சூரிய சுற்று அரங்கு L -1 சுற்றுப் பாதையில் இந்திய விண்ணுளவி ஆதித்தியான் இணைந்து பூமியோடு சுற்றத் துவங்கியது.

சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா

https://youtu.be/XrmKEF70L1A

2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யா-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ) தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIAN POINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது.  அந்த ஆதித்யா விண்ணுளவி 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி PSLV-C57 ராக்கெட்டில் ஏவப்பட்டது. ஏழுவிதமான கருவிகளைச் சுமந்து செல்லும் விண்ணுளவி அடுத்த 5 ஆண்டுகள் சூரியனை ஆய்வு செய்து தகவல் அனுப்பும். ஏழில் 4 கருவிகள் சூரிய ஒளியை ஆராய்பவை. மற்ற 3 கருவிகள் ஒளிப் பிழம்பு [Plasma] & காந்த சக்தியை உளவு செய்பவை.

ஆதித்தியா ஆய்வுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
1.  ஆதித்தியா   L-1  சூரியனை உற்று நோக்க, தங்கு அரங்கில் சுற்றுப் பாதை அமைக்கப்பட வேண்டும்.

2.  ESA  தகவல்படி,  L-1 தங்கு அரங்கில் பெரிய இரு கோள்களின் ஈர்ப்பு விசைகள் கழிவுபட்டு நகர்ச்சி எளிதாய் ஆகிறது.

3. முதன்முதல் முழுவட்டச் சூரிய வடிவம் பதிவு செய்யப்பட்டது,

4.  சூரியப் புயல்கள், சூரிய வீச்சுகள் [Solar Flares] பற்றி முதல் விளக்கமாக அறிய முடிந்தது. அவற்றின் விளைவுகள் பூமியின் காலநிலையை எப்படி மாற்றுகின்றன?  விண்வெளியில் இயங்கும் 7800 உலக துணைக்கோள்கள் எவ்விதம்
பாதிக்கப்படுகின்றன?  என்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்கிறார்கள்.

5.  ஆதித்யா திட்டச் செலவு 46 மில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது.

பதிவாசிரியரைப் பற்ற

சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].

See author’s posts

Continue Reading

இந்தியத் தளஆய்வி சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தடம் வைத்து, வரலாற்று முதன்மை பெற்றுள்ளது.

சந்திரயான் -3 தளாய்வி நிலவின் தென்துருவத்தில் தடம் வைத்து, அதிலிருந்து தளவூர்தி இறங்கி நிலாவின் கரும் மண்ணை உளவு செய்கிறது.

2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி, விண்வெளித் தேடல் வரலாற்றில் ஒருபெரும் சாதனை புரிந்துள்ளது. இதுவரை நிலவை நோக்கிச் சென்று வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சைனா முப்பரும் வல்லரசுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்று விட்டது. 2019 இல் சந்திராயன் -2 திட்டம் 95% வெற்றி பெற்று, இறுதியில் பழுது ஏற்பட்டு, நில ஆய்வித் தொடர்பு அறுந்து போனது. ஆயினும் இன்றும் இயங்கிவரும் சந்திராயின் -2 விண்சுற்றி உதவியால், சந்திராயின் -3 நில ஆய்வி மெதுவாகத் தடம் வைத்து, அதிலிருந்து நில ஊர்தி இறங்கி இயங்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை எந்த நாடும் துணிந்து செய்யாத தென் துருவ தடவைப்பை, திட்டமிட்டு செய்து காட்டி உள்ளது. மேலும் தென்துருவப் பிரதேசத்தில் பல்வேறு தாதுக்கள், பனிக் குன்றுகள் காணப் படலாம் என்ற எதிர் பார்ப்பும் இருந்துள்ளது. 

அடுத்து இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் குறிக்கோள்கள் என்ன ? மனிதர் இயக்கும் விண்வெளிப் புவிச்சுற்று பயணப் பயிற்சி, நிலவில் குடியேற, சர்வ தேச நிலாச் சுற்று நிலையக் கூட்டமைப்பு. மேலும் ஆதித்தியான் -1 என்னும் பெயருடைய , சூரியனைச் சுற்றி பருவநிலை, சூழ்வெளி நிலை அறிய ஒரு விண்சிமிழ் இஸ்ரோ [ISRO] [INDIAN SPACE RESEARCH ORGANIZATION] ஏவப் போவதாகவும் திட்டங்கள் உள்ளன.      

image.png

A series of images sent by Chandrayaan-3 show the craters on the lunar surface getting larger and larger as the spacecraft gets closer

image.png

Chandn -3 Rover moves out to explore the Moon’s surface near the South Pole area

image.png
image.png

1. https://www.livemint.com/news/how-india-pulled-off-its-frugal-moon-landing-11692982290717.html

2. https://en.wikipedia.org/wiki/Chandrayaan-3#:~:text=Chandrayaan-3%20Integrated%20Module%20in%20a%20cleanroom%20%20,%20%2057320%20%2026%20more%20rows%20

3.   

