மனிதா ! நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்
ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி இந்தியாவில் 44,444 ஆம் காற்றாடிச் சுழற்தட்டைத் [Wind Turbine] தயாரித்துள்ளது
GE Renewable Energy announced today it has produced its 44,444th wind turbine blade at LM Wind Power’s wind turbine blade manufacturing sites in India. These blades have been manufactured in the two factories located near Bangalore, Karnataka and in Vadodara, Gujarat.
தற்போதைய இந்தியாவின் குறிக்கோள் திட்டங்களில் முதன்மையானது மின்சக்தி உற்பத்தி பெருக்க பசுமை எரிசக்தி பயன்பாடு, மீள்புதிப்பு முறைப்பாடு [Green Energy & Renewable Systems] அமைப்புகள் ஏற்படுத்துவது. பொதுவாக சூரியக் கதிர்ச்சக்தி மூலமும், காற்றாடிச் சுழலிகள் மூலமும் இந்தியாவில் பசுமை எரிசக்தி மின்சக்தி ஏற்பாடுகள் “ஏறி இறங்கும்” [Swing Loads] தேவைக்கும், அடிப்படை நிலைமைக்கு [Baseload] நீரூட்டு மின்சக்தி, நிலக்கரி வெப்ப மின்சக்தி நிலையங்கள், அணுமின்சக்தி நிலையங்கள், [Hydro Electric, Thermal Coal Power, Nuclear Power Stations] தற்போது இயங்கி வருகின்றன.
இக்கட்டுரை காற்றாடிச் சுழலி மின்சக்திக்கு தேவையான சுழற்தட்டுகள் [Rotating Blades] தயாரிக்க ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி கர்நாடகா பெங்களூரு, குஜராத் வடோதரா, நகரங்களில் தமது யந்திர ஆலைகள் அமைத்துள்ளதைப் பற்றி விபரம் தருகிறது.
Renewable energy producer Boralex and Vestas have entered a 15-years full scope service contract in France that includes 280 MW from Boralex’s portfolio of Vestas wind parks in France.
Vestas now provides O&M service to over 50,000 wind turbines and around 9,500 dedicated service colleagues across 73 countries work committedly to maintain and support the biggest wind turbine fleet in the world.
2021 ஜூனில் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி தமது 44,444 ஆவது சுழற்தட்டு தயாரிப்பை இந்தியாவில் செய்துள்ளதாகப் பெருமைப் பட்டுக் கொண்டது. தணிவாற்ற மின்சக்தி ஏற்பாடுகள் [LM Wind Power Operations] பெங்களூருவில் 1994 துவங்கின. அப்போது 11 கிகா வாட்ஸ் [11 Gega Watts] திறம் கொண்ட, காற்றாடி மின்சக்தி நிலையம் சுமார் 6 மில்லியன் இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பியது.
Development of wind power in India began in December 1952, when Maneklal Sankalchand Thacker, a distinguished power engineer, initiated a project with the Indian Council of Scientific and Industrial Research (CSIR) to explore the possibilities of harnessing wind power in the country. The CSIR established a Wind Power Sub-Committee under P. Nilakantan, which was assigned the task
Iberdrola will build its next wind farm in Spain, the Herrera Complex, with the most powerful onshore wind turbine, after awarding Siemens Gamesa the contract to supply the first SG 4.5-145 wind turbines, with a 4.5 MW power unit; which is almost seven times more powerful than the first wind turbines installed in Spain more than two decades ago.
இந்தியாவில் காற்றாடி மின்சார உற்பத்தி பேரளவு என்று அறியப்படுகிறது. ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி 55 செட்ஸ் கடற்கரை காற்றாடிச் சுழலி [2.7 – 132 மெகா வாட்] மின்சக்தித் தூண்கள் இந்தியாவில் கட்டுவதாக உடன்பாடு செய்துள்ளது. GE 148.5 மெகா வாட் திறமுள்ள யூனிட் 125,000 இல்லங்களுக்கு மின்சாரம் பரிமாறும்.
GE Renewable Energy And Continuum Green Energy Sign Large Wind Power Project In India. With more than 117 GW of turbines under service, Vestas helps remove over a hundred million tonnes of CO2 every year from the atmosphere by providing reliable, sustainable and cost-effective renewable energy, meeting global energy demand.
With more than 117 GW of turbines under service, Vestas helps remove over a hundred million tonnes of CO2 every year from the atmosphere by providing reliable, sustainable and cost-effective renewable energy, meeting global energy demand.
The increasing investment in wind energy is predicted to boost market growth over the forecast period. The growing environment protection regulations fuel the power generation industry for shifting to environment-friendly and cleaner energy resources. Different countries across the globe are focusing on the development of renewable energy power generation for reducing their dependence on conventional sources for power generation. Recently, it has been observed that investments in solar, wind, and other renewable energy sources are increasing continuously.The Nordex Group has closed the second quarter of 2021 with an order intake of 1,534.1 MW (Q2 2020: 888 MW). The intake of firm orders in the Projects segment (excluding the service business) reached a volume of 2,781.6 MW in the first half of 2021 (H1 2020: 2,531.9 MW). From April to June 2021, […]
Vestas has received a 92 MW order to power an undisclosed wind project in the U.S. The project consists of 22 V150-4.2 MW turbines.
Vestas has received a 92 MW order to power an undisclosed wind project in the U.S. The project consists of 22 V150-4.2 MW turbines. The order includes supply, transport, and commissioning of the turbines, as well as a multi-year Active Output Management 5000 (AOM 5000) service agreement, designed to ensure optimised performance of the asset
GE Renewable Energy to supply, install and commission 55 sets of its 2.7-132 onshore wind turbines The 148.5 MW wind farm to power the equivalent of 125,000* households in India
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
4 thoughts on “ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி இந்தியாவில் 44,444 ஆம் காற்றாடிச் சுழற்தட்டைத் [Wind Turbine] தயாரித்துள்ளது”
தாங்கள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது .
மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி.
சி.ஜெ.