மனிதா ! நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்
வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கி விட்டது.
Arctic sea ice may be thinning twice as fast as previously thought, scientists say
The discovery raises concerns that parts of the region could be ice-free by 2040
It would cause global temperatures to rise and increase risk of extreme weather
Previous snow data was outdated and relied on Soviet expedition measurements
Concerning: Sea ice in much of the Arctic may be thinning twice as fast as previously thought, scientists fear. The research vessel Polarstern is pictured drifting in Arctic sea ice
Arctic seas: Researchers studied sea ice thickness in all seven Arctic coastal seas (pictured). In Laptev, Kara and Chukchi, waters increased by 70 per cent, 98 per cent and 110 per cent respectively, when compared with earlier calculations
Calculations: Researchers used new computer models to produce detailed snow cover estimates from 2002 to 2018 (pictured in red). These are more accurate than previous data from Soviet expeditions between 1954 and 1991 (green) and a modified version of these recordings which account for changes in sea ice throughout the year (blue)
SEA LEVELS COULD RISE BY UP TO 4 FEET BY THE YEAR 2300
பூகோளச் சூடேற்றத்தால் மாறும் கடல் மட்ட உயர்ச்சி, தாழ்ச்சி நிகழ்வுகள்
பூகோளக் காலநிலை மாற்றங்கள் புவியின்பனிதட்டுகளைத் தொடர்ந்து பலவீனப் படுத்தி, கடல்நீர் உஷ்ணத்தை உயர்த்தி, பனித்தட்டுகளும், க்டலும் ஒன்றை ஒன்று பாதித்து, உலக மாந்தருக்கு, காலநிலைச் சுழல்வீக்க விளைவை [Climate Domino Effect] உண்டாக்கியுள்ளன. இந்த புதிய காட்சிகளைப் புவித்தளக் கொந்தளிப்பு விளைவு [Earth System Dynamic] என்னும் புத்தகம் வெளியிட்டுள்ளது.
2300 ஆண்டு காலத்தில் கடல்நீர் மட்டம் 4 அடி [1.2 மீடர்] உயர்ந்து விடும் என்று அச்சம் ஊட்டுகிறது புது வெளியீடு.
2020 ஆகஸ்டு மாதம் ஜெர்மெனி நிபுணர், கீரீன்லாந்து 532 கிகா டன் [giga ton (1 gega ton = 1 X10^9 ton] பனிப் பளுவை இழந்துள்ளது என்று அறிவித் துள்ளார். இதுபோல் பேரளவு பனிப்பளு உருகி இழக்கப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மெலிந்து போகும் வடதுருவக் கடற்பனித் தட்டுகள் காலநிலைச் சூடேற்றச் சுழல்வீக்க விளைவினை உண்டாக்கும்.
ஆய்வாளர் மேற்கு அண்டார்க்டிகா, கிரீன்லாந்து, சூடான அட்லாண்டிக் வெப்ப ஓட்டப் பகுதி,, அமேசான் பெருமழைக் காடுகளை எடுத்துக்கொண்டார்.
ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி, 2 டிகிரி செல்சியஸ் உஷ்ண உயர்ச்சிக்கு, மூன்று மில்லியன் கணனிப் போலிக் கணிப்புகள் [Computer Simulations] சூடேற்ற சுழல்வீக்கத்தை உறுதிப் படுத்தின.
2017 ஆண்டு முடிவு வரை, சுமார் 40% உலக ஜனத்தொகை கடற்கரை ஓரத்தில்தான் வாழ்ந்து பாதிக்கப் பட்டுளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா