மனிதா ! நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்
Author: S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
the main arch of the rail bridge on river Chenab in Jammu and Kashmir which is being called the of world`s tallest rail bridge has been launched by Indian Railways.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம் ஒன்றைக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் 2004 ஆண்டில் கட்ட, இந்தியா திட்டமிட்டது. நீண்ட பாலம் இணைக்கும் பக்கால் & கௌரி பகுதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ளன. இரும்பு காங்கிரீட் வளைவுப் பாலம் செனாப் நதிக்கு மேல் 1180 அடி [360 மீடர்] உயரத்தில் முதன்மை யாக உலகத்திலே உயர்ந்த ஒரு ரயில் பாலமாக கட்டப்பட்டு உள்ளது. 2004 ஆண்டில் திட்டம் சிந்தையில் உருவாகி, 2017 ஆண்டில் செனாப் நதிப் பாலத்தின் அடித்தளப் பீடம் கட்டி முடிக்கப் பட்டது. 2021 ஆண்டில் தான் இருபுறத்துப் பெரும் வளையங்களின் மையத் துண்டு இணைக்கப் பட்டது. இந்த பெரிய பாலம் 1486 கோடி ரூபாய்ச் செலவில் கட்டுமானம் செய்த, இந்தியப் பெரும் தொழிற்துறை வளர்ச்சிப் பெருக்க வியப்பாகக் [Infrastructure Marvel] கருதப்படுகிறது. செனாப் நதிப் பால இடைத்தூரம் ; 4050 அடி [1315 மீடர்]. ஆக மொத்தம் 17 இடைவெளித்தூண்கள் கொண்டது. இந்த பாலம் குறைந்தது 120 வருடம் நீடிக்கும் என்று திட்டமிடப் பட்டது. இமாலயப் பூகம்பப் [Seismic Zone IV ] பகுதி 4 இல் 8 ரிக்டர் ஆற்றல் தாங்கும் வலிமை உள்ளது. புயலடிப்பு வேகம் 150 mph [260 kmph ] எதிர் கொள்ளும் நிலைப்பு திறன். பாலத்தில் போகும் ரயில் 100 kmph [60 mph] வேகத்தில் கடக்க டிசைன்செய்யப் பட்டது.
The Chenab Rail Bridge was originally intended to be completed in December 2009.[14] However, in September 2008, the project was halted due to fears over the bridge’s stability and safety.[15] Work on the bridge restarted in 2010,[16] with the plan to complete it in 2015.[17]
The erection scheme for the bridge is a project in itself. Two pylons (about 130 m and 100 m high) were erected on either side of the river, and two auxiliary self-propelled cable cranes (capacity of 20 tonnes each) were used to tow temporary auxiliary ropes across these pylons. The ropes were used to support the partly finished arch parts. After arch completion, the trusses will be added, finally the girder will be constructed as a horizontal sliding type platform.
Regular painting of large bridges is an intimidating task; hence, a painting scheme was developed, having renewal of over 15 years, compared to approx. 5 to 7 years in most other Indian railway bridges.[28]
Given below are some interesting facts on the Chenab Railway Bridge.
The total cost estimated of the Chenab rail bridge is Rs 1,486 crores.
The Chenab bridge covers a total length of 1,315 metres.
There are 17 spans in total over the Chenab Rail Bridge.
The life of the Chenab Railway bridge is 120 years.
Trains are allowed to pass across the Chenab bridge at a maximum speed of 100 kilometres/hour.
The highest bridge in India has been designed by consulting DRDO (Defence Research and Development Organisation).
The Chenab Bridge is designed to withstand wind speed up to 266 kilometres/hour.
It is designed to bear earthquakes of up to 8 magnitudes.
For joining the different parts of the bridge, approximately 584km (Jammu to New Delhi) of welding has been done.
For the first time, the Indian Railways have launched the curved viaduct portion by using the method of End-launching.
Warning and health monitoring systems have been extensively planned through state-of-art instrumentation.
Srinagar’s cable crane pylon stands at the height of 127 metres, making it higher than Delhi’s Qutub Minar (72 metres).
For testing the welds, a phased array ultrasonic machine has been used by the Indian Railways for the first time.
Features of the Arch of the Chenab Bridge
Here are some of the features of the spectacular arch of the Chenab River Railway Bridge.
The Chenab River bridge is 35m higher than the world-famous Eiffel Tower in Paris.
The arch is made by using boxes of steel. The boxes will be stuffed with concrete to improve stability.
The arch of the Chenab River bridge weighs 10,619MT.
A first in the Indian Railways history, the members of the arch were erected by using overhead cable cranes.
The construction of the Chenab River Rail Bridge involved the usage of 28,660 Meta Tons of steel.
For structural detailing of the Chenab River bridge, Tekla software has been used.
List of Contractors Involved in the Chenab River Project
Below is the list of the contractors who were actively involved with the Chenab River Project.
Department
Name of Project Contractor
Foundation Protection Designer
Indian Institute of Science (IISc), Bangalore
Slope Stability Analysis
Indian Institute of Technology (IIT), Delhi
Executing Agency
Konkan Railway Corporation Ltd.
Seismic Analysis
Indian Institute of Technology (IIT), Delhi & Roorkee
Proof Consultant for Foundation and Foundation Protection
M/s COWI, UK
Arch Designer
M/s Leonhart, Andra and Partners (Germany)
Viaduct and Foundations Designer
M/s WSP (Finland)
Executing Agency
Konkan Railway Corporation Ltd.
Challenges Faced while constructing the Chenab Railway Bridge
Here are the challenges faced while constructing the Chenab Railway Bridge.
The rugged and mountainous Himalayan terrain posed a threat to the construction of the Chenab Rail Bridge. 900 metres tall cable cranes were installed on both sides of the Chenab gorge to build the arch of the bridge.
At such a high altitude, the bridge construction was festered with winds up to 50-60 kmph. The construction work was also hampered because of frequent and unprecedented rains, thunderstorms, landslides and snowfall.
This is why assembling the arch showcased the great work projection of the engineering skill.
Work on the arch construction started back in 2005. It was only finally linked after 16 years in March 2021.
Analysis for tunnel construction and earthquake also posed a challenge due to the persisting winds and the treacherous terrain.
சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் ! வியாழக்கோள், வெள்ளிக்கோள் இடையெழும் ஈர்ப்பு விசை மாற்றத்தால் புவிக்கோள் சுற்றுப் பாதை நீட்சி ஆகும் ! பருவக் காலம் மாறி உயிரின விருத்தி வேறாகும் ! எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று, தப்பிக்க முடியாது ! திசைமாற இயலாது ! வேகம் சிறிதும் மாற முடியாது ! சாகாது, எல்லை மீறாது ! மோதாது ஒன்றோ டொன்று ! சூரிய எரிவாயு தீர்ந்து போய் சூனிய மானால் சிலந்தி வலைப் பின்னல் அறுந்து விடும் ! கோள்கள் முறிந்து தூள் தூளாய்ச் சிதறும் ! முடிவுப் பிரளயம் அதுதான் ! மனிதப் பேரழிவு அதுதான் !
+++++++++++++
மாறி மாறி வரும் பூமியின் சூழ்வெளிக் காலநிலைப் பருவ மாற்றங்கள்
தொடர்ந்து ஓர் சீர்மைக் கால இடைவெளியில், நமது புவியின் காலநிலைப் பருவங்களில் பெருத்த மாற்றங்கள் நேர்ந்து வருவதைப் பூகோளத் தளவியல் விஞ்ஞானிகள் நன்கு அறிவர். கடந்த 200 மில்லியன் ஆண்டுகளில் நான்கு பெருத்த பூதளவியல் காலநிலை யுகங்கள் நிகழ்ந்துள்ளன. அவை திரியாஸிக், ஜுராஸிக், கிரிடேசியஸ், செனோஸாயிக் யுகங்கள் [Triassic, Jurassic, Cretaceous, cenozoic Periods]. அத்துடன் ஒருபெரும் பனியுகம் [Pliocene – Quaternary Glaciation ] 10,000 – 15,000 ஆண்டுகட்கு முன் சென்றுள்ளது. இந்த ஐந்து யுகங்களில் புவிதளம் தீவிரமாய்ப் பாதிக்கப்பட்டு, விலங்குகளின் வாழ்வு, உயிரின விருத்திகளின் போக்கு மாறிவிட்டன !
கடந்த சில பத்தாண்டுகளாய் புவித்தளவியல் விஞ்ஞானிகள் இந்த மாற்றங்கள், வியாழக்கோள் – வெள்ளிக்கோள் ஈர்ப்பால் சிறுகச் சிறுக நகர்ந்த புவிச் சுற்றுப் பாதை நீட்சியால் என்றும் புரிந்து கொண்டுள்ளார். அந்த வட்டத்தை ஒட்டிய சுற்றுப் பாதை 5% நீட்சியாகி, 405,000 ஆண்டுகட்கு ஒருமுறை மீட்சியாகிறது. ஆனால் இதுவரைப் புவித்தள விஞ்ஞானிகள் யாரும் ஆதாரம் காட்ட முடியவில்ல. இப்போதுதான் விஞ்ஞானிகள் அவற்றுக்கு பாறைகள் & படிவுமண் மாதிரிகள் [Rocks & Sediments] காட்ட முடிந்தது. தோண்டி எடுத்த மாதிரிகள் புவித்தளவியல் பதிவாக, எப்போது, எப்படி, இந்த மாற்றங்கள் தோன்றின என்று காலத் தோடு காரணம் கூறுகின்றன.
இந்தப் புதிய அறிவிப்பு சமீபத்தில் “405,000 ஆண்டு வியாழன் – வெள்ளி மையத்திரிபு நிலைப்பு மீட்சி” [Empirical Evidence for Stability of the 405,000 year Jupiter – Venus Eccentricity Cycle] என்ற தலைப்பில் அமெரிக்க தேசீய விஞ்ஞானக் கழகத்தின் வெளியீடாக [Proceedings of the National Academy of Sciences of the USA] வந்துள்ளது. இந்த ஆய்விதழ்க் குழுவினரின் தலைவர் : டெனிஸ் பென்ட், [Professor, Rutgers University–New Brunswick is the flagship home of Rutgers, The State University of New Jersey.] [ Members from Lamont – Doherty Eath Observatory, Berkeley Geochronology Center, and Petrified Forest National Park in Arizona]
ஒரு நூற்றாண்டுக்குள் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டது : புவிக்கோள் பருவக் காலநிலை மாறுவதற்கு, புவிச் சுற்றுப் பாதை நீட்சி, சுருக்கம், மற்றும் மீட்சியே என்பது. புவிச் சுற்றுப் பாதை மாற்றம் உண்டாக்குபவை எவை ?
மிலாங்கோவிச் சுழற்சிகள் [Milankovitch cycles] – இது 100,000 ஆண்டுக்கு ஒருமுறை புவிச்சுற்றுப் பாதையில் மையத்திரிபு [Eccentricity in Earth’s Orbit] உண்டாக்கி மீளும்.
