ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிர வெடி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது

Japan Eagle Hayabusu -2 Impactor Dropped on Asteriod Ryugu

[April 5,  2019]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++++

Hayabusa -2 Impactor Copper Weight made a Crater on Asteroid

[April 26, 2019]

++++++++++++++++++

  1. https://youtu.be/qeMwAdquDYM
  2. https://youtu.be/KdhhFKomAIM
  3. https://youtu.be/LFh_pe3O_xM
  4. https://youtu.be/8H4aZX_8hMA
  5. https://youtu.be/mgfc0jliVjA
  6. https://www.space.com/hayabusa2-made-crater-on-asteroid-ryugu.html
  7. https://en.wikipedia.org/wiki/Hayabusa2
  8. http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html
  9. http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html

++++++++++++++++++

++++++++++++++

நிலவினில் முதற்தடம் வைத்து
நீத்தார் பெருமை யாய்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
தவ்விய தளவுளவி களை 
நாசாவும்
ஈசாவும் கொண்டு இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
விண்வெளியில் வால்மீன் ஒன்றை
விரட்டிச் சென்று வால் வீசிய
தூசியைப் பிடித்து வந்தார்
காசினிக்கு !
வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
வையத்தில் இறக்கிடும்
ஜப்பானின்
ஹயபூசா முதல் விண்ணுளவி
அயான் எஞ்சனை இயக்கி
ஆறு பில்லியன் மைல் கடந்து
சீராய் மாதிரி கொணரும் !
ஹயபூசா -2 தாமிரக் கட்டி தாக்கி, 
முரண்கோளில் குழி உண்டாக்கும் !
பூர்வ உயிரின மூலவி காணப் போகுது. 
ஜப்பான் தளவுளவி.
முரண்கோள் குழி மண் எடுத்து
தரணிக்கு மீளும் ஜப்பான் கழுகு 
ஆய்வு புரிய
வரலாற்று முதலாய் !

++++++++++++++++

ஜப்பான் கழுகு ஹயபூசா -2  தாமிரத் தளவெடி முதன்முதலாய் முரண்கோளில் குழி பறித்துள்ளது

2019 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜப்பான் ஹயபூசா-2 விண்சிமிழ் உலக முதன்மையாய் முரண்கோள் ஒன்றைத், தாமிரத் தள வெடியால் ஒரு மைல்  [1.7 கி.மீடர்] உயரத்திலிருந்து தாக்கி சுமார் 30 அடி [10 மீடர்] விட்டக் குழியை உண்டக்கி உள்ளது.  தாமிரக் கட்டியின் எடை ஒரு பவுண்டு [2 கி.கிராம்].   தாமிரத் தளவெடி விழுந்த இடம் திட்ட மிட்ட இடத்துக்கு அருகில் குழி  பறித்துள்ளது.  பூமியிலிருந்து 200 மில்லியன் மைல் [340 மில்லியன் கி.மீடர்]  தூரத்தில் சூரியனைச் சுற்றி வரும் முரண்கோளில் நேர்ந்த இந்த நிகழ்ச்சி ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகக் கருத்தப் படுகிறது.  ரியூகுவில் உண்டான இந்த செயற்கை குழியை,  5500 அடி [1700 மீடர்] உயரத்தில்  பயணம் செய்யும் விண்சிமிழ்க் கருவி படமெடுத்து உறுதி செய்தது.

குழி உண்டான போது தெறித்த மண் மாதிரிகளை அடுத்து  சேமிக்க , விண்சிமிழ் இனிமேல் முரண்கோளை நெருங்கி வரும்.  எடுத்த  மண் மாதிரிகளை, விண்சிமிழ் 2020 ஆண்டில் பூமிக்குக் கொண்டுவரும்.  இந்த திட்டத்துக்கு  ஆகும் ஜப்பான் நிதிச்செலவு சுமார் 30 பில்லியன் யென். [27 பில்லியன் டாலர்]  [2019 நாணய மதிப்பு] என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது

++++++++++++++++++

1. https://youtu.be/PQPASCJHFk8
2. https://youtu.be/cbwZUvXBfI4
3. http://www.planetary.org/blogs/index.html?keywords=asteroid-162173-ryugu 
   [January 16, 2019]
4. https://youtu.be/yVgYC5B5L10
5. https://youtu.be/OYsNINL5zl4
6. http://www.hayabusa2.jaxa.jp/en/  
++++++++++++++++
Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
+++++++++++++++++
ஜப்பான் கழுகு ஹயபூசா -2 விண்கப்பல் புதிய முரண்கோளில் இறங்கியுள்ளது.
2018 ஆண்டு முதலாய் ஜப்பான் கழுகு என்னும் ஹயபுசா -2 தளவுளவி ரியூகு முரண்கோளை விரட்டிப் பிடிக்க முயன்று, 2019 பிப்ரவரி 22 இல் வெற்றிகரமாய் தகுந்த இடத்தில் இறங்கி யுள்ளது.  அதன் குறிக்கோள் முரண்கோள் ரியூகுவின் தள மாதிரி மண்ணை எடுத்துச் சேகரித்து, புவிக்கு மீளும் சுய இயக்குத் திட்டம்.  சின்னஞ் சிறு மண் மாதிரிகளைச் சேமிக்க தளவுளவி யில் பல்வேறு சுடும் கருவிகள் [Firing Projectiles] அமைக்கப் பட்டுள்ளன.   முரண்கோள் ரியூகு [ C-Type] [கார்பன் மூலக்கூறுகள்]
கொண்டது.  அவை 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு சூரிய மண்டலம் எப்படி இருந்திருக்கலாம் என்று விளக்கம் அளிக்கும்.  அவற்றில் உயிரின மூலவிகள் தோன்றத் தேவையான  பூர்வ ஆர்கானிக் புரோட்டீன்கள் செழிக்கும் அமினோ ஆசிடுகள் [Amino acids] என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் உள்ள முரண்கோளில் மூன்றில் இருபங்கு [68%] கார்பன் மூலக்கூறுகள் கொண்டவை யாக  [C-TYPE]  கருதப் படுகின்றன.  ஜப்பான் சுய இயக்குத் தளவுளவி ஹயபூசா -2 போல் நாசா விஞ்ஞானிகளும்  ஆசிரிஸ் – ரெக்ஸ் விண்ணுளவி  [Osiriis-Rex Spacecraft]  தற்போது “பென்னு” என்னும் C-TYPE முரண்கோளை  [BENNU ASTEROID] ஆராய்ந்து வருகிறது.  1500 அடி அகலம் உடைய “பென்னு ” முரண்கோள் ரியூகுவை விடச் சிறியது.  அதன் மாதிரி மண்ணை 2023 இல் தான் நாசா புவிக்கு மீட்டுக் கொண்டுவரும்.  ஜப்பான் புவிக்குக் கொண்டுவரும் ரியூகு மாதிரி மண் 2020 இல் கிடைக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
ஜப்பான் விண்வெளித் தேடலில் முன்னோடி முயற்சிகள்
சூரிய மண்டல மூலாதாரத் தோற்றத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் தேடல் பயணங்களில், சூரியனைச் சுற்றும் முரண்கோள்களைச் [Asteroids] சுற்றி, அவற்றில் தடம் வைத்து மாதிரி மண்ணை எடுத்துப் பூமிக்கு மீளும் யந்திர சுய இயக்கப் பொறி நுணுக்கத்தில் ஜப்பானை யாரும் மிஞ்ச முடியாது.  அந்த பயணங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஜப்பானின் “ஹயபுஸா-2” விண்ணுளவி.   அடுத்து புரியப் போகும் சாதனை பிப்ரவரி 22, 2019 இல் நிகழப் போகிறது.  அதாவது 880.மீடர். [540 அடி] விடமுள்ள “ரியூகு” முரண்கோளில்  ஹயபுஸா -2 இன் தளவுளவி இறங்கப் போகிறது.  முரண்கோளில் தடமிடும் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது..  2018 ]செப்டம்பரில் ஜப்பான் விண்வெளி ஆணையகம் [JAXA – JAPAN AEROSPACE EXPLORATION AGENCY]  10 கி.கிராம் [22 பவுண்டு] பளு உள்ள மாஸ்காட்   [MASCOT] [MOBILE ASTEROID SURFACE SCOUT] என்னும் தளவுளவியை  ஏவி வெற்றிகரமாக  அங்கே இறக்கியுள்ளது.
Japan Impact Landers
மாஸ்காட் தளவுளவியின் கருவிகள் படங்களைப் பல்வேறு அலை நீளங்களில் பதிவு செய்யும்.  நுண்ணோக்கி மூலம் முரண்கோளின் தாதுக்களை ஆய்வு செய்யும்.  தள உஷ்ணத் தையும், காந்த சக்தியையும் அளக்கும்.  ஜப்பானிய  “கழுகு” எனக் கருதப்படும் ஹயபூஸா – 2 ஒரு சமயலறை ரெஃப்ரிஜெரேட்டர் அளவு கொண்டது.  2014 டிசம்பரில் ஏவப்பட்ட ஹயபுஸா 2 அனுப்ப ஆகும் நிதிச் செலவு சுமார் U$ : 260 மில்லியன்.  அது ரியூகு மாதிரி மண்ணை 2020 ஆண்டில் பூமிக்குத் தானாய்க் கொண்டு வரும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் எடுக்கப் பட்ட மண் மாதிரிகள் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றிய தகவலை  விஞ்ஞானிகளுக்கு கூறும்.  அத்துடன் வேறு எந்த மூலகங்கள் [Elements] சேர்ந்து, பூமியில் உயினங்கள் தோன்றின என்றும் அறிவிக்கும்.
[Click to Enlarge]

