முதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++

  1. https://youtu.be/kzu4-h41xWY
  2. https://youtu.be/hESyPm1vxpA
  3. https://youtu.be/zOL1hqtGRnA
  4. https://youtu.be/XZULKCMq1T4
  5. https://youtu.be/BZ2r7Cc_Z9g
  6. https://youtu.be/01p-4YfMXm8
  7. https://youtu.be/kWnx0p2aez4
  8. http://live.spaceil.com/
  9. https://www.space.com/israel-moon-lander-first-maneuver.html
  10. https://www.space.com/43188-israel-first-moon-lander-spaceil-beresheet-photos.html
  11. https://www.space.com/spacex-israeli-moon-lander-satellites-launch-success.html
  12. https://youtu.be/Xfg-Az1cOsA

+++++++++++++++++++++++

SpaceX Private Launching of Israel Moon Lander

[February 21, 2019]

+++++++++++++++++

https://www.spacex.com/

இஸ்ரேல் முதன்முதல் ஏவிய நிலாத் தளவுளவி நிலவைச் சுற்றி வந்து, இறங்கப் போகிறது. 

2019 பிப்ரவரி 21 இல் தனியார் ஏவுகணை ஸ்பேஸ்X [SPACEX], [Falcon -9 Rocket] பிளாரிடா கெனாவரல் முனையிலிருந்து கிளம்பி, முதல் முதல் இஸ்ரேலின் நிலாத் தளவுளவியைச் [Lunar Lander : Beresheet]  சுமந்து கொண்டு, 2019 ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில்  இறங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. [Beresheet means Genisis].  சுயமாய் இயங்கும் தளவுளவியின் எடை : 585 கி.கி. [1290 பௌண்டு].  இதுவே நாசா, ஈசா போலின்றித் தனியார் நிறுவனம் முதன்முதல் புரியும் விண்வெளிச் சாதனை.  இது பலவித முறைகளில் விண்வெளி முதன்மை முயற்சியாகக் கருதப் படுகிறது.  இது தனிநபர், ஆஃப்ரிக்கச் செல்வந்தர் இலான் மஸ்க் [Elon Musk] இஸ்ரேல் நிலாத் தளவுளவியைத் தனது ராக்கெட் [SpaceX] மூலம் முதன்முதல் தூக்கிச் செல்வது.  மிகக் குறைவான நிதிச் செலவில் நிலவைச் சுற்றவும், விண்சுற்றிக் கப்பலின்றி, தளவுளவி நேராக நிலவில் இறங்கவும் முயல்வது.

தளவுளவி பூமியைச் சுற்றி வேகம் மிகுந்து நீள்வட்டப் பாதை  ஒவ்வொரு சுற்றிலும் புவியீர்ப்பு விசையால் நீட்சி ஆகிறது.

++++++++++++

தளவுளவி பூமியைச் சுற்றி வேகம் மிகுந்து நீள்வட்டப் பாதை  ஒவ்வொரு சுற்றிலும் புவியீர்ப்பு விசையால் நீட்சி ஆகி, முடிவில் நிலவை நெருங்கும் போது, வேகம் தணிக்கப் பட்டு, நிலவின் ஈர்ப்பு தன்னைச் சுற்றிவர இழுத்துக் கொள்கிறது. 

மேலும் ராக்கெட் ஆற்றலில், அசுர ராக்கெட் அபெல்லோ -11 போலின்றி ஒரே பாய்ச்சலில் நிலவுக்குச் செல்லாது,  பூமியைப் பன்முறை சுற்றிவந்து, புவியீர்ப்பு சுழல்வீச்சு [Gravitational Flyby Swing] ஆற்றலில், ஒவ்வொரு சுற்றிலும் வேகம் மிகுந்து, நீள்வட்டப் பாதை நீட்சியில் நிலவை நெருங்குவது. சிக்கனமான  இம்முறையை  வெற்றி கரமாகச் செய்து காட்டியது இந்தியா.  சந்திரயான் நிலவைச் சுற்றியது,  மங்கல்யான் செவ்வாய்க் கோளைச் சுற்றியது இப்படித்தான்.  எட்டு ஆண்டுகளாய் இஸ்ரேல் நிபுணர்  திட்டமிட்டுச் செய்த பிரிசீட் நிலாத்  தளவுளவி [Beresheet Lunar Lander] ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏவிய பிறகு தூக்கிச் சென்ற ராக்கெட், பணி முடிந்து, பாது காப்பாக சுய இயக்கத்தில், திட்டமிட்ட இடத்தில் புவிக்கு மீட்சியானது.  இது மீண்டும் பயன்படுத்தப் படும்.  இந்த இஸ்ரேல் சிக்கன மலிவுத் திட்டம் 100 மில்லியன் டாலருக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Israel Lunar Lander Assembly

Artist  Picture View of Israel Luna Lander

[April 11, 2019]

Israel Space Centre Control Room

+++++++++++++++++++

Space News :

  1. https://www.space.com/43188-israel-first-moon-lander-spaceil-beresheet-photos.html
  2. https://www.space.com/israel-moon-lander-first-maneuver.html
  3. https://www.theguardian.com/world/2019/feb/22/israel-first-lunar-lander-blasts-into-space-florida-spacex-beresheet
  4. https://www.space.com/spacex-israeli-moon-lander-satellites-launch-success.html
  5. https://youtu.be/kzu4-h41xWY
  6. https://youtu.be/zOL1hqtGRnA
  7. https://youtu.be/Xfg-Az1cOsA
  8. https://youtu.be/hESyPm1vxpA
  9. https://youtu.be/XZULKCMq1T4
  10. https://youtu.be/BZ2r7Cc_Z9g
  11. https://youtu.be/01p-4YfMXm8
  12. https://youtu.be/kWnx0p2aez4

+++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 2  [R-0]

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.