பூகோள அச்சின் சுழல் திரிபு மீட்சி. [Tilt of Earth’s Axis]. இது 41,000 ஆண்டுக்கோர் முறை, சுற்றுப் பாதை மட்டத்துக்கு ஏற்ப மீளும், சுழல் அச்சுக் கோணத் திரிபு.
21,000 ஆண்டுக்கோர் முறை மீளும் புவிக்கோளின் சுழல் அச்சு சாய்வு.
இவற்றுடன் 405,000 ஆண்டுக்கோர் முறை வியாழக்கோள் – வெள்ளிக்கோள் இழுப்பால், சுற்றுப்பாதை நீட்சியாகி, சூரியக் கதிர்களின் பொழிவு பூமியில் கூடிக் குறைந்து, காலப் பருவ நிலையில் மாற்றங்கள் தோன்றுகின்றன.
இவற்றை அறியப் படத்தைப் பார்க்கவும்.
இவற்றின் விளைவுகளை ஆழ்ந்து ஆராய பேராசிரியர் டெனிஸ் கென்ட், நியூ ஜெர்ஸி மாநில அகற்சிக்கு நீண்ட பூர்வீக ஏரியின் பீடத்தில் [Newark Basin] உள்ள படிவுமண் மாதிரி சோதிக்க 518 மீடர், [1700 அடி] ஆழத்தில் 6.35 செமீ [2.5 அங்குலம்] விட்டக் குழி தோண்டி எடுத்தார். [மேலே படத்தைப் பார்க்கவும்]. அதேபோல் அரிசோனா தேசீயப் பூங்காவிலும் மாதிரி படிவுமண் எடுத்தார். அவற்றின் கால யுகம் “டிரையாசிக்கைச் [Triassic Period] சேர்ந்தது. அதாவது 200 – 250 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை. மாதிரிப் படிவமண் மூலம் அறிந்தவை என்ன ? 405,000 ஆண்டு புவிச் சுற்றுப் பாதை நீட்சி – சுருக்க மீட்சிகள் பல நூற்றாண்டுகள் நிலைத்துக் காலநிலை தொடர்ந்து மாறி வந்துள்ளது. அதனால் உயிரின வளர்ச்சி, விருத்தியிலும் மாற்றங்கள் உண்டாகி யுள்ளன.
ஜொஹானஸ் கெப்ளர்
(1571-1630)
ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல் உற்றாலும், உன்னத குறிக்கோளில் வெற்றி பெற்றவர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [ஜொஹானஸ் கெப்ளர் நூல் வெளியீட்டு முகவுரை 1949]
“எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”
ஜொஹானஸ் கெப்ளர்
விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க விஞ்ஞானிகள்
2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார்! ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள்! கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார்! கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது! கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது! அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது! கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்!
பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர்! அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு! கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்! அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது! பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.
கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார்! அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார்! மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார். கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வான வெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்புகளைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை! அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார். கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை!
அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார்! ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது! அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அந்த வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு!
புவி மையச் சுற்று ஏற்பாடு
பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞான வளர்ச்சி
கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள். வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம். அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது. ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் வானியல் கணிப்பு மூலம் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம். முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி.
1. சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.
2. பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது
3. ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.
4. பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.
கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார். அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார். ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார். பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500 /57,753,336 =27.396) துல்லியமாகக் கணித்தார்.அமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது. அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது. பரிதி உதிப்பது மில்லை ! அத்தமிப்பது மில்லை ! யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார். அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புமைத் தூரங்களை அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர். இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.
பரிதி மையமானதா ? அல்லது பூமி மையமானதா ?
கி.பி. 476-550 இல் வாழ்ந்த இந்திய கணித வானியல் மேதை ஆரியபட்டா, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் ஐந்தாம் நூற்றாண்டிலே தான் எழுதிய ‘ஆரியபட்டியா ‘ என்னும் சமஸ்கிருத நூலில் கூறி யிருக்கிறார். சூரிய கிரகணத்திற்கும், சந்திர கிரகணத்திற்கும் ஆரியபட்டா தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார்! அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார்! விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்! ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்! கி.பி. 1473-1543 ஆண்டுகளில் வாழ்ந்த போலந்து மேதை நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] பல்லாண்டுகள் வானோக்கி ஆய்வு செய்து, ‘பரிதி மைய அமைப்பின் ‘ [Sun-centered or Helio-centric System] சீரொழுங்கை நிலைநாட்டியவர். அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன என்று விளக்க மாகக் கூறினார்!
அரிஸ்டாடில், டாலமி போன்ற கிரேக்க ஞானிகள் பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth centered] உறுதிப் படுத்தி இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதாதிபதிகள் பல நூற்றாண்டுகளாய் அக்கோட்பாடை எடுத்துக் கொண்டு, மக்களையும் நம்பும்படிக் கட்டாயப் படுத்தினர்! பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம்! காபர்னிகஸ் கிறித்துவ மதாதி பதிகளிடம் நட்பும், மதிப்பும் நீண்ட காலம் கொண்டிருந்ததால், ‘பரிதி மையக் கோட்பாடை ‘விளக்கும் அவரது, ‘அண்டக் கோள்களின் சுற்றலைப் பற்றி ‘ [Concerning the Revolutions of the Heavenly Orbs (Six Volumes)] என்னும் நூலை மதப்பலியீடுக்குப் பயந்து மறைத்து வைத்துத், தான் சாகும் வரை அதை வெளியிட அனுமதி தரவில்லை!
டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] தொலை நோக்கிகள் தோன்றாத காலத்திலே, மற்ற முற்போக்கான கருவிகளைக் கொண்டு சூரியன், சந்திரன், விண்மீன்கள், மற்ற கோளங்களையும் கண்டார்! பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் பிராஹே நம்பினார்! 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார்! டென்மார்க் தீவில் அவர் கட்டிய யுரானிபோர்க் வானோக்ககம் [Uraniborg Observatory] பின்னால் பல வானோக்காள வல்லுநருக்குப் பயன்பட்டது. 1600 ஆம் ஆண்டில் ஜெர்மன் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் [Johan Kepler] என்பவர் டைசோ பிராஹேயிடம் பணி புரியச் சேர்ந்தார்.
கெப்ளர் வானியலில் செய்த ஒப்பற்ற சாதனைகள்
அண்டக் கோள்களின் நகர்ச்சி விதிகளை [Laws of Planetary Motion] முதன் முதல் ஆக்கிய வானியல் மேதை ஜொஹான் கெப்ளர்! பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும்! நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே! தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே! அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்! கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது! கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது! ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார்!1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்! அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசையே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு சீரிய ஓர் ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் கூறினார். சூரியனை நடுவாய்க் கொண்டு விண்கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், காபர்னிகஸின் ‘பரிதி மையக் கோட்பாடே ‘ மெய்யான தென்ற உறுதியில் மேற்படுத்திப் ‘பிரபஞ்சம் ஓர் ஆட்ட அரங்கம் ‘ [Dynamic Universe] என்று விளக்கிக் காட்டினார். கெப்ளரது ஒப்பற்ற நகர்ச்சி விதிகளையும், அவர் கருதிய அண்டக்கோள் களின் காந்த விசைகளையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச யந்திர இயக்கவியலை மேலும் விருத்தி செய்தவர், ஸர் ஐஸக் நியூட்டன்!
ஜொஹான் கெப்ளரின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு
1571 டிசம்பர் 27 ஆம் தேதி ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] ஜெர்மனியில் வைல் டெர் ஸ்டாட், ஊட்டம்பெர்க் [Weil der Stadt, Wuttemberg] என்னும் ஊரில் நலிந்த, வேண்டப் படாத, முன்முதிர்ச்சிக் குழந்தையாய் [Premature Baby] ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். பணத்துக்கு வேலை புரியும் ஒரு பட்டாளத் தந்தைக்கும், விடுதியாளர் [Innkeeper] மகளான ஒரு தாயிக்கும் நோஞ்சான் பிள்ளையாய்த் தோன்றினார்! எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம்! ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை! தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான்! சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது! விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள்! உள்ளூர் பள்ளிப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, உள்ளூர்ச் செல்வந்தர் அளித்த உபகார நிதியில், 1587 இல் டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Tubingen] சேர்ந்தார்.
பல்கலைக் கழகத்தில் கெப்ளர் படித்தவை, கணித விஞ்ஞானம் [Mathematical Science]. அவற்றில் கணக்கு, வரை வடிவியல் [Geometry], வானியல் [Astronomy], பிறகு இசை ஆகியவற்றை ஒருவர் கற்க வேண்டும்! அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழி களையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார்! அப்போது மேஸ்ட்லின் புகட்டிய முற்போக்கு வானியலான ‘காபர்னிகஸின் பரிதி மையப் பிரபஞ்ச அமைப்பைப் ‘ புதிதாகக் கற்ற மாணவர்களில், கெப்ளரும் ஒருவர். ‘சூரியனை நடுவாகக் கொண்டு, அண்ட கோளங்கள் அதைச் சுற்றி வருகின்றன ‘ என்னும் காபர்னிகஸ் கோட்பாடை, முதலில் மேஸ்ட்லின் வாயிலாய் கெப்ளர் கற்றுக் கொண்ட உடனே, அக்கோட்பாடு மெய்யான தென்று அவருக்குப் பளிச்செனத் தெரிந்தது!
1588 ஆம் ஆண்டில் கெப்ளர் B.A. பட்டத்தையும், 1591 இல் M.A. பட்டத்தையும் பெற்று, லூதெரன் கோயில் பாதிரியாராக [Lutheran Church Minister] விரும்பி, மதக்கல்வி [Theology] பயிலச் சேர்ந்தார். கெப்ளர் இறுதி ஆண்டில் படிக்கும் போது, ஆஸ்டிரியா லூதரன் உயர்நிலைப் பள்ளியில், கணிதப் பேராசிரியர் பதவி காலியாகவே மதக்கல்வியை முடிக்காமல் விட்டு விட்டு, 1594 இல் அப்பதவியை மேற்கொண்டார். பிறகு 1612 இல் ஆஸ்டிரியா லின்ஸில் [Linz, Austria] கணித ஆசிரியர் பணியையும் செய்தார். ஜொஹானின் முதல் மனைவி பார்பரா [Barbara] இறந்ததும், 1613 இல் இரண்டாவது மனைவி சுசானாவை [Susanna] மணந்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்திறங்கிய ஒயின் கொப்பரைகளில் [Wine Barrels] இருந்த ஒயின் கொள்ளளவைக் [Volume of Wine] கணக்கிட, கோல் ஒன்று நெடு நீளத்தில் [Diagonally] துளை வழியாக விட்டு அளக்கப் பட்டது! இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா ? என்று கெப்ளர் ஐயுற்றார்! அவர் கணித மூளை வேலை செய்ய ஆரம்பித்தது! அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு! அம்முறையே பின்னால் போனவென்ச்சரா காவலேரி [Bonavetura Cavalieri (1598-1647)], ஐஸக் நியூட்டன் [1642-1726] ஆகியோரால் விருத்தி செய்யப் பட்டு, கால்குலஸ் [Calculus] கணித மானது!
