பசிபிக் பெருங்கடல் தீவு தொங்காவில் பீறிட்டு எழுந்த கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி

This image has an empty alt attribute; its file name is Tonga-photos-before-and-after-volcano-eruption-tsunami-NPR.jpg
Powerful undersea volcano eruption in Tonga on January 14.
Powerful undersea volcano eruption in Tonga on January 14., 2022

Several flights from Australia, New Zealand and Fiji to Tonga were postponed due to the ash cloud.
Early data suggests the volcanic eruption was the biggest since the 1991 blast at Mount Pinatubo in the Philippines, New Zealand-based volcanologist Shane Cronin told Radio New Zealand.

பசிபிக் பெருங்கடல் தொங்கா தீவு அருகில் சீறி எழுந்த சுனாமியால் பாதிக்கபட்ட கிழக்காசிய நாடுகள்

2022 ஜனவரி 15 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள தொங்கா தீவு அருகில் அதிகாலை 4;26 மணிக்கு ,7.6 ரிக்டர் அளவு பூகம்பம் உண்டாகி, கடல் அடித்தள அசுர எரிமலை பீறிட்டு 12 மைல் [20 கி.மீ. ] உயரத்துக்குப் புகைமண்டலம் எழுந்தது. அத்துடன் பேரளவு ஆற்றல் சுனாமி தூண்டப்பட்டு, கிழக்காசிய நாடுகளின் கடர்கரையில் சுமார் 49 அடி உச்ச உயரத்தில் பேரலைகள் தாக்கியுள்ளன. அந்த சமயத்தில் 6.2 ரிக்டர் பூகம்பம் ஹவாயி தீவை ஆட்டி அசைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பசிபிக் ஆசிய நாடுகள் ஜப்பான், டைவான், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பெரு, ஹவாயி, பிஜி தீவு, தக்க தருணத்தில் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. இயற்கையின் இந்த கோரப் பேரிடர் பேரழிவுகளால் தொங்கா அரசாட்சியைச் [TONGA KINGDOM] சேர்ந்த 169 தீவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார். தொங்கா அரசாங்கப் பரப்பு ஹவாயிக்கு தென்மேற்கு திசையில் சுமார் 5000 கி.மீ.[3100 மைல்] தூரத்தில் உள்ளது.

2014 ஆண்டுக்குப் பிறகு ஹுங்க தொங்கா எரிமலை [HUNGA TONGA VOLCANO] தற்போது 2021 டிசம்பர் 20 இல் வாய் திறந்து உள்ளது. டிசம்பர் 25 இல் வாய் மிகப் பெரிதாகி விஷவாயுப் புகை மண்டலம் 12 மைல் [20 கி.மீ.] உயர்ந்து சுமார் 30 மைல் [50 கி.மீ.] அகலம் பரவி விட்டது. அதைவிடத் திரட்சி ஆகி 2022 ஜனவரி 14 இல் அதன் இடி முழக்கம் 40 மைல் தூரத்தில் [65 கி.மீ.] கேட்டுள்ளது. அந்த இடி நாதம் 520 மைல் [840 கி.மீ.] தூரமுள்ள சமோவாக்கு [Samoa] எட்டி விட்டது. அந்த பயங்கர இடிச் சத்தம் 430 மைல் [700 கி.மீ.] தூரமுள்ள பிஜி தீவு, 1200 மைல் [2000 கி.மீ.] தூரமுள்ள நியூஜிலாந்து, 6000 மைல் [9700 கி.மீ.] தூரமுள்ள அலாஸ்கா வரை சென்றுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் சில சமயத்தில் 200,000 மின்னல் அடிப்புகள் பதிவாகி உள்ளன. எழும் புகை இருட்டடிப்பு வாயு [ஸல்ஃபர் டையாக்சைடு] 400,000 டன் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இது போன்ற அசுர எரிமலைச் சுனாமிகள் 100 கீழ் நேர்ந்துள்ளன என்று அறியப்படுகிறது. 2022 ஜனவரியில் பீறிட்ட ஹுங்க தொங்கா எரிமலை ஆயிரத்தில் ஒன்று என்று கருதப் படுகிறது.https://www.youtube.com/embed/Iz9HvvUGhC4?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparenthttps://www.youtube.com/embed/gdbpITmyh8o?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparent

Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South Pacific
A grab taken from footage by Japan’s Himawari-8 satellite and released by the National Institute of Information and Communications (Japan) on January 15, 2022 shows the volcanic eruption that provoked a tsunami in Tonga. – The eruption was so intense it was heard as “loud thunder sounds” in Fiji more than 800 kilometres (500 miles) away. (Photo by Handout / NATIONAL INSTITUTE OF INFORMATION AND COMMUNICATIONS (JAPAN) / AFP)

தகவல்:

Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South Pacific

https://pinoyfeeds.com/volcanic-eruption-earthquake-rock-tonga-trigger-tsunami-threats-in-the-south-pacific/embed/#?secret=XQukVtjExRhttps://www.eaglenews.ph/tonga-cut-off-by-volcanic-blast/embed/#?secret=WL2e952uqN

https://en.wikipedia.org/wiki/2022_Hunga_Tonga_eruption_and_tsunami#:~:text

https://www.theguardian.com/world/2022/jan/20/new-photos-show-tonga-tsunami-devastation-as-some-phone-lines-restored

S. Jayabarathan [20 January 2022] [R-0]Posted in Uncategorized | 4 Replies

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.