Chandrayaan-3 Integrated Module in a cleanroom
Mission typeLanderRover
OperatorISRO
COSPAR ID2023-098B
SATCAT no.57320
Websitewww.isro.gov.in/Chandrayaan3.html
Mission duration1 month and 11 days (elapsed)Propulsion module: ≤ 3 to 6 months (planned) 20 days (elapsed) (since orbit insertion)Vikram lander: ≤ 14 days (planned) 2 days (elapsed) (since landing)Pragyan rover: ≤ 14 days (planned) 2 days (elapsed) (since deployment)
Spacecraft properties
BusChandrayaan
ManufacturerISRO
Launch mass3900 kg[1]
Payload massPropulsion Module: 2148 kgLander Module (Vikram): 1726 kgRover (Pragyan) 26 kgTotal: 3900 kg
PowerPropulsion Module: 758 WLander Module: 738 WWS with Bias Rover: 50 W
Start of mission
Launch date14 July 2023 09:05:17 UTC[2]
RocketLVM3 M4
Launch siteSatish Dhawan Space Centre
ContractorISRO
Moon orbiter
Orbital insertion5 August 2023
Orbital parameters
Pericynthion altitude153 km (95 mi)
Apocynthion altitude163 km (101 mi)
Moon lander
Spacecraft componentVikram lander
Landing date23 August 2023 12:32 UTC[3]
Landing site69.367621°S 32.348126°E[4](between Manzinus C and Simpelius N craters)[5]
Moon rover
Landing date23 August 2023
Chandrayaan programme← Chandrayaan-2LUPEX →

ரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது

View Post

2023 ஆகஸ்டு 11 ஆம் தேதி ரஷ்யா நிலவு நோக்கி ஏவிய லூனா -25 நிலா தளச் சிமிழ்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள் முயலும் முதல் விண்வெளித் திட்டம். நிலாவின் தென் துருவத்தில் லூனா-25 நிலாசிமிழ் தடம் வைக்க வேண்டும், இந்தியச் சந்திரயான்-3 அதே தென் துருவப் பரப்பில் தடம் வைப்பதற்கு முன்னர்.  

நிலாவின் தென் துருவப் பகுதியில் தான் பேரளவு நீர்ப்பனிப் பாறைகள், எரிசக்தி மூலக்கூறுகள். தனிமங்கள், தாதுப் பொருட்கள் இருக்கலாம் என்று இந்தியா, ரஷ்யா போட்டி போட்டுக் கொண்டு முயல்கின்றன.  

ரஷ்ய முன்னறிப்பு லூனா-25 விண்சிமிழ் 800 கி.கி.எடையுள்ள நிலாத்தளச் சிமிழில் பழுது ஏற்பட்டு எதிலோ மோதி, அதன் தொடர்பு அறுந்து போய் இருப்பிடம் தெரியாமல் போனது,

இந்தியாவின் சந்திரயான்-3 தளவுளவி நிலவின் தென் துருவத்தில் 2023 ஆகஸ்டு 23 இல் மெதுவாக இறங்கி தடம் வைக்கும், அடுத்து அதிலிருந்து ஒரு தளவூர்தி நகர ஆரம்பிக்கும்; அது ஒரு வாரம் தவழ்ந்து நிலவின் தகவல் அனுப்பும் என்று இந்தியா திட்டமிட்டு  எதிர்பார்த்து உள்ளது.  

3900 கி.கி. எடையுள்ள சந்திரயான்-3 விண்சிமிழ் தளவுளவி, தளவூர்தியில் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. ஏவிய பிறகு 40 நாட்கள் கழித்து, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தடம் வைக்கும். ரஷ்யன் லூனா-25 விண்தளச் சிமிழ் 7 நாட்களில் நிலவில் இறங்க டிசைன் செய்யப் பட்டது. 

1. The Luna-25 craft blasted off from far-east Russia on August 11, 2023 was crash-landed on Moon BBC News2.

 Russia’s Luna-25 spacecraft crashes into the moon | CBC News

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலாத்தள தட வைப்பு போட்டியில் லூனா-25 விண்சிமிழை ஏவியுள்ளது

Left: Russia’s Luna-25 spacecraft, seen here during prelaunch preparations, is the country’s first moon landing attempt since 1976. Right: The Indian Space Research Organisation’s Chandrayaan 3 moon lander and rover are prepared for a July 14, 2023 launch to the moon. (Image credit: Roscosmos & ISRO)

https://www.space.com/chandrayaan-3-vs-luna-25-lunar-pole-showdown?

ரஷ்யன் லூனா -25 & இந்தியன் சந்திரயான் -3 போட்டி

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி

சி. ஜெயபாரதன், கனடா

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல, ரஷ்யா லூனா -25 [LUNA -25] நிலவுத் தளவுளவியை 2023 ஆகஸ்டு 8 ஆம் ஏவியுள்ளது. நிலவு நோக்கிப் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிலாத் தளவுளவி ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவை நெருங்கும் என்று ஏவப்பட்டுள்ளது. வேகமாய் இயங்கும் ரஷ்ய விண்சிமிழ் ஏவுகணை நிலவை 5 அல்லது 6 நாட்களில் நெருங்கும். அடுத்து அது 3 அல்லது 7 நாட்களில் 100 கி.மீ [60 மைல்] உயரத்தில் நிலவைச் சுற்றி, தரையில் இறங்கும்.

இதுவரை நிலவில் இறங்கித் தளவூர்தி தவழ்ந்த முப்பெரும் வல்லரசுகள் அமெரிக்கா, ரஷ்யா, சைனா ஆகியவையே. ஆனால் எந்த நாடும் துணிந்து நிலவின் தென்துருவத்தில், இதுவரை இறங்கிய தில்லை. தென் துருவத்தின் இருண்ட குழிப் பிரதேசத்தில் நீர்ப்பனி இருப்பு பலவித உலோகங்கள் இருப்பு இந்த நாடுகளை ஈர்த்துள்ளன. பனிக் குன்றுகளின் நீரிலிருந்து எரிசக்தி ஹைடிரஜன், ஆக்சிஜென் வாயுக்கள் பிரித்தெடுத்து பிற்காலத்தில் ராக்கெட் ஏவு எரிசக்தி தயாரிக்கலாம். இந்த தொழில் நுணுக்கப் பந்தயத்தில், வெற்றி பெறுவது ரஷ்யாவா அல்லது இந்தியாவா என்று காணப்போவது ஒரு வரலாற்று சாதனை யாகக் கருதப்படும்.

https://www.thespacereview.com/article/2228/1

https://www.russianspaceweb.com/luna_resurs.html

RUSSIAN GIANT ROCKET ASSEMBLY

edition.cnn.com/2023/08/10/world/russia-luna-25-launch-scn/index.html

இந்திய விண்ணுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவிப் பயணம் செய்கிறது.

