்லியன் டாலர் நிதிச் செலவில் (2012 நாணய மதிப்பு) நாசா 2011 நவம்பரில் துவங்கிய செவ்வாய்க் கோள் பயனத்தில் நவீனத் தளவூர்தி ஒன்றைப் புதிய முறையில் இறக்கப் போகிறது.   2009 ஆம் ஆண்டில் முடிவு செய்யப் பட்ட அத்திட்டம் விண்வெளி மீள்கப்பல் பயண நிறுத்த நீடிப்பாலும், தளவூர்திப் பயிற்சிக் காலம் போதான்மை யாலும் தாமதமாகி 2011 ஆண்டு நவம்பரில் நிறைவேற்றியது.  நாசா இதற்கு முன்பு வெற்றிகரமாகச் செவ்வாய்த் தளத்தில் இறக்கிய மூன்று தள வுளவிகளின் (Spirit, Opportunity & Phoenix Lander) அனுபவத்தில் இப்போது அவற்றை விட முற்போக்கான “செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வு ஊர்தி” (Mars Science Laboratory, MSL Curiosity) எனப்படும் தளவூர்தி ஒன்றை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது.  அந்த தளவூர்தி செவ்வாய்க் களத்தில் நீண்ட காலம் ஆய்வுகள் நடத்தப் போகிறது.  அந்த செந்நிறக் கோள் விண்ணூர்தி 2011 ஆண்டு நவம்பரில் பிளாரிடா கனாவரல் முனையிலிருந்து (Cape Canaveral, Florida) ஏவப்பட்டு இப்போது செவ்வாய்க் கோளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாகும்.  செவ்வாய்க் கோளை அந்த விண்ணூர்தி 2012 ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெருங்கி அதன் ஈர்ப்பு வலையில் இறங்கிச் சுற்ற ஆரம்பிக்கும்.   செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணூர்தி வேகத்தைத் தணித்து செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கிச் சுற்ற வைப்பது, பூமியிலிருந்து கட்டுப்படுத்தும் மிகவும் சவாலான பொறியியல் நுணுக்க வேலை.   இதுவரை செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்த விண்கப்பல் பயணங்களில் வெற்றி அடைந்தவை  40%.

2011 நவம்பரில் ஏவப்பட்ட செவ்வாய் விண்ணூர்தி எட்டு மாதங்கள் பயணம் செய்து 2012 ஆகஸ்டு  5 அல்லது 6 ஆம் தேதி செந்நிறக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  விண்சிமிழின் எடை 900 கி.கிராம் (1980 பவுண்டு). திட்டப்பணி செவ்வாயில் 686 பூமி நாட்கள் நீடிக்கும்.  தளவூர்தியின் முக்கிய ஆய்வு செவ்வாய்ச் சூழ்வெளியானது நுண்ணுயிர் ஜீவன்களை வளர்ப்பிக்கும் தகுதி உடையதா, அவற்றைப் பாதுகாக்கும் தன்மை உள்ளதா என்பதைக் காண்பதே.  அதாவது செவ்வாய்க் கோள் தோன்றிய காலத்தில் வாயுச் சூழ்வெளியும், நீர்மை வளங்களும் வசதி செய்து உயிரினங்கள் வசித்தனவா என்பதை நிரூபித்துக் காட்டுவதே ஆகும்.

தளவூர்தி இறங்கத் திட்டமிடப் பட்டுள்ள  செவ்வாய்த் தளம் கேல் ஆழ்பள்ளம் (Gale Crater).  அது ஆராயப் போகும்  பரப்பின் நீளம் 16 மைல் நீளம், 12 மைல் அகலம்.   ஆறு சக்கர தளவூர்தி முதன்முதலில் ஒரு ராக்கெட் எஞ்சின் இயக்கும் பளுதூக்கி (Rocket-powered Sky Crane) மூலம் நூதன முறையில் இறக்கப் படும்.

முக்கியமாக இந்தச் செவ்வாய்க் கோள் திட்டத்தில் நான்கு குறிப்பணிகள் நிறைவேற்றப்படும்.

1. உயிரினம் எப்போதாவது செவ்வாய்த் தளத்தில் உதித்துள்ளதா ?

2. செவ்வாய் பருவ நிலைப் (Climate) பண்பாடு எவ்விதம் இருந்து பிறகு மாறி யுள்ளது.

3. செவ்வாய்க் கோளின் தளவியல் (Geology) பண்பாடுகளை உளவி அறிவது.

4. செவ்வாய்க் கோள் தேடலில் அடுத்து வரப் போகும் மனிதப் பயணத்துக்குத் தயார் செய்வது.

நாசா திட்டமிட்டிருக்கும் ஐந்து விண்வெளிக் குறிப்பணிகள்.

2011 நவம்பரில் நாசா செவ்வாய் விஞ்ஞான ஆய்வகத்தை அட்லாஸ் V- 541 ராக்கெட்டில் பிளாரிடா கனாவரல் ஏவுகணை முனையில் அனுப்பத் திட்டமிட்டது.   இந்த முறை ராக்கெட்டில் செவ்வாயைச் சுற்றும் விண்கப்பல் எதுவும் தனியாக அமைக்கப் படாமல் வெறும் தளவூர்தியைத் தாங்கிச் செல்லும் விண்ணூர்தி மட்டும் ஏற்றிச் செல்லப்படுகிறது.  தளவூர்தி செவ்வாய்த் தளத்தில் இறங்குவதை, ஏற்கனவே பல மாதங்கள் சுற்றிவரும் செவ்வாய்க் கண்காணிப்பு விண்சுற்றி (NASA’s Mars Reconnaissance Orbiter) கவனித்துத் தளவுளவி சேமிக்கும் தகவலைப் பூமிக்கு அனுப்பும்.

1.  செவ்வாய்த் தளவூர்தி எவ்வளவு பெரியது ?

புதிய தளவூர்தி பழைய நான்கு விதமான தளவுளவிகளை (Spirit, Opportunity, Sojouner, Phoenix Lander) விடப் பெரியது, நீளமானது, கனமானது, நூதனமானது.  அதன் நீளம் : 10 அடி (3 மீடர்).  வாகனம் செவ்வாய்த் தளத்தில் எதிர்ப்படும் 2.5 அடி உயரக் கற்களைக் கடந்து செல்லும் திறன் உடையது.  தளத்தில் 600 அடி (200 மீடர்) நீளம் நகரும் ஆற்றல் உள்ளது.  விஞ்ஞான உளவுக் கருவிகள் எடை : 80 கி.கிராம் (176 பவுண்டு). வாகனத்தின் உச்ச வேகம் : மணிக்கு 90 மீடர் (300 அடி) தூரம்.  சராசரி சாதாரண வேகம் : மணிக்கு 30 மீடர் (100 அடி) தூரம்.  2 வருடத்தில் தளவூர்தி சுமார் 20 கி.மீடர் (12 மைல்) தூரம் பயணம் செய்யும் என்று சுமாராகக் கணிக்கப் படுகிறது.

2.  நூதனத் தளவூர்தி எவ்விதம் இறங்கப் போகிறது ?

இதுவரை செவ்வாய்க் கோளில் இறங்கிய தள வாகனங்கள் அனைத்தும் காற்றடைத்த பந்துக் கொத்தில் (Airbag Cushion Balls) அமைக்கப் பட்டு பாராசூட் இறக்கிக் கீழே விடுவிக்கப் பட்டன.  தரையில் விழுந்த பந்துக் கொத்து தவ்வித் தவ்வி இறுதியில் நின்று வாகனம் வெளிவந்தது.  புதிய நூதனத் தளவூர்தி ஹெலிகாப்டரில் சாதனம் இறக்கும் “வானிறக்கு முறையில்” (Sky Crane Lowering) செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்கும்.  இந்த முறைக்கு பாராசூட், “எதிரியக்கு ராக்கெட்” (Retro-Rocket), வானிறக்கு வடங்கள் தேவைப்படும்.  வாகனத்தை இறக்கும் விண்சிமிழை முதலில் பாராசூட் சுமந்து கீழிறக்குகிறது.  பிறகு விண்சிமிழின் எதிரியக்கு ராக்கெட்டுகள் இயங்கி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசைக்கு எதிராக மெதுவாக்கி அதன் இழுப்பைக் குறைக்கின்றன. அதன்பின் “வான் கீழிறக்கி” (Sky Crane) வடங்களில் கட்டப்பட்ட தளவூர்தி வாகனம் இறங்கித் தளத்தில் ஆறு சக்கரங்கள் படிய ஏதுவாகிறது.

3. தளவூர்தியில் உள்ள சாதனக் கருவிகள்

செவ்வாய்த் தளவூர்தியில் 10 கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன.  அவை மண், பாறை, சூழ்வெளியைச் சோதிக்கும் திறமுடையவை.  தொலைவிலிருந்து பாறைப் படிவை வாயுவாக்கும் வல்லமை உடைய ஒரு லேஸர் சாதனம் உள்ளது.  அடுத்தோர் கருவி ஆர்கானிக் கூட்டுகள் உள்ளனவா என்று சோதிக்கும்.  பிறகு தொலைவில் உள்ளவற்றைக் காணவும், படமெடுக்கவும் தேவையான புதுவிதக் காமிராக்கள்,  தளத்தைத் தோண்டும் கருவியும், அள்ளும் ஓர் அகப்பையும் உள்ளன.  எடுத்துப் பொடி செய்த பாறைகளின் உட்பொருளைப் ஆய்வு செய்திட இரசாயனக் கருவிகள்.  உயிரினத்தை வளர்ப்பிக்கும் ஆர்கானிக் கார்பன் கூட்டுகள் (Organic Carbon Compounds – Carbon, Hydrogen, Nitrogen, Oxygen, Sulfur & Phosphorus) இருப்பைக் காணும்,.  உயிரியல் பண்பாடுகளை (Biological Processes) நோக்கும் தளக் கலவைகளை  (Chemical, Isotopic, Minerological Composition of the Martian Surface) தனித்து அறிவது.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் செவ்வாய்ச் சூழ்வெளி வளர்ச்சி/தளர்ச்சிக் கால நீட்சி வரிசையைக் காண்பது.  செவ்வாய் நீரோட்டத்தின் தற்போதைய நிலை, பரவல் வரலாறு, நீர், கார்பன் டையாக்ஸைடு சுழற்சிப் போக்கை அறிவது. செவ்வாய்த் தளத்தில் தளக் கதிர்வீச்சு, காலாக்ஸி கதிர்வீச்சு, அகிலக் கதிர்வீச்சு, பரிதி புரோட்டான் நிகழ்ச்சிகள், இரண்டாம் பிறப்பு நியூட்ரான்கள் (Surface Radiation, Galactic Radiation, Cosmic Radiation, Solar Proton Events & Secondary Neutrons) ஆகிவற்றின் பண்பாடுகளை அறிவது.

4. தளவூர்தி செவ்வாயில் செய்யப் போகும் சாதனைகள்

செவ்வாய்த் தளத்தில் உலவும் வாகனத்தின் சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொரு சக்கரமும் தனித்தியங்க வெவ்வேறு மோட்டர் உள்ளது.  முன்னிரண்டு, பின்னிரண்டு சக்கரங்கள் திரும்ப தனித்தனித் “திருப்பி மோட்டார்” (Steering Motor) உள்ளது.  இம்மாதிரி திருப்பிகள் இருப்பதால் தளவூர்தி நின்ற இடத்திலே 360 டிகிரி கோணத்தில் திரும்ப முடியும்.

5. தளவூர்தியை இயக்கும் மின்சக்தி ஆற்றல்

பல்துறைப் பயண கதிரியக்க உலோகத்தின் மின்கலம் (Plutonium-238 Radioactive Decay) (Multi-Mission Radioisotope Thermo-electric Generator -MMRTG) ஆண்டு முழுவதும், இராப் பகலாய் 125 வாட்ஸ் (உச்ச அளவு) மின்னாற்றல் தர வல்லது.  செவ்வாய்க் கோளின் மத்திய ரேகையைத் தாண்டி வாகனம் சென்றாலும் தொடர்ந்து மின்சக்தி கருவிகளுக்குக் கிடைக்கும்.  பரிதியின் எரிசக்தி வாகனம் மத்திய ரேகைப் பகுதிகளில் நடமிடும் போது மின்னாற்றல் அளிக்கும்.  தளவூர்தியின் பரிதி மின்கலம் தினம் 2.5 kwh (Kilo Watt Hour)  வரை உற்பத்தி செய்யும்.  MMRTG கதிரியக்க மின்கலம் 2 ஆண்டுகள் வரைத் தேவைப் பட்டாலும் அதன் ஆயுள் 14 ஆண்டுகள் நீடிக்கும்.

2011 நவம்பரில் செவ்வாய் நோக்கிச் செல்லும் மூன்று வல்லரசுகள்

நாசாவின் நூதனச் செவ்வாய்த் தளவுளவியும், ரஷ்யாவின்  ஃபோபாஸ்-கிரண்ட் செவ்வாய் விண்ணுளவியும் ஏறக் குறைய ஒரே தருணத்தில் செந்நிறக் கோளுக்குப் பயணம் செய்யப் போகின்றன.  ரஷ்யா ஏவுகணைச் சைனாவின் செவ்வாய் விண்ணுளவியையும் ஏந்திச் செல்லப் போகிறது.  அதாவது ஒரே சமயத்தில் மூன்று பெரும் வல்லரசுகள் செந்நிறக் கோளைச் சுற்றி ஆராயப் போகின்றன ! செவ்வாய்த் துணைக்கோள் ஃபோபாஸில் இறங்கி மாதிரி மண்ணெடுத்து முதன்முதல் பூமிக்கு மீளும் பொறிநுணுக்கத் திறனைக் காட்டப் போகிறது ரஷ்யா !  அமெரிக்கா முதன்முதல் பெருவூர்தி ஒன்றை வானிறக்கு முறையில் (Sky Crane Descent) செவ்வாயில் இறக்கித் தன் பொறிநுணுக்கத்தை நிரூபிக்கப் போகிறது.  அடுத்து முதன்முதல் சைனாவின் செந்நிறக் கோள் விண்ணுளவி செவ்வாயைச் சுற்றுப் போகிறது.  விந்தையான மூன்று முதல் முயற்சிகளில் எது நிறைவேறும் எது ஏமாற்றம் கொடுக்கும் என்பது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்தான் நமக்கெல்லாம் தெரியும் !

+++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, Russian Space Exploration & Chinese Websites

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11 The Tech Harold – NASA The Nuclear-Powered Mars Science Lab – Curiosity
12 NASA Mars Rover (Mars Science Lab – Curiosity) is Halfway to Next Destination (September 9, 2010)
13 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (September 14, 2010)
14 Mars Smart Lander Mission -A Roving Mobile Science Lab (2009-2011)
15 NASA Mars Rover Halfway to Next Destination (September 9, 2010)
16 Press Trust of India – Chain’s Space Programme Gears Up to Moon & Mars (September 21, 2010)
16  Science Daily : Geometry Drives Selection Date for 2011 Mars Launch (May 24, 2010)
17  Scientific American : NASA’s Massive Curiosity Rover Nears Launch toward Mars (Nov 24, 2011)
18 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (During Testing) (September 14, 2010)
19 NASA – Mars Science Laboratory (Curiosity Rover) (Jet Propulsion Lab JPL) (September 2010)
20 NASA Report : Five things About NASA’s Mars Curiosity Rover (September 16, 2010)
21 Wikipedia – Mars Science Laboratory (Rover Curiosity) (September 21, 2010)
22  Mars Daily :  NASA’s Mars Rover Zeroes in On August Landing  (June 11, 2012)
23  Mars Daily :  NASA Mars Rover Team Aims for Landing Closer to Prime Science Site  (June 12, 2012)
24  Mars Science Lab Mission Update – NASA Tweaks August Landing Site – Closer to Prerequisites (June 12, 2012)
25. Wikipedia :  http://en.wikipedia.org/wiki/Mars_Science_Laboratory  (June 12, 2012)
26  http://www.nasa.gov/mission_pages/msl/index.html  (Rover Curiosity)
27.  Daily Galaxy : Early Mars was The Water Planet –  Will NASA’s August 5th,  2012 Mission at Gale Crater Provide Proof ?  (June 13, 2012)

(தொடரும்)
++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (June  15, 2012) [R-1]

https://jayabarathan.wordpress.com/


2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வக்கிரப் பாதையில் பரிதியைச்
சுற்றி வருகுது மின்னும்
சுக்கிரக் கோள் !
உக்கிர வெப்பம் கொண்டது
எரிமலை வெடிப்பது !
கரியமில வாயு கோளமாய்க்
கவசம் பூண்டது !
பரிதி சூழ்வெளி சூடேற்றி
உலோகத்தை
உருக்கிடும் உஷ்ணம் !
ஆமை வேகத்தில் சுற்றும்
தன்னச்சில் சுக்கிரன் !
ஆனால் அதன் வாயு மண்டலம்
அசுர வேகத்தில் சுற்றும் !
பூமிக்குப்
பிறை நிலா போல்
குறை முகம் காட்டும்
சுக்கிரன் !
முழு முகத்தை மறைப்பது
சூரியன் !
பூமியின் இரட்டைக் கோள் !
ஆறாண்டு காலமாய்
ஆய்வு செய்யும்
ஈசாவின் வேக விண்கப்பல் !
நூறாண்டுக் கொருமுறை
சூரியனைச் சுக்கிரன்
பூமிக்கு
நேரே கடக்கும்.