பிரபஞ்ச ஆட்ட அரங்கத்தின் சீரொழுங்கு!
ஜொஹான் கெப்ளர் வாழ்க்கை முழுவதும் மதவாதியாக, கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்தார். அவரது படைப்புகள் யாவற்றிலும் கடவுளைப் பற்றி எழுதாத தலைப்பே யில்லை! கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார்! ‘பிரபஞ்சத்தை மேலும் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து! அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம்! தனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு அடிக்கடி நன்றி கூறினார், ஜொஹான் கெப்ளர்!
அவர் அறிந்த அகிலத்தின் மர்மத்தை விருத்தி செய்து, 1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட நூல் ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [The Harmony of the World (Cosmos)] என்பது! இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler ‘s Third Law] விளக்கப் படுகிறது! அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும்! பதினேழு ஆண்டுகள் டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹேவுடன் ஆய்வுகள் செய்து, முதலில் கனவுபோல் தென்பட்ட மூன்றாவது விதி, பின்னால் முற்றிலும் மெய்யென்று உறுதிப் படுத்தப் பட்டது!
கெப்ளர் கணித்த முப்பெரும் அண்டக்கோள் விதிகள்
பிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், பரிதியை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்ச்சி, பரிதியை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler ‘s Laws]. 1609 இல் அவர் எழுதிய ‘புதிய வானியல் ‘ [New Astronomy] என்னும் நூலில் கெப்ளரின் முதலிரண்டு விதிகள் வெளியாயின! அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது! முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல! அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி! இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி! அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது! பரிதியை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது!
மூன்றாம் விதி:- பரிதியிலிருந்து ஓர் அண்டம் கொண்டுள்ள தூரத்தின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த அண்டம் பரிதியைச் சுற்றும் காலத்தின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் நிலை யிலக்கம் [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant]. கெப்ளரின் மூன்று விதிகளும் அவர் கண்ணோட்டத்தில் சிந்தித்த விதிகளே [Empirical Laws]! கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல! அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா! அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம்! 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்! கெப்ளரின் இந்தக் கோட்பாடு அண்டங்களின் கட்டமைப்பு ஒழுங்குள்ள காபர்னிகஸின் பரிதி மையக் கொள்கையை விளக்க ஏதுவாகிறது!
கெப்ளரின் குரு டென்மார்க் மேதை டைசோ பிராஹே
டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Astronomer Tycho Brahe (1546-1601)] சூரிய மண்டலத்தின் அண்ட கோளங்களையும், 700 மேற்பட்ட விண்மீன்களையும் பல்லாண்டுகள் நோக்கி விளக்கமாக, துல்லியமாக அளந்து எழுதி வைத்தவர். 17 ஆம் நூற்றாண்டில் தொலை நோக்கிகள் கண்டு பிடிப்பதற்கு முன்னே, அவர் சேகரித்த துல்லிய வானியல் விளக்கங்கள் மிகையானவை! ஒரு கோளம், இரு திசைகாட்டி மானிக் கருவிகளை [One Globe & Two Compasses] மட்டும் பயன்படுத்திப் பண்டைய வானியல் அட்டவணையில் [Astronomical Tables] இருந்த பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தினார்! 1572 இல் அவர் ஓர் உன்னத நோவாவைக் [Supernova] கண்டு பிடித்தார். டென்மார், நார்வே மன்னரிடம் உதவி நிதி பெற்று, 1576 இல் ஓர் வானியல் நோக்ககத்தைக் [Observatory] கட்டி, அதில் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தார். பிராஹே காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடு முழுவதையும் ஒப்புக் கொள்ள வில்லை!
அவர் டாலமியின் பூமைய அமைப்பையும் [Earthentered System], காபர்னிகஸின் பரிதி மைய அமைப்பையும் [Sun-centered System] ஒன்றாக இணைத்து, புதிதாக ‘பிராஹே ஏற்பாடை ‘ [Brahe System] உண்டாக்கினார்! பிராஹே அமைப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றுவதாகவும், பிறகு அந்தச் சூரிய குடும்பம் சந்திரனைப் போல் பூமியைச் சுற்றி வருவதாகவும் யூகித்தார்! அதைப் போன்று விண்மீன்களும் ஒரு நாளில் பூமியைச் சுற்றி வருவதாய்க் கருதினார். அவரது பிரபஞ்சக் கோள்களின் கோட்பாடு பிழையா னாலும், அவரது துல்லிய கோள் அட்டவணைப் பலருக்குப் பயன்பட்டது! 1600 இல் பிராஹேக்கு துணையாளியாகச் சேர்ந்த ஜொஹான் கெப்ளர், அவரது ஆராய்ச்சி களையும், அட்டவணையும் உபயோகித்து, முப்பெரும் அண்ட விதிகளைப் படைத்தார்! 1601 இல் பிராஹே காலமானதும், கெப்ளர் அவரது ஆய்வுக் கூடத்தின் அதிபதியாகி, வானியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பேரரசர் ரூடால்ஃப் [Emperor Rudolf II] அரசவையில் பிராஹே வகித்த, அரசவை வானியல் நிபுணர் பதவியை, அடுத்து கெப்ளர் ஏற்றுக் கொண்டு அரசருக்கு ஆலோசனை கூறும் ஜோதிடராகவும் பணி செய்தார்!
கெப்ளர் வானியல் சாதனைகளைக் கூறும் நூல்கள்
கெப்ளர் எழுதிய அரிய வானியல் நூல்கள்: பிரபஞ்ச வரைவமைப்பு மர்மம் [Cosmographic Mystery (1596)], புதிய வானியல் [New Astronomy (1609)], பரிதியைச் சுற்றும் தூதன் [The Sidereal Messenger (1610)], ஒளியியல் [Optics (1611)], வியாழத் துணைக்கோள் பற்றி விரிவுரை [Narration Concerning the Jovian Satellites (1611)], பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு [Harmony of the World (1619)], காபர்னிக்கன் வானியல் உன்னதம் [Epitome on Copernican Astronomy (1621)], ரூடால்ஃப் கோள் அட்டவணை [Rudolfine Planetary Tables (1628)]. ஜொஹான் கெப்ளர் வானியல் மற்றும் பயிலாது, அத்துடன் ஜோதிடமும் கற்றார்! கெப்ளர் ஜோதிடத்தை நம்பினார்! சூரியன் பூமியில் கால நிலைகளை மாற்றுவது போல், சந்திரன் கடலில் அலை உயர்ச்சி, அலைத் தாழ்ச்சி [High & Low Tides] உண்டாக்குவது போல், கிரகங்கள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று விளக்கம் தந்தார்!
டால்மியின் பூமையக் கொள்கையை நம்பாத கெப்ளர், கிறிஸ்துவ மதப் பலியீட்டுக்குப் பயந்து அடிக்கடித் தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தார்! கெப்ளர் கால்குலஸ் [Calculus] கணிதத்திற்கு வழி வகுத்த முன்னோடி நிபுணர். தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதையிட்ட வல்லுநர். பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், கோட்பாடுகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தன் உன்னத ‘ஈர்ப்பு விசை நியதியைப் ‘ [Theory of Gravitational Force] உருவாக்கினார்!
ஒப்பற்ற வானியல் மேதை கெப்ளரின் மறைவு
கிறிஸ்துவ மத வேதாந்தியான கெப்ளர், ‘பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிவ தென்றால், அதைப் படைத்த கடவுளின் மகிமையைப் புரிந்து கொள்வதும் அத்துடன் சேரும் ‘ என்று கூறுகிறார்! கெப்ளர் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த வானியல் மேதை காலிலியோவிடம் அவர் தொடர்பு கொண்டிருந்தார். காலிலியோ தான் அமைத்த தொலை நோக்கியில் வியாழனைச் சுற்றிடும் சந்திரன்களைக் கண்டு பிடித்ததும், கெப்ளர் மகிழ்ச்சி அடைந்து மூன்று கடிதங்கள், அவருக்கு எழுதினார். வியாழனின் அந்தச் சந்திரன்களுக்குத் ‘துணைக்கோள்கள் ‘ [Satellites] என்னும் ஓர் புதிய பெயரைக் கடிதத்தில் எழுதி அனுப்பி யிருந்தார்!
நேபியர் [Napier] 1614 இல் ஆக்கிய லாகிரித அட்டவணையை [Logarithm Tables] வெளியிட்டதும், கெப்ளர் அவற்றைப் பயன் படுத்தித் தன் ரூடால்ஃபைன் கோள் அட்டவணையை [Rudolphine Planetary Tables] 1628 இல் பல தசமத் துல்லியத்தில் தயாரித்தார்! வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் தனது 59 ஆம் வயதில், சில நாட்கள் நோயுற்று 1630 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் காலமானார். பரிதி மையக் கோட்பாடை ஊன்றிய காபர்னிகஸின் சீடரான, வானியல் மேதை கலிலியோவின் தோழரான, ஐஸக் நியூட்டனின் ஈர்ப்பியல் படைப்புக்கு முன்னோடி யான ஜொஹான் கெப்ளர், பதினேழாம் நூற்றாண்டு வானியல் வளர்ச்சியில் ஓர் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்திருக்கிறார்! 1604 ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு ‘கெப்ளர் சூபர்நோவா ‘ [Kepler ‘s Supernova] என்று நாசா இப்போது பெயரிட்டுள்ளது !
புதிய பூமிகளைத் தேடி நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி
2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலை நோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வாழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.
***********************
தகவல் :
1. A Biography of Johannes Kepler (The Watershed) By : Arthur Koestler (1960)
2. Kepler By : John Banville (1999)
3. Indian Astronomy (Internet Collections)
4. Wikipedia : Delelopment of Helio-centrism
5. The Wonder That Was India By : A.L. Basham (1959)
First Image of Universe: The first image of James Webb Telescope, known as Webb’s First Deep Field, is of a galaxy cluster named SMACS 0723. It contains the light from galaxies that has taken many billions of years to reach us.
நாசாவின் மிகப்பெரும் ஜேம்ஸ் வெப் [james webb] தொலைநோக்கி அனுப்பிய முதல் தெளிவான விண்வெளிப் படங்கள்
This landscape of “mountains” and “valleys” speckled with glittering stars is actually the edge of a nearby, young, star-forming region called NGC 3324 in the Carina Nebula. Captured in infrared light by NASA’s new James Webb Space Telescope, this image reveals for the first time previously invisible areas of star birth.
Called the Cosmic Cliffs, Webb’s seemingly three-dimensional picture looks like craggy mountains on a moonlit evening. In reality, it is the edge of the giant, gaseous cavity within NGC 3324, and the tallest “peaks” in this image are about 7 light-years high. The cavernous area has been carved from the nebula by the intense ultraviolet radiation and stellar winds from extremely massive, hot, young stars located in the center of the bubble, above the area shown in this image.