இந்திய விண்ணுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவப்பட்டது

jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

This entry is part 1 of 7 in the series 16 ஜூலை 2023

Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully

image.png

நிலாவில் இறங்கும் சந்தரயான் – 3 தளவுளவி & நகரும் தளவூர்தி

India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com)

image.png
image.png

சந்திரயான் -3 ராக்கெட், விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி

image.png

நிலவு நோக்கி ராக்கெட் போக்கு

image.png

சந்திரயான் -3 தளவுளவி

image.png

விண்ணுளவி நிலவுப் பயணப் பாதை2023 ஆண்டில் இந்தியா சந்திரயான் – 3 விண்சுற்றி அனுப்பி  நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.2023 ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆணையகம் சந்திரயான் -3 விண்ணுளவியை நிலவை நோக்கி வெற்றிகர மாக ஏவியுள்ளது. அத்திட்டத்தின் குறிப்பணி, விண்ணுளவி நிலவை நெருங்கிச் சுற்றி, தென்துருவத்தில் ஒரு தளவுளயை மெதுவாக இறக்கிய பின்பு, அதிலிருந்து ஒரு தளவூர்தி வெளிவரும். அந்த விண்வெளி நிகழ்ச்சி 2023 ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி நிகழும். வெற்றிகரமாக அது நிகழ்ந்தால் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளோடு நான்காவது இடத்தைப் பெறும். இதே குறிப்பணியில் ஏவப்பட்ட சந்திரயான் -2 முழு வெற்றி அடையாது, தளவுளவி நிலவின் தரையில் மோதி முறிந்து தோல்வி யுற்றது.

சந்திரயான் -3 விண்ணுளவியின் எடை 3900 கி கிராம். விகரம் என்னும் பெயருடைய தளவுளவி யின் எடை 1500 கி.கிராம். பிரஞ்யான் என்னும் பெயருடைய தளவூர்தி சந்திரயான் -3 திட்டச் செலவு 75 மில்லியன் டாலர் [சுமார் ரூபாய். 6 பில்லியன்] [2023 நாணய மதிப்பு]. இதுவரை இறங்கித் தேடாத நிலவின் தென்துருவத்தில், விகரம் இறங்கி, தளவூர்தி ஆய்வுகள் புரிந்து பூமிக்குத் தவவல் அனுப்பும்.

பூமியின் 15 நாட்கள், நிலவின் ஒருநாள் ஆகும். அதாவது சூரிய வெளிச்சம் 15 நாள் நிலவில் தெரியும். 15 நாட்கள் இருள் மயம். சூரிய சக்தியில் இயங்கும் தளவுளவியும், தளவூர்தியும் 15 நாட்கள் இயங்கும். 15 நாட்கள் முடங்கும்.. சந்திரியான் -3 குறிப்பணி வெற்றி அடைந்தால், அடுத்து விமானிகள் ஓட்டும் விண்வெளிச் சுற்றுப் பயணத்தை முயலும்..

1. Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully – BBC News

2. India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com)

3. https://www.space.com/chandrayaan-3-indian-moon-mission-rover#section-chandrayaan-3-mission-goals

4. https://en.wikipedia.org/wiki/Chandrayaan-3#:~:text=Chandrayaan-3%20is%20the%20third%20and%20most%20recent%20lunar,propulsion%20module%20behaves%20like%20a%20communication%20relay%20satellite.

****************************************

Chandrayaan-3 Update: ISRO Successfully Completes Translunar Injection of the Lunar Spacecraft

image.png

Chandrayaan -3 Lander Module with Rover during Trans Lunar Injection

2023 ஜூலை 14 இல் நிலவை நோக்கி ஏவிய  இந்திய விண்சிமிழ் சந்திரயான் – 3 ஆகஸ்டு 5 ஆம் நாள் எங்கே பயணம் செய்கிறது ?  என்ன நிகழ்கிறது ?  விண்சிமிழ் பூமியை ஐந்து முறை நீள்வட்டப் பாதையில் சுற்றி, ஒவ்வொரு முறையும் பூமியின் சுழல்வீச்சு உந்துவிசையால் வேகம் மிகுந்து, நீள்வட்டப் பாதை நீண்டு, நீண்டு நிலவை நெருங்கியது.  ஆகஸ்டு முதல் தேதி, சிறு தள்ளுவிசை ஏவு கணைகள் அரை மணி நேரம் இயங்கி, விண்சிமிழ் நிலவு ஈர்ப்பு மண்டலத்தில் தாவி [Trans Lunar Orbit] உள்ளது.

image.png

 Chandrayaan -2 Orbiter has been used in Chandrayaan -3 to trasmit the message.

இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் இஸ்ரோ [ISRO] ஆகஸ்டு 23-24 தேதி நாட்களில் சந்திரயான் தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கும், அடுத்து அதிலிருந்து, தளவூர்தி வெளியேறி நிலவில் நகரும் என்று எதிர்நோக்கி இருக்கிறது.  அவ்விதம் நிகழும் அந்த வரலாற்று மைல்கல் நிகழ்ச்சியைப் பதிவு செய்யும் ஓர் அற்புதக் கருவி ஆல்ஃபா துகள் எக்ஸ்ரே ஒளிப்பட்டை மானி [Alpha Particle X-Ray Spectrometer] விண்சிமிழ் தளவுளவி, தளவூர்தி யில் இணைக்கப் பட்டுள்ள மற்ற கருவிகள் நிலவின் புழுதி இரசாயனக் கலவைகளை அறிந்து பூமிக்கு அனுப்பும்.  சந்திராயன் -2  2019 இல் ஏவிய விண்சுற்றி [Orbiter] இன்னும் நிலவைச் சுற்றி இயங்கி வருவதால், அடுத்து சந்திராயன் -3 திட்டத்தில் விண்சுற்றி ஒன்று இணைக்கப் படவில்லை.  

2019 இல் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பழுதுகள் ஏற்பட்டு நிலவில் விழுந்து முறிந்து போனது.  இம்முறை அவ்விதத் தவறுகள் நிகழா என்று இஸ்ரோ எதிர்பார்க்கிறது. 

image.png

Chandrayaan -3 Trans Lunar Injection on August 1, 2023 

https://weather.com/en-IN/india/space/news/2023-08-01-isro-completes-translunar-injection-of-chandrayaan-3

Chandrayaan-3 Integrated Module in clean room
OperatorISRO
COSPAR ID2023-098A
SATCAT no.57320
Websitewww.isro.gov.in/Chandrayaan3_New.html
Mission duration19 days (elapsed)
Propulsion module: ≤ 3 to 6 month (planned)
Vikram lander: ≤ 14 days (planned)
Pragyan rover: ≤ 14 days (planned)
Spacecraft properties
BusChandrayaan
ManufacturerISRO
Launch mass3900 kg
Payload massPropulsion Module: 2148.00 kg
Lander Module (Vikram): 1752 kg including Rover (Pragyan) of 26 kg
Total: 3900.00 kg
PowerPropulsion Module: 758 W Lander Module: 738W, WS with Bias Rover: 50W
Start of mission
Launch date14 July 2023 14:35:17 IST, (9:05:17 UTC)[1][2]
RocketLVM3 M4
Launch siteSatish Dhawan Space Centre
ContractorISRO
Moon lander
Spacecraft componentRover
Landing date23 August 2023 17:47 IST, (12:17 UTC)[3][4]
Landing site69.367621 S, 32.348126 E[5]

(between Manzinus C and Simpelius N craters)[6]

Chandrayaan-3 mission patchChandrayaan programme← Chandrayaan-2Lunar Polar Exploration Mission → 

Chandrayaan-3 is the third and most recent lunar Indian Space Research exploration mission under the Chandrayaan programme. It consists of a lander named Vikram and a rover named Pragyan similar to Chandrayaan-2, but does not have an orbiter. Its propulsion module behaves like a communication relay satellite. The propulsion module carries the lander and rover configuration until the spacecraft is in a 100 km lunar orbit.[7][8]

Following Chandrayaan-2, where a last-minute glitch in the landing guidance software led to the lander crashing after entering lunar orbit, another lunar mission was proposed.[9]

The launch of Chandrayaan-3 took place on 14 July 2023, at 2:35 pm IST[10] and lunar injection of 100 km circular polar orbit was completed successfully as part of phase one.[2][11] The lander and rover are expected to land near the lunar south pole region on 23 August 2023.[12]

The Chandrayaan-3 mission is a stepping stone towards ISRO’s future interplanetary missions. The key idea is technology demonstration of crucial capability to soft land on lunar surface safely that the earlier mission could not achieve[13].

Background[edit]

As part of the Chandrayaan programme to demonstrate soft landing on the Moon, ISRO launched Chandrayaan-2 on board a Launch Vehicle Mark-3 (LVM3) launch vehicle consisting of an orbiter, a lander and a rover.[14] The lander was scheduled to touchdown on the lunar surface in September 2019 to deploy the Pragyan rover.[15][16]

The European Space Tracking (ESTRACK) operated by European Space Agency (ESA) will support the mission according to a contract. Under the new cross-support arrangement, ESA tracking support could be provided for upcoming ISRO missions such as those of India’s first human spaceflight programme, Gaganyaan, the Chandrayaan-3 lunar lander and the Aditya-L1 solar research mission. In return, future ESA missions will receive similar support from ISRO’s own tracking stations.[17]

Objective[edit]

ISRO has set three main objectives for the Chandrayaan-3 mission, which include:

  1. Getting a lander to land safely and softly on the surface of the Moon.
  2. Observing and demonstrating the rover’s loitering capabilities on the Moon.
  3. In-site observation & conducting experiments on the materials available on the lunar surface to better understand composition of the Moon.[18]

Design[edit]

Chandrayaan-3 Integrated Module – Views

Chandrayaan-3 comprises three main components:

Propulsion Module:

Chandrayaan-3 Propulsion Module

The propulsion module will carry the lander and rover configuration till 100 km lunar orbit. It is a box-like structure with one large solar panel mounted on one side and a large cylinder on top (the Intermodular Adapter Cone) that acts as a mounting structure for the lander. [8][7]

Lander:

Chandrayaan-3 Lander

The lander is responsible for the soft landing on the Moon. It is also box-shaped, with four landing legs and four landing thrusters of 800 newtons each. It will be carrying the rover and various scientific instruments to perform in-site analysis.