++++++++++++

முகில் இடையிடையே தடுத்தாலும் நள்ளிரவுச் சூரியனில் மகத்தான அந்த சுக்கிரக் கடப்புக் காட்சியை முழு நேரமும்  நாங்கள் காண முடிந்தது.

மைக்கேல் பெரிஸ் அயூகர்  (ESA European Space Astronomy Centre ESAC)


சூரியனைச் சுக்கிரன் கடக்கும் போது பூதள விண்ணோக்கிகளின் பதிவுகளையும் வெள்ளி வேக விண்கப்பல் (Venus Express Spacecraft) பதிவுகளையும் ஒப்பிட்டு , சுக்கிரனில் விரைவாய் மாறும் சூழ்நிலையைத் தெளிவாக  அறிய எதிர்நோக்கி உள்ளோம்.

ஹேகன் சுவேதம்  (ESA Venus Express Project Scientist)

“வேக விண்கப்பல் அனுப்பும் புதிய படங்கள் வெள்ளிக் கோளின் ஊடே நிகழும் இயக்க மாறுபாடுகளைக் குறியிட்டுக் காட்டும்.  இவற்றைக் கொண்டு முகில் கோளத்தின் நகர்ச்சி அமுக்கத்தைத் (Transport of Momentum) தொடர்ந்து கண்காணிக்க முடியும்.  சுக்கிரன் சூழ்வெளி அசுர ஓட்டத்தின் மூல காரணத்தை (Origin of the Super-Rotation of Atmosphere) அறிந்து கொள்வதற்கான முக்கிய அடையாளங்கள் தென்படும்.  சுக்கிரக் கோள் சுழற்சிக்கும் சூழ்வெளி முகில் சுழற்சிக்கும் இடையே உள்ள முரண் இணைப்பை (Mismatch) ஆராய்வதே வீனஸ் எக்ஸ்பிரஸ்ஸின் முக்கியக் குறிக்கோள்.”

டிமிட்ரி டிடாவ் (Dmitriy Totov, Max Plank Institute for Solar Research in Germany)


“உஷ்ண மாறுபாடுகள் எப்படி மற்ற இயக்கங்களைத் தூண்டிச் சுக்கிரனின் சூழ்வெளி வெப்பசக்தி தொகுப்பு, இழப்பைப் (Energy Budget) பாதிக்கும் என்னும் அடிப்படையை விளக்கமாக அறிந்து கொள்வது மிக்க அவசியம்.”

டேவிட் கிராஸ்ஸி (Scientist IFSI-INAF, Rome)

“(திட்டமிட்ட காலத்தைத் தாண்டி) ஈசாவின் ‘வீனஸ் எக்ஸ்பிரஸ்’ நான்கு ஆண்டுகளாய்ச் செறிவான விஞ்ஞானத் தகவலை அனுப்பிக் கொண்டு வருகிறது.  இந்த ஆண்டு அகில நாட்டுப் பேரவையில் (2010 International Venus Conference at Aussois, France) அவற்றில் முக்கியமானவை சில அறிவிக்கப்படும்.”

ஹேகன் ஸ்வேதம் (Hakan Svedhem) வீனஸ் எக்ஸ்பிரஸ் திட்ட ஆளுநர்

“புறச் சூரியக் கோளின் (Extrasolar Planet) உஷ்ணம், அழுத்தம், வாயுக்கள், வாயுப் புயல் வேகம், முகிலோட்டம் போன்ற தளப்பண்புப் பரிமாணங்களை அளப்பது விஞ்ஞானிகளின் முக்கிய குறிக்கோள்.  அவற்றின் மூலம் அங்கே உயிரின வளர்ச்சிக்குப் போதுமான வசதிகள் உள்ளனவா என்று ஆராய முடிகிறது.”

மார்க் ஸ்வைன் நாசா ஜெட் உந்துசக்தி ஆய்வகம் (Mark Swain, NASA Jet Propulsion Lab, USA)


“வெள்ளிக் கோள் தோற்ற வளர்ச்சியைப் புரிந்து கொள்வது பூமியின் தோற்ற வளர்ச்சியை அறிந்து கொள்வதோடு, பரிதிக்கு அப்பாற்பட்ட கோள்களின் அமைப்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவி செய்யும்.”

காலின் வில்சன்,  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம்

“சனிக் கோளின் துணைக்கோள் டிடான் (Titan) (சுக்கிரனைப் போல்) வெகுவேகமாகச் சுழழும் சூழ்வெளி முகில் மண்டலத்தைக் (Super-Rotating Atmospheric Cloud) கொண்டது.  இரண்டு கோள்களைப் பற்றியும் நாம் அறிந்து ஒரே வித யந்திர இயக்கங்கள் நிகழ்கின்றனவா என்று ஆராயலாம்.  அம்முறை கோள்களில் எவ்வித விசைகள் சேர்ந்து அவ்வித அசுர வேகச் சூழ்வெளியை உருவாகிறது என்று அறிய உதவலாம்.”

காலின் வில்சன்,  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம்


பூமிக்கு நேரே சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்

2012 ஜுன்  5 /6 தேதிகளில் 100-130 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஓர் அற்புதக் காட்சி சூரிய மண்டலத்தில் நிகழ்ந்தது.   பூமியின் இரட்டை எனப்படும் நமது அண்டைக் கோளான  சுக்கிரன் (வெள்ளிக் கோள்) பூமிக்கும் பரிதிக்கும் இடையில் ஒரே நேர் கோட்டில் வந்து பரிதியைக் கடந்து சென்றது.   பிரம்மாண்டமான சூரியனைச் சுண்டைக்காய் போன்ற சுக்கிரக் கோள் குறுக்கே கடந்து சென்றது.    இந்தக் குறுக்குப் பயணம் ஜூன் 5 ஆம் ஆரம்பித்து ஜூன் 6 தேதி முடிந்தது.  120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த நேர்முகக் கடப்புக் காட்சி 8 ஆண்டு இடைவெளியில் இருமுறை நிகழ்கிறது.  2004 ஜூன் 8 இல் சுக்கிரன் கடப்பு முதன்முறை சூரியனின் தென்புறத்தில் நேர்ந்தது.  2012 ஜூன் 6 இல் நேர்ந்த சுக்கிரன் கடப்புக் காட்சி வட புறத்தில் நிகழ்ந்தது.   இதற்கு முன்பு இதுபோல் ஏற்பட்ட சுக்கிரன் கடப்பு 130 ஆண்டுகளுக்கு முன்பு  8 வருட இடைவெளியில் 1874 டிசம்பர் 9 இலும், 1882 டிசம்பர் 6 இலும் இருமுறை நட்ந்துள்ளன.   அடுத்த சுக்கிரக் கடப்பு 113 ஆண்டுகளுக்குப் பிறகு 2117 டிசம்பரிலும் 2125 டிசம்பரிலும் நேரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த அரிய காட்சி மேற்கு பசிபிக் கடற்கரைகளிலும், வட அமெரிக்க வடமேற்குப் பகுதிகளிலும், ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், கிழக்கு ஆஸ்திரேலியா, நியூ ஜீலண்டு போன்ற நாடுகளில் காணப் பட்டுள்ளன.   அதே சமயத்தில் இக்காட்சி தென் அமெரிக்காவின் பெரும்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியிலும் காணப்பட வில்லை.    லாஸ் ஏஞ்சலஸ் ஹாலிவுட் குன்றில் உள்ள கிரிஃபித் விண்ணோக்கி (Griffith Observatory)  ஆய்வுக்கூடத்தின் தொலைநோக்கி சுக்கிரன் கடப்பை நோக்கத்  தயாராக பொதுமக்கள் காண திருப்பப் பட்டிருந்தது.   பொதுமக்கள் திரளாகக் கூடி இருந்தனர்.    அதுபோல் ஹவாயில்  8 தொலை நோக்கிகளை  திசை திருப்பி வைத்து  பெரிய திரையில் கடப்புக் காட்சி காண்பிக்கப் பட்டது.

36,000  கி.மீடர் (22,000 மைல்) உயரத்தில் நாசாவின்   (NASA’s Solar  Dynamics Observatory – SDO) சுக்கிரன் கடப்பதை 10 மடங்கு கூர்மையாய்க் காட்டியது.  2012 ஜூன் சுக்கிரக் கோளின் கடப்பின் போது  வானியல் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்த வாய்ப்புக்கள் கிடைத்தன.  உதாரணமாக ஒரு தெரிந்த அண்டக் கோள் சூரியனைக் கடக்கும் போது  நேர்ந்த சூரிய ஒளிமங்கலைக் காணும் நுணுக்கம் விருத்தியானது.    இதே நுணுக்க முறை விண்வெளியில் புதிய பூமிகள் தேடும் போதும் பயன்படும்.   அத்துடன் 11 ஆண்டுக்கு ஒருமுறை உச்ச எண்ணிக்கையில் ஏற்படும் பரிதித் தேமல்கள்   தருணத்தில் சுக்கிரக் கடப்பு  நிகழ்ச்சி நேர்ந்திருக்கிறது.

சுக்கிரக் கடப்பின் போது வானியல் விஞ்ஞானிகள் அறிந்தவை

1.   சுக்கிரக் கடப்பின் போது பரிதியின் பின்புலத்தில் அளக்கப்பட்ட அதன் விட்டம், முந்தி அறிந்ததை விட சற்று துல்லிமையாக இருக்கும்.  இதுபோல் இம்முறை புறக்கோள்களின் (Exoplanets) அளவுப் பரிமாணத்தில் துல்லிமை காணப் பயன்படும்.

2.  பூதள விண்ணோக்கிகள்,  ஈசாவின் வெள்ளி வேக விண்ணுளவி (ESA, Venus Express Spacecraft) ஒரே சமயத்தில்  சுக்கிரன் கடப்பை நோக்கும் போது வெள்ளிக் கோளின் சூழ்நிலை, காலநிலை வேறுபாட்டை இரண்டு முறைகளில் ஒப்பு நோக்க உதவி செய்யும்.

3.  ஹப்பிள் தொலைநோக்கி நிலவின் ஒளிப்பிரதிபலிப்பை மாதிரிக்கு எடுத்துக் கொண்டு புறக்கோள்களின் தன்மைகளைப் பதிவு செய்யலாம்.   சுக்கிரக் கடப்பு  சமயத்தில் சூரிய ஒளிமங்கல் பதிவு இன்னொரு முறையாக விஞ்ஞானிகளுக்கு உதவ முடியும்.

ESA Venus Express Control Room

வெள்ளிக் கோள் ஆய்வுகளை 2010 இல் அரங்கேற்றிய விஞ்ஞானப் பேரவை

மனிதரை அனுப்பி நிலவை உளவியது போல், மனிதரில்லா விண்ணுளவிகள், தளவுளவிகள் சென்று செவ்வாய்க் கோளை ஆராய்ந்தது போல், நமக்கு அண்டையில் பரிதியைச் சுற்றி வரும் சுக்கிரக் கோளின் புதிர்களையும், மர்மங் களையும் வானியல் விஞ்ஞானிகள் இதுவரை விடுவிக்க வில்லை.   சுக்கிரன் சூரியனைச் சுற்றி வர 225 பூமி நாட்கள் எடுக்கிறது.

சுக்கிரனின் முக்கியப் புதிர்கள் மூன்று :

1.  வெள்ளிக் கோள் 243 பூமி நாட்களில் ஒரு முறைத் தன்னச்சில் ஏன் மிக மெதுவாகச் சுற்றுகிறது ?

2.  அதே சமயத்தில் சுக்கிரனின் வாயுச் சூழ்வெளி ஏன் அசுர வேகத்தில் 4 நாட்களுக்கு ஒருமுறை சுற்றுகிறது ?

3.  அடுத்து வெள்ளிக் கோளின் தள உஷ்ணம் ஏன் 460 டிகிரி செல்சியஸ் ஏறி வெப்பப் பாலைவனமாக உள்ளது ?

ரஷ்ய, அமெரிக்க, ஈசா விஞ்ஞானிகள் 1965 முதல் இன்றுவரை மனிதரில்லாப் பயணத்தில் விண்ணுளவிகளை அனுப்பிச் சுக்கிரனை நோக்கி ஆராய்ந்து வந்தார்.  அவற்றில் முக்கியமானது தற்போது ஆய்ந்து வரும் ஈசா அனுப்பிய வெள்ளிக் கோள் வேகக் கப்பல் (Venus Express).  2005 நவம்பரில் அனுப்பப் பட்ட அந்தக் விண்கப்பல் ஐந்து மாதம் கழித்து 2006 ஏப்ரலில் சுக்கிரனை நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது !  அப்போதிருந்து இன்றுவரை (2012 ஜூன்) வீனஸ் எக்ஸ்பிரஸ் தொடர்ந்து புதிய தகவலைப் பூமிக்கு அனுப்பி வந்துள்ளது.

ஈசா 2005 நவம்பரில் அனுப்பிய ‘வீனஸ் எக்ஸ்பிரஸ்’ (Venus Express) அதற்கு முன் 2003 ஜூனில் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவிய ஈசாவின் ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்ஸைப்’ (Mars Express) போன்றதே.  ஏறக் குறைய விண்வெளிச் சோதனை களில் தேர்ச்சி பெற்ற செவ்வாய் விண்ணுளவியின் கருவிகளே வெள்ளியின் வேகக் கப்பலிலும் பயன்படுத்தப் பட்டன.  வீனஸ் எக்ஸ்பிரஸ்ஸின் தனித்துவக் கருவிகள் : வெள்ளிக் கோளின் சூழ்வெளி வாயு முகில் அழுத்தத்தைப் பல்லடுக்கு அலை நீளப் படமெடுப்பு & ஒளிக்கற்றைக் கண்ணோட்டம் (Multi-Wavelength Imaging & Spectroscopic Observations of the Planet’s Atmosphere & Clouds).  அவற்றில் கிடைத்த தகவல் மூலம் சுக்கிரக் கோளின் விளக்கமான உட்புறக் காட்சி, அமைப்பு, உள்ளுறுப்புகளை நுணுக்கமாக அறிவது.  பிரான்சில் நடக்கும் 2010 வீனஸ் கருத்தரங்கில் VMC காமிராவின் (Venus Monitoring Camera) படங்கள் முதன்முறையாக அனைவருக்கும் காட்டப்படும்.  தனிப்பட்ட குழு ஒன்று சுக்கிரனின் ‘பொதுச் சுற்று மாடலை’ (General Circulation Model -GCM) விளக்கம் செய்யப் போகிறது.  சனிக்கோளின் துணைக்கோள் டிடானிலும் (Titan) வெள்ளிக் கோள் போல, சூழ்வெளி வாயு மண்டலம் கோளை விட வேகமாகச் சுற்றுகிறது.  ஜப்பான் விண்வெளி ஆய்வகம் 2010 மே 21 இல் சுக்கிரனை ஆய்வு செய்ய விண்ணுளவி ஒன்றை அனுப்பியுள்ளது.  அது 2010 டிசம்பரில் சுக்கிரனை நெருங்கிச் சுற்றத் துவங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சுக்கிரக் கோளின் புதிரான வாயுச் சூழ்வெளியின் விரைவோட்டம்

பூமியின் உள்ளிருக்கும் வெளிக்கரு மணிக்கு 960 மைல் (மணிக்கு 1600 கி.மீ.) வேகத்தில் சுற்றுகிறது.  அதை ஒட்டி பூமியின் மேற்தளமும், பூமியைச் சுற்றியுள்ள கவசக் குடையான வாயுச் சூழ்வெளியும் ஏறக்குறைய அதே வேகத்தில் சுற்றி வருகின்றன.  பூமியின் சுற்று நேரம் பல வித உராய்வு இயக்கங்களால் (கடல் அலை எழுச்சிகள், காலாக்ஸித் தூசிகள்) 100,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2.2 விநாடிகள் நீட்சி அடைகிறது.  ஆனால் சுக்கிரனில் தள வேகமும், வாயுச் சூழ்வெளி வேகமும் வியக்கத் தக்க முறையில் வேறாகின்றன !  சுக்கிரன் தன்னச்சில் ஒருமுறை சுற்ற 243 நாட்கள் (பூமிக் கடிகாரம் 24 மணி நேரம்) எடுக்கிறது.  அவ்விதம் அதன் தள வேகம் ஆமை வேகத்தில் சுற்றும் போது அதன் சூழ்வெளி வாயு மண்டலம் ‘அசுர வேகத்தில்’ (Super-rotation of Venus Atmosphere) 4 நாட்களில் ஒருமுறைச் சுற்றுகிறது !  அந்த விந்தையான வேறுபாட்டுக்குக் காரணத்தை இது வரையில் விஞ்ஞானிகள் தெளிவாக அறிய முடியவில்லை !

