50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.

கடல் புகு வெனிஸ் நகரில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.
Venice the Lagoon City of Italy
[November 14, 2019]
+++++++++++++++
++++++++++++++++
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Canada
+++++++++++++++++++++
Map of Venetian Lagoon, Metropolitan City of Venice, Italy
Low Level Lagoon City Venice in Italy
++++++++++++++++++++
++++++++++++++++++++++
கடல் நுழைந்த தாழ்தரை நகரம் வெனிஸ்
[Lagoon City Venice]
+++++++++++++++++
கடல் புகு தாழ்தரை வெனிஸ் நகரம் கடல் அலை உயர்ந்து முடங்கியது.
50 ஆண்டுகட்குப் பிறகு கடல் மட்டம் உயர்ந்து வெனிஸ் நகர மக்கள் நவம்பர் 14, 2019 இல் மீண்டும்  பெருந்துயர் உற்றார்.  சுற்றுலா சென்ற உலக மாந்தரும் துயர் உற்றார்.  தொல்லை அடைந்தார்.  இத்தாலிய அரசாங்கம் அபாய நிலை அறிவிப்பு செய்து 20 மில்லியன் ஈரோ [21.7 மில்லியன் டாலர்] நிதி ஒதுக்கி உதவி செய்ய முற்பட்டது.  நீர் மட்ட அளவு, கடல் மட்டத்துக்கு 1.87 மீடர் [6 அடி] மேல் உயர்ந்து, 1966 வெள்ளத்துக்குச் [1.94 மீடர்(6 அடி 4 அங்குலம் )] சற்று குறைந்து, வெனிஸ் நகரின் மக்கள் நடமாற்றத்துக்கும், நகர் இயக்க நிறுவகங்களுக்கும் பெரு முடக்கம் நேர்ந்தது.  கடந்த 1200 ஆண்டுகளில், இந்த கடல்நீர் ஏற்றம் ஆறாவது தடவையாகக் கருதப்படுகிறது.  மின்சாரப் பறிமாற்றம் தடையானது. நகரின் 70% பரப்பளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.  வெனிஸின் ஜனத்தொகை : 53,000.  குளிர் காலத்தில் கடல் அலை உயரம் 1.4 மீடர் [4.5 அடி] எழுகிறது.
பேரளவு கடல் வெள்ளம் வெனிஸ் நகருக்குள் நவம்பர் 13, 2019 இல்  புகுந்திடக் காரணங்கள் என்ன ?
1. முழுநிலவு தோன்றி உச்ச அலை மிகுந்து தென்திசைக் காற்றின் வேகம் பெருகியது.
2. பூகோளச் சூடேற்றக் காரணத்தால் கடல்நீர் மட்டம் உயர்வது.
உயர்ந்து வருவது.  கடல்நீர் உஷ்ணம் ஏறுவது.
3.  மோசஸ் பாதுகாப்புக் கடல் சுவர்கள் [MOSES PROJECT] கட்டத் தாமதமானது.  மோசஸ் தடுப்புச் சுவர்கள் 2021 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4. கடல் மட்டம் தொடர்ந்து ஏறி வருகிறது.  வெனிஸ் நகரின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கி [Sinking] வருகிறது.
5.  கடல் அடித்தட்டு நகர்ச்சியால் [Shifting Tectonic Plates] வெனிஸ் கடற்கரை மெதுவாகத் தாழ்ந்து போய், கடல் வெள்ளம் மிகுதி யாய் நகருக்குள் நுழை கிறது.
6. வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ச்சி வெள்ளம்  [High Tide Flooding ] ஆண்டுக்கு நான்கு தடவை வருகிறது.
+++++++++++++
யுகப்போர் 
ஆகாவென் றெழுந்தது  யுகப்போர் !   
பூகோளம்  சூடேறும் !   
பேரளவு வெள்ளம் ஓடும் ! 
பேய்மழைப் பூதம்
வாய் பிளக்கும் !
கடல் உயரம் எழும் !
கடல் உஷ்ணம் ஏறும் ! 
வீடுகள் மூழ்கின !
வீதிகள் நதியாயின !
பாதைகள் மறைந்தன !
பாலங்கள் முறிந்தன !
நாடு, நகரம், வீடு யாவும் 
ஓடும்  ஆற்றில் 
ஓடங்கள் ஆயின !
சீர்வளச் செல்வம் யாவும்
நீரோட்  டத்தால்
பாழ்பட்டுப் போயின !
இயற்கையும் மனித 
செயற்கையும்  சேர்ந்து  அழித்தன !
பெரு நிதி வேண்டும் 
திரும்பிப் பெற.
மனிதர்
விழித்துக் கொண்டார் !
யுகப் போரை
தகர்க்க 
ஒன்று சேர்ந்தார் !  மனத்தில்
உறுதி கொண்டார்.
 
+++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கேரளாவிலே அசுரப் பேய்மழை

image.png

image.png
 
image.png
 
image.png
a flooded school
people on a Kerala rooftop waiting to be rescued
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++
S. JKayabarathan ( https://jayabarathan.wordpress.com/ )  [November 16, 2019 [R-0]

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.