The lander for Chandrayaan-3 will have only four throttle-able engines, unlike Vikram on Chandrayaan-2 which had five 800 Newtons engines with a fifth one being centrally mounted with a fixed thrust.[citation needed] Additionally, the Chandrayaan-3 lander will be equipped with a Laser Doppler Velocimeter (LDV).[19] The impact legs are made stronger compared to Chandrayaan-2 and increased instrumentation redundancy. ISRO is working on improving the structural rigidity and adding multiple contingency systems.[20]

Rover:

Chandrayaan-3 Rover

Chandrayaan-3 Rover Overview:

  • Six-wheeled design
  • Weight of 26 kilograms (57 pounds)
  • Range of 500 metres (1,600 ft)
  • Dimensions : 917 millimetres (3.009 ft) x 750 millimetres (2.46 ft) x 397 millimetres (1.302 ft)
  • Scientific instruments including cameras, spectrometers, and a drill
  • Expected lifespan of one lunar day (14 Earth days)
  • Communication with the lander and ground control team in India

The Chandrayaan-3 Rover is expected to make a number of important scientific discoveries, including:

  • The composition of the lunar surface
  • The presence of water ice in the lunar soil
  • The history of lunar impacts
  • The evolution of the Moon’s atmosphere

Instruments[edit]

Lander

  • Chandra’s Surface Thermophysical Experiment (ChaSTE) will measure the thermal conductivity and temperature of the lunar surface.
  • Instrument for Lunar Seismic Activity (ILSA) will measure the seismicity around the landing site.
  • Langmuir Probe (LP) will estimate the plasma density and its variations.[21]

Rover

  • Alpha Particle X-Ray Spectrometer (APXS) will derive the chemical composition and infer mineralogical composition of the lunar surface.
  • Laser Induced Breakdown Spectroscope (LIBS) will determine the elemental composition (Mg, Al, Si, K, Ca, Ti, Fe) of lunar soil and rocks around the lunar landing site.[22]

Propulsion Module

  • Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) to study the spectral and polarimetric measurements of Earth from the lunar orbit in the near-infrared (NIR) wavelength range (1-1.7 μm).[8][7]

Alpha Particle X-Ray Spectrometer (APSX) payload on the Rover

Chandra’s Surface Thermophysical Experiment (ChaSTE) payload on the Lander

Instrument for Lunar Seismic Activity (ILSA) payload on the Lander

Laser Induced Breakdown Spectroscope (LIBS) payload on the Rover

Langmuir Probe (RAMBHA-LP) payload on the Lander

Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) payload on the Propulsion Module.

Launch[edit]

LVM3 M4, Chandrayaan-3 – Launch vehicle lifting off from the Second Launch Pad (SLP) of SDSC-SHAR, Sriharikota

Chandrayaan-3 was launched on 14 July 2023, at 2:35 pm IST as scheduled, from Satish Dhawan Space Centre Second Launch Pad in SriharikotaAndhra Pradesh, India. The spacecraft has been effectively placed in the trajectory it will take to reach the moon. It is anticipated that the Chandrayaan-3 mission will achieve a soft landing on the lunar South Pole region on 23 August.[23]

Choosing the month of July for the launch of Chandrayaan 3 was a special move because of a calculation made by ISRO regarding the closeness of Earth and Moon.[24]

Mission profile[edit]

Animation of Chandrayaan-3

பூகோளம் முன்னிலைக்கு மீளாது

காலம் மாறிப் போச்சு ! 

ஞாலத்தின் வடிவம்  

கோர மாச்சு ! 

நீர்வளம் வற்றி  

நிலம் பாலை யாச்சு ! 

துருவத்தில் 

உருகுது பனிக் குன்று ! 

உயருது 

கடல் நீர் மட்டம் !   

பூகோளம் சூடேறி 

கடல் உஷ்ணம் ஏறுது ! 

காற்றின் வேகம் மீறுது ! 

பேய்மழை கொட்டி

நாடெல்லாம்  

வீடெலாம், வீதியெலாம் மூழ்குது ! 

வெப்ப யுகத்தில் 

காடெல்லாம் எரியுது;

அண்டை நாடுகள்

சண்டை யிட்டு, குண்டு போட்டு

நகரங்கள்

நரகங்கள் ஆயின !

தொழிற்சாலை கள் வெடித்து 

கரி வாயு,விஷ வாயு  

பெருகுது ! 

View Post

பூகோளம் முன்னிலைக்கு 

மீளாது

நாதொறம்

மக்கள் வேலை போச்சு ! 

கூலி போச்சு ! 

நோய் நொடிகள்  

தாக்க, 

மக்கள் எல்லாம் இழந்து  

புலப்பெயர்ச்சி ! 

இப்போது 

வெப்ப யுகப் பிரளய  

வேளையில் 

நாமென்ன செய்யலாம் 

நாட்டுக்கு ?  

ஊருக்கு ஊர் தேவை, 

தன்னார்வ 

முன்னுதவிப் படைகள், 

பன்னூறு 

பின்னுதவிப் படைகள். 

ஊர்ச் செல்வர் பண உதவி 

உண்டி, வாகனம்,  

கருவிகள் 

தங்கு விடுதி தயார் 

செய்வதற்கு. 

பேரிடர் பாதுகாப்பணி

கண்காணிப்பு.

நாட்டுக்கு 

முதற்கண் தேவை. 

பெட்ரோல்  

விலை ஏறுது ! 

பயணத்தை குறைப்பாய் ! 

பஸ், ரயிலில்  

பயணம் செய்வாய்.  

