நாசாவின் பூகோளப் பாதுகாப்பு உறுதி, அசுர விண்வெளி சாதனை
2022 செப்டம்பர் 26 இல் நாசா பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும் ஒரு விண் பாறையைக் குறிவைத்து தாக்கி அதன் சுற்றுப் பாதையை மாற்றி உள்ளது. அச்சிறு விண்பாறை மற்றுமோர் பெரும் விண்பாறையைச் சுற்றி வருகிறது. இந்த இரட்டை விண்பாறை அமைப்பை சூரியமண்டலத்தில் பின்பற்றித் தாக்குவது சற்று எளிதாகத் தோன்றினாலும், மெய்யாக இது ஓர் இமாலய முயற்சியே. சிறிய பாறை பெரிய பாறையை ஒரு முறை சுற்ற 11:55 மணி நேரம் எடுத்தது. விண்கணை மோதலுக்குப் பிறகு 32 நிமிடம் குறைந்து, 11:23 நேரம் பிடித்தது.
இந்த வெற்றிகரமான விண்வெளிச் சாதனை பூமிமேல் விண்பாறை விழுந்து பிரளயப் பேரிடர் நிகழும் எதிர்கால பயத்தை நீக்கியுள்ளது.
1969 ஜூலையில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் நிலவில் கால்வைத்த வரலாற்று நிகழ்ச்சிக்கு நிகரானது, விண்பாறைமேல் மோதி விலக்கிய அபாய எதிர்பார்ப்பு பிரளயப் பேரிடர்.
நாசாவின் இரண்டாவது வரலாற்று விண்வெளி வெற்றி : விண்கணை தாக்கி விண்பாறையின் சுற்றுப் பாதை மாற்றமானது உறுதியாகி அமெரிக்கப் பாதுகாப்பும் உலகப் பாதுகாப்பும் நாசாவின் பொறுப்பாகி விட்டது.
Update on DART Mission to Asteroid Dimorphos (NASA News Conference Oct. 11, 2022)
Streamed live on Oct 11, 2022 Experts discuss early results of the NASA’s Double Asteroid Redirection Test (DART) mission and its intentional collision with its target asteroid, Dimorphos.
On Monday, Sept. 26, DART successfully impacted its asteroid target in the world’s first planetary defense technology demonstration. As a part of NASA’s overall planetary defense strategy, DART’s impact with the asteroid Dimorphos will help to determine whether asteroid deflection using a kinetic impactor spacecraft is a viable mitigation technique for protecting the planet from an Earth-bound asteroid or comet, if one were discovered. Johns Hopkins APL manages the DART mission for NASA’s Planetary Defense Coordination Office as a project of the agency’s Planetary Missions Program Office. Neither DART’s target asteroid, Dimorphos, nor its larger asteroid parent, Didymos, poses a hazard to Earth.
Participants include: • NASA Administrator Bill Nelson • Italian Space Agency President Giorgio Saccoccia DART update panel: • Lori Glaze, director of the Planetary Science Division at NASA Headquarters in Washington • Tom Statler, DART program scientist at NASA Headquarters • Nancy Chabot, DART coordination lead at the Johns Hopkins Applied Physics Laboratory (APL) in Laurel, Maryland More on DART:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
2 thoughts on “நாசாவின் முதற்பெரும் வெற்றி : விண்கணை தாக்கி விண்பாறையின் சுற்றுப் பாதை மாற்றமானது உறுதியாகி உள்ளது”
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா
நன்றி நண்பர் ஜெயக்குமார். 1969 ஜூலையில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் நிலவில் கால்வைத்த வரலாற்று நிகழ்ச்சிக்கு நிகரானது.
நாசாவின் இரண்டாவது வரலாற்று விண்வெளி வெற்றி : விண்கணை தாக்கி விண்பாறையின் சுற்றுப் பாதை மாற்றமானது உறுதியாகி உள்ளது