2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்

Image result for 2019 full solar eclipse and earth changing events

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear.

++++++++++++++++++++++

 

  1. https://scienceofcycles.com/
  2. https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMM
  3. https://www.space.com/one-week-until-total-solar-eclipse-2019.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190707-sdc
  4. https://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/
  5. https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4
  6. https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/
  7. https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019
  8. https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ

++++++++++++++++++++++++

++++++++++++++++++++

 

சூரிய கிரகணம் வானில் நிகழும் போது, 

பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு.

முழுச் சூரிய மறைவு பல நூறாண் டுக்கு,

ஒருமுறை தெரிவது, அத்தருணம்

தடுமாற்ற நிலையில் கீழே கிடக்கும்

புவித்தட்டுப் பிறழ்ச்சி பல நேர்ந்து 

பூமியில் நிலநடுக்கம் தூண்டப் படலாம் ! 

காலி போர்னியா நிலநடுக்கத் துக்கு

காரணம் முழுச் சூரிய கிரகணம் ! 

திடீர் உஷ்ண மாறுதல் புவித்தட்டில்

நீட்சி, நெருக்கம் உண்டாக் கலாம் ! 

கடலடியில் உறங்கும் எரிமலையும்

திடீர் உஷ்ண மாற்றத்தால்  உடனே 

விழித்து மேலே பீறிட் டெழலாம் ! 

++++++++++++++++

++++++++++++

சமீபத்தில் நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணத்தால் பூமியில் நேர்ந்த நிலநடுக்கங்கள்

2019 ஜூலை 2 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் தெரிந்த முழுச் சூரிய கிரகணம், 20 ஆண்டுகட்குப் பிறகு ஜூலை 7 ஆம் தேதி தூண்டப் பட்ட  6.4 / 7.1 ரிக்டர் அளவு தீவிர காலிஃபோர்னியா நிலநடுக்கங்களுக்குக் காரண மாக இருக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு வியப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.  அக்கருத்து 2019 ஜூலை 2 இல் விஞ்ஞானச் சுழல் நிகழ்ச்சி இணைய வலையில் [ScienceOfCycles.com]] வந்துள்ளது.  வெளியிட்டவர் மிட்ச் பாட்டரஸ் [Science Of Cycles with Mitch Battros].  பெரும்பான்மை  எரிமலைக் குழம்பு வாயுக் கட்டிகள், எரிமலைகள்  [Mantle Plumes & Volcanoes]  கடலுக்குக் கீழே தங்கிக் கிடப்பவை.  ஆதலால் திடீர்க் கடல் உஷ்ண மாற்றம் அலை விசைகளைத் தூண்டி, எரிமலை சீறி எழலாம்.

Image result for 2019 full solar eclipse and earth changing events

area of ec events

 

முழுச் சூரிய கிரகணத்தால் நேரும் தீவிரக் காரண விளைவு களை நான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன்.  விளிம்பில் தயாராய் நிகழ இருக்கும், புவித்தட்டுப் பிறழ்ச்சிகள் விரைவில் தூண்டப் பட நெடு நேரம் ஆகாது.  பல நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் முழுச் சூரிய கிரகணம் 3 அல்லது 4 நிமிடங்களே நீடிக்கும்.  அந்த குறுகிய தருணத்தில் வெகு விரைவாக இறங்கி ஏறும் உஷ்ண மாறுபாட்டில், பூமிக்கடியில் உள்ள மேல் கோளத் தட்டில்  [Earth’s Lithosphere] மிகச் சிறிய நீட்சி, நெருக்கம் ஏற்படலாம்.

Related image

எரிமலைக் குழம்புப் பாறை ஒரு கனல் கட்டி.  அது பூமியின் நடுக்கருவை மேலே போர்த்திய வரம்பு.   அந்த கனல் கட்டிக் குழம்பு ஓடிப் பூமியின் பல்வேறு கோளத் தட்டுகளை ஊருருவி,  எரிமலையாய் மேலே பீறிட்டெழச் செய்வது  அடித்தட்டுப் பிறழ்ச்சி நில நடுக்கம் உண்டாக்குவது, அந்த நீட்சி, நெருக்க வினைகளே.  மேலும் கடல் நீர் உஷ்ணம் மிகையாகிப் பருவ காலப் புயல்கள் எழுவதும் , ஹர்ரிக்கேன் உருவாவதும் வட அமெரிக்க நாடுகளில் நாம் அறிந்தவையே.

 

Image result for 2019 full solar eclipse and earth changing events

++++++++++++++++++++++++

தகவல்:

  1. https://scienceofcycles.com/
  2. https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMM
  3. https://www.space.com/one-week-until-total-solar-eclipse-2019.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190707-sdc
  4. https://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/
  5. https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4
  6. https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/
  7. https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019
  8. https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ

++++++++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 7, 2019  [R-0] 

https://jayabarathan.wordpress.com/

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

One thought on “2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.