பரிதிக் குடும்பத்திலே மிக வியப்பை அளிக்கும் மர்மம் அதன் வாயு மண்டல ‘அசுரச் சுற்றியக்கம்’.  1960 ஆண்டில்தான் முதன்முதல் வெள்ளிக் கோளின் வாயு மண்டலம் கோளை விட மிக வேகமாகச் சுற்றுகிறது என்பது அறியப்பட்டி ருக்கிறது.  விஞ்ஞானிகள் அதற்குப் பல்வேறுக் கோட்பாடுகளைக் கூறியுள்ளார்.  ஆயினும் ஏதொன்றும் செம்மையான கருத்தாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.  இப்போது கிடைத்த புதுத் தகவலை வைத்து மெக்ஸ்கோ விஞ்ஞானிகள் சுக்கிரனுக்குத் தொலைவில் உள்ள சூரியப் புயல் தாக்கி அசுரச் சுழல் ஓட்டத்தை உண்டாக்குகிறது என்று ஒரு பொருத்தமான இயற்கை உந்துதலைக் கூறியுள்ளார்.

சுக்கிரன் தன்னச்சில் ஒருமுறைச் சுழல 243 நாட்கள் ஆகின்றன.  ஆனால் அதன் வாயு மண்டலம் அதை விட மிக வேகமாக விநாடிக்கு 200 மீடர் (சுமார் 100 mph) வீதத்தில் சுக்கிரனை 4 நாட்களில் சுற்றி விடுகிறது !  அதைப்போல் சனிக்கோளின் துணைக் கோளான டிடானிலும் (Titan Moon) வாயு மண்டலம் தனது கோள் மண்டலத்தைப் போல் பன்மடங்கு வேகத்தில் சுற்றி வருகிறது.  மெக்ஸிகன் தேசீயப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி ஹெக்டர் ஜேவியர் துரன்ட்-மந்தரோலா (Hector Javier Durand-Manterola) 150–800 கி.மீடர் (90–480 மைல்) உயரத்தில் உள்ள அயனோஸ்ஃபியரின் ஒலிவேகத்தை மிஞ்சிய வாயு மண்டலத்தைப் பற்றி (Supersonic-Speed Winds in the Ionosphere) ஆராய்ந்தார்.  ‘கடப்பு முடிவு’ வாயு ஓட்டம் (Trans-terminator Flow) எனப்படும் அது விநாடிக்குப் பல கி.மீ. வேகத்தில் செல்வது.

நாசாவின் ‘முன்னோடிச் சுக்கிரன் சுற்றுளவி’ (Pioneer Venus Orbiter) 1980 இல் சூரியப் புயல் தூண்டி ஏற்படும் அந்த வேகத்தைக் கண்டுபிடித்தது. துரன்ட்-மந்தரோலாவின் குழுவினர் கிரையோஸ்·பியர் (Cryosphere) கோளத்தில் கடப்பு-முடிவு ஓட்டம் அதற்குக் கீழே அமுக்கத்தை (Momentum) அலைகளாய்த் தள்ளி தளர்ச்சி அடைகிறது என்று அறிவித்தனர்.  மேலும் இரவிலும், பகலிலும் வெள்ளியின் வாயு மண்டலத்தில் நிகழும் பரிதியின் அமுக்க அலைகள் வேறுபடுகின்றன.  பகற் பொழுதில் பரிதிக்கு எதிராக உள்ள சுக்கிரனின் வாயு மண்டல ஓட்டம் இராப் பொழுது வேகத்தை விட மிக மிக அதிகமாகும் !

பூமியின் இரட்டை எனப்படும் சுக்கிரன் பெரு வரட்சி நரகம்

வெள்ளிக் கோள் ஒரு வெப்பக்கனல் (சராசரி உஷ்ணம் : 450 C / -30 C) கோளம் !  கடும் வெப்பமே பெருவரட்சி உண்டாக்கியது.  இதற்கும் மிஞ்சி வரண்டு போன கோளம் வேறு எதுவும் சூரிய குடும்பத்தில் இருப்பதாகத் தெரியவில்லை !  இரண்டு மைல் ஆழக்கடல் கொண்ட பூமிக்குச் சுக்கிரன் சகோதரக் கோளுமில்லை !  அதன் இரட்டைப் பிறவியுமில்லை !  வெள்ளிக் கோளின் விட்டம் பூமியின் விட்டத்துக்கு 95% !  வெள்ளியின் நிறை பூமியைப் போல் 81% !  சுக்கிரனில் சூழ்வெளி வாயு அழுத்தம் புவியைப் போல் 93 மடங்கு மிகையானது. அதன் அசுர வாயு மண்டலம் மூவடுக்கு நிலையில் 30 மைல் முதல் 55 மைல் வரை வியாபித்துள்ளது.  பூமியில் 5 மைல் உயரத்துக்கு மேல் வாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவு.  சுக்கிரனின் உட்கரு மண்டலம் பூமியைப் போல் அமைப்பும் தீவிரக் கொந்தளிப்பும் கொண்டது !  சூரியனின் அகக் கோளான பூமியில் பிரபஞ்சம் தவழும் பருவத்தில் ஆழ்கடல் வெள்ளம் பெருகியது போன்றும், உயிரினம் வளர்ந்தது போன்றும் வெள்ளிக் கோளிலும் தோன்றி யிருக்கலாம் அல்லவா ?

ஆரம்பகால யுகங்களில் இரண்டு கோள்களிலும் அவ்விதம் பேரளவு நீர்மயமும், கார்பன் டையாக்ஸைடும் (C02 – 65% Nitrogen – 3%) ஒரே சமயத்தில் உண்டாகி இருக்கலாம்.  ஆனால் பூமியில் இப்போது கார்பன் டையாஸைடு பெரும்பாலும் அடக்கமாகிக் கடலுக்குள்ளும், பனிப்பாறைக் குள்ளும், பதுங்கிக் கிடக்கிறது.  சிறிதளவு C02 சூழ்வெளி மண்டலத்தில் பரவி கிரீன்ஹவுஸ் விளைவை உண்டாக்கி வருகிறது.  அதனால் பூமியில் மித உஷ்ணம் நிலையாகி மனிதர் உயிர்வாழ முடிகிறது.  முரணாக வெள்ளிக் கோளில் பூமியைப் போல் 250,000 மடங்கு C02 சுதந்திரமாகப் பேரளவு சேர்ந்து சூழ்வெளியில் தடித்த வாயுக் குடையாக நீடித்து வருகிறது !  அதனால் கிரீன்ஹவுஸ் விளைவு பன்மடங்கு மிகையாகிச் சூரியனின் வெப்பம் மென்மேலும் சேமிப்பாகி வெள்ளிக் கோள் மாபெரும் “வெப்பக் கோளாக” மாறி விட்டது !  மேலும் பூமியில் காணப்படும் பேரளவு நைடிரஜன் வாயுவும், ஆக்ஸிஜென் வாயுவும் சுக்கிரனில் இல்லை.  ஒரு யுகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில் அநேக எரிமலைகள் கிளம்பி வெப்பக் குழம்புடன் உட்தளப் பாறைகளும் கற்களும் வீசி எறியப்பட்டு பேரளவு ஸல்·பர் டையாக்ஸடு வாயு பெருகிப் போனது.  அந்த வாயு மேற்தள நீர்மையுடன் கலத்து அங்கிங்கெனாதபடி வெள்ளித் தளமெங்கும் கந்தகாமிலத்தை நிரப்பி நரகலோகமாக்கி விட்டது !

சுக்கிரன் தன்னைத் தானே மிக மெதுவாகச் (வெள்ளி நாள் = 243 பூமி நாட்கள்) சுற்றியும், சற்று வேகமாகச் (வெள்ளி ஆண்டு = 224 பூமி நாட்கள் ) சூரியனைச் சுற்றியும் வருகிறது.  வெள்ளியின் சுயச்சுற்று மிக மெதுவாகச் செல்வதால் சூரிய வெப்பம் சூடேற்றி கிரீன்ஹவுஸ் விளைவில் சுக்கிரனில் பேரளவு வெப்பம் சேமிப்பாகிறது !  மேலும் சுக்கிரனில் நீர்மயம் வெறுமையானதற்குக் காந்த மண்டலம் இல்லாமல் போனதும் ஒரு காரணம் !  பூமி தன்னைத் தானே 24 மணி நேரத்தில் ஒருதரம் சுற்றுவதால் அதன் காந்த யந்திரம் தீவிரமாக இயங்குகிறது !

முரணாக சுக்கிரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு 243 பூமி நாட்கள் பிடிக்கின்றன.  அதாவது அதன் காந்த யந்திர சக்தி ஏறக்குறைய இல்லை என்றே சொல்லாம் !  அதாவது காந்த யந்திர சக்தி இல்லாமையால் அதன் அயனிக் கோளம் (Ionosphere) மிகப் பலவீனமாக உள்ளது !  அதற்கும் உயர்ந்த மேற்தளக் கோளம் பரிதிப் புயலால் தாக்கப் படுகிறது !

சுக்கிரனைப் பற்றி முன்பு அறிந்த தளவியல் விளக்கங்கள்

சுக்கிரனின் தள அழுத்தம் 100 பூவழுத்தம் [Earth atmosphere] என்றும், தள உஷ்ணம் 462 டிகிரி C என்றும் வெனரா-6 இன் தளச்சிமிழ் முதலில் பூமிக்கு அனுப்பியது. [1 பூவழுத்தம் =14.7 psi. வெள்ளியின் தள அழுத்தம் 100×14.7= சுமார் 1500 psi]. வாயு மண்டலத்தைச் சோதித்ததில் கரியின் ஆக்ஸைடு [Carbon dioxide] 97%, நைட்ரஜன் 2%, மற்ற முடவாயுக்கள் [Inert Gases] 1%, பிராண வாயு 0.4%, ஆவிநீர் [Water Vapour] 0.4%. சுக்கிர மண்டலத்தில் நிலப்பகுதியைத் தவிர வேறு நீர்ப்பகுதி எதுவும் கிடையாது. உயிரினங்கள் வாழும் பூமியில் முக்கியமாக இருப்பவை, நைட்ரஜன் 78%, பிராண வாயு 21% ஆவிநீர் 2%. நீர்க்கடல் மூன்றில் இரண்டு பகுதி; நிலப்பாகம் மூன்றில் ஒரு பகுதி. ஆகவே சுக்கிர மண்டலத்தில் உயிரினம் எதுவும் உண்டாகவோ அல்லது வளரவோ எந்த வசதியும் இல்லை!  சுக்கிரன் சூரியனை ஒரு முறைச் சுற்றி வரும் காலம் 225 நாட்கள். பூமி சூரியனச் சுற்றி வரும் காலம் 365 நாட்கள். தன்னைத் தானே பூமி 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதைப் போல் வேகமாய்ச் சுற்றாது, மெதுவாகச் சுக்கிரன் தன்னைச் சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகின்றன. சுக்கிரனின் சுய சுழற்சியும் [Spin], அதன் சுழல்வீதிக் காலமும் [Orbital Periods] பூமியின் சுழல்வீதியுடன் சீரிணைப்பில் இயங்கி [Synchronized] பூமிக்கு அருகில் நகரும் போது சுக்கிரன் எப்போதும் ஒரே முகத்தைக் காட்டி வருகிறது.


சுக்கிரனை நோக்கி அனுப்பிய ஈரோப்பிய வேக விண்கப்பல்

2005 நவம்பர் 9 இல் ஈரோப்பிய விண்வெளி ஆணையகம் [European Spce Agency (ESA)] ரஷ்யன் சோயஸ் ராக்கெட்டில் அனுப்பிய வீனஸ் எக்ஸபிரஸ் (Venus Express) 153 நாட்கள் பயணம் செய்து 2006 ஏப்ரல் 9 இல் சுக்கிரனை அருகி அதைச் சுற்றி ஆய்வு செய்யத் தொடங்கியது !  விண்ணுளவி வெள்ளியைச் சுற்றிய நீள்வட்ட வீதி குறு ஆரம் : 250 கி.மீ. நெடு ஆரம் : 66,000 கி.மீ.

வீனஸ் எக்ஸ்பிரஸ்ஸின் குறிக்கோள் :

1. சுக்கிரனில் சூழ்வெளியின் வாயுக்கள், வாயு அழுத்தம், காற்றடிப்பு அறிதல்.

2. சுக்கிரனில் காற்று எப்படிச் சுற்றுகிறது ?

3. உயரத்துக்கு ஏற்ப காற்றில் உள்ள உப வாயுக்களின் அளவுகள் எப்படி மாறுகின்றன ?

4. சூழ்வெளி வாயுக்களின் அழுத்தம் தளத்தை எப்படிப் பாதிக்கிறது ?

5. சுக்கிரனில் மேற்தள வாயுக்கள் எவ்விதம் சூரியப் புயலால் பிரிவாகின்றன ?

ஈசா வேக விண்வெளிக் கப்பலின் உளவுக் கருவிகள்

வேக விண்வெளிக் கப்பலில் அமைக்கப்பட்டுள்ள உளவுக் கருவிகள் ஏழு :

1.  Mag (Magnetometer) : மாக் – சுக்கிரக் கோளின் காந்தத் தளத்தின் பலத்தை அளப்பது.

2.  Virtis (Visible & Infra-red Thermal Imaging Spectrometer) : விர்டிஸ் – புலப்படும் அல்லது உட்சிவப்பு ஒளிக்கனல் வரைப்படம் காட்டும் ஒளிக்கற்றை மானி

3.  PFS (Planetary Fourier Spectrometer) : பியெ·ப்யெஸ் – சூழ்வெளி வாயு மண்டலத்தின் உஷ்ணம், மற்றும் வாயுவில் தெரிந்த / தெரியாத நுணுருக்களைக் காணும் கருவி.

4.  Spicav / Soir (Spectrocopy for Investigation of Characteristics of the Atmosphere of Venus) : ஸ்பிக்காவ் – புறவூதா, உட்சிவப்புக் கதிர்வீச்சு படப்பிடிப்பு ஒளிக்கற்றை மானி. / Soir (Solar Occultation at Infra-red) : சாயிர் – சுக்கிரன் சூழ்வெளி முகிலை ஊடுருவி உட்சிவப்பு அலை நீளத்தில் சூரியனை ஆயும் கருவி.

5.  VMC (Wide Angle Camera) : வியெம்சி – புறவூதா, தெரியும் உட்சிவப்புப் படமெடுக்கும் விரிகோணக் காமிரா.

6.  VeRa (Venus Radio Science) : வீரா – சுக்கிரன் சூழ்வெளி வாயு மண்டல அயான் கோளத்தையும், சூழ்வெளி வாயு மண்டலத்தையும், தளப்பரப்பையும் வானலை மூலம் உளவும் வானலை ஒலியாய்வுச் சோதனைக் (Radio-Sounding Experiment) கருவி.


7.  Aspera (Analyser of Space Plasma & Energitic Atoms) : ஆஸ்பெரா – சுக்கிரன் சூழ்வெளி வாயு மண்டலத்தில் உள்ள ‘ஆற்றல் மிக்க நடுநிலை அணுக்கள்’ (Energetic Neutral Atoms), அயனிகள், எலெக்டிரான்கள் (Ions & Electrons) ஆகியவற்றை ஆய்வு செய்வது.

2009 மே மாதம் வரைதான் வீனஸ் வேக விண்கப்பல் பணிபுரியும் என்று திட்டமிடப் பட்டிருந்த போதிலும், அந்த வரையைத் தாண்டி 2012 ஆண்டிலும் தொடர்ந்து இன்னும் நீடித்து இயங்கப் போகிறது.  2010 மே 21 ஆம் தேதி ஜப்பான் அனுப்பிய ‘அகத்சுகி’ சுக்கிரன் விண்கப்பல் (Akatsuki Venus Probe) 2010 டிசம்பரில் வெள்ளிக் கோளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப் பட்டது.   ஆனால் அது  சுக்கிரன் ஈர்ப்பு வலைக்குள் இறங்க முடியவில்லை.


[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Sky & Telescope, Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Venus Turns Itself Inside out ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
13 (a)  The Interaction of the Solar Wind with Venua By : C. T. Russell and O. Vaisberg (1983)
14 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40205251&format=html (Venus Article -1)
15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803272&format=html (Venus Article -2)
16 BBC News – Saturn Moon Titan May Have Hidden Ocean By : Helen Briggs (Mar 24, 2008)
17. European Space Agency (ESA) Science & Technology – Evidence for a Subsurface Ocean on Titan (25 March 2008)
18 Hubble Finds First Organic Molecule on Extrasolar Planet (Heic-0807) (Mar 19, 2008)
19 ESA – European Science & Technology -Venus Express Shows off New Findings at Major Conference (June 22, 2010)
20 Super-rotation on Venus : Driven by Waves Generated By Dissipation of the Transterminator Flow By : Hector Javier Durand-Manterola (May 19, 2010)
21 Physics.Org. com – Super-rotation of Venus Atmosphere (May 31, 2010)
22. Daily Galaxy : http://www.dailygalaxy.com/my_weblog/2012/06/image-of-the-day-nasas-solar-observatory-tracks-the-transit-of-venus.html?
23.  ESA  Venus Express Unearths New Clues to the Planets Geological History  (May 22, 2012)
24. Image of the Day: NASA’s Solar Observatory Tracks Yesterday’s Transit of Venus  (June 7th, 2012)
25 http://www.esa.int/esaMI/Venus_Express/SEMBD3808BE_0.html (Venus Express Facts)  (June 8, 2012)
26. ESA Report :  http://www.esa.int/esaMI/Venus_Express/SEM2535XX2H_2.html (June 6, 2012)

******************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) [June 9, 2012]

2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்

(கட்டுரை : 6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நிலவைச் சுற்றும் சந்திரயான்
உளவிச் சென்று
நாசா வோடு வடதுருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
ஆராயப் போகுது
பாரதமும் நாசாவும் ஒன்றாக !
சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாவது சந்திராயன்
மூன்றாண்டில் சென்று இறக்கும்
வாகனம், தளவுளவி ! அடுத்து
பாரத விண்வெளி விமானிகள் இயக்கும்
சீரான விண்கப்பல்
தாரணியைச் சுற்றி வரும் !
செவ்வாய்க் கோள் செல்ல
சந்திரனில் சாவடி அமைக்கும்
திட்ட முள்ளது ! ஆனால்
ஏவுகணைச் சோதனையில்
தோல்வி
ஏற்பட்டுள்ளது !
தாமத மாகும் அடுத்து நிலவுத்
தளவுளவிப் பயணம் !

