முதன்முதல் பொது விண்வெளி ஆய்வலர் நால்வரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ்X மீட்சி ராக்கெட் விண்சிமிழ்.

NASA’s SpaceX Crew-4 Astronauts Launch to International Space Station

https://www.itechpost.com/articles/110336/20220427/nasa-s-spacex-crew-4-launches-space-jessica-watkins-first.htm

https://www.nasa.gov/press-release/nasa-s-spacex-crew-4-astronauts-launch-to-international-space-station


SpaceX lifts off on historic space mission to ISS l GMA
The Crew-4 mission includes 33-year-old NASA astronaut Jessica Watkins, who will be the first Black woman to live on the International Space Station for a long-term mission.
 
முதன்முதல் ஸ்பேஸ் X  உள்ளூக்கி -4 விண்சிமிழ் நான்கு பொது ஆய்வாளரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது.

2022 ஏப்ரல் 27 இல் அமெரிக்கா பிளாரிடா நாசா கென்னடி ஏவு தளத்திலிருந்து ஸ்பேஸ் X மீள்பயன்பாடு ஃபால்கன் [REUSABLE] ராக்கெட் நான்கு பொதுநபரை உள்ளூக்கி-4 [INSPIRATION -4] விண்சிமிழ் தூக்கிச் சென்று, முதன்முதலாக அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது. விண்வெளி நிலையம் பூமிக்கு 250 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. விண்சிமிழ் 350 மைல் உயரத்தில் பூமியை மூன்று நாட்கள் சுற்றி முதன்முதல் சுற்றுலாப் பயணம் செய்து, கீழிறங்கி நிலையத்துடன் இணைந்தது. அந்த மூன்று நாட்கள் பயணம் செய்த நான்கு விஞ்ஞானிகள் உடல்நிலை சோதிப்பு செய்வார். அந்த பொது விஞ்ஞானிகள் 38 வயது ஜார்டு ஐஸாக்மன், 29 வயது ஹேலி ஆர்செனா, 41 வயது கிரிஸ் செம்பிராக்ஸி, டாக்டர் சியான் பிராக்டர். அவர்கள் யாவரும் விண்வெளிப் பயிற்சி பெற்றவர். ஒவ்வொரும் இதற்கு 55 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார். .

******************************

தகவல்

  1. https://www.nasa.gov/press-release/nasa-s-spacex-crew-4-astronauts-launch-to-international-space-station
  2. https://www.space.com/spacex-crew-4-nasa-astronaut-launch-webcast
  3. SpaceX takes 4 astronauts to the International Space Station | CBC News

S. JAYABARATHAN [MAY 1, 2022] [R-4]

**********************************

முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை ஏற்றிச் சென்று மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப் பாக இறக்கியது.

முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார்.

Space X Landing back towards, the Earth, After two weeks.

ஸ்பேஸ் X இயல்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

ஸ்பேஸ் X விண்சிமிழ் வெற்றிகரமாக கடல் நீர் மீது இறங்கியதைப் பாராட்டி போது, திட்ட ஆளுநர் எலான் மாஸ்க் [Elon Musk] . “இந்த வெற்றி நாங்கள் நிலவுக்குப் போகும் திட்டத்தையும், நிலாக் குடிவசிப்பு திட்டத்தையும் மெய்ப்படுத்தி உள்ளது. நான் பெரிய மத நம்பிக்கை கொண்டவன் அல்லன். ஆனால் இது வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்” என்று கூறுகிறார் எலான் மஸ்க் விண்வெளித் தேடல் விஞ்ஞானி. ஸ்பேஸ்X விண்சிமிழ் பூமியில் இறங்குவதற்குத் தகுந்த சுற்றுப் பாதைக்கு நெருங்கி, காற்று மண்டலத்தைக் கடக்கும் போது, உராய்வு உஷ்ணம் 3500 டிகிரி F [1900 C], பயண வேகம் 17,500 mph [28,000 kph] . இறங்கும் போது இரண்டு பாராசூட் குடைகள் விண்சிமிழைத் தாங்கி, வேகத்தை 15 mph ஆகக் குறைத்தன.

அடுத்த ஸ்பேஸ்X திட்டம் செப்டம்பர் இறுதியில் நான்கு விண்வெளி விமானிகள் [மூன்று அமெரிக்கர் + ஒரு ஜப்பானியர்] அகில விண்வெளி நிலையத்துக்கு வந்து, ஆறு மாதம் ஆய்வுகள் செய்து, பூமிக்கு மீள்வர்.

SpaceX rocket returns to shore after historic astronaut launch

The first stage of the SpaceX Falcon 9 rocket that launched the Demo-2 mission on May 30, 2020, arrives in Florida’s Port Canaveral on June 2, 2020. (Image credit: SpaceX via Twitter)

2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன் முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31 ஆம் தேதி அகிலநாட்டு விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்ட வெளிச் சுற்றுலா பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இருவிமானி களும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.

NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT

++++++++++++++++

  1. https://everydayastronaut.com/crew-dragon-vs-starliner/
  2. https://youtu.be/P_LLNuLhEXc
  3. https://youtu.be/oV319JAmxCM
  4. http://www.spacedaily.com/reports/Musks_SpaceX_unveils_new_Starship_for_private_trips_in_space_then_moon_999.html

+++++++++++++++++++

Image result for Orion, crew dragon, Starliner

Orion Spaceship and Space Station

++++++++++++++++

Image result for Orion, crew dragon, Starliner

Starliner Spaceship

+++++++++++++++

நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்
நிலவில் தடம் வைத்தார்.
பூமியைச் சுற்றி வரும்
அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்
சிலநேரம் தங்கிச்
சுற்றுலாப் பயணம்  செய்ய
நிற்கிறார்  வரிசையில்
புவி மனிதர்  !
நவயுகத் தரை நபர்கள் 
இனிமேல் 
விண்கப்பல் புவிச் சுற்றில் 
சுற்றுலா வருவர் !
கனவில்லை இது !
மெய்யான நிகழ்ச்சி ! 
வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.

++++++++++++++++++

Image result for Orion, crew dragon, Starliner

https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU

++++++++++++++++

நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா

இப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]]  புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது.  குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல.   அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது.  2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது.  ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு.  அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.

தற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.

அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.

++++++++++++++++++++++++++++++

நாசாவின் திட்டம் 2024 ஆண்டில் நிலவுக்கு மீளும்  புது முயற்சி.2020 ஆண்டில்  விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும்  தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன.  ஆனால் எப்போது என்று இன்னும்  தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர்,  பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர்.  அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி  பிஸோஸ் [Jeffery Bezos] .  இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.

வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை.  பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில்[Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார்.  முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது.  இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் !  மிக மலிவு.  விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.  தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.

வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார்.  தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும்.  சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம்.  காலிஃபோர்னியா  மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில்  விண்கப்பல் பறந்தது.  பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது :  இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்.  விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி.  விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின்  ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

SHARE THIS:

Customize buttons

RELATED

ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.September 19, 2021With 3 comments

2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள்January 25, 2022

2021 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள்January 25, 2022This entry was posted in Uncategorized by S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா. Bookmark the permalink.Edit

7 THOUGHTS ON “முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது.”

  1. Pingback: நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையம

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

2 thoughts on “முதன்முதல் பொது விண்வெளி ஆய்வலர் நால்வரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ்X மீட்சி ராக்கெட் விண்சிமிழ்.”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.