நிலக்கரி, எரிவாயு எரிசக்தி  

பயன்பாடு 

அவசரத் தேவைக்கு மட்டும். 

கவனமாய் இயக்கு 

அணுமின் சக்தி நிலையத்தை. 

விலை மிகை ஆயினும் 

யுரேனிய உலோகம் பேரளவு 

கிடைக்குது. 

அணுமின் நிலையங்கள்

தேசத்துக்கு

தேவையான தீங்கு ! 

தொழிற் சாலைகளில்

கரிப் புகை வீச்சை 

குறை, குறை,  குற இபப்பாய் ! 

கரிவாயுவை 

விழுங்கும், மாற்றும்  

இரசாயன முறைகளை உடனே  

கண்டுபிடி. 

கரிப்புகைத் தண்டனை

உண்டு 

தவறிடும் அதிபருக்கு ! 

காற்றாடி, சூரியக் கதிர்ச்சக்தி

நாட்டுக்குப் போதா !

வீட்டுக்கு வேணும்,

பச்சை எரிசக்தி சாதனங்கள் 

வாகனங்கள் 

உற்பத்தி செய்யனும்.

கதிரியக்கம் இல்லாத

வாணிப முறையில்

அணுப் பிணைவு மின்சக்தி

நிலையங்கள் இயங்க 

ஐந்து, பத்து ஆண்டுகள் கூட

இன்னும் ஆகலாம் ! 

*******************

2022 ஆம் ஆண்டு வையகத் தமிழ்வலைப் பூங்கா வாசகர் பார்வைகள்

Posts & pages

Views

எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணு உலை

புவி மையப் பூத அணு உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது.

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

காலக் குயவன் ஆழியில் படைத்த
ஞாலத்தின் மையத்தில்
அசுர வடிவில், பூர்வ
அணுப்பிளவு உலை ஒன்று இயங்கி
கணப்பளித்து வருகுது
பில்லியன் ஆண்டுகளாய் !
எருக்கருவை இடையே மீள்
பெருக்கும்
வேகப் பெருக்கி அணு உலை !
உட்கரு உள்ளே
கட்டுப் பாடுடன் இயங்கியும்
நிறுத்தம் அடைந்தும்
விட்டு விட்டு வேலை செய்வது !
வெளிக் கருவிலே
கனல் குழம்பைச் சமைத்துக்
கொதிக்க வைக்குது !  கனல் குழம்பு
குவல யத்தைக்
குத்தூசி போல் குடைந்து
பீறிட்டெழும் எரிமலைகள் !
தாறு மாறாய்
ஏறி, இறங்கி ஊர்ந்திடும்
தாரணியின் குடல் தட்டுகள் !
அங்கிங் கெனாதபடி
பொங்கிப் பீறிடும்
பூதக் கனல் எரிமலைகள் !
நர்த்தனம் புரியும் புவித்தளம் !
அணு உலை வெப்ப மீறலைப் புவியில்
தணிப்பவை அவை !
உட்கருவின்
பூத அணு உலையின்
மிச்ச எரிசக்தி அளவை
இருபது ஆண்டுக்குள் கணித்து
உறுதி செய்வார்  !

++++++++++

புதிய உமர் கயாம்

earth-hottest-core

நாலாயிரம் மைல் ஆழத்தில் பூமியின் உட்கருவில் ஐந்து மைல் விட்டத்தில் கோள வடிவில் யுரேனியம் & புளுடோனியம் எரிசக்தி உண்டாக்கும் பூத வேகப் பெருக்கி அணுக்கரு உலை இயங்கி வருவதற்கு வலுவான ஆதாரம் இருப்பதைக் கண்டறிந்தோம்.  அந்த அணு உலை இயங்கிடும் போது புதிய எருக்கருவையும் தொடர்ந்து ஈன்று பெருக்கிறது. அதனால் ஏற்படும்  பெரு விளைவு என்ன வென்றால், அந்த அணு உலை ஒருநாள் எரிசக்தி பூராவும் தீர்ந்துபோய், நம்மைப் பாதுகாக்கும் பூகாந்தம் மறைந்து, உயிரினங்களும் ஒருங்கே மரித்துவிடும்.

மர்வின் ஹெர்ன்டான் [ Oak Ridge Researcher, USA]

பூமிக்கு தேவையான இன்றைய எரிசக்திக்கு உகந்த புவிக் கூட்டுக் கணினி மாடலை முன்னறிவித்த விஞ்ஞானிகளில் ஒருவனாக என்னைக் கருதுகிறேன். இப்போது யூகிப்புக் கோட்பாடுகளில்தான் இருக்கிறோம். இன்றைய நிலையில் அது சரியோ, தப்போ என்று நான் கவலைப்படப் போவதில்லை.

வில்லியம் மெக்டோனா [பேராசிரியர் பூதளவியல், மாரிலாண்டு பல்கலைக் கழகம்] 

earth-core-cutaway-1

பூமிக்குத் தொடர்ந்து தேவைப்படும் பேரளவு எரிசக்தி

பாதுகாக்கும் பூகாந்தத் தேவைக்கும், எரிமலை, பூகம்ப  அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] இயக்கத்துக்கும், பூமிக்குத் தொடர்ந்து எரிசக்தி ஊட்ட எருக்கரு [Fuel] அவசியமாகிறது.  பூமி தனது எந்திரத்தை இயக்க இருமுறைகளில் எரிசக்தியை எடுத்துக் கொள்கிறது.  கோள் உண்டாகக் கிடைத்த பூர்வ வெப்பசக்தி [Primordial Heat Energy], அடுத்து உட்கருவில் இயங்கும் யுரேனிய அணுப்பிளவில் கிடைக்கும் அணுக்கருச் சக்தி. விஞ்ஞானிகள் இதுவரைப் பல்வேறு கணினிப் போலி மாடல்களின் மூலம், பூமியில் எவ்வளவு அளவு யுரேனியம் /தோரியம் மிச்சமுள்ளது  என்று கூற முடியவில்லை.