This landscape of “mountains” and “valleys” speckled with glittering stars is actually the edge of a nearby, young, star-forming region called NGC 3324 in the Carina Nebula. Captured in infrared light by NASA’s new James Webb Space Telescope, this image reveals for the first time previously invisible areas of star birth.
Called the Cosmic Cliffs, Webb’s seemingly three-dimensional picture looks like craggy mountains on a moonlit evening. In reality, it is the edge of the giant, gaseous cavity within NGC 3324, and the tallest “peaks” in this image are about 7 light-years high. The cavernous area has been carved from the nebula by the intense ultraviolet radiation and stellar winds from extremely massive, hot, young stars located in the center of the bubble, above the area shown in this image.
++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++
நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன.
NASA’s James Webb Space Telescope –
[January 9, 2022]
Arianespace’s Ariane 5 rocket launches with NASA’s James Webb Space Telescope onboard, Saturday, January 8th, 2022, from the ELA-3 Launch Zone of Europe’s Spaceport at the Guiana Space Centre in Kourou, French Guiana. The James Webb Space Telescope (sometimes called JWST or Webb) is a large infrared telescope with a 21.3 foot (6.5 meter) primary mirror. The observatory will study every phase of cosmic history—from within our solar system to the most distant observable galaxies in the early universe. Photo credit: NASAThe James Webb Space Telescope is a space telescope developed by NASA with contributions from the European Space Agency, and the Canadian Space Agency. The telescope is named after James E. Webb, who was the administrator of NASA from 1961 to 1968 and played an integral role in the Apollo program. Wikipedia
Comparison of Webb with Hubble Primary Mirrorsமுப்பெரும் விண்வெளி நிறுவங்கள் ஒப்பற்ற ஒரு பெரும் விண்வெளி ஆய்வுத் தொலைநோக்கியை ஏவி உள்ளன.
2022 ஜனவரி 8 ஆம் தேதி காலை 7:20 மணிக்கு, நாசா, ஈசா, சீசா [ NASA, ESA, CSA] [NATIONAL AERONAUTICAL & SPACE ADMINISTRATION, EUROPEAN SPACE AGENCY, CANADIAN SPACE AGENCY] ஜேம்ஸ் வெப் எனப் பெயர் பெறும் பெரும் தொலைநோக்கியை, [James Webb Telescope] ஈசா ஏவுதளம் பிரென்ச் கயானாவி லிருந்து ஏரியான்-5 ராக்கெட்டில் ஏந்தி, பூமியைச் சுற்றி ஆய்வு செய்ய வெற்றி கரமாக அனுப்பி உள்ளது. இப்போது இயங்கி வரும் ஹப்பிள் தொலைநோக்கி துவங்கிய அண்டவெளித் தேடலை, வெகு தூர ஒளிமந்தைகள் [GALAXIES] ஆய்வை, தூரத்து உலகங்கள் அமைப்பை, ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி தொடரும். அப்பெரும் பணிகளை உலக முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் ஒன்று கூடி, பூர்வீகப் பேபி பிரபஞ்சம், முதல் ஒளிமந்தை, நமது சூரிய மண்டலம், அண்டைச் சூரிய மண்டலக் கோள்கள் ஆகிய வற்றின் தோற்றங்களை ஆய்வு செய்ய தங்க முலாம் பூசிய 21 அடி முதன்மைக் கண்ணாடி உள்ளது..
ஏவிய 27 நிமிடத்தில் விண்வெளி நோக்கச் சிமிழ் ஏரியன்-5 ராக்கெட்டிலிருந்து பிரிந்து, பூமியிலிருந்து சுமார் 870 மைல் [1400 கி.மீ.] உயரத்தில் பூமியைச் சுற்ற ஆரம்பித்தது. அடுத்த மூன்று நிமிடத்தில், வெப் தொலைநோக்கியின் சூரியத் தட்டுகள், விரிந்து விண்சிமிழ் சூரிய சக்தியில் இயங்கியது.
ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி இப்போது பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தூரத்தில், பூமியோடு சேர்ந்து, ஒரு நேர் கோட்டில் சூரியனைச் சுற்றி வருகிறது.
On Thursday, November 17, 2011, the House and Congress came to an agreement for the fiscal year 2012 budget that includes funding for NASA and approves the full requested funding for the James Webb Space Telescope (JWST), the successor to the magnificent Hubble Space Telescope. The Webb, which came under fire in July 2011 when the House proposed cutting its funding entirely, will receive $529.6 million, the amount required for it to stay on track for its planned 2018 launch.
Here are five cool things – which you might not know – about the JWST project.
1. The James Webb will unfold in space. It’s being launched on an Ariane 5 rocket, provided by the European Space Agency (ESA). But because of its massive size — it’s as big as a tennis court and about 40 feet (12 meters) high — it must be folded up for the trip. Many features of the telescope, such as the hexagonal shape of the mirrors, were designed to enable the unfolding process. Check out the video below for a glimpse of how Webb’s unfolding will take place.
2. The Webb will be nearly 1 million miles from Earth. To be exact, it’ll be 940,000 miles (about 1.5 million kilometers) from Earth.
Webb will orbit at the Second Lagrangian Point. Credit: NASAIt’s being sent to what’s known as the L2 – the second Lagrangian point in the Earth/sun system. The Lagrangian points are named for Joseph Louis Lagrange, who realized that there would be stable or semi-stable points in the vicinity of every two orbiting bodies in space. In other words, every time you have two orbiting bodies, you also get five Lagrangian points. At these points, a third body can maintain a relatively stable orbit without the heavy usage of thrusters and propellants. In this case, the sun and Earth are the two bodies in space. The Webb Telescope will orbit the L2 point in the Earth/sun system, which means it will follow Earth around the sun, always in a straight line with the Earth and sun. Its orbit will be far from Earth – beyond the moon’s orbit. For comparison, the Hubble Space Telescope is 380 miles away in low Earth orbit.
3. The Webb Telescope’s 18 mirrors are coated in a thin layer of 24-karat gold. Webb’s purpose is to read infrared light, the wavelength of light that is emitted by the farthest objects in the universe. Gold reflects red light better than other materials, making the mirror 98 percent reflective, rather than the 85 percent achieved by ordinary mirrors.
Webb4. The Webb Telescope’s science instruments will operate at temperatures near absolute zero, the theoretical temperature at which all molecular and atomic motion ceases.
WebbEverything that exists emits infrared radiation, which is produced from the vibration of atoms. The colder something is, the less infrared it emits. Because Webb is designed to work in the infrared, but emits infrared itself, it must be kept as cold as possible to keep its interference with itself at a minimum. Webb’s massive sunshield divides the telescope into a hot side, with temperatures around 185 degrees F, and a cold side, around -388 degrees F, or 40 Kelvin. In contrast, the coldest temperature ever recorded on Earth was -129 degrees F.
5. Planning for the Webb telescope began in 1995. Just five years after Hubble launched, scientists at the Space Telescope Science Institute (STScI) in Baltimore, Md., first envisioned what its successor would look like, knowing it would take many years to bring this vision to fruition. Now the Webb is scheduled to be launched in 2018, and it’s a safe bet that astronomers soon will begin imagining an instrument to extend our vision with a telescope even grander and more powerful than the Webb.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு].
இமயத் தொடரிலில் ஆட்டம் இயற்கை அன்னையின் சீற்றம் ! எண்ணிலா ஆஃப்கானியர் புதைந்தார் ! எண்ணற்ற வீடுகள் மட்ட மாயின ! எங்கெங்கு வாழினும் இன்னல்தான்! ஏழு பிறப்பிலும் தொல்லைதான் ! அடித்தட் டுதைத்தால் பூமி நடுக்கம்! மலைத்தட் டசைந்தால் பேரதிர்ச்சி ! குடற்தட்டில் கோர ஆட்டம்! சூழ்வெளி மட்டும் பாழ்வெளி யில்லை ! ஆழ்பூமிக் குள்ளும் புற்று நோய் ! தோலுக்குள் எலும்பு முறிவு. கால் பந்து தையல் போல் கடற் தட்டு முறிவுகளில் பாலமிட்டு காலக் குயவன் எல்லை போட்ட கோலப் பீடங்கள் ஞாலத்தில் கண்டப் பெயர்ச்சியைக் காட்டும் !
++++++++++++++
ஆஃப்கானிஸ்தான் வட கிழக்குப் பகுதியில் ஒரு பெரும் பூகம்கம் 2022 ஜூன் 22 இல் ஆஃப்கானிஸ்தான் வட கிழக்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் ஓர் அசுரப் பூகம்பம் நேர்ந்து, 1150 பேருக்கு மேல் மாண்டதாகவும், சுமார் 1500 பேர் காயம் அடைந்ததாகவும் இரண்டாம் நாள் செய்தியில் அறிய முடிந்தது. எண்ணற்ற வீடுகள் தரை மட்டமாயின. இடிந்த வீடுகளுக்குள் புதை பட்டோர் எண்ணிக்கை தெரியாது. சென்ற ஆண்டு கைப்பற்றிய தாலிபான் வன்முறை அரசினர், அமெரிக்க நாட்டின் உதவி நாடி யுள்ளார். பொதுமக்கள் இராணுவ உதவி யின்றி, யந்திர சாதனங்கள் இல்லாமல் உயிருடன் இருப்போரைக் காப்பாற்ற இயலாது அவதிப்படுகிறார். நில நடுக்க முடன் பெருமழையும் பெய்து, நிலச்சரிவு களும் உண்டாகி, இடர்ப்படு வோரைக் காப்பாற்ற முடியாது திண்டாடினர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 2002 இல் இதுபோன்ற ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அடித்தட்டுப் பிளவுகள் [Tectonic Faults] இந்தோனேசியாவில் தொடங்கி, மலேசியா, தாய்லாந்து, பர்மா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரான் வரை செல்கின்றன.
)An aftershock shook a hard-hit area of eastern Afghanistan on Friday, two days after an earthquake rattled the region, razing hundreds of mud-brick homes and killing 1,150 people, according to state media. The temblor was the poverty-stricken country’s deadliest in two decades.Pakistan’s Meteorological Department reported a 4.2 magnitude quake in southeastern Afghanistan. The Reuters news agency pointed out that its epicenter was in almost the exact same place as Wednesday’s quake. Afghanistan’s state-run Bakhtar News Agency said the aftershock took five more lives and injured 11 people.The nation of 38 million people was already in the midst of a spiraling economic crisis that had plunged millions deep into poverty with over a million children at risk of severe malnutrition
.****************
இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பம் விளைத்த மாபெரும் சேதம், உயிரிழப்புகள்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
இமயத் தொட்டிலில் ஆட்டமடா இயற்கை அன்னையின் காட்டமடா ! எண்ணிலா நேபாளியர் புதைந்த னரடா ! ஏராள வீடுகள் மட்ட மாயினடா ! எங்கெங்குவாழினும்இன்னலடா! ஏழுபிறப்பிலும்தொல்லையடா! அடித்தட்டுதைத்தால் பூமியில்நடுக்கமடா! மலைத்தட்டசைந்தால்பேரதிர்ச்சி யடா! குடற்தட்டில்கோரஆட்டமடா! சூழ்வெளிமட்டும்பாழாக வில்லை யடா! ஆழ்பூமிக்குள்ளும்புற்றுநோய் களடா! தோலுக்குள் எலும்பு முறிவு களாடா கால் பந்துதையல் போல் கடற்தட்டு முறிவுகளில் பாலமிட்டு காலக்குயவன்எல்லைபோட்ட வண்ணப்பீடங்கள் ஞாலத்தில் கண்டப்பெயர்ச்சியைக் காட்டுமடா !