+++++++++++

சிக்கலான GSLV  இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே.   இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது.  அந்த முயற்சியில் தற்போது தோல்வி ஏற்பட்டுள்ளது.

அஜய் லேலி (Space Expert, Institute of  Defense & Security Analysis, New Delhi)

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

Fig 1G Indian Rockets


“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

“இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனைகளில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.

சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.    ஆணைச் சிமிழ்  தளவுளவி இறக்கியையும்,  வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.   இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இன்னும் முழுமையாய் கிடைக்க வில்லை.    அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.    இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.  தாமதமாகும்.

சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !

2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை

2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !   அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பி யுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதி யாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !


ஒன்பது மாதங்களாய்ச் சந்திரயான்-1 நிறைவேற்றிய சாதனைகள்

அக்டோபர் 28 2008 முதல் ஆகஸ்டு 2009 வரைச் சந்தரயான்-1 நிலவை 3000 மேற்பட்ட சுற்றுக்கள் சுற்றி விட்டது.  மேலும் சந்திரனுக்கு அருகே தணிவாக 60 மைல் (100 கி.மீ.) வட்ட வீதி உயரத்தில் பறந்து நிலவில் 70,000 படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலவின் குழிகளையும் மலைகளையும் வியப்புறும் வண்ணம் படமெடுத்து விபரங்களைக் காட்டியுள்ளது.  நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாய் மறைந்துள்ள குழிகளின் படங்களை எடுத்துள்ளது. அத்துடன் தளப் பரப்புகளை உளவி  இரசாயன மற்றும் தாதுக்கள் இருக்கும் தகவலைக் கொடுத்துள்ளது.  மே மாதம் 19, 2009 தேதிதான் சந்திரயான்-1 விண்கப்பலின் உயரம் 60 மைலிலிருந்து 120 மைல் வட்ட வீதிக்குத் (100 கி.மீ –> 200 கி.மீ) தள்ளப் பட்டது.  நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றி 2009 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஏவப் பட்டது. ஏப்ரல் 26, 2009 இல் சந்திரயான்-1 விண்மீனை ஒப்புநோக்கித் தன் இருப்பிடத்தைக் காட்டும் “தாரகை நோக்கிக்” (Star Sensor) கருவிப் பழுதாகி இன்னல் விளைவித்தது.  இந்திய நிபுணர் துணைக்கோள் நேர்மைப்பாடுக் கருவியையும் ஏரியல் கம்பியையும் (Sensors of Gyroscopes & Antenna) பயன்படுத்திச் சந்திரயான் இருப்பிடத்தை அறிந்து கொண்டார்.  அந்த ஒரு பழுதைத் தவிர மற்ற கருவிகள் யாவும் இதுவரைச் செம்மையாக இயங்கி வந்துள்ளன.

பனிப்படிவு இரட்டை நிலைநோக்குச் சோதனை (Bi-Static Experiment) புரிய இரண்டு விண்ணு ளவிகள் தேவைப்படும்.  இரண்டு விண்ணுளவிகளும் நெருங்கிப் பறந்து வட்ட வீதிகளில் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.  ஆகஸ்டு 20, 2009 ஆம் தேதி சந்திரயானும் நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றியும் (Lunar Reconnaissance Orbiter -LRO) 20 கிலோ மீடர் (12 மைல்) தூரத்தில் பறந்து செல்லக் கட்டுப்பாடு செய்யப்பட்டு நிலவின் துருவப் பகுதியில் எர்லாஞ்சர் குழியின் பனிப் படிவைக் கண்வைத்தன.  அவற்றின் இரு உளவுக் கருவிகளும் (Mini Radio Frequency Instrument -Mini-RF) பனிப்படிவு இருப்பைக் கண்டு தமது ரேடார்க் (Synthetic Aperture Radars -SAR) கதிர்க் கற்றைகளை அனுப்பி அவற்றின் எதிரொலிப்பை உறிஞ்சின.  தெறித்த சமிக்கைகளை உள்வாங்கிப் பூமியில் உள்ள கட்டுப்பாடு அரங்குகளுக்கு ஆராய விண்ணுளவிகள் அனுப்பி வைத்தன.  அந்த பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும் என்று அறியப்படுகின்றது.

விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது.  நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது.  பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது.  எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது.  இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும்.

அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits :

The Hindu, ISRO & other Websites

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]

1A Stars & Planets By : Duncan John [2006]

1B. Astronomy Facts on File Dictionary (1986)

2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad

3. Indian Space Program By: Subhajit Ghosh

4  Chennai Online News Service About Insat

4B Orbiting Satellite [March 14, 2007]

5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]

6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]

7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]

8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]

9. Indian Space Program By: Wikipedia

10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]

11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]

12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp

13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html

14 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810231&format=html (இந்தியாவின் முதல் துணைக்கோள் சந்திரனை நோக்கிச் செல்கிறது)

15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

17. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

18. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

19 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

20.  https://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]

21.  https://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

22.  Space Expolaration Chembers Encyclopedic Guides (1992

23.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]

24.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

25.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

26  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

27. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

28 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

29 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

30 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

31 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

32 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

33. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

34 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO–NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

35.  http://en.wikipedia.org/wiki/Category:Indian_space_program  (May 16, 2012)

36.  http://www.time.com/time/printout/0,8816,2040085,00.html (December 29, 2010)

37  http://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation

38.  http://www.isro.org/gslv-d3/gslv-d3.aspx  (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)

39.  Asia Times – India’s Space Program Takes a Hit By : Peter Brown (May 1, 2012)

40.  Space Travel : New Moon for India  By : Morris Jones, Sydney Australia (SPX)  )May 28, 2012)

41  http://www.bharat-rakshak.com/MONITOR/Space%20Essay/entry3.htm  (Indian Space Program -2020)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (June 2, 2012)

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.

(கட்டுரை : 80)

(Newfound Exoplanet may turn to dust)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

உப்பி விரியும் பிரபஞ்சத்தில்
புதிய பூமியைத் தேடுது
கெப்ளர் விண்ணோக்கி !
நுண்ணோக்கி ஒளிக்கருவி
விண்மீன் ஒளிமுன்னே
அண்டக் கோள் ஒளிநகர்ச்சி
பதிவாக்கிப்
புதிய கோள் கண்டுபிடிக்கும் !
விண்மீன் பரிதி போல்
தன்னொளி வீசும்
ஒளிமந்தை மீன்களைச் சுற்றும்
உலகங்கள் கோடி !
விண்வெளியில்
இன்றுவரை அண்டக்கோள்
எழுநூறு கண்டாலும்
மித வெப்ப  முடைய
மீறாக் குளிருடைய
நீர்க்கோள் ஒன்றை நிபுணர்
ஆராய வில்லை !
உயிர்வாழ்வுத் தகுதி அரங்கில்
அண்டக் கோள்கள்
கண்ணுக்குத் தெரியாமல் நூதனக்
கருவிகள் கண்டு பிடிக்கக்
காத்துக் கிடக்கும்
நூற்றுக் கணக்கில் !

+++++++++++

 

++++++++++++++++

“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு.   அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது.   அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை.   கோளிலிருந்து வருவது தூசியே.   லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது.   இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.   ஒன்று தூசி முகில் அண்டக் கோளில் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம்.    அல்லது கடும் சூரிய  வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்.

சௌல் ராப்பபோர்ட்  (Saul Rappaport,  பௌதிகப் பேராசிரியர், MIT)

fig-1c-kepler-telescope-helio-centric-orbit

“புதிய பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

இந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று.  அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது.   இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிகையால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய்ச் சிறுத்து எதிர்காலத்தில் ஒன்றும் இல்லாமல் காலியாகப் போகும் என்று தெரிய வருகிறது.

டானியல்   ஃபாபிரிக்கி  (Daniel Fabrycky,  Kepler Observatory Science Team)

“நமது பால்வீதி காலக்ஸி விளிம்பில் நாம் எல்லை அறியாத வேலிகளைக் கெப்ளர் விண்ணோக்கித் தள்ளி வைக்கும் ! கெப்ளர் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் மனிதன் தன்னைப் பற்றி அறிந்த அடிப்படைக் கருத்துக்களை முற்றிலும் மாற்றிவிடலாம்.”

ஜான் மோர்ஸ் (Jon Morse, Director NASA’s Astrophysics Division) (Feb 19 2009)

fig-1a-kepler-space-view-mission

“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

“இந்த இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள் அமைப்பாடு மிக்கக் கவர்ச்சி ஊட்டுவது !  இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மகத்தான காட்சி !”

லாரென்ஸ் டாயில் (அகிலவெளி விண்மீன் உயிரியல் ஆய்வக விஞ்ஞானி)  

“கெப்ளர் விண்ணோக்கியின் உன்னத துல்லிய கணிப்பு இது.  இதில் மெய்யான புல்லரிப்பு ஊட்டுவது எங்களுக்கு : இரட்டைப் பரிதிகளை ஓர் அண்டக்கோள் சுற்றி வருவது !”

அலன் பாஸ் (கார்னகி விஞ்ஞானக் கழகம், வாஷிங்டன். டி.சி.)

“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

“பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா ?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

விண்வெளியில் ஆவியாகித் தூசியாகும் அண்டக்கோள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின்  MIT  (Massachusetts Institute of Technology) பொறிநுணுக்க ஆய்வாளர்கள், மற்றும் நாசா விண்வெளி நிபுணர்கள் 1500 ஒளியாண்டு தூரத்தில் பரிதி ஒன்றை மிக்க நெருக்கத்தில் சுற்றி ஆவியாகித் தூசியாகும் ஓர் அண்டக்கோளைச் சமீபத்தில் (2012 மே மாதம் 20) கண்டிருப்பதாக வானியல்  பௌதிக இதழில் (Astrophysical Journal) அறிவித்துள்ளார்கள்.    தீக்கொப்புளம் உண்டாக்கும் அந்தக் கடும் வெப்பத்தில் சிதையும் அந்தக் கோள் தன் பரிதியை 15 மணி நேரத்துக்கு ஒருமுறை மிக்க அருகில் சுற்றி வருவதாகக் கணித்துள்ளார்கள்.   தூசி வால் நீண்ட அந்தக் கோள், ஒரு வால்மீன் போல் காணப் படுகிறது.   ஆனால் அந்த நீண்ட தூசி வால் வெளியாக்கும் தூள்கள் அண்டக்கோளின் சிதைவைக் காட்டுகின்றன.    அச்சிறிய கோள் நமது புதக் கோளை விடச் சிறியது.  புதக்கோள் போல அந்த அண்டக் கோளும் தன் சூரியனை மிக நெருக்கத்தில் வெகு வேகமாகச் சுற்றி வருகிறது.  இத்தனை நெருக்கத்தில், இத்தனை வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஓர் அண்டகோள் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை.    அத்தனை நெருக்கத்தில் சுற்றும் அந்தக் கோளின் தள வெப்ப உஷ்ணம் சுமார் 3600 டிகிரி பாரன்ஹீட் என்று கணிக்கப் பட்டுள்ளது.   அந்தக் கடும் வெப்பத்தில் கோளின் தளம் பேரளவில் சூடாகி, தள மண் உலோகங்கள் எரிந்து ஆவியாகின்றன.   ஆவியான உலோகங்கள் குளிர்ந்து தூசியாக உலர்ந்து வெளியேறுகின்றன.   இறுதியில்  கோளின் பேரளவு நிறை எரிந்து சாம்பலாகி நீங்கி, நிறை குன்றி ஈர்ப்பு விசை தளர்ந்து தன் சூரியன் தீயில் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.   அண்டக்கோள் சுற்றும் அந்த விண்மீன் : KIC – 12557548 என்று குறிப்பிடப் படுகிறது.   அக்கோள் முற்றிலும் சிதைய 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறார்கள்.

fig-6-habitable-zone-to-hunt-earth-like-planets

“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு.   அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது.   அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை.   கோளிலிருந்து வரும் தூசியே.   லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது.   இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.   ஒன்று தூசி முகில் அண்டக் கோள் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம்.    அல்லது கடும் சூரிய  வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்” என்று சௌல் ராப்பபோர்ட்  (Saul Rappaport,  பௌதிகப் பேராசிரியர், MIT) கூறுகிறார்.

இந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று.   இது அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது.   இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிகையால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய் எதிர் காலத்தில் ஒன்றும் இல்லாமல் போகும் என்று தெரிய வருகிறது  என்று  கெப்ளர் விண்ணோக்கி விஞ்ஞானக் குழுவினரில் ஒருவரான டானியல்   ஃபாபிரிக்கி  (Daniel Fabrycky,  Kepler Observatory Science Team) விளக்குகிறார்.

அண்டக்கோள் ஆய்வாளர் பரிதியைத் தூசியோடு சுற்றும் கோளின் ஒரு கணனி   மாடலைத் தயார் செய்து பார்த்த போது, கோளைச் சுற்றியுள்ள தூசிமய வெளி திரட்சியாகவும், வால் புறத்தில் தூசிமயம் மெலிந்ததாகவும் அமையக் கண்டனர்.  அந்தத் தூசிமயத் திரட்சியில் பட்ட ஒளி, கெப்ளர் விண்ணோக்கி கண்ட வெளிச்சத்தைப் போல் இருந்ததைப் பார்த்து வியந்தனர்.

வானியல் விஞ்ஞானிகள் கெப்ளர் விண்ணோக்கியைப் பயன்படுத்தி  விண்வெளி ஒளிமந்தைகளில் இயங்கி வரும் பரிதி மண்டலக் கோள்களைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள்.    வெளிமண்டலச் சூரியன்களை நோக்கும் போது ஏற்படும் ஒளிமங்கலும், ஒளி மீட்சியும் அதனைச் சுற்றும் புறக்கோளின் நகர்ச்சியைக் காட்டும்.   தற்போது கெப்ளர் விண்ணோக்கி சுமார் 160,000 பரிதிகளை நுட்பமாய்ச் சோதித்து வருகிறது.   ஒளிமங்கும் நேரத்திலிருந்து ஒளி பொங்கும் நேரம் கோள் பரிதியைச் சுற்றும் பாதி நேரத்தைக் குறிப்பிடுகிறது.    ஒளி மிகும் நேரத்தைக் கணக்கிட்டும் கோள் தன் பரிதியைச் சுற்றும் நேரத்தைக் கணிக்கலாம்.   எரிந்து சாம்பலை வெளியாக்கும் அண்டக்கோள் தன் சூரியனை ஒருமுறைச் சுற்ற 15 மணி நேரம் பிடித்தது.

கெப்ளர் விண்ணோக்கி குறிவைக்கும் புறவெளிப் பரிதி மண்டலங்கள்

2012 மே மாதம் 21 வரை கெப்ளர் 767 புறவெளிக் கோள்கள் அல்லது புறப் பரிதிக் கோள்கள் (Exoplanets or Extrasolar Planets)  நோக்கி விபரம் அறிவித்துள்ளது.   ஏறக்குறைய 50% சூரியன்கள் தம்மைச் சுற்றும் ஏதாவது ஓர் அண்டக் கோளைக் கொண்டுள்ளன.   2012 ஆண்டு ஆய்வுப்படி நமது பால்வீதி மந்தையில் உள்ள 100 பில்லியன் பரிதிகளில் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு கோள்களைப் பிடித்துக் கொண்டுள்ளன.   அவற்றில் பெரும்பான்மையானவை நமது பூதக்கோள் வியாழன் அல்லது நெப்டியூன் போன்றவை என்பது தெரிகிறது.    நமது பூமியை ஒத்த அளவில் இருப்பவை ஒரு சிறிது அளவே.   அவற்றில் வெப்பம், குளிர் மிதமாக இருந்து பூமிபோல் உயிரினம் வாழத் தகுதி உள்ள அரங்கமா (Habitable  zone) என்று அறிதல் அவசியமாகும்.

இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஓர் அண்டக்கோள் கண்டுபிடிப்பு

2011 செப்டம்பர் 15 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி வானியல் குழுவினர் முதன் முறையாக இரு பரிதிகளைச் சுற்றிவரும் ஒரு கோளைக் கண்டிருப்பதை மெய்ப்பித்து விட்டதாக அறிவித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி நோக்கிய அந்த விந்தைக் கோளின் பெயர் : கெப்ளர் -16பி (Kepler -16b).  அந்தப் புதிய கோள் நமது பூமியிலிருந்து 220 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.  பெரிய பரிதி ஒன்றை மையமாய் வைத்துச் சுற்றும் ஒரு சிறிய பரிதியின் ஏற்பாடு இது.  இவை “இரண்டை விண்மீன்கள்” (Binary Stars) வகுப்பு வகையைச் சேர்ந்தவை.  இந்த இரட்டை விண்மீன் களைச் சுற்றிவரும் கோளுக்கு “இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள்” (Circumbinary Planet) என்று பெயர் அளிக்கப் பட்டுள்ளது,  அதாவது கெப்ளர் -16பி இன் அந்திவானில் மாலைப் பொழுது மங்கி மறையும் போது இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்தமிக்கும் விந்தை நிகழும் !

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி விண்வெளியில் 2009 இல் ஏவப் பட்டது.  அதன் முக்கியக் குறிக்கோள் நமது பால்வீதி ஒளிமந்தையில் ஒளிந்து கொண்டுள்ள பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பது.  கெப்ளர் -16பி சுற்றிவரும் பரிதிகளில் பெரியது நமது சூரியன் போல் ஒப்பளவில் 69% பரிமாணம் உடையது.  சிறிய பரிதி நமது சூரியன் போல் ஒப்பளவில் 20% பரிமாணம் உடையது.  கெப்ளர் -16பி சுற்றுகோளின் தள உஷ்ணம் : (-73C முதல் -101C வரை) (-100F முதல் -150F வரை).  இரட்டைப் பரிதிகளை ஒருமுறை சுற்ற கோளுக்கு 229 புவிநாட்கள் (Earth days) எடுப்பதைக் கெப்ளர் கணித்தது.  மையப் பரிதியிலிருந்து சுற்றும் தொலைத் தூரம் சுமார் 65 மில்லியன் மைல் (104 மில்லியன் கி.மீடர்).  அந்தத் தூரம் நமது பரிதியை வெள்ளிக் கோள் (Venus) சுற்றும் தூரத்துக்கு நிகரானது.

கெப்ளர் விண்ணோக்கிச் சுற்றுக்கோளை எப்படிக் கண்டுபிடித்தது ?

விண்வெளியில் மின்னும் ஒரு பரிதிக்கும் கெப்ளர் விண்ணோக்கிக்கும் இடையில் ஓர் அண்டக்கோள் குறுக்கிடும் போது சீராக ஒளி மங்கியும் பிறகு பொங்கியும் திரும்பத் திரும்ப வருவதால் பரிதிக்கு அருகில் கோளின் நகர்ச்சி நிச்சய மாகிறது.  இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு பரிதி அடுத்த பரிதியைக் குறுக்கிடும் போதும் ஒளி மங்குவதும் மீள்வதும் காணப்பட்டது.  மாற்றி மாற்றி இரண்டு பரிதிகளின் ஒளியும் ஓர் ஒழுங்குக் கால நேரத்தில் மங்கலானதை நாசா விஞ்ஞானிகள் கண்டனர்.  இரட்டைப் பரிதிகளின் சுற்றையும், குறுக்கிடும் கோளின் இருப்பையும் விஞ்ஞானிகள் நிரூபித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி இந்தப் புதிய கண்டுபிடிப்பை நோக்கியது மட்டும் இல்லாமல் பரிதிகளின் நிறை, ஆரம், பாதை, சுற்றும் காலம் ஆகியவற்றையும், கோளின் நிறை, ஆரம், சுற்றுக் காலத்தையும் துல்லியமாகக் கணித்தது.  மையப் பரிதிச் சுற்றும் சிறிய பரிதி “செங்குள்ளி” (Red Dwarf) இனத்தைச் சேர்ந்தது. விண்மீன்  கூட்டத்தில் செங்குள்ளி தளர்ச்சியுற்று மங்கிப் போன ஒரு சிறு விண்மீன் !

புதிய பூமிகளில் உயிரின விருத்திக்கு உள்ள தகுதிகளைத் தேடல்

2009 மார்ச் 7 ஆம் தேதி விண்வெளியில் நமது பால்வீதிப் பரிதியைச் சுற்றி வர அனுப்பிய கெப்ளர் விண்ணோக்கியின் கூரிய ஒளிக்கண் குறைந்தது 500 புதிய பூமிகளைக் கண்டுபிடித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது ! அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது !  நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே.  இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது.  விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கி, ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது.  2012 ஆண்டு மே மாதம் 21 வரை  766 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !   விந்தையாக இரட்டைச் சூரியனைச் சுற்றும் ஓர் அண்டக்கோளை கெப்ளர் விண்ணோக்கி கண்டுள்ளது.

2015 முதல் 2025 ஆண்டு வரை மூன்று முற்போக்கு விண்ணோக்கிகளை நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. முதலாவது “விண்வெளி நுண்ணோக்கிக் குறிப்பணி” [Space Interferometry Mission (SIM)], இரண்டாவது “பூமியை ஒத்த கோள் நோக்கி” [Terrestrial Planet Finder (TPF)], மூன்றாவது “உயிரினம் நோக்கி” [Life Finder (LF)]. “சிம்” விண்ணோக்கி பல்லடுக்குத் தொலைநோக்கிகளைக் கொண்டு ஒளிமூலம் விண்மீன்களைத் துருவிப் (Multiple Telescopes to Map Stars) புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும். “டிபியெஃப்” விண்ணோக்கி புதிய பூமியைக் கண்டுபிடித்து உயிரினம் வாழத் தகுதி உள்ளதா வென்று இரட்டைப் பணிகள் புரியும். இறுதியாக 2025 (?) ஆண்டில் ஏவப்படும் “உயிரினம் தேடி” விண்ணுளவி கண்டுபிடித்த ஒரு புதிய பூமியில் நிகழும் உயிரியல் இயக்கங்களை உளவி அறிந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

++++++++++++

தகவல் :

Picture Credit : NASA Space Center

1.  Astronomy Today Chaisson & McMillan (1999)

2.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)

3.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)

4.  Lightnet :  Planet Orbiting Two Suns ?  (November 5, 1999)

5.  Space Daily : Latest Exoplanet Haul Includes Super Earth At Habitat Zone Edge, Geneva Austria (September 13, 2011)

6.  UCSB Scientist Contributes to First Discovery of a Planet orbiting Two Suns (University of California Santa Barbara) (September 16, 2011)

7.  BBC News : NASA’s Kepler Telescope Finds Planet Orbiting Two Suns (September 15, 2011)

8  Los Angeles Times :  Scientists Find Planet Orbiting Two Suns Like in “Star Wars” (September 16, 2011)
9.  Wikipedia :  Extrasolar planets (September 19, 2011)

10.  Space Daily :  Astronomers Confirm First Planet orbiting Two Suns (September 19, 2011)

11  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Kepler-16b Kepler-16b Planet (September 19, 2011)

12.  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Circumbinary_planet (September 19, 2011)

13.  Wikipedia :  http://en.wikipedia.org/wiki/Extrasolar_planet  (May 22, 2012)

14.  Space Daily :  Newfound Exoplanet may turn to dust By Jennifer Chu (MIT News)  (May 20, 2012)

15.   Wikipedia :  http://en.wikipedia.org/wiki/List_of_multiplanetary_systems (May 24, 2012)

++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  (May 26, 2012)
https://jayabarathan.wordpress.com/

2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

(NASA Trains Astronauts to Land on Asteroid before 2025)

(கட்டுரை -3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நிலவினில் தடம் வைத்தார்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆராயத்
தளவுளவி சிலவற்றை
நாசாவும்
ஈசாவும் இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
விண்வெளியில் வால்மீன் ஒன்றை
விரட்டிச் சென்று
தூசியைப் பிடித்துக்
காசினிக்குக் கொண்டு வந்தார் !
வக்கிரக் கோள் மாதிரியை
வையத்தில் இறக்கிடும்
ஜப்பான் ‘கழுகு’ !
முரண்கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்டது
நாசாவின்
“புலர்ச்சி” விண்ணுளவி
சூரிய மண்டலத் தோற்றம்
ஆராய் வதற்கு !
இரு விண்வெளி விமானிகள்
2025 ஆண்டுக்குள்
முரண்கோள் ஒன்றில்
தடம் வைப்பார்
தளவுளவி இறக்கி
உளவு செய்யப் பயிற்சி
அளிக்கிறது நாசா,
வையத்தைத் தாக்க வரும்
வக்கிரக் கோளைத்
திக்கு மாற்றித்
திசை திருப்ப !

+++++++++++++++++

 

 

தற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.

மேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி)  (Major Tim Peake,  ESA, European Space Agency)

முரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன.   ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம்.   சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று  நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது.

போதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க  முடியும்.

முரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன்.   இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.

மேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)

ஒளிமந்தையில் (Galaxy)  வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே !

ஸ்டீஃபன் ஹாக்கிங்.

“(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது.  புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”

ஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்

“முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”

கரோல் ரேமண்டு (Dy Principal Investigator, NASA Dawn Mission)

 

 

“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு (Asteroid) அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

“பூமியை நெருங்கும் முரண்கோள் ஒன்றில் மனிதர் இறங்கிப் பாதையைத் திருப்பி விடும் நுணுக்க வெடி முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அது விண்வெளி வரலாற்றில் ஒரு புதுச் சாதனை மைல் கல்லை நாட்டி வைக்கும்.”

ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (American Astro-physicist John Grunsfeld)

“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா முரண்கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

சார்லஸ் போல்டன் (NASA Administrator)


“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.  அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

“வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்:களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்க நாசா விண்வெளி விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

பூமிக்கு அப்பால் போகும் முரண் கோள் ஒன்றில் நாசாவின் தளவுளவி தடம் வைக்கப் போகிறது.   1969 இல் சந்திர மண்டலத்துக்குப் பயணம் செய்து பல அமெரிக்க விண்வெளி விமானிகள் தடம் வைத்து ஆய்வு செய்து மீண்டார்கள்.   இது பெரிய விண்வெளித் தேடல் பயணம்.  2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகள் முரண் கோளில் முதமுதல் இறங்குவார் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்துள்ளார்.   நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்யத் திட்டமிடும் முரண்கோள்  மணிக்கு 50,000 மைல் வேகத்தில் (மணிக்கு 80,000 கி.மீ.) பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் முரண்கோளில் ஒன்று.  அதன் தூரம் சுமார் 3 மில்லியன் மைல்.   விண்வெளி விமானிகள் பயணம் செய்து முரண்கோளில் தடம் வைத்து ஆராய்ந்து வர ஓராண்டு காலம் எடுக்கும்.   1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் 240,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றும் நிலவில் கால் வைத்து மீள  எட்டு நாட்கள் எடுத்தன.    முரண்கோள் மனித மீள் பயணத்தின் விபரங்களை ஈசாவைச் சேர்ந்த மேஜர் டிமதி பீக், மே மாதம் 16, 2012 இல் அறிவிப்பு செய்தார்.     அந்தப் பயிற்சியில் டிமதி பீக், மற்றும் அவரது ஐந்து சகாக்களும்  முரண்கோளின் மெலிந்த ஈர்ப்பாற்றலில் அனுபவம் பெற அட்லாண்டிக் கடலடியில் 65 அடிக்குக் கீழ் 12 நாட்கள் உண்டு, உலவி, உறங்கி வரவேண்டும்.   அதற்கு அவர்கள் வசிக்க 43 அடி நீளம், 20 அடி அகல நெருக்கடிச் சிமிழ் (Capsule) ஒன்றில் பொழுதைக் கடக்க வேண்டும்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள் :-

1.  முரண்கோளின் தளவுளவியில் இறங்கித் தடம் வைத்து ஆய்வுகள் செய்யும் விண்வெளி விமானங்கள் இருவர்.

2.  முரண்கோள் மனித விண்கப்பல் பயணத்தில் பங்கு கொள்வோர் இருவரா அல்லது மூவரா என்பது இப்போது தெரிய வில்லை.

3.  முரண்கோளைச் சுற்றித் தளவுளவியைக் கண்காணிக்கும்  தாய்க் கப்பலை இயக்குபவர் விண்வெளி விமானி ஒருவர்.   தாய்க் கப்பலே தளவுளவியின் தகவலைப் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வரும். (இது மாறலாம்)

4.  புவியிலிருந்து சுயத் தாக்கு விண்கப்பலை அனுப்பி எப்படி முரண்கோளைத் திசை திருப்புவது என்பதே முக்கிய குறிப்பணியாக இருக்கும்.

5.  முரண்கோளின் தளவுளவுகள் ஆய்வு செய்வதின் முக்கிய குறிக்கோள்.    பாதை தவறிப் பூமிய நெருங்கித் தாக்கப் போகும் வாய்ப்பு  இருக்குமாயின் அதை எப்படித் திசை திருப்புவது என்பது அறியப்படும்.    அதாவது பூமியிலிருந்து நெருங்கும் முரண்கோள்களின் போக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.  பாதை தவறிப் பூமியை நெருங்கும் முரண்கோளின் வேகம், திசை, ஈர்ப்பாற்றல் கணிக்கப் படும்.    அதன் பின் மனிதரற்ற ஒரு சுயநகர்ச்சி விண்கப்பல் முரண்கோளை நோக்கி அனுப்பப்படும்.  முரண்கோளை  அது    குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் மோதி திசை திருப்பும்.

பூமியின் மூலாதார நீர்வளத்தைத் தெளித்தவை முரண் கோள்களா ?

முன் யூகிப்பிலிருந்து விலகி இப்போது பூமியின் கடல் வெள்ளமும், சூழ்வெளி வாயு மண்டலமும் தீவிர எரிமலை எழுச்சிகளால் கிளம்பிய புகை மூட்டத்தில் உண்டானவை என்னும் பழைய கோட்பாடு மாறி யுள்ளது.  பிரென்ச் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஆல்பாரடே (Francis Albarede), “பரிதிக் கோள்கள் தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் கடந்து புவி பிள்ளைக் கோளாய் வளரும் பருவத்தில் அதன் ஆரம்ப உட்பொருளாய் நீர் உருவக்கப் படவில்லை,” என்று ஆலோசனை கூறுகிறார்.  ஆப்பம் சுடுவது போல் வட்டத் தட்டாய் முதலில் உருவாகிய பூமியிலே மூன்றில் இருபங்கு நீர் மயமாய் இருக்கும் வெள்ளம் புறவெளிக் கோள்கள் மூலமாகத்தான் (Extraterrestrial) தாமதமாக வந்திருக்க வேண்டும் என்றோர் புதுக் கருத்து மாறுபாடு உறுதியாகி உள்ளது.  பூமியில் உயிரினம் தோன்றும் முன்பே நீர் வெள்ளம் நிரம்பி அடித்தட்டு நகர்ச்சி இயக்கங்கள் (Plate Tectonics Movements) நிகழக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் பிரான்சிஸ் ஆல்பாரடே கூறுகிறார்.

நீரிருக்கும் இடத்தில் உயிரினம் இருந்திருக்கும் என்பதை உலக விண்வெளி ஆய்வுக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளும்.  4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே புவிக் கடலில் போதிய நீர் நிரம்பி உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைக் கடலிலும், கண்டங்களிலும் இருந்து அடித்தட்டு நகர்ச்சிக்கும் (Plate Tectonics) வழி வகுத்தது.  அகக் கோள்களை ஒப்பு நோக்கினால் புதன் கோளும், நிலவும் புவியைப் போலின்றி படு வரட்சி ஆயின.  செவ்வாய்க் கோளும் வாயுக் குடையின்றி சூரியக் கனலில் நீர் ஆவியாகிப் பாலை வனமாய் வரண்டு போனது.  வெள்ளிக் கோள் சுட்டுப் பொசுக்கும் அமிலத்தில் அக்கினிக் கோள் ஆனது.

முரண் கோள்களில் பனிநீர் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.

2010 ஆண்டில் இரண்டு ஆய்வுக் குழுவினர் தனித்தனியாக முரண்கோள்களில் நீர்ப்பனியும், ஆர்கானிக் மூலக்கூறுகளும் இருப்பதற்கு ஆதாரங்களைக் கண்டறிந்தனர். 2010 ஏப்ரலில் முதற்குழு முரண்கோள் தெமிஸில் (Asteroid # 24 Themis) பனிநீர் இருப்பதையும், 2010 அக்டோபரில் இரண்டாம் குழுவினர் முரண்கோள் சைபெலியில் (Asteroid # 65 Cybele) பனிநீர் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.

இவ்விரு புதிய கண்டுபிடிப்புகளும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலக் கோள்கள் தோன்றிய பிறகு பனிநீர் கொண்ட முரண்கோள்கள் பூமியைத் தாக்கி நீர் வெள்ளத்தை நிரப்பி உயிரினப் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் வசதி அளித்திருக்கலாம் என்னும் புதிய கோட்பாடுக்கு வழி வகுத்திருக்கிறது.