2016 செப்டம்பரில் புதியதோர் வெளியீட்டில் பூதளவாதிகளில் ஒரு குழுவினரும், நியூடிரினோ பௌதிகவாதிகளில் ஒரு குழுவினரும் 2025 ஆண்டுக்குள் பூமிக்குள் எவ்வளவு அணுவியல் எருக்கரு மிச்சமுள்ளது என்று கணித்துவிடுவோம் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்கள்.  அந்த வெளியீடு 2016 செப்டம்பர்  “இயற்கை” [Nature Journal] விஞ்ஞான அறிவிப்பாக வந்துள்ளது. அதில் ஈடுபாட்ட விஞ்ஞானிகள் :

  1.  மாரிலாண்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
  2. பிரேகில், சார்லஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
  3. சைனா  பூதளவியல் கல்விப் பேரவை, விஞ்ஞானிகள்.

பூமிக்குள் இருக்கும் மிச்ச எரிசக்தியைக் கணிப்பது எப்படி ?

2025 ஆண்டுக்குள் பூமியின் உட்கருவில் மிஞ்சியுள்ள எரிசக்தி அளவைக் கணிக்க விஞ்ஞானிகள், தாமறிந்த மிக நுண்ணிய துகள்களைக் [Tiniest Subatomic Particles like Geo-neutrinos] கருவிகள் மூலம் கண்டறிய வேண்டும். இந்த எதிர் நியூட்ரினோக்கள் [Antineutrino Particles] மனிதர் அமைத்த அணுமின் நிலையங்கள், சூப்பர்நோவா, கருந்துளைகள், சூரியன்  போன்ற விண்மீன்களுக்குள் நிகழும் அணுக்கரு இயக்கங்களில் உண்டாகும் கிளை விளைவுகள்.  அந்த நியூட்ரினோக்கள் புவி மைய அணுக்கரு உலை இயக்கக் கதிரியக்கத் தேய்விலும் [Radioactive Decay] தோன்றுகின்றன.

canadian-sno-facility

அந்த எதிர் நியூட்ரினோக்கள் ஹைடிரஜன் அணுக்களுக்குள் விழும்போது, அந்நிகழ்ச்சியைக் கண்டுபிடிக்கும் கருவியானது இரு தனித்துவ ஒளிப் பொறிகளை  [Light Flashes] உண்டாக்கி நிகழ்ச்சியை அறிவிக்கும். அத்தகைய ஒளிப்பொறி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை எத்தனை யுரேனியம் & தோரியம் அணுக்கள் பூமிக்குள் உள்ளன என்று நேரடி விகிதத்தில் காட்டும்.  யுரேனியத் தோரிய தேய்வு வெப்பசக்தி, மற்றும் பொட்டாசியம் உண்டாக்கும் வெப்பசக்தி ஆகியவையே பெரும்பான்மை எரிசக்தியாக பூமிக்குள் இயங்கி வருகிறது.  எரிமலை வாயுக்கள் எழுச்சிகளில் காணும் ஹீலியம்-3 வாயுவே பூமிக்குள் இருக்கும் யுரேனிய/ தோரிய அணு உலை இருப்பை உறுதிப்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சி எண்ணிக்கையைக் கணக்கிடுவது மிக மிக மெதுவானது. உலகிலே உள்ள ஐந்து நியூட்ரினோ கணக்கிடும் கருவிகள் ஓராண்டுக்கு 16 நிகழ்ச்சிகளே பதிவு செய்கின்றன.  அவை ஜப்பான் [KamLAND], இத்தாலி [Borexino], கனடா [SNO+ Detector], சைனா [JUNO] & அண்டார்க்டிகா [Neutrino Dtector] அமைப்புகளில் இராப் பகலாய் பதிவாகின்றன.  2022 ஆண்டில் இன்னும் மூன்று கருவிகள் இயங்கி ஆண்டுக்கு 536 நிகழ்ச்சிகள் பதிவாகும்.  புவி மைய அணுக்கரு எரிசக்தி மிச்ச இருப்பதைக் கணிப்பதால் பூமியின் முடிவை அறிய முடியும். எரிசக்தி வெளியீடு 4 மில்லியன் மெகாவாட் என்று முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பூமியின் ஆயுள் 4.5 பில்லியன் ஆண்டுகள் என்ற முந்தைய யூகிப்பு, எரிசக்தி முழுதும் தீர்ந்து, ஆயுள் 2 பில்லியன் ஆண்டுகள் என்றாகிப் போய்விடலாம் !

“பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ?  உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது.  அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

“பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

“ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)


பூகோள மையத்தில் இயங்கும் பூத வேகப் பெருக்கி அணு உலை

உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல !  கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார்.  காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார்.  டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். ஐந்து மைல் விட்டமுள்ள கோள வடிவில் யுரேனியம் [+தோரியம்] நிறைந்த பூத வேகப் பெருக்கி அணுசக்தி உலை அது.  அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது.  அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது.  தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !


பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது !  துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல !  இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !

ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன !  2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன !  அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ?  அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !

பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன.  1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது.  மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன !  நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது.  சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன.  பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும்.  2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ?  அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை.  ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.


பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது !  புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம்.  அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது !  அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம்.  சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி !  திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது.  யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.


உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm).  யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது.  தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ.  இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது.  அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.


யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்கு கின்றன.  பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது.  ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன.  அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும்.  அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும்.  திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும்.  மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும்.  யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும்.  இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன.  அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள்.  நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது.  இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

earth-magnetic-field

விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி மைய அணுக்கரு உலை

பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.  அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor).  அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை.  மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும்.  தானாக நிறுத்தம் அடையும்.  அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது.  இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும்.  நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும்.  பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் !  இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.


பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் !  அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு !  உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும்.  அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது.  செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது.  செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது !  செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது.  ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !


4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான்.  அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது.  இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !

+++++++++++++++++

Images :  BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

Information  :

1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
4. Encyclopedia Britannica 15th Edition [1978]
5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
6. National Geographic Frontiers of Science [1982]
7. The Vesuvius Volcano at the Bay of Naples.
8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
10. Inside the Volcano, National Geographic [November 2000].
11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html(Italian Volcano))
11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html(Hawaii Volcano)
12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
33.  Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)
39 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)
40.  http://understandearth.com/Georeactor.htm
41. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor  [February 7, 2016.
42.  http://nuclearplanet.com/Herndon’s%20Nuclear%20Georeactor.html
43. https://www.sciencedaily.com/releases/2016/09/160909094848.htm   [September 9, 2016]
44.  http://www.natureworldnews.com/articles/28504/20160911/scientists-to-calculate-how-much-fuel-is-left-on-earth-by-2025.htm [September 11, 2016]
45. http://timesofindia.indiatimes.com/articleshowprint/54291564.cms  [September 12, 2016]
46.http://www.spacedaily.com/reports/Scientists_expect_to_calculate_amount_of_fuel_inside_Earth_by_2025_999.html [September 13, 2016]
47. http://www.spacedaily.com/news/earth-03k.html  [May 31, 2003]
48.  http://geothermalenergy.webnode.com/geothermal-energy-the-description/
49.  http://rense.com/general25/vore.htm
50.  https://en.wikipedia.org/wiki/Sudbury_Neutrino_Observatory [May 31, 2016]
51.  https://en.wikipedia.org/wiki/Neutrino_detector [July 20, 2016]
52. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor [September 30, 2016]
53.  http://nuclearplanet.com/Question%20Earth-Core%20Convection.html  [ By J. Marvin Herndon

பதிவாசிரியரைப் பற்றி

சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].

சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

 


சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

 March 1, 2023

சிறுவர் விருந்தை ஏற்பாடு செய்த வைகைச் செல்வி

அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார்.

இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது.  இவரது முதல் தமிழ் நூல் ‘ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” கலைமகள் வெளியீடு 1964இல்  சென்னை பல்கலைக்கழக முதற்பரிசு பெற்றது.  இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன.  இப்போது 2022-2023இல் வல்லமை.காம், இவரது தமிழாக்க நாடகமான “ஏழ்மைக் காப்பணிச் சேவகி” பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பராவை வெளியிடுகிறது.  அதே சமயத்தில்  திண்ணை.காம்  ஷேக்ஸ்பியரின் “ஓத்தல்லோ” நாடகத்தைத் தமிழ்த் தழுவலாய் வாரம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது.

2023 பிப்ரவரி 26 அன்று  சி. ஜெயபாரதன், 89 முடிந்து 90 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு, அன்றைய தினம் சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு அவர் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன், ஜெயபாரதனுக்கு வாழ்த்துகள் இசைத்துக்  கொண்டாடினர்.

அறிஞர் ஜெயபாரதன் நீடூழி வாழ, வல்லமை.காம், திண்ணை.காம் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.

*****************

பதிவாசிரியரைப் பற்றி

சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].

ReplyForward

நியூட்டன் புற இயக்கி

சி. ஜெயபாரதன், கனடா.

இமயத் தொட்டிலை ஆட்டி
எப்படி  எழும் பூகம்பம் ?
பசிபிக் தீவுகளில்
குப்பென
எப்படிக் குமுறிடும்
எரிமலை ?
பூமியின் உட்கருவிலே
தீக்குழம்பை
ஈர்ப்புக்கு எதிராய்
பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும்
அசுர அணு உலை ஒன்று
எப்படி உருவானது ?
ஆழ்கடல் அடியில் பன்னூறு
அணுகுண்டு வெடித்து
அசுரச் சுனாமிப் படை
அலைகள்
எப்படிக் கரையேறி
அழிக்கும் ?

தாயின் கர்ப்ப பையில்
அற்புதச்  சிசு
எப்படி உருவாகுது,
பத்து மாதம் வளர்ந்து ?
மாங்கனி, பலா, வாழை,  ஆப்பிள்
தேங்காய், கரும்பு, திராட்சை,
மாதுளை, பீச்சு, பேர்
கனிகளில்
எப்படி தனித்தனி சுவைதரும்  

இனிப்புச் சார் சுரக்குது ?
பற்பல வண்ணளில்
வானில்
பறக்கும் புல்லினம்
எப்படித் தோன்றின ?

நியூட்டன்
புற இயக்கி இன்றி, இவ்வகை
எல்லா
அக இயக்கிகள்

தனியாக எப்படி தமது
வினையாற்றும் ?

**********************

சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].

******************