‘பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது! பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவு பட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன! பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாகப் பெயர்ச்சி அடைகின்றன! கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன ‘.
டாக்டர்ஆல்ஃபிரெட்வெஜினர், ஜெர்மன்பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)
எண்பது ஆண்டுகட்குப் பிறகு நேபாளத்தில் நேர்ந்த பயங்கரப் பூகம்பம்
2015 ஏப்ரல் 25 ஆம் தேதி இமயமலைச் சரிவில் உள்ள நேபாளின் தலை நகரம் காட்மண்டுக்கு 50 மைல் [80 கி.மீ.] தூரத்தில் இருக்கும் பொக்காரா என்னும் இரண்டாம் பெரிய நகரில் M7.9 அளவு வீரியமுள்ள ஓர் அசுரப் பூகம்பம் நிலநடுக்கம் உண்டாக்கியது. இதுவரை [மே 3] அறிந்த தகவல்படி இறந்தோர் எண்ணிக்கை : 7000 மேல். காயம் அடடைந்தோர் 10,000 மேல். தோண்டிக் கண்டுபிடிப்போர் தொடர்ந்து பணி செய்து வருவதால், எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. பொக்கராவின் ஜனத்தொகை மட்டும் 28 மில்லியன். நிலநடுக்க மையம் [Epicenter] பொக்கராவாயினும், பூகம்ப எதிரொலித் தாக்கம், பூதான், சைனா, வட இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேச நாடுகளில் உணரப் பட்டுள்ளது. சுமார் 300,000 அன்னிய நாட்டு சுற்றுலா நபர்கள் நேபாளில் உலவி வந்துள்ளதாக மதிப்பீடு செய்யப் படுகிறது. அவர்களில் சிலர் இமயத்தின் சிகரத்தில் ஏற வந்திருக்கும் தீரர்கள். அவர்களில் எத்தனை பேர் மாண்டார் என்னும் எண்ணிக்கை இனிமேல் தான் தெரிய வரும். 80 ஆண்டுகளுக்கு முன் 1934 இல் நேர்ந்த 8.1 அளவு நேபாள் பூகம்பத்தில் சுமார் 10600 பேர் இறந்தனர் என்று வரலாறு கூறுகிறது. தற்போது நேர்ந்த பூகம்பத்தில் பல வீடுகள் தரை மட்டமான தோடு 1832 இல் கட்டப் பட்ட 100 அடிப் புராதனக் கோபுரம் சாய்ந்து மண்ணாய்ப் போனது குறிப்பிடத் தக்கது. இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோதி 4 விமானங்களையும், மருத்துவச் சாதனங்களுடன் 40 பேர் அடங்கிய உதவிக் குழுவையும் அனுப்பி வைத்தார். மற்றும் சைனா, பாகிஸ்தான் தன் உதவிக்குழுவை அனுப்பின. உலக நாடுகள் பல கனடா, அமெரிக்கா போல் மருத்துவத் தேவை, குடிநீர் வசதிக்கு வழி செய்தன.இமயமலை
அரங்கின் அடியில் இயங்கும் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Plate Movements] & கோர விளைவுகள்
நேபாளத்தில் ஏன் பூகம்பம் நேர்ந்தது ? இமயமலை அடித்தளத்தில் இருக்கும் கீழ்நழுவும் இந்திய அடித்தட்டு, மேலேறும் யுரேசிய அடித்தட்டு [Subducting Indian Plate & Overriding Eurasia Plate] ஆகியவற்றுக்கு இடைபே ஏற்படும் நகர்ச்சி முறிவால் எழும்பிடும் அதிர்ச்சிகளே நிலநடுக்கமாய்த் தளமட்டத்தில் நேர்கின்றன. இந்திய அடித்தட்டு ஆண்டுக்கு 45 மில்லி மீடர் [45 mm] குறுகி வருகிறது. அப்போது இமாலய சிகரம் உயர்ச்சி அடையும். காட்மண்டுக்கு 250 கி.மீ. [150 மைல்] அருகில் இதுவரை M6 அளவுக்கு மேற்பட்ட 4 பூகம்ப நிகழ்ச்சிகள் 100 ஆண்டுகளில் நேர்ந்துள்ளன. [1988 (M6.9) .நிகழ்ச்சியில் 1500 பேர் இறந்தனர்.] 1934 இல் மிகப் பெரிய பூகம்பம் M8.1 அளவில் நேர்ந்து 10,600 பேர் உயிரிழந்தார். 1905 இல் காங்கரா [M7.5], 2005 இல் பயங்கரக் காஷ்மீர் பூகம்பம் [M7.6] நேர்ந்து இரண்டிலும் மொத்தம் சுமார் 100,000 பேர் மாண்டனர். காஷ்மீர் பூகம்பம் பின்னால் இக்கட்டுரையில் விளக்கப் பட்டுள்ளது. 1950 அஸ்ஸாமில் நேர்ந்த [M8.6] பூகம்பம் பேரளவு உயிரிப்பும், சேதாரமும் தந்துள்ளது.
விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது! பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல்ல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது! சென்ற 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்! அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப் படுகிறது.
மலை அடுக்குப் பாதைகள் மற்றும் வீதிகளில் நிலநடுக்கத்தால் சரிவுகள் ஏற்பட்டு இல்லங்களை இழந்த மக்கள் எங்கும் தப்பியோட முடியாமல் முடங்கிப் போனார்கள். அத்துடன் உதவி செய்வதற்கு வாகனங்கள் எவையும் வரமுடியாமல், மருத்துவ வசதிகள் நெருங்க இயலாது மாந்தர்கள் பசியாலும், குளிராலும் தவியாய்த் தவித்துப் போனார்கள். உண்ண உணவும், அருந்த நீரும் உதவி செய்வோர் நடந்தே கொண்டுவர வேண்டிய தாயிற்று. காயமடைந்த மலைப்புற மக்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிக்கவும், உணவு, போர்வை, கூடாரச் சாதனம் போன்றவை சுமக்கவும் ஹெலிகாப்டர்கள் அநேகம் தேவைப் பட்டன. அவையாவும் அன்னிய நாடுகளிலிருந்து வருவதற்குத் தாமதமாகி மக்களின் பொறுமை எல்லை கடந்தது. பாகிஸ்தான் பிடித்த காஷ்மீரின் தலைநகரான முஸாஃபராபாத்தில்தான் எண்ணற்ற இல்லங்கள் தகர்ந்து, பல்லாயிரம் பேர் மாண்டதுடன், தங்கிடக் கூடாரங்கள் இல்லாது மக்கள் அவதியுற்றனர். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து 40 மைல் தூரத்தில் முஸாஃபராபாத் உள்ளது. மழை பெய்து எல்லா இடங்களும் ஈரமானதுடன், இராணுவப் படையினர் அமைத்த தற்காலியப் பாதைகளும் சகதியாகிப் போக்குவரத்துகள் தாமதப்பட்டன!
நேபாள் பூகம்ப விளைவுகள்
குளிரில் சிரமப்படும் சிறுவர்கள், வயதானோர், காயம் பட்டோர் மற்றும் குடும்பத்தார்கள் தங்குவதற்கு ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தேவைப்பட்டன! குறைந்தது 200,000 கூடங்கள் உடனே வேண்டி யிருந்தன. ஆனால் ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டவை 500,000 கூடாரங்கள். அமெரிக்க அரசாங்கம் அனுப்பிய கூடாரங்கள்: 1500. ஆனால் அவற்றைத் தூக்கிச் செல்லும் போக்குவரத்துச் சாதனங்கள் 500 எண்ணிக்கைக்கு மேலாக முதல் நாள் கொண்டு போக முடியவில்லை. அன்னிய நாடுகள் அனுப்பிக் கைவசம் கிடைத்தவை மொத்தம்: 30,000 மட்டுமே! என்ன உதவிகள் கிடைத்தாலும் காஷ்மீர்ப் பூகம்பம் வரலாற்றில் ஒரு கொடும் பூகம்பமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகிறார். முதலிரண்டு நாட்கள் இடிந்த வீடுகளைப் அப்புறப்படுத்தி உயிர் உள்ளோரைத் தூக்குவதிலும், மாண்டோரைப் புதைப்பதிலும் காலம் சென்றது. ‘காஷ்மீர் ஓர் பெரும் மயானப் புதை பூமியானது, ‘ என்று அரசாங்க அதிகாரி சிகந்தர் ஹயத் கான் கூறினார்!
பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது! பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது! நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன! தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள் !
நேபாள் பூகம்ப விளைவுகள்
அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது! இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது! அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது! இந்த நியதிதான் ‘தட்டுக் கீழ்நுழைவு ‘ [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டு களுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னி யாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.நேபாள் பூகம்ப விளைவுகள்இந்திய உபகண்டத்தின் வடகிழக்குப் பகுதியும், வடமேற்குப் பகுதியும் பல நூற்றாண்டுகளாக பூகம்பத் தாக்குதலுக்குப் பலியாகிப் படு சேதாரங்கள் விளைந்துள்ளன. கி.பி.894 இல் நேர்ந்த M:7.5 [Mercalli Scale] நிலநடுக்கத்தில் சுமார் 1,50,000 மக்கள் மாண்டதாக அறியப்படுகிறது. பிறகு 1668 இல் M:7.6 பூகம்பம். 1819 இல் M:7.5 பூகம்பத்தில் 3200 பேர் மரணம். 1935 இல் குவெட்டாவில் நேர்ந்த M:8.1 அளவு பூகம்பத்தில் 30,000 பேர் மாண்டதாக அறியப்படுகிறது. 1985 இல் M:7.5 அளவு, 1991 இல் M:6.7, 1993 இல் M:7.0 பூகம்பங்கள் ஆஃப்கானிஸ்தான் ஹிந்துகுஷ் மலைத்தொடரில் உண்டாகிப் பலர் மரணம். 1997 இல் பலுஜிஸ்தானில் M:7.3, 2001 ஆண்டு குஜராத்தில் M:7.6, மரணம்:11,500 பேர், 2002 இல் கில்ஜித்-ஆஸ்டோர் பகுதியில் M:6.3 அளவு பூகம்பம், 15,000 பேர் வீடிழந்தனர்.
