வையகத் தமிழ் வாழ்த்து

சி. ஜெயபாரதன், கனடா

பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம்
ஒரு தாய் மக்கள்
வாழ்த்துவம் உனையே !
வணங்குவம் உனையே !
தாரணி மீதில் உன்
வேர்களை விதைத்தாய்
வேர்கள் தழைத்து
விழுதுகள் பெருகின
ஈழத் தீவில்
இணைமொழி நீயே
சிங்கப் பூரினில்
துணைமொழி நீயே
மலேசிய நாட்டில்
தனிமொழி யானாய்
காசினி மீதில் தமிழர் பரப்பிய
காவியத் தமிழே !
வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே !
வணங்குவம் உனையே !

ஆத்திசூடி ஓளவையார்,
ஆண்டாள்,
வையகப் புலவர்
வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது
மாதவ  மக்கள்.
கடல் கடந்து அலைபோல்
புலம் பெயர்ந்த தமிழர்,
ஆசியா, அரேபியா,
ஆஃப்ரிக்கா, ஈரோப்,
அமெரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர்,
சுதந்திர மாக
யாதும் நாடே
யாவரும் கேளிர்
பாதுகாத் துன்னைப் பாரில்
பரப்புதல் எம்பணி
காசினி மீதில்
நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே !
தொல்காப்பியர் இலக்கணம் வகுத்த                                                                      வையகத் தமிழே !
வணங்குவம் உனையே !

++++++++++
jayabarathans@gmail.com [April 14, 2021] [R-2]

8 thoughts on “வையகத் தமிழ் வாழ்த்து”

  1. உங்களின் பக்கம் இன்றுதான் பார்க்க முடிந்தது.

    உங்களின் ஆற்றலை எண்ணி பெருமகிழ்ச்சி. காரணம் நான் பேசும் தமிழிலும் இப்படியான விஞ்ஞானிகள் உண்டு என்றெண்ணி.

  2. neraimathi@rocketmail.com

    வையகத் தமிழ் வாழ்த்து எனும் தங்களது கவிதை அகிலத்தையே உள்ளடக்கிய அதி அற்புதக் கவிதை. கவிதை நன்றெனின். அருகிலுள்ள ஔவை-முருகன் படம் அதனினும் நன்று சங்கத் தமிழ் குறித்த என் கவிதை ஒன்றினை அனுப்பி வைத்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள் !
    நன்றி.
    முனைவர் ச.சந்திரா

  3. This weblog appears to get a large ammount of visitors. How do you get traffic to it? It gives a nice individual twist on things. I guess having something real or substantial to give info on is the most important thing.

  4. Wow! Your site has a bunch viewers. How did you get so many bloggers to see your post I’m very jealous! I’m still learning all about article writing on the internet. I’m going to click on more articles on your website to get a better understanding how to get more visable. Thanks for the assistance!

  5. I’ve been surfing online more than three hours these days, yet I never found any attention-grabbing article like yours. It is beautiful worth enough for me. In my view, if all web owners and bloggers made excellent content as you probably did, the internet will be a lot more helpful than ever before.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.