விஞ்ஞானிகள் 180 மைல் (290 கி.மீ.) விட்டமுள்ள முரண்கோள் #65 சைபிலியின் பரிதி ஒளிப் பிரதிபலிப்பை ஆராய்ந்தனர்.  சைபிலி முரண்கோள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் பூதக்கோள் வியாழனுக்கும் இடையில் பரிதியைச் சுற்றி வருகிறது.  விஞ்ஞானக் குழுவினர் இருவித ஆய்வுக் கருவிகளைப் பயன் படுத்தினார். 1.  நாசாவின் ஹவாயி மௌனா கியா உட்சிவப்பு தொலைநோக்கி (NASA’s Infrared Telescope in Hawaii) 2.. ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கி (Spitzer Telescope).  இரண்டு கருவிகளும் முரண்கோள் சைபிலியின் மேற்தள நீர்ப்பனி இருப்பின் முத்திரை அடிப்பைப் பதிவு செய்தன.  அத்தோடு சிக்கலான ஆர்கானிக் திடப் பொருட்களையும் (Complex Organic Solids) கண்டன.  அவை பெரிதான நீர்ப்பனிப் பாறைகளாக இல்லாமல் மிக மெல்லிய (Less than 1 micron thick) பனித்தட்டு களாகவும், நிலையற்றதாகவும் இருந்தன..  பனிநீர்ப் படிவுகள் ஒருசில ஆயிர ஆண்டுகளுக்குள்தான் படிந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானிகள் முரண்கோள்களை ஆராய்வதற்கு ஐந்து காரணங்கள்

1. பரிதி மண்டல மூலத் தோற்ற விபரங்களை முரண்கோள்கள் கூறுகின்றன.

பூதக்கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே பரிதியைச் சுற்றிவரும் முரண்கோள்கள் அகத்தே சுற்றும் விண்பாறை வெப்பக் கோள்களுக்கும், புறத்தே சுற்றும் குளிர்ச்சியான வாயுக் கோள்களுக்கும் நடுவே வலம் வருவதால் பல்வேறு வடிவங்களில் கோள்கள் உருவான தெப்படி என்பதற்கு ஆதாரங்கள் அளிக்கலாம்.  நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி ஆராயப் போகும் முரண்கோள்கள் வெஸ்டா, செரிஸ் இரண்டும் வெவ்வேறானவை.  வெஸ்டாவில் விண்கற்கள் / முரண்கோள்கள் தாக்குதல் மிகுந்திருந்ததால் தேய்வு வெப்பம் சூடாக்கும் அதிக அளவு கதிரியக்க அலுமினியம் (Radioactive Aluminium) காணப் படுகிறது.  முரண் கோள்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல புதிர்களை விடுவிக்க முடியும்.

2. பரிதிக் கோள்கள் சிலவற்றில் உயிரினத் தோற்ற மூலத்தை அறிய முடியும்

பூமியில் உயிரற்ற ஆர்கானிக் பிண்டத்திலிருந்து உயிரனங்கள் எப்படி உதித்தன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது !  அந்த மர்மத்தைத் தீர்க்க முரண் கோள்கள் உதவலாம்.  செரிஸ் போன்ற பேரளவு நீர்ப்பனி மண்டலம் கொண்ட சில முரண் கோள்கள் உயிரின மூலத் தோற்றங்களை அறிய உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானச் செங்கற்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10 Hygiea) ஆகிய இரண்டிலும் உயிரினம் தோன்ற மூலக் காரணமான நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.”

3. பூமிக்கு அருகில் சுற்றும் முரண்கோள்களில் உலோகங்கள் தோண்டி எடுக்கலாம்.

பூமிக்கு அருகில் உள்ள வளையத்தில் சுற்றும் முரண்கோள்களில் (Asteroids in Near-Earth Belt) விலை மதிப்பில்லா உலோகங்கள் இருப்பதால், அங்கு எதிர்கால விண்வெளி விமானிகள் பயணம் செய்து ஆராய வாய்ப்புக்கள் இருக்கின்றன.  ஆதலால் முரண்கோள்கள் சிலவற்றின் மூலக் கலவைகளை முற்றிலும் அறிவது தேவையாகிறது.

4. முரண்கோள் எப்போதாவது பூமியைத் தாக்கப் போவதாய்ப் பயமுறுத்தலாம்.     

பரிதியைச் சுற்றிவரும் சில முரண்கோள்கள் நீள்வட்டத்தில் வலம் வருவதால் சில சமயம் அவை பூமிக்கு அருகில் வர வாய்ப்புள்ளது.  அவை சில வேளை மிகவும் பூமிக்கருகில் வந்து விடும்.  2010 ஜனவரியில் முரண்கோள் 2010- AL30 பூமியை 80,000 மைலுக்குள் (130,000 கி.மீ.) நெருங்கி அபாய நிலையை அறிவித்தது.  நல்ல வேளையாக சிறிய முரண்கோள் 2010- AL30 இன் அகலம் 36 அடி (11 மீடர்) மட்டுமே.  நாசாவின் அடுத்த எச்சரிக்கை இது !  ஏப்ரல் 13, 2036 இல் இரண்டு கால் பந்துத் திடல் நீளமுள்ள முரண்கோள் அபோ·பிஸ் (Asteroid Apophis) பூமிக்கருகில் 18,300 மைல் தூரத்தில் வரப் போகிறது என்று உலகுக்கு அபாய மணி அடித்துள்ளது !  அது பூமியில் விழுந்தால் பேரளவு சேதம் உண்டாகும் என்று அஞ்சப் படுகிறது !

5. விண்வெளி விமானிகள் 2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்கி ஆராயலாம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா 2010 ஏப்ரலில் 2025 ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி விமானிகள் ஒரு முரண்கோளுக்குப் பயணம் செய்து மீளுவார் என்று அறிவித்திருக்கிறார்.  அப்போது விமானிகள் முதன்முறையாக முரண்கோளை வெடிவைத்து அதன் சுற்றுப் பாதையை மாற்ற முயல வேண்டும் என்று அமெரிக்க விண்வெளிப் பௌதிக விஞ்ஞானி ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (Astro-physicist John Grunsfeld) ஆலோசனை கூறி இருக்கிறார்.  அப்பயிற்சி பூமியைத் தாக்க வரும் எதிர்கால முரண்கோளைத் திருப்பி விடப் பிற்காலத் தேவைக்கு உதவும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.

2015 இல் நீர்ப்பனி நிரம்பிய முரண்கோள் செரிஸை நோக்கி நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி  

2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.  2015 இல் சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸில் பேரளவு உறைந்து கிடக்கும் நீர்ப்பனியின் முழு விபரங்களை நேரடியாக அறிந்து நமக்கு அறிவிக்கும்.

(தொடரும்)

************************
தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, JAXA
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)
13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt  (July 19, 2011)
21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
23 BBC News :  Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ?  (July 19, 2011)
25. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) (July 20, 2011)
26. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) ((July 25, 2011)
27. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Colonization_of_Ceres (July 29, 2011)
28. Space Daily – http://www.spacedaily.com/reports/Dawn_Views_Dark_Side_of_Vesta_999.html
(July 29, 2011)

29.  NASA Trains Astronauts to Land on an Asteroid before 2025  (May 16, 2012)

++++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (May 18, 2012) (R-1)

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.

(கட்டுரை: 79)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கல்தோன்றி மண் வளமாகிப்
புல்தோன்றிப் பூ மலர
புழுக்கள் நெளிய நீர்வளம்
எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன்
தானாக நீர் வெள்ளம்
மீன்வளம் பெருக்கிய தெப்படி ?
மீனினம் மானுடம்
ஆனதெப்படி ?
வெப்பத்தில் அழுத்த வாயுக்கள்
வெடித் தெரிந்து
நீர்த் திரவம் சேர்ந்ததா ?
சூரியக் கதிரொளி மின்னலில்
வாயுக்கள் சேர்ந்தனவா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம்
வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை
தண்ணீர் ஆனதா ?
சுவைநீர் உப்புநீர் ஆன தெப்படி ?
கடல்நீர் கொட்டிக் கிடந்தாலும்
குடிநீர் குவளை அளவு !
நீர்மயம் எப்புறம் இருப்பினும்
தூயநீர் அருந்த பூமியில்
ஓர் துளி நீரிலை !
மண்டினி ஞாலத்தில்
உண்டி உயிர் கொடுத் தாலும்
குடிநீர் இல்லையேல்
குவலயம் நரகம் !

++++++++++++

ஏபெக்ஸ் விண்ணோக்கி [APEX Space Telescope] மூலம் நிபுளாவின் முகிலில் [Rho Ophiuchi Nebula] மிகச் சிறிதளவு ஹைடிரஜன் பெராக்ஸைடு [H2O2]  முத்திரை இருப்பதைப் பார்த்து நாங்கள் மெய்யாக உணர்ச்சி வசப் பட்டோம்.   இந்த மூலக்கூறுடன்  மேலும் ஹைடிரஜன் சேரும் போது நீர் உண்டாகிறது.   விண்வெளிக் கோள்களில் நீர் சேர்ந்திட இது ஒருவகை  இயக்க முறையாகும்.

பெர் பெர்க்மன்  (வானியல் விஞ்ஞானி,  ஆன்ஸலா விண்வெளி நோக்கம், ஸ்வீடன்)

வால்மீன்களின் டியூடிரியம், ஹைடிரஜன் பின்னத்தையும் [Deuterium Hydrogen Ratio (D/H)] அடுத்து ஆர்கான் நீராவி விகிதத்தையும் [Argon Water Ratio (Ar/H2O)] விண்ணுளவி மூலம் அறிந்ததில் பூமியில் மோதிப் பொழிந்த நீர் வெள்ளம் 15% என்று கணக்கிடப் பட்டுள்ளது.  ஆதி காலத்தில் சூரிய வாயுக்கள் குளிர்ந்து உண்டான கரிக்கற்கள் (Carbonaceous Chondritic Material – Condensed from Solar Hot Gases) எரிந்து 10% நீர் வெள்ளம் பூமியில் சேர்ந்தது.

அமெரிக்கன் வானவியல் குழு (American Astronomical Society) (Nov 2001)

“3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீர்மயம் நிரம்பிய விண்கற்களும், வால்மீன்களும் பிள்ளைப் பிராயப் பூமியில் மோதி நீர் வளமாக்கின என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் !  அடர்த்தியாகப் போர்த்திய ஹைடிரஜன் வாயுப் படுகை எரிமலை ஆக்ஸைடுகளுடன் (Oxides from Earth’s Mantle) இணைந்து பேரளவு கடல் நீர் வெள்ளம் பூமியின் சுய உற்பத்தியில்தான் உண்டாகியிருக்க வேண்டும் !

ஸ்டீஃபன் அனிதெய் (Stefan Anitei -Japanese Science Editor)

“பூமியில் எப்போது உயிரங்கள் தோன்றின என்பது எங்களுக்குத் தெரியாது.  ஆனால் அவை 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உதித்திருக்கக் கூடும் என்று கருத ஆதாரம் உள்ளது.  ஏனெனில் உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற மூன்று முக்கிய மூலாதாரங்கள் அப்போதிருந்தன !  முதலாவது வெப்ப ஒளிச்சக்தி உடைய சூரியன் !  இரண்டா வது அடிப்படை இரசாயன மூலகங்கள், மூலக்கூறுகள், (ஹைடிரஜன், ஆக்ஸிஜென், நைடிரஜன், கார்பன் போன்றவை) வால்மீனிருந்து சிக்கலான ஆர்கானிக் கூட்டுகள் ! மூன்றாவது பூமியில் நீர்வளம் சேமிப்பு !  பூகோளம் தோன்றி 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரின விருத்திக்கு வேண்டிய மூலாதாரங்கள் அனைத்தும் உண்டாகி விட்டன !”

மார்க் ஹாரிஸன் பேராசியர் பூதள இரசாயனம் (UCLA Geochemistry) (2001)

“பூமியில் உயிரினம் ஆரம்பமாக வால்மீன்கள் மோதிக் கொட்டிய நீர் வெள்ளம் சிறிதளவாகத்தான் இருக்க முடியும் !  தோற்ற காலத்திலிருந்தே பூமியில் ஏராளமான நீர் வெள்ளம் உண்டாகி இருக்க  வேண்டும் !  பூமியின் விந்தையான வாயு மண்டல அமைப்பும் புதிராக இருக்கிறது ! நிலைப்பு மாறாத “உத்தம வாயுக்கள்” எனப்படும் கிரிப்டான், ஸெனான் (Extremely Stable Noble Gases – Krypton & Xenon) ஆகியவற்றின் கலப்பு பின்னம் பூமியில் உள்ளதைப் போலவே சூரியனிலும் இருக்கிறது.  அதாவது பரிதி, பூமி இரண்டின் வாயு மண்டலக் கூட்டு மூலக்கூறுகள் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை.  நீர் வெள்ளமும், வாயு மண்டலமும் பூமிக்கோள் உண்டான போதே தோன்றி உயிரினம் உதிக்க ஏதுவான சூழ்வெளியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.”

நிகோலஸ் தௌஃபாஸ் (Nicolas Dauphas, University of Chicago, Illinois) 

விண்வெளி நிபுளா முகிலில் நீர் உண்டாக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு கண்டுபிடிப்பு

ஒளிமந்தைகள், விண்மீன்கள் உருவாக்கும் நிபுளா முகிலில் (Nebula Gas Cloud) 2011 ஆண்டில் விண்ணோக்கி மூலம் ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் தற்போது அறிந்துள் ளார்கள்.    கண்ட விண்வெளி அரங்கம்  “ரோ ஓஃபியூச்சி” (Rho Ophiuchi) விண்மீனுக்கு அருகில் 400 ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது.  அதனோடு ஹைடிரஜன் வாயு இணையும் போது நீர் உண்டாவதால், ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு வானியியல், வேதியல் விஞ்ஞானிகள் ஆய்வுகளுக்கு மிகவும் தேவையான  ஒரு  மூலக்கூறு.   பேரளவு குளிரான (-250 டிகிரி செல்ஸியஸ்)   விண்வெளிப் பகுதியில் உள்ள நிபுளா முகிலில் மிகச் சிறிய அளவில் இருக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   இந்த நிபுளா அரங்கில் உள்ள திரட்சியான அகில வாயு, (Cosmic Gas) தூசி ஆகியவை விண்மீன்கள் ஆக்கும் தகுதி பெற்றவை.  அப்படி உருவாகும் போது அத்துடன் நெருங்கித் தொடரும் ஆக்ஸிஜன், நீர் மூலக்கூறு உற்பத்திகள் உயிரினத் தோற்றத்துக்குக் மூல காரணிகளாக உருவாகுகின்றன.   இந்த இரசாயன மூலக்கூறைக் காட்டிய ஏபெக்ஸ் விண்ணோக்கி (APEX – AtacamaPathfinder Experiment Telescope) தென் அமெரிக்காவில் உள்ள சில்லி நாட்டில் 5000 மீடர் (16,000 அடி) உயரத்தில் இருக்கும் மலைப் பீடத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

பூமியில்   70% பகுதியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம்  விண்வெளி வாயுக் கோள்கள் மூலம் வந்திருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது.    இந்த நிபுளா முகில்களில் பொதுவாக இருப்பவை பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயுவும் மற்றும் சிற்றளவில் உதிரியாக மற்ற இரசாயன மூலங்கள் மட்டுமே.   இப்போது வானியல் குழுவினர்   ரோ ஓஃபியூச்சி முகிலிலிருந்து  ஹைடிரஜன் பெராக்சைடு ஒளிவீசி தன் முத்திரையை யிட்டுள்ளது.   விண் வெளியில் அகிலத் தூசித் தூள்களின் மேற்பகுதியில் ஹைடிரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து ஹைடிரஜன் பெராக்ஸைடு உருவாகி வருவதாகத் தெரிகிறது.   பிறகு அத்துடன் மிகுதியாக ஹைடிரஜன் வாயு  இணைந்து நீர் மூலக்கூறு உண்டாகுகிறது என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

நீர் வெள்ளம் பூமியில் தோன்றியது எப்போது ?

பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஓடி விட்டன !  சூரிய குடும்பம் தோன்றிச் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன !  விஞ்ஞானிகள் பூமியிலே நீர் வெள்ளம் தோன்றி 4.3 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியான சான்றுகளுடன் இப்போது கூறுகிறார்கள் !  அந்த வியப்பான தகவலை 2001 ஜனவரி 11 காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தையும், ஆஸ்திரேலியா கர்டன் தொழிநுணுக்கப் பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானக் குழுவினர் “இயற்கை” இதழில் (Nature Journal) வெளியிட்டார் !  ஆனால் தற்போதைய ஆராய்ச்சி ஒன்று மாறாக 400 மில்லியன் ஆண்டுக்கு முன்புதான் நீர்வளம் பூமியில் உண்டானது என்று சொல்லி இருக்கிறது !

பூமி தோன்றிய 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் சூழ்வெளி வாயு மண்டமும், நீர் வெள்ளக் கடலும், நிலையான பூதளத் தட்டும் [(Crust) பூமிக்குக் கீழ் 10 கி.மீ. (6 மைல்) ஆழத்தட்டு] ஆகிய முன்றும் உண்டாகி விட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  4.3 பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூகோளத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உகந்த மூலாதார வசதிகள் உதித்து விட்டன என்று விண்ணுயிரியல் (Astro-Biology) வளர்ச்சிக்கு நாசா நிதிக்கொடை அளிக்கும் கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மோஜிஸிஸ் (Mojzsis) கூறுகிறார் !

மேற்கூறிய மூன்று பூகோள வசதிகளில் நீர்வளத்தை நீண்ட காலம் நிலையாக வைத்திருப்பதே மிகக் கடினமானது என்று பல பூதள இரசாயனவாதிகள் (Geo-Chemists) கருதுகிறார்கள் ! பூமியில் நீர்வளம் உண்டான சமயத்தில் வெள்ளி, செவ்வாய்க் கோள்களிலும் வேறு சில துணைக் கோள்களிலும் தோன்றி உயிரின வளர்ச்சிக்குத் தூண்டி யிருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்கள்.

பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படித் தோன்றியது ?  

சூரிய குடும்பத்தில் மட்டும் ஒன்பது கோள்களும், பனிரெண்டு துணைக் கோள்களும் ஆராய்ச்சிக்கு உதவிட உள்ளன. அவற்றில் பூமி ஒன்றில் மட்டுமே உயிரின விருத்திக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் உண்டாகி நிலை பெற்று விட்டன.  ஒருசில கோள்களிலும், மற்றும் சில துணைக் கோள்களிலும் ஒரு யுகத்தில் நீர்வளம் இருந்ததற்குச் சான்றுகள் காணப் படுகின்றன.  ஆனாலும் பூமி மட்டும்தான் பேரளவு நீர் வெள்ளத்தை பல மில்லியன் ஆண்டுகளாய் நிலையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.  வியாழக் கோளின் துணைக் கோளான ஈரோப்பாவில் (Jupiter’s Satellite Europa) நீர்க்கடல் இருந்ததாக சமீபத்தில் விண்ணுளவி ஆராய்ந்து தகவல் அனுப்பியுள்ளது.  அதனால் அங்கும் உயிரின வாழ்வுக்குத் தகுதி இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது !

பூமியில் மட்டும் நீர் வெள்ளம் ஏன் தோன்றியது, நீர்மயம் எப்படி நிலையானது மற்றும் உயிரினம் ஏன் உதித்தது என்பதற்கு உறுதியான பதில்கள் கிடையா !  பிரபஞ்சத்தின் மகத்தான பல புதிர்களில் அந்தக் கேள்விகளும் உள்ளன.  பூமியில் நீர் எப்படி உண்டானது ?  ஆரம்ப காலத்தில் பூமியில் ஏற்பட்ட பல எரிமலை வெடிப்புகளில் பேரளவு நீராவி வெளியேறி நீராய்க் குளிர்ந்து சேமிப்பானதா ?  ஹைடிரஜன் ஆக்ஸிஜென் ஆகிய இரண்டு முக்கிய வாயுக்கள் சேர்ந்து இரசாயன முறையில் பல மில்லியன் ஆண்டுகளாய் உற்பத்தியானதா ?  அல்லது ஆயில் எஞ்சின் பிஸ்டன்களில் எரிவாயு அழுத்தமாகி எரிந்து புறப்போக்கு குழலில் வெளியாகும் நீர் அல்லது நீராவி போல் உற்பத்தியானதா ?  அல்லது சூரிய வெப்ப மின்னொளி அல்லது பூகாந்த மின்சாரத்தால் வாயுக்கள் இணைந்து நீர் வெள்ளம் உண்டானதா ?  பூதகரமான நீர்க்கடல் பூமியில் தோன்றியதற்குச் பல விளக்கங்களை விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள் !

வால்மீன்கள் மோதிப் பூமியில் நீர் வெள்ளப் பொழிவு !  

ஏறக்குறைய சூரிய குடும்பத்தின் எல்லாக் கோள்களும் சம காலத்தில்தான் தோன்றின என்று கருதப்படுகிறது  புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களைப் போல பூமியும் பாறைகள் கொண்ட அண்டமாக வடிவானது.  அக்கோள்கள் “பளுச் சேமிப்பு” இயக்கத்தில் (Accretion Process – அண்டையிலுள்ள பிண்டத்தை ஈர்ப்பாற்றலில் இழுத்து ஒருகோள் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பளு நிறையும் ஈர்ப்பும் மிகையாக்கிக் கொள்வது) சூடாகிச் சிறிதளவு நீருடன் கலந்து தூசி, துணுக்குகளைத் திரட்டிக் கொண்டு பெருக்கின்றன.  எரிமலை வெடிப்புகள் நேர்ந்த போது அந்த நீர் வெள்ளம் ஆவியாகி வெளியாகி இருக்க வேண்டும்.  அந்த நீரும் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு முறையால் (Photo-Dissociation By Sun’s Ultra-Violet Light) பிறகு ஆக்ஸிஜனாகவும், ஹைடிரஜனாகவும் பிரிவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

சூரிய மண்டலக் கோள்களில் தோன்றியுள்ள நீர்ப் பகுதிகள் எல்லாம் கோள்களின் வெளிப்புற மேற்தளங்களில் மேவியுள்ள துருவப் பனிப்பாறைகள் முலமாக அறிப்படுகின்றன.  துருவப் பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க்  கோள், பூமி இரண்டும் அதற்குச் சான்றுகள்.  விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் திரியும் வால்மீன்கள் ஏராளமான நீர் வெள்ளத்தைப் பனிப்பாறை வடிவத்தில் கொண்டிருப்பது அறியப் பட்டுள்ளது.  வால்மீன்கள் பின்பற்றும் சுற்றுப் பாதை நீண்ட நீள்வட்டம் என்பதும் அறியப் படுகிறது.  அவ்விதம் அவை நீண்ட பாதையில் வரும் போது பூமி போன்ற அகக் கோள்களின் அருகில் வர வாய்ப்புள்ளது.  நீள்வட்டப் பாதைகளில் செல்லும் வால்மீன்கள் சில சமயங்களில் பூமி நகர்ச்சியுடன் மோதி விடுகின்றன.  வால்மீனின் மேற்புறம் ஒட்டி இருப்பவை தூசி, துணுக்குகளின் பனித்திரட்சிகள்.

நமக்குத் தெரிந்த மூன்று வால்மீன்களான : ஹாலி, ஹயாகுடேக், ஹாலி-பாப் (Comets : Halley, Hyakutake & Hale-Bopp) மூன்றிலும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது.  கடல் நீரில் காணப்படும் டியூடிரியம் போல் (Deuterium – கன ஹைடிரஜன்) இரு மடங்கு அளவு அம்மூன்று வால்மீன்களில் உள்ளன !  அதாவது நீரில் பேரளவு சாதா ஹைடிரஜனும் சிறிதளவு அதன் ஏகமூலமான கன ஹைடிரஜனும் (6500 : 1) ஒப்பமைப்பில் கலந்துள்ளது.  (Heavy Hydrogen called Deuterium is an Isotope of Light Hydrogen) சாதா ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் உள்ளது.  டியூடிரியம் அல்லது கன ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் சேர்ந்துள்ளது.  அந்த மூன்று வால்மீன்களின் நீர் வெள்ளம் பூமியில் சேரவில்லை என்று கருதும் விஞ்ஞானி களும் உள்ளார்கள் !  கன ஹைடிரஜன் (6500 : 1) கலந்துள்ள நீர் வெள்ளம் கொண்ட வேறு வால்மீன்கள் பூமியில் விழுந்து நீர்வளம் பெருகியிருக்க வேண்டும் என்று கருதுவோரும் உள்ளார்கள் !  முரணாக அதிக சதவீத டியூடிரிய நீர் வெள்ளம் கொண்ட வால்மீன்கள் பூமிமீது நீரைப் பொழிந்திருந்தாலும் ஏற்புடையதே !  ஏனெனில் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு (ultra-Violet Photo-Dissociation ) மூலம் கன ஹைடிரஜன் பின்னால் இழப்பாகிப் பூமியில் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.  கடல் நீரின் சராசரி டியூடிரியம் கொள்ளளவு அடிப்படையில் கருதினால் பூமியின் நீரளவில் (15% – 30%) பங்கு வால்மீன்கள் மோதி வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.

விண்கற்கள் விழுந்து பூமியில் நீர் வெள்ள நிரப்பு !

வால்மீன்களைப் போன்று சில எறிகற்களும், விண்கற்களும் (Meteorites & Asteroids) விண்வெளியில் “நீர் தாங்கியாக” (Water Bearer) கருதப்படுபவை !  அவையும் பூமி உண்டான ஆரம்ப காலத்தில் பூமிமேல் ஏராளமாக விழுந்துள்ளன.  அவற்றில் பனிப்பாறைகளாய்த் தொத்திக் கொண்டிருக்கும் பகுதியில் 20% நீர் வெள்ளம் இருப்பதாக ஊகிக்கப் படுகிறது.  விண்கற்கள் பரிதிக்கு அப்பால் எத்தனை மைல் தூரத்தில் உள்ளனவோ அதைப் பொருத்தது அவற்றின் நீர் கொள்ளளவு.  அவற்றின் நீர்க் கொள்ளளவை உறுதியாக அறிவது சிரமமானதால், விண்கற்கள் பூமியில் கொட்டிய நீரளவை ஊகிப்பது இயலாது !  பிரபஞ்சத்தில் தீர்வு செய்ய முடியாத பல புதிர்கள் இருப்பது போல் பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படிப் பெருகியது என்பதற்கும் உறுதியான விளக்கத்தை விஞ்ஞானிகள் சொல்ல முடியவில்லை !

[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? April 2008
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world 1998
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 Nature of Comets Reconsidered By: Dr. Alan Stern, Southwest Research Institute (Aug 8, 2003)
16. Liquid Water at Earth’s Surface 4.3 Billion Years Ago, Scientists Discover (Jan 2001)
17. Origin of Water on Earth (www.thelivingcosmos.co/TheoriginofLifeonEarth/OriginofWateronEarth)
18 A Dying Comet’s Kin may have nourished Life on Earth (www.gsfc.nasa.gov/gsfc/spacesci/origins/linearwater/linearwater.htm)
19 Oceans – Made in Earth Not a Product of Asteroids – A New Theory concerning the Water’s Origin on Earth.
20 American Astronomical Society – What is the Earth made of ? (http//:adsabs.harward.edu/abs/)
21 Earth’s Early Years – Differentiation, Water & Early Atmosphere
22 Earlier Water on Earth ? Oldest Rock Suggests Hospitable Young Planet Science Daily (www.sciencedaily.com/releases/) (Jan 15, 2001)
23 New Scientist Magazine – Water Came to Earth http://www.newscientist.com/ (October 11, 2003)
24  http://en.wikipedia.org/wiki/Atacama_Pathfinder_Experiment  (APEX Telescope)  (April 16, 2012)
25.  http://en.wikipedia.org/wiki/Origin_of_water_on_Earth  (May 2, 2012)
26.  Daily Galaxy -Rho Ophiuchi Nebula – A Source of Earth’s Original Water ?   (May 10, 2012)

******************

jayabarat@tnt21.com [April 12, 2012]  [Revised R-1]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை

(கட்டுரை: 78)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கண்ணுக்குத் தெரியாத
கருந்துளை
கதிர்க் கருவிக்குப் புலப்படும் !
காலவெளிக் கருங்கடலில்
பாலம் கட்டுபவை
கோலம் வரையா தவை
கருந்துளைகள் !
கதிர்கள் வீசுபவை
பிரபஞ்சக்
கலைச் சிற்பியின்
களிமண் களஞ்சியம் !
கருந்துளைக் குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒரு புதிய பிரபஞ்சம் !
ஒளி உறிஞ்சும் உடும்புகள் !
விண்மீன் விழுங்கிகள் !
காலாக்ஸி நெய்யலாம் !
பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும்
ஒரு பூதக் கருந்துளை !
கருந்துளைக் காளான்கள் வளரும்
ஒரு பிரபஞ்சத்தில் !
முறியும் விண்மீன் நெருங்கினால்
உறிஞ்சும் கருந்துளை !  அதன்
கருப்பையில்  சிசுப் போல்
உருவாகும்
ஒரு புது விண்மீன் !
பிறப்பும், இறப்பும்
ஆழிபோல் சுழலும் மனிதர்க்கு !
விண்மீன் களுக்கும்
அதே ஊழ்விதி !

கருந்துளையின் ஈர்ப்பு விசையால் மரண விண்மீன் முறியும் போது, அதன் சில பகுதி வாயுப் பரிமாணம்  கருந்துளைக்குள் விழுவதும்,  மீச்சப் பகுதி விரைவான வேகத்தில் வெளியேற்றம் ஆவதும் ஒருங்கே   நிகழ்கிறது.   விண்மீனின் பகுதி கருந்துளையில் விழுங்கப் படும் போது ஒருவித ஒளிமயம் எழுந்து நீண்ட காலமாய்த் தெரிகிறது.    வீசி எறியப்படும் வாயுவில் பெரும்பான்மையாக ஹீலியம் இருப்பதை நாங்கள் உறுதியாக அறிகிறோம்.   அதாவது   ஒரு தீச்செயல் காட்சியின் பலிமீனை (Victim in Crime Scene) நேரடிச் சான்றாக அறியும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கிறது.   பலியான விண்மீனில் சிறிதளவு ஹைடிரஜனும், பெரிதளவு ஹீலியமும் இருப்பது, விண்மீன் எரிசக்தி இழந்து மரித்திடும்  நிலையைக் காட்டுகிறது.

சுவி. கெஸாரி  (Suvi. Gezari)  (Astronomer The Johns Hopkins University)

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் !  ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பங்குப் பிண்டமாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒளிவீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது.  அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது.

விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)


விண்வெளி வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை. பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள்

முடங்கிய ஒளிமீன்களை உறிஞ்சும் கருந்துளைத் திமிங்கலங்கள்

நாசா வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் பூதக் கருந்துளை ஒன்று ஒளியிழந்து நெருங்கித் திரிந்த விண்மீன் ஒன்றைக் கிழித்து உறிஞ்சும் ஒரு நேரடிச் சான்றைத் தொலைநோக்கி மூலம் கண்டு படம் எடுத்துள்ளார்கள்.     முடங்கித் திரியும் ஒளிமீன்கள் நெருங்கும் போது கருந்துளை அவற்றைக் கவ்வி விழுங்கும் என்று விஞ்ஞானிகள் இதற்கு முன்பு அறிந்திருந்தாலும், இதுவரை யாரும் நேராக அந்த கோர நிகழ்ச்சியை விண்ணோக்கியில் கண்டதில்லை.   குறிப்பிட்ட இந்த மீன்விழுங்கி பூதக் கருந்துளை நமது பரிதியைப் போல் பல மில்லியன் மடங்கு நிறையுள்ளது.

நாசா விஞ்ஞானிகள் தயாரித்த போலிக் கணனிப் படத்தில் (Computer-simulated Image) கிழிந்த  ஒரு  விண்மீனின் வாயுவை உறிஞ்சும் கருந்துளை ஒன்றைக் காணலாம்.    விண்மீனின் ஒரு பகுதி வாயு பரந்த விண்வெளியில் விரைவான வேகத்தில் வீசி எறியப் படுகிறது.    போலிப் படம் தயாரித்த விஞ்ஞானிகள் இருவர் :  ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுவி. கெஸாரி  (Suvi. Gezari) &  கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெ. குயிலோச்சன் (J. Guillochon).

வானியல் விஞ்ஞானிகள் இதற்கு முன்பாகப் பல விண்மீன் விழுங்குதலைக் குறிப்பாகக் கண்டுள்ளார் ஆயினும் தற்போதுதான் நேரடியாக அந்தக் கோர நிகழ்ச்சியை பூதள, விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் கண்டு பலியான விண்மீனைக் கையும், களவுமாகப் பிடித்துள்ளார்.    விழுங்கப்படும் அந்த விண்மீன் ஹீலிய வாயு செழிப்பாக உள்ள ஒரு மரண ஒளிமீன் (Dying Star).     முறியும் அந்த விண்மீன் வசிக்கும் காலகஸி ஒளிமந்தை 2.7 பில்லியன் ஒளியாண்டு (Light Years) தூரத்துக்கு அப்பால் உள்ளது.   இந்த புதிய அறிவிப்பு “இயற்கை”  விஞ்ஞான வெளியீட்டில் (Journal Nature) மே 3, 2012 இல் வந்துள்ளது.