நேபாள் பூகம்ப விளைவுகள்காஷ்மீர்ப்பூகம்பப்பிரச்சனைகள்எவ்விதம்கையாளப்பட்டன ?அக்டோபர் 8 ஆம் தேதிப்
பூகம்பத்தில் பாகிஸ்தான் இந்தியக் காஷ்மீர்ப் பகுதிகளில் வீடுகள், சாலைகள் பள்ளிக்கூடங்கள் நொறுங்கித் தரை மட்டமாயின! பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சின்னஞ் சிறு பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருடன் புதைபட்டனர். கிரேன் அகப்பைக் கரங்களைக் கொண்டு உடைந்த கட்டிடத் துண்டு, துணுக்குகளைப் புரட்டி உயிரோடு உள்ளவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது, துக்கப் பட வேண்டிய நிகழ்ச்சியே! காங்கிரீட் கட்டிடங்கள் துண்டுகளாய் உடைந்தன! கிராமத்து மண் குடில்கள் யாவும் தவிடு பொடியாயின! இந்திய, பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்ததாகப் பறைசாற்றினாலும், மெய்யாக உதவிப் படைகள் உடனே அனுப்பப்பட வில்லை! இருபுறத்திலும் துன்புற்ற மக்களுக்குப் பணிபுரியச் செல்லும் உதவிப் படையினர் தம் வாகனங்களை சிதைந்து போன பாதைகளில் செலுத்த முடியவில்லை! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் உள்ள ஸ்கி [Skee] என்னும் ஊர் இராணுவ முகாமிற்கு அருகில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாட்கள் கழித்தும் நீர், உணவு, மருந்து எதுவும் கிடைக்க வில்லை என்று அவ்வூர் மக்கள் புகார் செய்ததாக அறியப்படுகிறது
.நேபாள் பூகம்ப விளைவுகள்
காயம் அடைந்தோர் காயத்தின் தீவிரத்திற்கு ஒப்ப வரிசைப்படி நிற்க வைக்கப்பட்டு சிகிட்சை செய்ய ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்லப்பட்டனர். 20,000 பேர் வசிக்கும் பாகிஸ்தானில் உள்ள பலகாட் என்னும் நகர் முற்றிலும் தகர்ந்து மண்ணாகி மழையில் புழுதியானது! 24 மைல் தூரத்தில் இருக்கும் இராணுவப் படையினர் பலகாட் நகரை வந்தடைய மூன்று நாட்கள் ஆயின! அந்த நகரில் 200 பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடம் நொறுங்கிப் போய் மாணவர்கள் அனைவரும் அடைபட்டுக் கிடந்தனர்! தாமதமாக வந்த இராணுவப் படையினரைக் கண்டு வெகுண்ட பெற்றோர்கள் கல்லடி கொடுத்து வெகுமதி தந்ததாக அறியப் படுகிறது! உதவிப் படையினர் அளித்த பிஸ்கட், போர்வை களுக்குச் சண்டை போட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டோரில் பலர்! ஆனால் யாருக்கும் காத்திருக்காது சாதாரணப் பணியாட்கள் கோடாரி, கடற்பாறை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கால்நடையில் மலைச் சரிவுகளில் ஏறி காயம் பட்டோருக்கு முதல் உதவியும், சிக்கிக் கொண்டவரை வெளியில் தூக்கக் கை கொடுத்தும் பலர் முன்வந்து உதவி செய்தது பாராட்டப் படவேண்டியது.
Train coaches toppled over after mudslides triggered by heavy rains
at the New Haflong railway station in Assam, India, on May 16, 2022
People wade through flood waters in Nagaon district of India’s Assam state on May 18, 2022
At least 110 people have been killed in landslides and flooding triggered by heavy rains in the western Indian state of Maharashtra.
[July 24, 2021
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
தாரணி சூடேறித் தணல் சட்டியாகக் காரணி ஒன்றில்லை. சூரியக் கதிர்வீச்சு சுட்டெரிக்குது பூகோளத்தை வெப்ப யுகப் பிரளயம் தப்பா தெங்கும் அரங்கேறுது பேய் மழை, சூறாவளி பெரு வெள்ளம், தீப் பற்றல் பேரிழப்பு !
பனிச்சிகரம் பரட்டைத் தலையாய் கரும் பாறையாக ஜீவ நதிகளில் நீரோட்டம் தளரும் ! உயிர்வளப் பயிரினச் செழிப்புகள் சிதைந்து புலம்பெயரும் பறவை இனம் தளமாறிப் போகும், பருவம் தடமாறிப் போகும் !
*****************************
வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப் பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்
2022 ஆண்டு மே மாதம் 16-20 தேதிகளில் பெய்த பருவ முன்னோடி மழை அடிப்புகளால், வடகிழக்கு இந்தியாவில், கௌகாத்தி, அஸ்ஸாம் பெருமழைப் பிரதேசத்தில் 1900 கிராமங்களில் நிலச் சரிவுகளும், நிலப்பகுதி வெள்ளமும் பேரழிவைச் சுமார் 700,000 இல்லங்களை மூழ்க்கி உள்ளன. இறந்தவர் எண்ணிக்கை குறைந்தது : 10. உலகப் பெரும் நதிகளில் ஒன்றான பிரமபுத்திரா ஓடும் இமய மலைப் பிரதேசங்கள் அஸ்ஸாம், பங்களாதேஷ், திபெத் பகுதிகளில் சுமார் 1900 கிராமங்கள் மூன்று நாட்களாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன.
சூட்டு யுகப் பேய் மழை! உலகளாவிய காலநிலை மாறுதல்கள்
“எங்கே நாம் போக வேண்டும் என்று ஏற்புடைய தெளிவானச் சிந்தனையைப் பெறுவது வரை, நாம் அந்த இடத்தை அடையப் போவது என்பது நிச்சய மில்லை.”
டேவிட் கோர்டென் [David Korten]
“கடந்த 20 – 40 ஆண்டுகளாக ஏறிக்கொண்டு வரும் பூகோளச் சூடேற்றத்துக்கு சூரியக் கதிர்வீச்சுகள் காரணமல்ல என்பது விஞ்ஞானக் கணிப்பு மூலமாக உறுதியாக்கக் பட்டிருக்கிறது.”
டாக்டர் பியர்ஸ் ·பார்ஸ்டர் [Dr. Piers Forster, School of Earth & Environment]
“வெற்றி பெறுவதே நமது முடிவான குறிக்கோள் என்னும் வாடிக்கை மாறி மக்களுக்குப் பணி புரிவதே முக்கிய குறிக்கோள் என்று நாம் வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
நமது திட்டங்களின் இறுதி விளைவுகள் என்ன ? மக்களுக்குக் கிடைக்கும் வேலைகள். நிதிவளச் செழிப்புக்கு ஏற்ப, வணிகத் தளங்களின் அமைப்புக்கு ஏற்ப, சூழ்வெளியை மாசுபடுத்தாத, குடிமக்களுக்கு இடரளிக்காத தொழிற்துறைப் பொறிநுணுக்கப் படைப்புகளை நிர்மாணிக்க முனைந்திருக்கிறோம். இந்த குறிப்பணித் திட்டங்களில் நாம் எப்போதும் அப்படி வெற்றி அடைவ தில்லை. ஆனால் தொழிற்துறைகளில் மெய்யாக நடைபெறும் உதாரணக் குறைகளே பேரளவாக நமக்குத் தெரிகின்றன.”
அசோக் கோசலா [Ashok Khosala, Founder of Development Alternatives]
“ஒரு கருத்தைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நாமறிந்த தொழிற்துறை வாணிபங்கள் நமது நாகரீகக் கலாச்சாரம், உயிரின வளர்ச்சிகள் உட்படப் பூகோளத்தை நாசமாக்கி வருகின்றன. உலகெல்லாம் பரவிச் சீராக இயக்கப்படும் அத்தகையப் பேரழிவு வணிக ஏற்பாடுகள் போல் இதற்கு முன்பு இருந்ததில்லை.”
பால் ஹாக்கென், சூழ்வெளிக் காப்பாளர் [Paul Hawken, Environmentalist]
“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]
பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்
பூகோளச் சூடேற்றத்தால் விளையும் காலநிலை மாறுதல்கள்
(முன்வாரத் தொடர்ச்சி)
8. உலக நாடுகளைச் சார்ந்த காலநிலை மாறுதல் அரங்கம் [Intergovernmental Panel on Climate Change (IPCC)] கூடி 130 உலக நாடுகளின் விஞ்ஞானிகள் செய்த முடிவுகள்:
1988 இல் உலக நாடுகளின் சூழ்வெளித் திட்டக்குழு [United Nations Environment Program (UNEP)] உலகக் காலநிலை அரங்கு [World Meteorological Organization (WMO)] ஆகிய இரண்டு உலகப் பேரவைகளும் கூடி IPCC அரங்கை நிறுவின. அதன் குறிக்கோள் என்ன ? உலக நாடுகளில் ஏற்படும் காலநிலை மாறுதல்களின் பல்வேறு பண்பாடுகளை உளவி அறிவதும், அவற்றால் விளையும் சூழ்வெளிச் சமூகப் பாதிப்புகள், பிரதிபலிப்புகள் ஆகியவற்றை ஆய்வதுமே.
a) 2100 ஆண்டுக்குள் பூகோளத்தின் உச்ச உஷ்ண ஏற்றம்: 1.8 முதல் 4 டிகிரி C இடைநிலைக் கணிப்பு அளவு: 1.1 முதல் 6.4 டிகிரி C.
b) முக்கிய கிரீன்ஹௌஸ் வாயுவாகக் கருதப்படுவது : CO2 [கார்பன் டையாக்ஸைடு], தொழிற்சாலைகளில் நிலக்கரி எரிப்பு, ஆயில் எரிப்பு, கானக அழிப்பு ஆகியவற்றால் சூழ்வெளியில் கார்பன் டையாக்ஸைடு மிகையாகச் சேமிக்கப் படுகிறது.
c) அடுத்த இரண்டு கிரீன்ஹௌஸ் வாயுக்கள் : மீதேன், நைட்டிரஸ் ஆக்ஸைடு ஆகியவை. அவற்றின் சேமிப்பளவு கார்பன் டையாக்ஸோடு ஒப்பிடும் போது சிறிதாயினும் அவை விளைவிக்கும் பாதிப்புகள் மிகுதியானவை. சூடேற்ற வீரியத்தில் மீதேன் CO2 விட 20 மடங்கும், நைட்டிரஸ் ஆக்ஸைடு CO2 விட 300 மடங்கும் உக்கிரமானவை.
9. பூதளச் சராசரி உஷ்ணத்தின் ஏற்றப் போக்கு:
19 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதளச் சராசரி உஷ்ணம் (0.3 to 0.6) டிகிரி C ஏறி, 20 ஆம் நூற்றாண்டில் (0.8 to 0.9) டிகிரி C ஆக மாறி விட்டது.
