
சந்திரயான் -3 தளாய்வி நிலவின் தென்துருவத்தில் தடம் வைத்து, அதிலிருந்து தளவூர்தி இறங்கி நிலாவின் கரும் மண்ணை உளவு செய்கிறது.


2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி, விண்வெளித் தேடல் வரலாற்றில் ஒருபெரும் சாதனை புரிந்துள்ளது. இதுவரை நிலவை நோக்கிச் சென்று வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சைனா முப்பரும் வல்லரசுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்று விட்டது. 2019 இல் சந்திராயன் -2 திட்டம் 95% வெற்றி பெற்று, இறுதியில் பழுது ஏற்பட்டு, நில ஆய்வித் தொடர்பு அறுந்து போனது. ஆயினும் இன்றும் இயங்கிவரும் சந்திராயின் -2 விண்சுற்றி உதவியால், சந்திராயின் -3 நில ஆய்வி மெதுவாகத் தடம் வைத்து, அதிலிருந்து நில ஊர்தி இறங்கி இயங்க ஆரம்பித்துள்ளது.
இதுவரை எந்த நாடும் துணிந்து செய்யாத தென் துருவ தடவைப்பை, திட்டமிட்டு செய்து காட்டி உள்ளது. மேலும் தென்துருவப் பிரதேசத்தில் பல்வேறு தாதுக்கள், பனிக் குன்றுகள் காணப் படலாம் என்ற எதிர் பார்ப்பும் இருந்துள்ளது.
அடுத்து இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் குறிக்கோள்கள் என்ன ? மனிதர் இயக்கும் விண்வெளிப் புவிச்சுற்று பயணப் பயிற்சி, நிலவில் குடியேற, சர்வ தேச நிலாச் சுற்று நிலையக் கூட்டமைப்பு. மேலும் ஆதித்தியான் -1 என்னும் பெயருடைய , சூரியனைச் சுற்றி பருவநிலை, சூழ்வெளி நிலை அறிய ஒரு விண்சிமிழ் இஸ்ரோ [ISRO] [INDIAN SPACE RESEARCH ORGANIZATION] ஏவப் போவதாகவும் திட்டங்கள் உள்ளன.
A series of images sent by Chandrayaan-3 show the craters on the lunar surface getting larger and larger as the spacecraft gets closer
Chandn -3 Rover moves out to explore the Moon’s surface near the South Pole area
1. https://www.livemint.com/news/how-india-pulled-off-its-frugal-moon-landing-11692982290717.html
3.
| Chandrayaan-3 Integrated Module in a cleanroom | |
| Mission type | LanderRover |
|---|---|
| Operator | ISRO |
| COSPAR ID | 2023-098B |
| SATCAT no. | 57320 |
| Website | www.isro.gov.in/Chandrayaan3.html |
| Mission duration | 1 month and 11 days (elapsed)Propulsion module: ≤ 3 to 6 months (planned) 20 days (elapsed) (since orbit insertion)Vikram lander: ≤ 14 days (planned) 2 days (elapsed) (since landing)Pragyan rover: ≤ 14 days (planned) 2 days (elapsed) (since deployment) |
| Spacecraft properties | |
| Bus | Chandrayaan |
| Manufacturer | ISRO |
| Launch mass | 3900 kg[1] |
| Payload mass | Propulsion Module: 2148 kgLander Module (Vikram): 1726 kgRover (Pragyan) 26 kgTotal: 3900 kg |
| Power | Propulsion Module: 758 WLander Module: 738 WWS with Bias Rover: 50 W |
| Start of mission | |
| Launch date | 14 July 2023 09:05:17 UTC[2] |
| Rocket | LVM3 M4 |
| Launch site | Satish Dhawan Space Centre |
| Contractor | ISRO |
| Moon orbiter | |
| Orbital insertion | 5 August 2023 |
| Orbital parameters | |
| Pericynthion altitude | 153 km (95 mi) |
| Apocynthion altitude | 163 km (101 mi) |
| Moon lander | |
| Spacecraft component | Vikram lander |
| Landing date | 23 August 2023 12:32 UTC[3] |
| Landing site | 69.367621°S 32.348126°E[4](between Manzinus C and Simpelius N craters)[5] |
| Moon rover | |
| Landing date | 23 August 2023 |
| Chandrayaan programme← Chandrayaan-2LUPEX → | |