++++++++++++++++++++++++++++++++++++++++++++

https://en.wikipedia.org/wiki/162173_Ryugu

http://www.spacedaily.com/reports/Japan_space_probe_reaches_asteroid_in_search_for_origin_of_life_999.html

+++++++++++++++++++++

See the source image

ஜப்பான் கழுகு -2 முரண்கோள் நோக்கி விண்வெளிப் பயணம்

+++++++++++++++++

Information News

  1. https://www.nytimes.com/2019/02/21/science/ryugu-asteroid-hayabusa2.html [February 21, 2019]
  2. https://www.dailymail.co.uk/sciencetech/article-6215311/Japans-hopping-Ryugu-robots-send-video-surface-asteroid-180million-miles-away.html
  3. https://www.breitbart.com/news/touchdown-japan-probe-hayabusa2-lands-on-distant-asteroid/
  4. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
  5. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
  6. http://www.the-japan-news.com/news/article/0005561687[February 22, 2019]
  7. http://www.spacedaily.com/reports/Hayabusa2_probes_asteroid_for_secrets_999.html [March 20, 2019]
  8. https://en.wikipedia.org/wiki/Hayabusa2 [February 23, 2019]
  9. https://www.thestar.com/news/world/2019/04/26/japans-hayabusa2-spacecraft-makes-crater-on-asteroid-in-world-first.html [April 26, 2019]
  10. https://www.space.com/japan-blasts-crater-asteroid-ryugu-hayabusa2-photo.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190426-sdc [April 25, 2019]
  11. https://www.dailymail.co.uk/sciencetech/article-2858828/Japan-s-Hayabusa-2-begins-landmark-mission-hunt-asteroid-hold-clues-Earth-formed.html [April 27, 2019]
  12. https://www.japantimes.co.jp/news/2019/04/26/national/science-health/japans-hayabusa2-probe-succeeds-blasting-first-man-made-crater-asteroid/#.XMSRufmJIkI [April 26, 2019]
  13. https://en.wikipedia.org/wiki/Hayabusa2  [April 25, 2019]
  14. http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html

++++++++++++++++++++++++

S. Jaybarathan  [jayabarathans@gmail.com] [April 27, 2019]  [R-2]

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

12 thoughts on “ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிர வெடி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது”

  1. ஒரு பவுண்டு 2 கிலோ கிராம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

  2. அழகு தமிழில் .அற்புதமான விஞ்ஞான செய்தி.! வாழ்த்துக்களும் ..நன்றிகளும் !!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.