10. 1900 முதல் 1994 வரை பூதளம் மீது படிவுப்பனி (Precipitation Change Trend over Land)
குளிர் காலத்தில் வடப் பூகோள உச்ச சிகரங்களின் தளத்தில் படிவுப்பனி வீழ்ச்சி மிகையாகி உள்ளது. 1960 ஆண்டுகளில் பூமத்திய ரேகைப் பகுதிகளிலும் அவற்றை அண்டிய பரப்புகளிலும் படிவுப்பனி வீழ்ச்சிகள் குறைந்துள்ளன.
11. சூடேறும் பூகோளத்தால் கடல்நீர் மட்ட உயர்ச்சி
கடந்த 100 ஆண்டுகளாய் உலகெங்கும் கடல்நீர் மட்டம் 10 முதல் 25 செ.மீடர் (சுமார் 4 முதல் 10) அங்குல உயரம் அதிகரித்துள்ளது. இனி அடுத்த 100 ஆண்டுக்குள் (2100) கடல்நீர் மட்டம் (13 முதல் 94) செ.மீ (5 முதல் 36) அங்குலம் உயரும் என்று மதிப்பீடு செய்யப் படுகிறது.
12. காலநிலை மாற்றத்தால் ஏற்பட வாய்ப்புள்ள தாக்குதல்கள்:
கிரீன்ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு மிகையாகிப் போனால், காலநிலையில் பெருத்த மாறுதல்கள் நேரலாம். அதனால் சூழ்வெளியிலும், சமூகப் பொருளாதரப் பாதிப்புகள் உண்டாகும்.
13. பூகோள உஷ்ண மாற்றங்களின் தீர்க்க மதிப்பீடு [Global Temperature Projected changes]:
கணினி மாடல்கள் மூலம் தீர்க்கமாய்க் கணித்ததில் [Computer Model Projections] 2100 ஆண்டுக்குள் பூகோளச் சராசரி உஷ்ணம் 1 முதல் 4.5 டிகிரி C ஏறிவிடும் என்று அறியப் படுகிறது.
பூகோளம் சூடேற பரிதியின் கதிர்வீச்சுகள் காரணமல்ல !
நவீன காலத்து வெப்ப மாறுதலுக்கு, சூரியனின் வெப்பசக்தி வெளியேற்றம் காரணமில்லை என்று ஒரு புதிய விஞ்ஞான ஆராய்ச்சி அழுத்தமாகக் கூறுகிறது. அந்த ஆய்வின்படிக் கடந்த 20 ஆண்டுகளில் பரிதியின் வெப்ப வெளியேற்றம் குறைவாக இருந்தாலும், பூகோளம் சூடேறி உள்ளது என்பது அறியப்படுகிறது. ராயல் சொஸைட்டி அறிக்கை சொன்னதுபோல் தற்போதைய நவீன உஷ்ண ஏற்றத்துக்குச் சூரியனின் அகிலக் கதிர்கள் [Cosmic Rays] பொறுப்பானவை என்பது பிழையென்று நிரூபிக்க பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி வெப்பசக்தி மேலும், கீழும் ஏறி இறங்குகிறது. அந்த சுற்றியக்கத்தின்படி 1985 ஆண்டு முதல் சூரிய வெப்பம் தணிந்து வருகிறது. அந்த வருடங்களில் பூமியின் உஷ்ணம் மிகையானது போல் முந்தைய 100 ஆண்டுகளில் கூட நிகழ்ந்தது இல்லை. IPCC விஞ்ஞானக் குழுவினர் பூகோள சூடேற்றத்துக்கு கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சூரிய வெப்பத்தை விட 13 மடங்கு ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காட்டியுள்ளார் !
IPCC விஞ்ஞானிகள் 2007 அறிக்கைகளில் வெளியிட்ட தகவலில் முக்கியமானவை பின்வருமாறு:
1. ஆ·ப்ரிக்கா கண்டத்தில் 2020 ஆண்டுக்குள் 75 முதல் 250 மில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறைப் பாதிப்பில் இன்னல் அடைவார்கள்.
2. கிழக்கு, தென் கிழக்காசிய நாடுகளில் தானிய விளைச்சல் 20% அதிகமாகும். அதே சமயத்தில் மத்திய, தெற்காசியாவில் தானிய விளைச்சல் 30% குன்றிவிடும்.
3. சில ஆ·பிரிக்க நாடுகளில் மழை பெய்து வளமாகும் வேளாண்மை விளைச்சல்கள் 50% குறைந்து போய்விடும்.
4. பூகோளத்தின் உஷ்ணம் 1.5 முதல் 2.5 வரை ஏறினால் 20% முதல் 30% வரையான பயிரினங்கள், விலங்கினங்கள் மரித்திடும் வாய்ப்புகள் உள்ளன.
5. கடல்நீர் மட்டம் ஏறும்போது கடற்கரை நகரங்கள் உப்புநீரால் அடைபட்டு நீர்வளம், நிலவளம், மீன்வளம் ஆகியவற்றில் பெருஞ் சேதம் உண்டாக்கும்.
உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தால் நேரும் பாதக விளைவுகள்
1. ஆசிய நாடுகள்
ஆசியாவில் இந்தியா, சைனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் உயிர் நதிகளுக்கு ஆண்டுதோறும் நீரோட்டம் அளித்து வருபவை உலகிலே உயர்ந்த இமாலய பனிச்சிகரங்கள் என்பதை அனைவரும் அறிவோம். பூகோளச் சூடேற்றத்தால் அடுத்து 20-30 ஆண்டுகளில் நீரோட்டம் பாதிக்கப்படும் என்பது உறுதியாக நம்பப் படுகிறது. அதே சமயத்தில் வெள்ளம் அதிகரித்து கரைப் பகுதிகளில் உள்ள நகரங்களில் நீர் புகுந்து இன்னல் விளைவிக்கலாம் என்றும் அறியப் படுகிறது. அத்தகைய வெள்ள அடிப்புகளால் மக்களை நோய் நொடிகள் பீடிக்கும், மக்கள் மரணம் அடைவார்.
2. ஐரோப்பிய நாடுகள்
ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பூகோளச் சூடேற்றத்தால் ஓரளவு பாதகம் அடையும். 2020 ஆண்டுக்குள் வட ஐரோப்பியப் பகுதிகளில் தானிய விளைச்சல் பெருகும், ஆனால் பல பகுதிகளில் நீர் வெள்ளப் பாதிப்புகள் உண்டாகும். தென் ஐரோப்பிய நாடுகளில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனைகள் எழுந்திடும். தானிய விளைச்சல்கள் குன்றும். மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வேனிற் கால மழைப் பொழிவுகள் குறையும். நீர்த் தட்டுப்பாடு நேரும். வெப்பப் புயல்கள் அடித்து மக்களைத் துன்புறுத்தும். கானகத் தீக்கள் பற்றும்.
3. வட அமெரிக்க நாடுகள்
குளிர் காலத்தில் வெப்பம் மிகையானால் மேற்கு மலைப் பனிச்சிகரங்கள் உருகி நதிகளில் வெள்ளம் எழுந்து கரைப்பகுதி நகரங்களில் நதி வீடுகளை மூழ்க்கி விடும். வேனிற் காலத்தில் பனிச் சிகரங்கள் கரைந்து போய் நீர்த் தட்டுப்படு உண்டாகும்., வேனிற் காலத்தில் மின்னல் அடித்துக் கானகத் தீக்கள் பற்றிக் கொள்ளும். வெப்பப் புயல் அடிப்புகள் நேரும். கடல் மட்டம் உயர்வதாலும், கடல் நீர் சூடாவதாலும் சூறாவளிகள், ஹரிக்கேன்கள் தோன்றி மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளில் பேரளவு இடர்கள் உண்டாகும்.
4. லத்தின் அமெரிக்க நாடுகள் (தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள்)
மண்தள நீர்வளத்தில் வெப்ப ஏற்ற மாயினும் சரி, அல்லது இறக்க மாயினும் சரி, கிழக்கே அமேஸான் நதிப் பகுதிகளில் பூமத்திய ரேகைக் கானகங்கள் மறைந்து, வெற்றுப் பீடப் பகுதிகளாகி [Savannah] விடும். நிலவளம், நீர்வளம் வரட்சியாகி பாலைப் பரப்புகளாய் மாறி தானிய விளைச்சல்கள் தடைப்படும். சோயாபீன் விளைச்சல் வெப்பப் பகுதிகளில் அதிகரிக்கும். கடல் மட்டம் உயரும் போது, தணிவுப் பகுதிகளில் [கயானா, எல் ஸல்வடார், ரியோடி ஜெனிரோ கரைப் பகுதிகள்] கடல் வெள்ளம் பரவி சுவைநீர் நிலங்கள் உப்புநீர் நிலங்களாய்ப் பாதிப்பாகும். பனிச் சிகரங்களில் பனிச் சேமிப்புகள் குறைந்து போய் ஆறுகளில் நீரோட்டம் குன்றி நீர்ப் பற்றாக்குறை உண்டாகும்.
5. ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவப் பகுதிகள்.
பனிக்குன்றுகளின் பனித்தட்டுகள் நீர் உருகி மெலிந்து போகும். கடல் மிதப்பு பனி முகடுகள் கரைந்து போகும். இயற்கையான உயிர்வளப் பயிரினச் செழுமைப்பாடுகள் [Ecosystems] முறிந்து, புலம்பெயரும் பறவை இனங்கள் பாதகம் அடையும்.
++++++++++++++++++
தகவல்:
1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)
2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)
Now that the Event Horizon Telescope collaboration has released its image of the Milky Way’s black hole, the team is focusing on making movies of the two photographed black holes and finding other distant black holes large enough to study
An image of the Messier 87 black hole, showing, for the first time, how it looks in polarized light. The lines mark the orientation of polarization, which is related to the magnetic field around the shadow of the black hole.
உலக விஞ்ஞானிகளின் ஒருபெரும் முதன்மைச் சாதனை
இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல், பூதப் பெரும் ஈர்ப்பு விசையால் மட்டும் இருப்பதாகக் கருதப்படும் கருந்துளையின் மெய்யான படத்தைப், பூமியில் தூரத்தில் உள்ள எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் கூர்ந்து படமெடுத்து, ஈன்ற பேரளவு தகவல் இலக்கத்தைச் [Data] 10 ஆண்டுகளாய்த் திரட்டிச், சுமார் 200 விஞ்ஞானிகள் உறுதியாக வெளியிட்ட முதல் கருந்துளைப் படம் இது. மற்றும் பன்னாட்டு உலக விஞ்ஞானிகளின் உன்னத கூட்டு வெளியீடாக மதிப்பிடப் படுகிறது.
அந்த அசுரக் கருந்துளை பேரளவு நிறை கொண்டது. 6.5 பில்லியன் மடங்கு சூரியன் எடைக்குச் சமமானது. அந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில், உள்ள M87 எனப்படும் ஒளிமந்தையின் [Galaxy M87] மையத்தில் உள்ளது. கருந்துளைகளுக்குச் “சுழற்சி” [Spin] உள்ளது. மையக் கருந்துளை அருகில் வரும் பிண்டத்தையோ, அண்டத்தையோ, விழுங்கி, அதன் நிறை மிகையானால், சுழற்சியின் வேகம் அதிக மாகிறது.