 

கருந்துளையின் ஈர்ப்பு விசையால் மரண விண்மீன் முறியும் போது, அதன் சில பகுதி வாயுப் பரிமாணம்  கருந்துளைக்குள் விழுவதும்,  மீச்சப் பகுதி விரைவான வேகத்தில் வெளியேற்றம் ஆவதும் ஒருங்கே   நிகழ்கிறது.   விண்மீனின் பகுதி கருந்துளையில் விழுங்கப் படும் போது ஒருவித ஒளிமயம் எழுந்து நீண்ட காலமாய்த் தெரிகிறது.    வீசி எறியப்படும் வாயுவில் பெரும்பான்மையாக ஹீலியம் இருப்பதை நாங்கள் உறுதியாக அறிகிறோம்.   அதாவது   ஒரு தீச்செயல் காட்சியின் பலிமீனை (Victim in Crime Scene) நேரடிச் சான்றாக அறியும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கிறது.   பலியான விண்மீனில் சிறிதளவு ஹைடிரஜனும், பெரிதளவு ஹீலியமும் இருப்பது, விண்மீன் எரிசக்தி இழந்து மரித்திடும்  நிலையைக் காட்டுகிறது.”, என்று சுவி. கெஸாரி  கூறுகிறார்.    விழுங்கப் படும் விண்மீன் எரிவாயு ஹைடிரஜன் காலியாகி மரணம் அடையும் தருவாயில் உள்ள தென்பது தெரிய வருகிறது.   முழு எரிவாயு தீர்ந்ததும் விண்மீன் உப்பி விரிந்து ஒரு பலூனாக ஊதி அது ஒரு “பூதச் செம்மீன்” (Red Giant) ஆகிப் போகும்.

 

விண்மீன் விழுங்கும் கருந்துளைக் காட்சி எதனால், எப்படிப் பதிவானது ?

முடங்கிய விண்மீன்கள்  பல நமது பால்வீதி ஒளிமந்தையின் மையத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் யூகிப்பதாய் சுவிக் கெஸாரி குறிப்பிடுகிறார்.   அத்தகைய நெருக்கமான நிகழ்ச்சிகள் 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக நேர்பவை என்று கணிக்கப் படுகிறது.

கருந்துளை விண்மீனை விழுங்கும் இந்த அரிய காட்சியைக் காண ஆயிரக்கணக்கான காலாக்ஸிகளை காலெக்ஸ் விண்ணுளைவி (Galex Space Probe) மூலமாகவும், ஹவாயியிலுள்ள பான்-ஸ்டார் தொலை நோக்கி மூலமாகவும் (Pan-STARRS Telescope, Located in Hawaii) சோதித்ததாக சுவிக் கெஸாரி கூறுகிறார்.

 

2010  ஜுன் மாதத்தில்  அந்த அரிய விண்வெளி நிகழ்ச்சியை இரண்டு சாதனங்கள் மூலமாகவும் நோக்கி விஞ்ஞானிகள் படம் பிடித்தார்.    ஒரு மாதம் கடந்து ஒளிமயம் பெருத்துப் பிறகு அடுத்த 12 மாதங்களில் ஒளிமயம் மங்க ஆரம்பித்தது.   ஒளிமய ஏற்ற இறக்கத்தைக் கணித்து கருந்துளையின் நிறையைச் சுமார் 3 மில்லியன் பரிதி நிறை என்று அறிந்தனர்.    அந்த நிறையே நமது பால்வீதி ஒளிமந்தையின் மையத்தில் இருக்கும் கருந்துளையின் நிறையை ஒத்தது என்பது தெரிகிறது.

பிரபஞ்ச காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ?

அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ?  காலாக்ஸிகளா ?  விண்மீன்களா ?  அல்லது கருந்துளைகளா ?  பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது.

கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன.  ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !

பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் !  பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.

1950 ஆண்டுகளில் கலிஃபோர்னியா மௌண்ட் வில்ஸன் வானேக்ககத்தில் பணிபுரிந்த முன்னோடிகளில் ஒருவரான, ஜெர்மென் வானியல் வல்லுநர் வில்ஹெம் வால்டர் பாடே (Wilhem Walter Baade) காலாக்ஸிகளில் உள்ள விண்மீன்களை ஆராய்ந்து, காலாக்ஸிகள் எப்படித் தோன்றின என்று அறிந்தார்.  நமது பால்மய வீதியைச் சுற்றியுள்ள ஒரு குழு விண்மீன்களில் ஹைடிரஜன், ஹீலியத்தை விடக் கனமான உலோகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார் ! 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவை, அந்தப் பூர்வீக விண்மீன்கள் !  சூப்பர்நோவா வெடிப்பு அல்லது மற்ற விண்மீன் சிதைவு இயக்கங்களால் விண்வெளியில் வீசி எறியப்பட்ட உலோகங்கள், நமது காலாக்ஸியின் இளைய தலைமுறை விண்மீன்களில் விழுந்துள்ளன !

பிரபஞ்சக் கருந்துளைகள் என்பவை எவை ?

1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார்.  ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள்.  அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் !  ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது.  கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it).  பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி).  அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்..  அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி).  ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது.  அதாவது அருகில்  ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.

கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ?  நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன !  அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு !  பெருத்த நிறை யுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது !  ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

ஒளிமந்தைக் (காலாக்ஸி) கொத்துகள் எப்படித் தோன்றின ?

பிரபஞ்சத் தோற்றத்தின் கட்டமைப்பு விளைவுகளில் காலக்ஸித் தீவுகளின் கூட்டங்கள்தான் (Galaxy Groups, Clusters) ஈர்ப்பு விசைக்குள் அடங்கிய மிகப் பெரும் வடிவம் கொண்ட விண்வெளிக் கண்டங்கள் (Gravitationally Bound Largest Space Objects) !  அவைதான் பிரபஞ்சத்திலே மிக்க திணிவு அடர்ந்த (Densest Part of the Universe) தளம் அகண்ட கண்டங்கள் !  குளிர்ந்த கரும்பிண்டம் சேர்ந்து ஈர்ப்பு விசைக்குள் அடங்கும் கட்டமைப்புகள் (Gravitational Bound Structures) உருவாகும் போது, சிறிய கட்டமைப்புகள் முதலில் சிதைந்து படிப்படியாக முடிவில் மாபெரும் வடிவாகி காலக்ஸி சந்தைகள் (Galaxy Clusters) தோன்றியுள்ளன !

ஒளிமந்தைச் சந்தைகள் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.  சாதாரணமாக ஒளிமந்தைச் சந்தையில் சுமார் 10 முதல் 1000 கணக்கான காலக்ஸிகள் இருக்கலாம் !  சந்தைகள் பொதுவாக மிகப் பெரும் குழுக்களோடு (Superclusters) நெருங்கியே இருக்கும்.

ஒளிமந்தைக் குழுக்கள் (Groups of Galaxies) என்பவை மிகச் சிறிய காலாக்ஸிகளைக் கொண்டவை.  அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 50 குன்றிய எண்ணிக்கைக் காலாக்ஸிகள் இருக்கும்.  அவற்றின் அகலம் (விட்டம்) 1 முதல் 2 மெகா பார்செக் (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance).  குழு ஒன்றின் நிறை சுமார் 10^13 மடங்கு பரிதி நிறை .!  குழுக்களில் இயங்கும் காலக்ஸியின் நகர்ச்சி வேகம் சுமார் 150 km/sec (90 mps).  நமது பரிதி மண்டலம் நகரும் பால்வீதி காலக்ஸியானது 40 ஒளிமந்தைகள் உள்ள “உள்ளகக் குழுவில்” (Local Group) ஒன்றாக இயங்கி வருகிறது.

(தொடரும்)

*********************

தகவல் :

Picture Credit : 1. Astronomy (August 21, 2007) & (January 2010) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004) & Hubble Site Net Center 6.  NASA

1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!

9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]

10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html  (May 16, 2007)

11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
[www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html  (July 10, 2007)

12.  Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html  (April 12, 2007)

13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)

14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)

15. The Hyperspace By: Michio Kaku (1994)

16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html

17. The New York Public Library S (cience Desk Reference (1995)

18. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007)

19. Astronomy “The Secret Lives of Black Holes” (Nov 2007)

20. The Handy Space Answer Book By Phillis Engelbert & Diane Dupuis (1998)

21. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html  (பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)

22. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html  [பிரபஞ்ச விரிவை நோக்கிய வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)]

23 Globular Clusters Tell Tale of Star Formation in Nearby Galaxy Metropolis [August 5, 2008]

24 Wikipedia – Galaxy Clusters (November 7, 2009)

25  https://jayabarathan.wordpress.com/2009/09/03/katturai63/   (பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !)  (September 3, 2009)
26 Astronomy Magazine -Galaxy Superclusters -What They Reveal about Cosmic Expansion By :Bruce Dorminey (January 2010)

27  Daily Galaxy :  Supermassive Black ?Hole Devouring A Star (May 2, 2012)

28   Stellar Chemistry :   Black Hole caught Red-handed in Stellar Homicide (May 4, 2012)

29 Wikipedia –  http://en.wikipedia.org/wiki/Pan-STARRS  (Pan-SRARRS Telescope)  April 6, 2012

30.  Wikipedia –  http://en.wikipedia.org/wiki/Red_giant  (Red Giant)  May 5, 2012

******************

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  May 5, 2012

https://jayabarathan.wordpress.com/

அக்கினி புத்திரி

அக்கினி புத்திரி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது.  ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது.  நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை.  மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.”

டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & Development Organization)

“அக்கினி புத்திரி” என்றும், “ஏவுகணை மாது” (Missile Woman) என்றும் பாராட்டப் படும் பொறியியல் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஓர் அபூர்வ ராக்கெட் விஞ்ஞானி.  நோபெல் பரிசு பெற்று இந்தியாவில் பணி செய்த அன்னை தெரேஸாவின் பெயரே இவருக்கு இடப் பட்டது.  2008 ஆம் ஆண்டில் இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் (The Indian Women Scientists Association) அவருக்குச் சூடிய புகழுரையில்,  “வீட்டுக்கும், விஞ்ஞானப் பொறுப்பு வேலைக்கும் இடையே கட்டிய இறுக்குக் கம்பியில் விழாமல் நடந்து தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பல அன்னையரைப் போன்றவர் என்று சொல்லிப் பாராட்டியது.  இவரது குருநாதரான இந்தியாவுக்கு அசுர வல்லமை ஈந்த ராக்கெட் எஞ்சினியர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கீழ் பணி செய்தவர்.

1988 ஆண்டு முதல் இந்திய இராணுவ ஆராய்ச்சி விருத்தித் துறையகத்தில் (India’s Defence Research & Development Organization DRDO) வேலை செய்து வருகிறார்.  முதல் அக்கினி (Agni -1) ஏவு கணை 1989 இல் அனுப்பப் பட்டுச் சோதனை செய்யப் பட்டது.  இந்திய இராணுவத்துக்காக டிசைன் செய்து வடிவமைத்து, சோதித்த பெரும்பான்மையான அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணைகள் அனைத்திலும் அவர் பங்கெடுத்தவர்.  சமீபத்தில் (ஏப்ரல் 19, 2012) வெற்றிகரமாக விண்ணில் ஏவி 3500 கி.மீ. பயணம் செய்த அக்கினி -5 ராக்கெட்டும் அவரது ஆளுமையில் நடந்தேறியது என்பது குறிப்பிடத் தக்கது.  தற்போது (2012) டெஸ்ஸி தாமஸ் பல்வேறு போராயுத வெடிகள் தூக்கிச் செல்லும் தனித்துவக் கட்டளை ஏவுகணை மீட்சி வாகனம் (Misson Guidance Systems for Mulitiple Independent Re-entry vehicle that carries multiple warheads) சம்பத்தப் பட்ட ஒரு புதிய ஆய்வு அமைப்புத் துறையில் மூழ்கியுள்ளார்.

ஆடவ நிபுணர் பலர் ஆளுமை செய்யும் ராக்கெட் விஞ்ஞானத்தில் இப்படி அபூர்வப் பிறவியாய் எழுந்துள்ள பெண் எஞ்சினியர் டெஸ்ஸி தாமஸ் தனித்துவத் திறமையுடன் தனியாய் ஆடவர் மத்தியில் முன்னிற்கிறார். “விஞ்ஞானத் தொழிற்துறைகளில் எந்தவிதப் பாலினப் பாகுபாடும் (Gender Discrimination) கிடையாது.  உன் திறமை கூரியதானால், ஆணோ, பெண்ணோ நீ தானாக முன்னுக்கு வருவாய் என்று உறுதியாகக் கூறுகிறார்.  தான் பணி புரியும் இடங்களில் எந்த விதப் பாலினப் பாகுபாட்டையும் எதிர்க்க வேண்டி இருந்த தில்லை என்று பொறுமையாகச் சொல்கிறார்.

2012 இல் 49 வயதாகும் டெஸ்ஸி தாமஸ் ரோமன் காத்லிக் மதத்தினரான பெற்றோருக்குத் தென் கேரளாவில் உள்ள ஆலப்புழையில் பிறந்தார்.  தந்தையார் ஒரு சிறு தொழில் நடத்திய வாணிபர். தாயார் கல்வி புகட்டும் தகுதி இருந்தும் வேலை செய்யாது வீட்டைப் பேணியவர். தந்தையார் கணித ஞானம் உள்ளவர். 1991 இல் தந்தை முடக்குவாத மூளை அடிப்பில் (Paralytic Stroke) மரித்தார்.  75 வயதாகும் தாயார் குஞ்சம்மாள் தாமஸ் ஆலப்புழையில் வசித்து வருகிறார்.  அவர்கள் வாழ்ந்து வந்த இடம் தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் இருந்தது.  அங்கிருந்து இடி முழக்கி விண்ணில் பாய்ந்து செல்லும் ஏவுகணைகளே அவரது சிந்தனையை ராக்கெட் விஞ்ஞானத்தில் முற்படத் தூண்டியதாகச் சொல்கிறார்.  பள்ளிக்கூடக் கல்லூரிப் படிப்புகளைக் கேரளாவில் முடித்து விட்டு தனது 20 வயதிலே பிறந்த மாநிலத்தை விட்டுவிட்டுக் கட்டளை ஏவு கணைகளில் மேல்நிலைப் பட்டப் படிப்புக்கு பூனாவுக்குச் சென்றார்.  அங்கே ராக்கெட் பொறியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.  தனது எதிர்காலக் கணவர் சரோஜ் படேலை அங்குதான் அவர் சந்தித்தார். இந்தியக் கடற்படையில் கம்மோடராக (Commodore in the Indian Navy) சரோஜ் படேல் மும்பையில் வேலை செய்து வருகிறார்.

பேரழிவுப் போராயுதம் ஏந்திச் செல்லும் அக்கினி -5 ராக்கெட் திட்டத்தில் எப்படி நீங்கள் வேலை செய்கிறீர் என்று கேட்டால், “நான் சமாதானம் உண்டாக்கும் ஓர் போராயுதப் பணியில்தான் பங்கெடுக்கிறேன்,” என்று பதில் சொல்கிறார். “அந்த வேலையில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன.  நான் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே மாறி மாறித் தாவிக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுகிறார்.  “சில சமயங்களில் தேசீயப் பொறுப்பு ஏவுகணைச் சிரம வேலைக்கும், குடும்பப் பொறுப்புக்கும் இடையே முறிந்து போய் நசுங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்று மனம் பொருமுகிறார். அதற்குக் கடற்படை வேலையில் பயணம் செய்யும் கணவரின் ஒத்துழைப்பும், வெல்லூரில் பொறியியல் துறையில் படிக்கும் மகன் தேஜஸ் (Tejas) இணக்கமும், ஏற்புடமையும் மிகவும் உதவியாக இருப்பதாகச் சொல்லிப் பெருமைப் படுகிறார்.  “தேஜஸ்” என்பது இந்தியா சுய முயற்சியில் உற்பத்தி செய்த போர் விமானத்தின் பெயர்.

“டெஸ்ஸி தாமஸ் வெற்றிப் பாதையில் தமது கனவுகளைத் தொடர்ந்து முயலும் பல பெண்டிர் இதய உந்தலோடு வேட்கையுடன் பின்பற்ற விரும்பும் பெண் விஞ்ஞானிகளுக்கு ஒரு மாடல்,” என்று கருதப் படுகிறார். இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் அவரைப் பற்றி இப்படி அறிவித்துப் பாராட்டியது.  அவர் சேரும் போது அவரது ராக்கெட் பணியகத்தில் ஒரு சில பெண்டிரே வேலை செய்து வந்தார் என்றும், தற்போது 200 மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் பல்வேறு போர்த்துறைப் பணிகளில் வேலை செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்.  பெண் விஞ்ஞானிகளுக்கு அளிக்கும் இந்திய சிறப்புப் பரிசு (Shanthi Swarup Bhatnagar Award) கடந்த 50 ஆண்டுகளில் (1958-2010) பெற்றவர் 11 பெண்டிர்.  அதே சமயம் 2011 ஆண்டில் மட்டும் பரிசு அளிக்கப் பட்டவர் 3 பேர். டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கு இந்திய சிறப்புப் பரிசோடு எதிர்காலத்தில் பாரத ரத்னா பட்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

+++++++++++++++

தகவல் :

1.  https://jayabarathan.wordpress.com/2012/04/21/akkini-5-rocket/

2.  No Gender Bias in Science Says Missile Scientist Tessy Thomas By Mohammsd Shafeeq (April 23, 2012)

3.  The Rocket Science : The Missile Woman Behind Indian Test Launch (April 24, 2012)

4.  BBC News : The Missile woman Behind India’s New ICBM By Pallava Bagla (April 20, 2012)

+++++++++++++++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 28, 2012
https://jayabarathan.wordpress.com/