First, the researchers will have to examine the data they have already collected. The images of Sgr A* and M87* were both assembled from data gathered in 2017, but there have since been two more observation periods, with extra telescopes added to the collaboration’s original network of eight.
“Data does exist. We have taken data in 2018 with one additional telescope, 2022 with three additional telescopes, and we are working very, very hard to get that to you… as soon as we possibly can, but I can’t make any promises about when,” said EHT researcher Lia Medeiros at the Institute for Advanced Study in New Jersey during a 12 May press event. It will probably take years before the results of that analysis are released, she said.
One thing this work is expected to clarify is the structure of the material around Sgr A*, particularly the three bright “knots” of light seen in the new image. Because of the way the image was made, the bright spots could just be artefacts. “Those knots tend to line up with the directions in which we have more telescopes,” said EHT researcher Feryal Özel at the University of Arizona during the press event. “Even though it’s natural in theory to expect these brighter spots, we don’t trust them in our data that much yet.”
Mars Samples in Orbit (Illustration): This illustration shows NASA’s Mars Ascent Vehicle (MAV), which will carry tubes containing Martian rock and soil samples into orbit around Mars, where ESA’s Earth Return Orbiter spacecraft will enclose them in a highly secure containment capsule and deliver them to Earth. Credit: NASA.
2030 ஆண்டுகளின் மத்திமத்தில் அமெரிக்க நாசாவும், ஐரோப்பிய விண்வெளிப் பேரவை ஈசாவும் இணைந்து, மனிதர் இயக்கா விண்சிமிழ் அனுப்பிச் செவ்வாய்க் கோள் மண் மாதிரிகளைச் சேமித்து, பூமிக்கு மீட்டுவர திட்டங்கள் தயாராகி வருகின்றன. செவ்வாய்த் தளவுளவி ‘விடாமுயற்சி’ [MARS PERSEVERANCE ROVER] சுய இயங்கி வாகனப் பயணம் முதற் கட்டப் பயிற்சி. செவ்வாய்த் தளத்தில் உள்ள ‘ஜேசிரோ குழித்தலம்’ [JEZERO CRATOR] தேர்ந்தெடுக்கப் பட்டு, பாறை மாதிரி மீட்பு குறிப்பணி இருமுறை திட்டமிடப்படும். முதல் குறிப்பணி விண்சிமிழ் நேராக ஜேசிரோ குழித்தலத்தில் இறங்கி மண் மாதிரிகளைச் சேமித்து, வேறொரு சிமிழ் மூலம் பூமிக்கு அனுப்பப்படும். இரண்டாம் குறிப்பணி யில் செவ்வாய்க் கோள் சுற்றுப் பாதையில் சுற்றும் விண்சிமிழ் ஒன்றில் உள்ள மண் மாதிரிகள் மீட்கப் பட்டு, பூமிக்கு கொண்டுவரப்படும். இதுபோல் பூமிக்கு நேரே வரும் மாதிரி மண்ணை நூதன முறையில் சோதிக்கும் போது தான் செவ்வாய்க் கோளில் உயிரினத் தோற்றம் இருந்ததை மெய்ப்பிக்க முடியும். அந்த முயற்சிக்கு ராகெட் டிசைன், இயக்க ஆளுநராக நாசா அமெரிக்கப் பெண் எஞ்சினியர் ஆஞ்சி ஜாக்மன் நியமிக்கப் பட்டார்.
A NASA-led Sample Retrieval Lander launches to Mars in the mid 2020s, carrying with it an ESA-led sample fetch rover and a NASA-led Mars rocket. The lander would touch down close to Perseverance’s landing location, Jezero Crater, and deposit the fetch rover. Lead: Jet Propulsion Laboratory
Project Manager for NASA’s Mars Ascent Vehicle: Angie Jackman, Mars Ascent Vehicle project manager at NASA’s Marshall Space Flight Center in Huntsville, Alabama, holds an example of one of the sample tubes the agency’s Perseverance rover will fill with Martian rock and regolith, to be returned to Earth for scientific study. Credits: NASA
செவ்வாய்க் கோள் மண் மாதிரி மீட்டுவரும் சுய இயங்கி மின்சிமிழ்
செவ்வாய்க் கோள் பாறை மாதிரி கொண்டுவரும் ராக்கெட் வாகனம் தயாரிக்கும் ஆஞ்சி ஜாக்மன் பொறியியல் விஞ்ஞானிக்கு 35 வருட மேம்பட்ட விண்வெளி நுணுக்கம் இருக்கிறது. அத்துறைக்கு வேண்டிய கட்டுமானத் திறம், வெப்ப யந்திரச் சாதனங்கள், ராக்கெட்டுகள், கருவிகள் ஆகியவற்றில் அனுபவம் உடையவர்.
Mars Ascent Vehicle (Illustration): This illustration shows NASA’s Mars Ascent Vehicle (MAV) in powered flight. The MAV will carry tubes containing Martian rock and soil samples into orbit around Mars, where ESA’s Earth Return Orbiter spacecraft will enclose them in a highly secure containment capsule and deliver them to Earth. Credits: NASA
Sample Return Concept Illustration
April 21, 2022
This illustration shows a concept for multiple robots that would team up to ferry to Earth samples collected from the Mars surface by NASA’s Mars Perseverance rover.
NASA and ESA (European Space Agency) are developing concepts for the Mars Sample Return program designed to retrieve the samples of Martian rocks and soil being collected and stored in sealed tubes by Perseverance. In the future, the samples would be returned to Earth for detailed laboratory analysis.
5 Things to Know
1 The first time several vehicles would land (a lander, a rover, and a rocket) on the surface of Mars at the same time.
2 First launch from the surface of another planet with the Mars Ascent Vehicle.
3 First international, interplanetary relay effort using multiple missions to bring back samples from another planet.
SpaceX lifts off on historic space mission to ISS l GMA The Crew-4 mission includes 33-year-old NASA astronaut Jessica Watkins, who will be the first Black woman to live on the International Space Station for a long-term mission.
முதன்முதல் ஸ்பேஸ் X உள்ளூக்கி -4 விண்சிமிழ் நான்கு பொது ஆய்வாளரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது.
2022 ஏப்ரல் 27 இல் அமெரிக்கா பிளாரிடா நாசா கென்னடி ஏவு தளத்திலிருந்து ஸ்பேஸ் X மீள்பயன்பாடு ஃபால்கன் [REUSABLE] ராக்கெட் நான்கு பொதுநபரை உள்ளூக்கி-4 [INSPIRATION -4] விண்சிமிழ் தூக்கிச் சென்று, முதன்முதலாக அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது. விண்வெளி நிலையம் பூமிக்கு 250 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. விண்சிமிழ் 350 மைல் உயரத்தில் பூமியை மூன்று நாட்கள் சுற்றி முதன்முதல் சுற்றுலாப் பயணம் செய்து, கீழிறங்கி நிலையத்துடன் இணைந்தது. அந்த மூன்று நாட்கள் பயணம் செய்த நான்கு விஞ்ஞானிகள் உடல்நிலை சோதிப்பு செய்வார். அந்த பொது விஞ்ஞானிகள் 38 வயது ஜார்டு ஐஸாக்மன், 29 வயது ஹேலி ஆர்செனா, 41 வயது கிரிஸ் செம்பிராக்ஸி, டாக்டர் சியான் பிராக்டர். அவர்கள் யாவரும் விண்வெளிப் பயிற்சி பெற்றவர். ஒவ்வொரும் இதற்கு 55 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார். .
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை ஏற்றிச் சென்று மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப் பாக இறக்கியது.
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார்.
Space X Landing back towards, the Earth, After two weeks.
ஸ்பேஸ் X இயல்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
ஸ்பேஸ் X விண்சிமிழ் வெற்றிகரமாக கடல் நீர் மீது இறங்கியதைப் பாராட்டி போது, திட்ட ஆளுநர் எலான் மாஸ்க் [Elon Musk] . “இந்த வெற்றி நாங்கள் நிலவுக்குப் போகும் திட்டத்தையும், நிலாக் குடிவசிப்பு திட்டத்தையும் மெய்ப்படுத்தி உள்ளது. நான் பெரிய மத நம்பிக்கை கொண்டவன் அல்லன். ஆனால் இது வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்” என்று கூறுகிறார் எலான் மஸ்க் விண்வெளித் தேடல் விஞ்ஞானி. ஸ்பேஸ்X விண்சிமிழ் பூமியில் இறங்குவதற்குத் தகுந்த சுற்றுப் பாதைக்கு நெருங்கி, காற்று மண்டலத்தைக் கடக்கும் போது, உராய்வு உஷ்ணம் 3500 டிகிரி F [1900 C], பயண வேகம் 17,500 mph [28,000 kph] . இறங்கும் போது இரண்டு பாராசூட் குடைகள் விண்சிமிழைத் தாங்கி, வேகத்தை 15 mph ஆகக் குறைத்தன.
அடுத்த ஸ்பேஸ்X திட்டம் செப்டம்பர் இறுதியில் நான்கு விண்வெளி விமானிகள் [மூன்று அமெரிக்கர் + ஒரு ஜப்பானியர்] அகில விண்வெளி நிலையத்துக்கு வந்து, ஆறு மாதம் ஆய்வுகள் செய்து, பூமிக்கு மீள்வர்.
SpaceX rocket returns to shore after historic astronaut launch
The first stage of the SpaceX Falcon 9 rocket that launched the Demo-2 mission on May 30, 2020, arrives in Florida’s Port Canaveral on June 2, 2020. (Image credit: SpaceX via Twitter)
2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன் முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31 ஆம் தேதி அகிலநாட்டு விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்ட வெளிச் சுற்றுலா பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இருவிமானி களும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.
நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில் நிலவில் தடம் வைத்தார். பூமியைச் சுற்றி வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் சிலநேரம் தங்கிச் சுற்றுலாப் பயணம் செய்ய நிற்கிறார் வரிசையில் புவி மனிதர் ! நவயுகத் தரை நபர்கள் இனிமேல் விண்கப்பல் புவிச் சுற்றில் சுற்றுலா வருவர் ! கனவில்லை இது ! மெய்யான நிகழ்ச்சி ! வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.
நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா
இப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]] புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது. குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல. அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது. 2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது. ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு. அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.
தற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.
அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.
++++++++++++++++++++++++++++++
நாசாவின் திட்டம் 2024 ஆண்டில் நிலவுக்கு மீளும் புது முயற்சி.2020 ஆண்டில் விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும் தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன. ஆனால் எப்போது என்று இன்னும் தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர், பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர். அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி பிஸோஸ் [Jeffery Bezos] . இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.
வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை. பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில்[Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார். முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது. இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் ! மிக மலிவு. விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.
வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார். தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும். சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம். காலிஃபோர்னியா மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில் விண்கப்பல் பறந்தது. பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது : இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார். விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி. விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.